சர்வதேச வானொலி

சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.

Google
 

தேமதுர தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்

வானொலி உலகம் - 25 வது வாரம் Vaanoli Ulagam 25th week


Monday, December 29, 2008

சீன வானொலி: 20-வது கருத்தரங்கம்


சீன வானொலி நேயர்மன்றத்தின் 20-வது கருத்தரங்கம் வெகு சிறப்பாக நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியில் (28-12-2008) நடைபெற்றது. இதில் சீன வானொலியின் நிபுனர்கள் சிவகுமார், கடிகாசலம், ராஜாராம் மற்றும் கிளீட்டஸ் ஆகியோர் பங்கேற்றனர். சீன வானொலி கருத்தரங்க வரலாற்றில் முதல் முறையாக நான்கு நிபுனர்கள் ஒரே மேடையில் சந்திப்பது இதுவே முதல் முறை. விழாவில் 'சீன வானொலி மன்றம்' எனும் காலாண்டு இதழ் வெளியிடப்பட்டது. மேலும் 20 நேயர்களுக்கு சிறந்த நேயர்களுக்கான விருது வழங்கப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட அனைத்து நேயர்களுக்கும் நினைவுப் பரிசாக 3டி ஒலிம்பிக் வண்ண அட்டை வழங்கப்பட்டது.


'சீன வானொலி மன்றம்' காலாண்டு இதழ்


கருத்தரங்க புகைப்படங்களை காண, கீழகண்ட தொடுப்பினை சொடுக்கவும்
http://picasaweb.google.co.in/bbcsakthi/CRI20thMeet?feat=directlink

Labels: , , , , ,

Sunday, December 28, 2008

சர்வதேச வானொலி - டிசம்பர் 2008


சிற்றலை வானொலி கேட்கும் நேயர்களுக்கு ஆண்டு இறுதியில் ஒரு பொக்கிஷம்.. ஆம் டிசம்பர் இதழ் 'சிற்றலை ஆன்டனாக்களை நீங்களே செய்ய தேவையான வழிமுறைகளுடன் எளிய தமிழில் வெளிவந்துள்ளது' 10 வகையான ஆன்டனாக்கள் படத்துடன் விளக்கப்பட்டுள்ளது இதழின் மற்றும் ஒரு சிறப்பு. ஆண்டு சந்தா அனுப்பி இதழின் வளர்ச்சியில் பங்கு பெறுங்கள். விபரங்களுக்கு: +91 98413 66086

Labels:

Saturday, December 27, 2008

சர்வதேச வானொலி - நவம்பர் 2008


வெளிவந்துவிட்டது நவம்பர் சர்வதேச வானொலி இதழ். இந்த இதழில் இலங்கை வானொலியின் புகழ்பெற்ற அறிவிப்பாளர் நாகபூசணி கருப்பையா அவர்களின் சிறப்பு செவ்வி இடம்பெற்றுள்ளது. வளமையானத் தொடர்களுடன் 24 பக்கங்களில் வெளிவந்துள்ள இந்த இதழைப் படிக்க கீழ்கண்ட தொடுப்பினைச் சொடுக்கவும்.
http://vaanoliulagam.googlepages.com/Nov2k8.pdf
உங்களின் இல்லதிற்கே இதழ் வர... தொடர்பு கொள்க 98413 66086. ஆண்டு சந்தா ரூ.100/-

Labels:

Monday, December 22, 2008

சீன வானொலி பொது அறிவுப் போட்டி


சீன வானொலி "அழகான சிச்சுவான்" பொது அறிவுப் போட்டியை தற்பொழுது வைத்துள்ளது. நேயர்கள் இணையம் வாயிலாக கலந்துகொள்ள சிறப்பு இணைய பக்கத்தினை வடிவமைத்து உள்ளது. அதன் முகவரி
http://210.51.185.203:8080/jingsai/English/Default.aspx?language=English

Labels: ,

Friday, December 19, 2008

உங்கள் விருப்பம் பகுதிக்கு...


நேயர்கள் வானொலிக்கு கடிதம் எழுதுவது போல், உங்கள் விருப்பம் பகுதிக்கும் கடிதம் எழுதுவது வழக்கம். இதோ மாதிரிக்கு சில.. இவை அச்சிடப்பட்டு அனுப்பப்படுவது இங்கு குறிப்பிடத்தக்கது

Labels:

Thursday, December 18, 2008

உலகில் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்

B.B.C. யின் சென்னை அலுவலகத்தில் பணியாற்றும் ஜெய்சக்திவேல் ஒரு வானொலி கலைக் களஞ்சியம் (என்சைகிளோபீடியா) என்றால் அது மிகையல்ல. உலகின் அத்தனை வானொலிகள், குறிப்பாகத் தமிழ் வானொலிகள் பற்றிய குறிப்புக்களை தன் விரல் நுனியில் வைத்திருக்கிறார்

பன்னிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கையெழுத்துப் பிரதியாக ஆரம்பிக்கப்பட்டு, பிறகு தட்டச்சு செய்து நட்பு வட்டத்துக்குள் மட்டும் வினியோகிக்கப்பட்டு வந்த "சர்வதேச வானொலி" முதன் முறையாக அச்சு வாகனம் ஏறுகிறது. "தினமலர்" நாளிதழ் நிறுவனரின் பேரன் தினேஷ், கொழும்பு "வீரகேசரி" நாளிதழின் சென்னை அலுவலகத்தில் பணிபுரியும் அருண், ஜெய்சக்திவேல் ஆகியோரின் கூட்டு முயற்சி இது.

இதன் வெளியீட்டு விழாவும், "கரிசல்" திரைப்படக் கழகத்தின் துவக்க விழாவும் திருநெல்வேலி, வண்ணரப்பேட்டை, அறிவியல் வளாக அரங்கில் 25.4.08 காலை முதல் மாலை வரை முழு நாள் விழாவாகநடைபெற்றது.

திரைப்பட இயக்குனர் மாரிமுத்து, குறும்பட இயக்கத்தின் திருநாவுக்கரசு ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். 'விழி-வழித் தொடர்பு' (Visual Communication) கல்வி பயிலும் மாணவர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். அன்று வானொலியின் பிதாமகன் மார்க்கோனியின் பிறந்த நாளும் கூட.

வானொலியின் வரலாறு, வளர்ச்சி, இப்போதைய பயன்பாடுகள், வருங்கால சாத்தியக் கூறுகள், வானொலியில் குரலை வைத்துக் கொண்டு என்னென்ன ஜகஜ்ஜால வித்தைகள் எல்லாம் செய்யலாம் என்று நாற்பது நிமிடங்கள் பேசினேன். "ஆக்ராவின் கண்ணீர்" என்ற வானொலி நாடகத்தில் அக்பர் சக்கரவர்த்தியாக நடித்த இரண்டு காட்சிகள் உச்சம்.

உள்ளூர் வானொலிகளில் பணியாற்றும் பல இளஞர்கள் - இளைஞிகள் வந்திருந்தார்கள். "வானொலியில் இப்படியெல்லாம் விஷயமிருக்கிறது என்பது எங்களுக்குத் தெரியவே தெரியாது. யாரும் சொல்லிய்ம் தரவில்லை" என்று சொன்னபோது, இப்போதைய வானொலியின் தரம் எனக்குப் புரிந்தது. கேட்க வேதையாக இருந்தது.

அழைபிதழில் என்னை, "உலகில் மூத்த தமிழ் ஒலிபரப்பாளர்" என்று என்னைக் குறிப்பிட்டிருந்தார்கள். அது எவ்வளவு தூரம் சரி? என்னை விட மூத்தவர்களான பூர்ணம் விஸ்வநாதன், இலங்கையின் முனைவர் கார்த்திகேசு சிவத்தம்பி, "ரேடியோ மாமா" சரவணமுத்து ஆகியோர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இப்போது களத்தில் இல்லை என்பது மட்டுமல்ல, என்னைப்போல் 58 வருட அனுபவம் என்பது யாருக்கும் இல்லை என்பது என்னையே ஆச்சரியப்பட வைத்த சுவாரஷ்யமான தகவல்.

பெண்களில் இலங்கையின் ராஜேஸ்வரி ஷண்முகம், விசாலாக்ஷி ஹமீது (இவர் BH ன் துணைவியாரல்ல) BBC ஆனந்து சூர்யபிரகாஷ், லண்டன் 'சன்ரைஸ் வானொலி' யின் யோகா தில்லை நாதன் ஆகியோர் என் அளவு அனுபவத்தில் நெருங்கி வரக் கூடியவர்கள்

ஷோபனா ரவி, சரோஜ் நாராயணசாமி ஆகியோர் அரசில் பணியாற்றியவர்கள் ஆகவே கூடிப்போனால் அவர்களது அனுபவம் 40 ஆண்டுகளை தாண்டிப்போக வழியில்லை என்றும் கூறப்படுகிறது. BH அப்துல் ஹமீதின் அனுபவ வயது 45 ஆண்டுகள்.

இந்தத் தகவல்கள் என்னை உற்சாகப் படுத்துவதுடன், முதுமையாக அல்ல, மிக இளமையாக உணரச் செய்கின்றன

நிலை உயரும்போதும் பணிவு கொள்ளும் சாத்தான்குளம் அப்துல் ஜப்பார் .
நன்றி:முத்தமிழ் குழுமம்
http://groups.google.com/group/muththamiz

Labels: , , ,

சீன வானொலி 20-வது கருத்தரங்கின் புதிய அழைப்பிதழ்.


தற்பொழுது திரு. ராஜாராம் அவர்களும் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார்கள்

Labels:

Thursday, December 11, 2008

சீன வானொலியின் 20-ஆவது கருத்தரங்க அழைப்பிதல்.






நன்றி: கெ. செந்தில், பேளுகுறிச்சி.
தொடர்பு கொள்ள 9486756357, 9894321892

Labels: ,