Monday, March 30, 2009

காற்று வெளியினிலே.. - திரு அப்துல் ஜப்பார்


உலகத் தமிழ் மக்கள் எல்லோருக்கும் திரு அப்துல் ஜப்பார் அவர்களை நன்றாகவே தெரியும். 1950 ல் சிறுவனாக இலங்கை வானொலியில் கால்ப்பதிவு. 1951 ல் ஆடிசன் இல்லாமலே நாடகத்திற்கு தேர்வு. 1962ல் இந்தியா திரும்பி அகில இந்திய வானொலியில் விட்ட இடத்திலிருந்து தொடர்ச்சி. 1980 முதல் ஒலிபரப்பில் ஒரு புதியமுகம். கிரிக்கெட் நேர்முக வர்ணனை தமிழில். 1986 உலகக் கோப்பையின்போது பி.பி.சியில். 1999 உலகக்கோப்பை வர்ணனை லண்டன் 24 மணிநேர ஒலிபரப்பில் ஐபி.சி - தமிழில். 1993 ல் இலங்கை அரசு கலாச்சார அமைச்சரவையின் “பதுருல் மில்லத்” பட்டம் - விருது - பொற்கிழி. 1997 அகில இந்திய வானொலியின் சுதந்திர தின பொன்விழாவை ஒட்டி “மிகச்சிறந்த ஒலிபரப்புக் கலைஞன்” என்ற விருது. இலண்டன் ஐ.பி.சியில் வாரந்தோரும் தொடர்ச்சியாக “இந்தியக் கண்ணோட்டம்”. இதுபோல லண்டன் தீபம் தொலைக்காட்சியில் “அரங்கம் - அந்தரங்கம்” நிகழ்ச்சி. நாடகம் இலக்கியம் - விளையாட்டு என்று தொடரும் இவரது கலைப்பணிக்கு வயது ஐபத்தி எட்டிற்கும் மேல்!

திரு அப்துள் ஜப்பார் ஐயா அவர்கள் “காற்று வெளியினிலே… என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை எழுதியுள்ளார். மித்ரா ஆர்ட்ஸ் என்ற நிறுவனம் இந்த புத்தகத்தை 2003 டிசம்பர் மாதத்தில் வெளியிட்டுள்ளது.

அன்புக் கவிஞர் அறிவுமதியும் கலைமாமணி வி.கேடி பாலன் அவர்களும் அன்பு அறிவிப்பாளர் திரு பி.எச். அப்துல் ஹமீத் அவர்களும் இந்த புத்தகத்திற்கு அணிந்துரை முன்னுரை எல்லாம் கொடுத்து வாசகரை அன்போடு வரவேற்கிறது.

” ஓவ்வொருவரையும் அவரவர் கலைத்துறையில் அவரவருக்கு நேர்ந்த அனுபவங்களை குறிப்பெடுத்து எழுதும்படி கேட்கப் போகிறேன் நாளை ஒரு சமயம் அந்தந்த துறைகளின் வளர்ச்சி - வீழ்ச்சிகளையும் அதில் ஒவ்வொருவருக்கும் உள்ள பங்களிப்புகளையும் மதிப்பீடு செய்ய இது பெரிதும் உதவும் பிஸ்மில்லா நீ முதலில் துவங்கு” என்று முஸ்லீம் சமய பண்பாட்டு அலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அல்ஹாஜ் ஏ.எச்.எம் அஸ்வர் அவர்களின் வார்த்தைக்கு மரியாதை கொடுத்து திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் தான் கடந்து வந்த பாதைகளை நினைவுபடுத்தி பார்த்துக் கொண்டே எழுத்துக்களால் வரைந்த நல்ல ஓர் ஓவியம் தான் இந்த காற்று வெளியினிலே… என்ற அழகிய புத்தகம்.

அதனால் இந்த புத்தகத்தில் ஒரு சுயசரிதையின் கொடுமையில்லை. திரும்பிப்பார்க்கிறேன் என்று சொல்லி விட்டு ஒருவன் கண்ட காணக்கூடாதவைகளின் தேவையற்ற அலங்கரிப்புகளுமில்லை. மிக மிக மென்மையான கருத்தோட்டம். மிக அழகான தமிழ் - இவைகள் இரண்டும் இந்த அழகிய ஓவியத்திற்கு பேரழகான இரு கண்களாக அமைந்துள்ளது.

” நான் ஒரு நல்ல மகனாக இருந்தேன். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தேன் ஒரு நல்ல தந்தையாக - கணவனாக இருந்து வருகிறேன். படிப்பில் கெட்டிக்காரனாக இருந்தும் மேல்படிப்புக்கு வசதி இருக்கவில்லை. கலை உலகிலும் கால் ஊன்றி இருக்கிறேன். தொழில் துறையிலும் நின்று பிடித்திருக்கிறேன். எளியவனாகவே இருக்கிறேன். என் உழைப்புக்கும் ஈடுபாடுக்கும் எங்கோ போயிருக்கவேண்டியவன். எனினும் கார்-பங்களா என்றில்லாவிட்டாலும் கடன் இல்லாத வாழ்வு - பசி இல்லாத வாழ்வு என்பது இன்று வரை எனக்கு கை கூடி வந்திருக்கிறது. அரசர்களோடு உலவும் - குலவும் வாய்ப்பிருந்தும் சாமன்யர்களோடு சரிசமமாகப் பழகும் பண்பு இன்றும் அன்றும் எனக்குத் தனி மரியாதையைப் பெற்றுத் தருகிறது. கேரளத்தில் நாற்பத்தி இரண்டு காலம் நான்கு பெரிய நிறுவனங்களில் நிர்வாகப் பொறுப்பிலிருந்தும் எந்த ஒரு காரணத்துக்காகவும் தொழிலாளர்கள் போராட்டக் கொடி உயர்த்தாமல் பார்த்துக்கொண்டது என் மனிதாபிமான அணுகுமுறைக்கு கிடைத்த பரிசு என்று நினைக்கிறேன்.”

இந்த ஒரு பகுதி வாசித்தாலே திரு அப்துல் ஜப்பார் ஐயாவைப் பற்றி ஓரளவிற்கு யாருக்கும் யூக்கிக்கக் கூடும்.இலங்கையில் இவரது சிறுவர் காலம் முதல் இளமைக்காலம் வரை நடந்த நிகழ்வுகளில் முக்கியமான நிகழ்ச்சிகள் பற்றி அதிகமாக வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறார். அன்று முதல் கிடைத்த நண்பர்கள். நாடக அமைப்பு நாடகத்தின் சில் தொழில்நுட்பங்கள் என பல சம்பவங்களையும் பல கதாபாத்திரங்களையும் அறிமுகப்படுத்தி நமது மனதில் பதிவு செய்கிறார்.

தன்னுடன் எந்த நிகழ்ச்சிகளானாலும் சரி பங்கேற்கும் கலைஞர்களில் ஒருவன் எத்தனை சோப்ளாங்கியானாலும் சரியே அவனை தட்டிக் கொடுத்து அரவணைப்பார் ஒரு போதும் இவர் யாரையும் தட்டிக்கழித்து வேதனைப்படுத்துவதில்லை. இதனை ஒரு வாழ்க்கை நெறியாகவே இன்றும் கடைபிடித்து வருகிறார் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள் என்பதை இந்த புத்தகத்தில் அவர் எடுத்துச் சொன்ன பல நிகழ்ச்சிகளும் சாட்சி சொல்லி மகிழ்கின்றன.

நிறைய நாடகங்களை எழுதி நடித்துள்ளார். இவரது குடும்பத்தார்கள் (மனைவி மகன் மகள்) எழுதின நாடகங்களிலும் நடித்துள்ளார். நாற்பது வருடங்களுக்கு மேல் கடினமாக உழைத்த பின்னர் தன்னுடைய பிள்ளைகள் சம்பாதிக்க ஆரம்பித்ததும் மீண்டும் ஊடகத்துரையில் தனது சேவைகளை தொடர்ந்து செய்து மகிழ்கிறார்.

இவர் சில சம்பவங்களைப் பற்றி எழுதி தான் அப்போது கற்றுக்கொண்ட பாடங்களை வாசகரோடு பல இடங்களில் பகிர்ந்து கொள்கிறார். உதாரணமாக

” இருட்டறையில் அடைக்கப்பட்ட இருவருக்கு வெளி உலகைக் காண ஒரு சிறு துவாரம் மட்டும் இருந்தது. ஒருவன் கீழே தெரியும் சாக்கடையைப் பார்த்து “சீச்சீ இது என்ன உலகம்?” என்றான் மற்றவன் வானில் தெரியும் நட்சத்திரங்களைப் பார்த்து ” ஆஹா என்ன அற்புத உலகம்” என்றான் ”

பல வசிஷ்ட்டர்களின் வாயால் பிரம்மரிஷி பட்டம் பெற்ற இவர் பலவிதமான கதாபாத்திரங்களில் நடித்த அனுபவங்களை பங்கு வைக்கும் வரிகள் ஒவ்வொன்றிலும் வாசகனை அந்த நிகழ்ச்சிக்கே நேரடியாக கொண்டு செல்லும் வண்ணம் இருக்கும்.

“உதாரணத்துக்கு ஒன்று: பழைய காதலன் அவனுடைய காதலியை சந்திக்கிறான். “நம் காதல் பிரகாசமாக ஒளிவிடும் என்று நினைத்தேன்” என்று சொல்லும்போதே சிகரட் லைட்டரை பற்ற வைப்பார் பிறகு “ஆனால்…” என்று ஒரு பெருமூச்சு விடும்போது அதை அணைக்க வேண்டும்”

என்ன அழகாக இந்த காட்சியை தன்னுடைய வார்த்தைகளால் எழுதி படம் பிடித்துள்ளார் என்று பாருங்கள்!

தன்னோடு வாழ்ந்தஃபணிசெய்த பலரை குறிப்பிட்டு ரசிக்கிறார் கவலைப்படுகிறார் நன்றி தெரிவிக்கிறார்ர். அதில் திரு பிச்சையப்பா என்கிற ஒரு கலைஞனைப் பற்றி சொல்லும்போது ” அந்த கலைஞனுக்கு என் உள்ளத்தில் ஏற்பட்ட மதிப்பு அவர் மாண்டு மறைந்து விட்டாலும் என் உள்ளதிலிருந்து என்றும் மாளாது - மாறாது - மறையாது” - என்கிறார்.

தனது காதலைப் பற்றி ஐயா குறிப்பிடுகையில் “ஒரு நாள் மாலை ஒரு “பெர்த்டே” பார்டிக்கு வருமாறு எனக்கும் எனது நண்பன் மக்கீனுக்கும் சேர்த்துக் கடிதம் வந்தது. இருவரும் சென்றோம் வீட்டில் ஆள் ஆரவமே இல்லை. அந்தப் பெண் குறும்பாகச் சொன்னாள் “பேர்த்டே பார்ட்டி இங்கல்லஇ வேறோர் இடத்தில். குடும்பமே போய் இருக்கிறது. நான் மட்டும் தனியே. துணையாக இருக்கத் தான் வரச்சொல்லி எழுதினேன்” என்றபோது இனம் புரியாத ஓர் உணர்வுக்கு ஆட்பட்டேன். ஆனால் எதையோ புரிந்து கொண்டது போல் ” சரி இருவரும் பேசிக்கொண்டிருங்கள். எனக்கு கொஞ்சம் வேலை இருக்கிறது கொஞ்ச நெரத்தில் வந்து விடுகிறேன்” என்று மக்கீன் நைசாக நழுவி விட்டான். ஒரு பெண்ணுடன் - அதிலும் என்னை மிகவும் நேசிக்கும் - நானும் விரும்பும் ஒரு பெண்ணுடன் - என் வாழ்நாளில் முதன் முறையாக யாருமில்லாத தனி வீட்டில் தனித்து விடப்பட்டிருக்கிறேன். இளமைத் துடிப்புடன் வாலிபத்தின் தலைவாயிலில் நிற்பவர்கள் நாங்கள் ஆனால் தவறான ஒரு பார்வையோ பேச்சோ கூட இல்லை.

என்னை உயிருக்கு உயிராய் நேசிப்பதாக சொன்னாள். என்னை மணந்து வாழ விரும்புவதாக விருப்பம் தெரிவித்தாள். எனக்கும் அந்த விருப்பம் இல்லாமல் இல்லை. என் நிலமைகளை எடுத்துச் சொன்னேன். என்னைப் போலவே அவருக்கும் பல சகோதரிகள் என்பதை எடுத்துக் காட்டினேன். வெவ்வேறு மதம் - இனம் பொருளாதாரத்திலும் என்னை விட உயர்வானது அவர்களுடைய நிலை அதனால் ஏற்படக் கூடிய பிரச்சனைகள் ஆகியவற்றை எடுத்துச் சொன்ன போது அழுத அழுகை என்னை குலுக்கியது. கண்ணீரைத் துடைத்துவிட்டேன் —-கைக்குட்டையால். அப்போது கூட அந்தப் பெண்ணைத் தொடவில்லை என்பதே இப்போது நினைத்துப் பார்த்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது. சப்தமில்லாமல் குமுறிக் குமுறி அழும் அந்தப்ப் பெண் என் தோளில் அப்யம் தெடினாள்… இக்கட்டான நிலை ஆபத்பாந்தவனாக மக்கீன் வந்து சேர்ந்தான். உள்ளே சென்று அந்தப் பெண் முகம் கழுவி பவுடர் போட்டு சிரித்த முககமாக வெளிவந்தாள்; நாங்கள் விடைபெற்றோம்”

என்று அந்த காட்சி அனைத்தையும் ஐயா நமது கண்முன்னே கொண்டு வரஇ இந்த மக்கீன் மீது கோபம் கொள்வதா நன்றி சொல்வதா என்ற குழப்பத்தில் இந்த இடத்தில் வாசகர்கள் குழம்பி விட வாய்ப்புண்டு. பிறகு அடுத்த பக்கத்தில் இவர் தன்னுடைய காதலைப் பற்றி இப்படி நினைத்துப் பார்க்கிறார்.

” நான் செய்தது சரி தானா? காதலை மதிக்கத் தெரியாமல் போய் விட்டதா? அல்லது ஏற்கத் துணிவில்லாது போய் விட்டதா? அல்லது ஒரு நடுத்தர குடும்பத்தின் பொறுப்புள்ள தலைமகனாக நடந்து கொண்டேனா? இன்று வரை விடை தெரியவில்லை. ஆனால் உள்ளத்தின் அடித்தளத்தில் மாறாத ஓர் ஊமை வேதனை இருந்து கொண்டே இருந்தது. இறைவனின் அருட் கொடைபோல் ஓர் நல்ல துணை வாய்க்கும் வரை - வாய்த்தாள்”

ஈழத்தின் தமிழ் இலக்கிய பிதாமகர் என்று எஸ்.போ அவர்களை போற்றுகிறார்.

“சுயநலத்தை விட சில அடிப்படையான கொள்கைகளை உயிரினும் மேலாக கருத வேண்டும் என்கிற உண்மையை எனக்கு உணர்த்திய பெரியவ்ர் திரு கே.எஸ். நடாராஜா” என்று அவரைப் போற்றுகிறார்.

இப்படி பல கதாபாத்திரங்களையும் அவருடை அழகான தமிழில் வர்ணனை செய்து அவர்களை எல்லாம் பாராட்டி மகிழ்கிறார் திரு அப்துல் ஜப்பார் ஐயா அவர்கள்.

ஐயாவிடம் எதை யார் சொன்னாலும் அவர் முதலில் சொல்கிற பதில் “லெட் மி திங்க்”.

“கலை எமக்களிப்பது ஊதியமல்ல உயிர்” என்ற சொற்றொடரை அவருடைய நாடகக் குழுவிற்கு வழங்கவும் நன்றாக யோசித்திருப்பார் என்றே தோன்றுகிறது.

நீண்ட பட்டியலிட்டு ஐயா இப்படி யோசிக்கிறார்.

“என்னிடம் பிரதிபலன் எதிர்ப்பார்த்தா இதைச் செய்தார்கள்? - இல்லை நிச்சயமாக இல்லை. என் மீது அவர்களுக்குள்ள அன்பின் ஆழத்தின் பிரதிபலிப்பாகவே இதைச் செய்தார்கள். இவர்களுக்கு நான் என்ன கைமாறு செய்ய முடியும்? ஒன்றைச் செய்யலாம் என்னை தகுதி உடையவன் என்றெண்ணி தங்கள் தங்கள் தனிப்பட்ட திறமைகளை இவர்கள் முன்னிறுத்தி எனக்கு உதவியது போல் நான் பிறருக்கு உதவலாம். திறமைசாலிகளை இனம் கண்டு அவர்களை வளர உதவலாம். அதைச் செய்திருக்கிறேன் - செய்கிறேன் - இன்ஷா அல்லா இனியும் செய்வேன்”

சமுதாயம் சம்பந்தமாக சொல்லும்போது

“லாப நோக்கு” என்பது மனிதனின் அடிப்படை குணம். முற்றும் துறந்த முனவருக்குக் கூட “முக்தி” என்கிற லாபநோக்கு உண்டு. எனவே அதை கிள்ளி எறிய நினைக்கும் எந்த சக்தியும் நிலைக்காது. மேலும் மனிதன் சுதந்திரப் பறவை. அவன் சிறகுகளை சிறிது காலத்துக்குத் தான் ஒடித்துப் போட இயலும். ஒரு நாள் அவன் சீற்றம் கொள்ளும் போது சிறைக்கதவுகள் தூளாகும். காலத்தின் கணக்குகளில் வித்தியாசம் இருக்கலாம். ஆனால் இது கண்டிப்பாக நடந்தே தீரும்.

உழைப்பவனின் வியர்வை உலரும் முன்பே அவனது கூலியைக் கொடுத்து விடுங்கள்” என்கிற எல்லோருக்கும் ஏற்புடைய இஸ்லாத்தின் கொள்கை மாத்திரமல்ல அதை அமுல் படுத்துவதில் ஆன்மீகம் கலந்த ஜனநாயக முறைகள் மீதுள்ள என் பிடிமானம் மேலும் இறுகியது. வட்டியை ஹராமாகவும் (வெறுக்கத் தக்கது) வியாபாரத்தை ஹலாலாகவும் (விரும்பத் தக்கது) ஆக்கி அதன் மூலம் பொருலீட்டும் முதலாளிகளை சமூகத்தின் தர்மகர்த்தாக்களாக - அறங்காவலர்களாக - நடந்து கொள்ளச் சொல்லும் முறை சரியாக புரிந்து கொள்ளப்பட்டால் அமுல் நடத்தப்பட்டால் ஏழ்மையே இருக்காது என்பது என் திடமான எண்ணம்

இளைய தலைமுறை என்பது ஒரு மாபெரும் சக்தி உண்மையில் அது அதைப் புரிந்து கொள்ளாதவர்களுக்கு சிம்ம சொப்பனம். இந்த நிலையில் ஐம்பத்தி எட்டு வருட அனுபவம் என்பது தலையில் சூடப்பட்ட கிரீடமா அல்லது கழுத்தைச் சுற்றிக் கட்டப்பட்ட கல்லா என்பது எனக்கு புரியவில்லை. ஆனால் ஒன்று புரிகிறது. முன்பை விட இப்போது அதிக உழைப்பு தேவை. உத்வேகம் தேவை. மாற்றங்களைப் புரிந்து கொள்ளும் மனப்பக்குவமும் ஆற்றின் ஒழுக்கை அனுசரித்து நீந்தும் வல்லமையும் தேவை. அல்லது காலச்சுழியில் அகப்பட்டு மூச்சுத் திணறி மூழ்கிப்போக நேரிடலாம். ஒரு பெண்ணின் வயது அவள் தோற்றத்தைப் பொறுத்தது. ஒரு ஆணின் வயது அவன் சிந்தனையைப் பொறுத்தது என்பதைப் புரிந்து கொண்டிருக்கிறேன்” .

வானொலி நிகழ்ச்சிகளைப் பற்றி சொல்கையில்….” மேடையை அநேகமாக விட்ட மாதிரி தான். ஆனால் வானொலியை விடுவேனோ என்பது சந்தேகமே. அன்றாட வாழ்வின் ஆய்வு - சோர்வு - அலைச்சல் - உழைப்பு - டென்ஷன் இவற்றுக்கு மத்தியில் ஏதோ சில மாத இடைவெளிக்கு பிறகாவது வானொலி நிலையத்தில் சென்று செலவாகும் அந்த ஒரு நாள் எனக்கு புத்துயிரும் புது உணர்வும் நல்குகிறது என்பது தான் காரணம்” என்பதை வாசித்ததும் இவரில் இருக்கும் கலை உணர்வை அறிந்து வாசகர் இவரை போற்றுவார்கள்.
விடுதலைப்புலிகள் இயக்கத்தின் அச்சாணி ஆணிவேர் யாராலும் நெருங்க முடியாது என்று கருதப்படும் சூப்பர் மேன் திரு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்கள் திரு அப்துல் ஜப்பார் ஐயாவை அவரே நேரடியாக வந்து சந்தித்து அன்புடன் கரங்களை பற்றி ஆதரவுடன் தோள்களை பற்றி மலர்ந்த முகத்துடன் ” நான் உங்கள் ரசிகன் ஐயா” என்று சொல்லும் அந்த சந்திப்பைப் பற்றி மிக அழகாக ஐயா எழுதியுள்ளார்.

மீண்டு மனம் திறந்து இப்படி எழுதுகிறார்

“வாழ்க்கையைத் திரும்பிப் பார்க்கும் அளவுக்கு எனக்கு வயதாகிவிடவில்லை. எனினும் என்னுள் ஒரு “தேடல்” ஆரம்பமாகி உள்ளது. “நினைவு கூர்தல்” என்கிற இந்தக் கட்டுரைத் தொடர் கூட அதன் வெளிப்பாடாக இருக்கலாம். கொஞ்சம் மென்மையாகிறேன் என்பதை என்னால் உணர முடிகிறது. என் கெட்ட குணங்களில் ஒன்றான முன் கோபத்தை முற்றிலுமாக ஒழித்து விட்டேன் என்று கூட சொல்லலாம். எனவே இந்த வயதில் இயல்பாக வரக்கூடிய இரத்த அழுத்தம் கட்டுக்குள் அடங்கி இருக்கிறது. “இளமையில் ஒழுக்கம் முதுமையில் ஆரோக்கியம்” என்ற பழஞ்சொல் என் வரைஇ இது வரை உண்மை ஆகி இருக்கிறது. இன்றும் அதிகாலையில் நான்கைந்து கேம்கள் “ஷட்டில்” ஆடுகிறேன். நடக்கிறேன்”

இந்த புத்தகத்தில் ரசித்தவைகளை எல்லாமே எழுதித் தான் ஆக வேண்டுமென்றால் இந்த புத்தகத்தை அப்படியே தட்டச்சிடத் தான் வேண்டும்!

அது தவறு என்பதால் அப்படி செய்யாமல் இதை வாசிப்பவர்களுக்கு இந்த புத்தகத்தின் விற்பனையாளரின் விலாசத்தைத் தருவதே நன்று. விசாரிக்கையில் 2003 இல் வெளியிடப்பட்டதால் 200 புத்தகங்கள் மட்டுமே இருக்கும் என்று இந்த புத்தகத்தின் வெளியீட்டாளர் திரு எஸ்போ ஐயா தெரிவித்தார்.

புத்தகம் கிடக்க அனுக வேண்டின விலாசம்:

இந்த புத்தகத்தின் விலை இப்போதும் ருபாய் 60 மட்டுமே.

“இலங்கை வானொலி ஸ்டைலில் உங்களை மீண்டு சந்திக்கும் வரை உங்களிடமிருந்து விடைபெற்றுக் கொள்வது உங்கள் அன்புக்குறிய ஏ.எம்.அப்துல் ஜப்பார். அதாவது சாத்தான்குளம் அப்துள் ஜப்பார்” என்றெழுதி இந்த புத்தகத்தை மிக அழகாக அன்புள்ள ஐயா முடித்துள்ளார். - என் சுரேஷ்
(Source: alaikal.com/news/?p=4386)

Friday, March 27, 2009

முத்திரை நேயர் - விஜயராம் அ. கண்ணன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த முத்திரை நேயர் பகுதியில் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம். வானொலி சார்ந்து சாதனைப் படைத்தவர்கள் பலரினைத் இந்தப் பகுதியில் நாம் அறிமுகப்படுத்தி வந்துள்ளோம். யாரும் செய்ய முடியாத சாதனையை மிகவும் அமைதியாக, எந்த ஒரு விளம்பரமும் இன்றி செய்து வருபவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள என்றுமே விரும்பியதில்லை. அவ்வகையானவர்களை தெரிவு செய்து இந்தப் பகுதியில் நாம் வழங்கி வந்துள்ளோம். இந்த மாதமும் அவ்வாறு சாதனைச் செய்த ஒருவரை நாம் காணவுள்ளோம்.
சேலம் மாவட்டம், பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாவட்டம். வானொலித் துறையிலும் பல்வேறு சாதனையாளர்களைக் கொண்ட மாவட்டம் இது. அந்த வகையில் நாம் பார்க்கும் இந்த மாத முத்திரை நேயர் ஆத்தூரைச் சேர்ந்த விஜயராம் அ. கண்ணன். இலங்கை வானொலியைக் கேட்கும் பெரும்பாலான நேயர்களுக்கு தெரிந்தவர். இலங்கை வானொலியின் தீவிர ரசிகர் என்றால் அது மிகையில்லை.
வானொலி நிலையங்கள் வைக்கும் பொது அறிவுப் போட்டிகளில் வென்று அந்த நாட்டின் வானொலி நிலையத்தினை இலவசமாக சென்று பார்ப்பது போன்று அல்லாமல், தனது சொந்த செலவிலேயே இலங்கை வானொலிக்கு இரண்டு முறை சென்று வந்தவர். இலங்கை வானொலி நிலையத்தின் வளாகத்தில் எடுத்த "மண்ணை' தமது பொக்கிசமாக பூஜை அறையில் பாதுகாத்து வருகிறார்.
நமது வாழ்நாளில் ஒருமுறையேனும் இலங்கை வானொலி வளாகத்தில் காலடி எடுத்து வைத்துவிட வேண்டும் என்ற கனவில் இருப்போர் பலர். ஆனால் அந்த வாய்ப்பு அனைவருக்கும் எளிதாக வாய்த்து விடுவதில்லை. விஜயராம் அ. கண்ணன் போன்றோர் கிடைத்த அந்த அறிய வாய்ப்பினையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டவர்கள் என்றால் அது மிகையில்லை.
""வானொலி கேட்கத் தொடங்கிய காலகட்டங்களில் வேறு எந்த ஒரு பொழுதுபோக்கு சாதனங்களும் இல்லாத காலம்++ என்று கூறும் இவர், 1976களில் தான் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் காலகட்டங்களில், வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாகயே இலங்கை வானொலியைக் கேட்பதுதான் என்கிறார்.
இலங்கை வானொலியை பெரும்பான்மையான நேயர்கள் விரும்பிக் கேட்கக் காரணம், அவர்களின் அறிவிப்பு பாணி. நமது உள்ளூர் நிலையங்களின் அறிவிப்புகளில் ஒருவித சோர்வு தெரியும். ஆனால் அவர்களின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் துள்ளல் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறும் அ. கண்ணன், ""தூங்க வைப்பதல்ல வானொலி - நம்மைத் துடித்தௌச் செய்வது வானொலி'' என யாழ் சுதாகரின் வரிகளை நினைவூட்டுகிறார்
அப்பொழுது இலங்கை வானொலியில் இருந்த கே.எஸ். ராஜா, பி. ஹெச். அப்துல் ஹமீத் மற்றும் ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர், நேயர்களை தனது குரல்களால் ஈர்த்தனர். அவர்கள் ஒலிபரப்பில் இருக்கும்போது, நம்மையும் அறியாமல் ஒலிபரப்பினைத் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ளும்.
மேலும் அவர்கள் ஒலிபரப்புகின்றப் பாடல்களில் "வெரைட்டி' இருக்கும். ஒரு அதிரடி பாடல் ஒலித்தால், அடுத்த பாடலே மனதை வருடும் மெலடியாக இருக்கும் எனக் கூறுகிறார் கண்ணன். இலங்கை வானொலி நேயர்களில் பெரும்பாலானவர்கள் இதனை அறிவர். இன்றும் இவரிடம், ஏராளமான பழைய பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் இலங்கை வானொலியில் இருந்து ஒலிபரப்பின் போது பதிவு செய்யப்பட்டவை ஆகும்.
இலங்கை வானொலியில் அறிவிப்பாளர்களுக்கு இருக்கும் சுதந்திரம், இங்குள்ள நமது வானொலிகளின் அறிவிப்பாளர்களுக்கு இல்லை. குறிப்பாக அகில இந்திய வானொலியில் இல்லை. இதனால், இங்குள்ள வானொலி அறிவிப்பாளர்கள் தனக்கு வழங்கப்பட்ட எல்லையிலேயே நிகழ்ச்சிகளை வழங்க வேண்டி உள்ளது. மேலும் இங்குள்ள இயக்குனர்களுக்கும் ஏராளமான நெருக்கடிகள் உள்ளன. இதனால், அவர்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவிப்பாளர்களுக்கு விதிக்கின்றனர். நமது அறிவிப்பாளர்களும், சுதந்திரம் கிடைப்பின் நிகழ்ச்சியின் தரத்தினை கண்டிப்பாக உயர்த்துவர்.
நல்ல ரசனை, ஆர்வம், தமிழ் மொழியை நன்றாக எழுதக் கற்றுக் கொடுத்தது இந்த இலங்கை வானொலி. ==முத்தமிழ் ஆரம், கவிதைச் செண்டு, வானொலி மலர்++ போன்ற நிகழ்ச்சிகளில் நேயர்களை பங்கெடுக்கச் செய்தது. அரை மணி நேரமும் ஒரு நேயரின் படைப்பிற்கு பாடல்களுடன் வழங்கிய வானொலி தான் இந்த =இலங்கை வானொலி+ என மகிழ்ச்சியோடு கூறுகிறார்.
இலங்கை வானொலியைத் தவிர வேறு எந்த வானொலிகளையும் கேட்காததற்கு காரணம், இதில் அனைத்தும் உள்ளது. நாம் விரும்புவது அனைத்தும் ஒரே வானொலியில் கிடைக்கும் பொழுது, அதனை கேட்காமல் இருக்க நிச்சயமாக மனம் வராது. மேலும் நமது உள்ளூர் தனியார் வானொலிகளைக் கேட்காததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "வேட்டைக்காரன்' படத்தில் இருந்து "உன்னை அறிந்தால்' பாடலை ஒலிபரப்பிய அந்த தனியார் வானொலியின் அறிவிப்பாளர் அந்த படத்தின் இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என்கிறார். எப்பொழுதுமே தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்தால் அதற்கு இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனாகத்தான் இருக்கும். இந்த சாதாரண விஷயம் இன்று இங்குள்ள தனியார் எப்.எம். அறிவிப்பாளர்களுக்கு தெரியவில்லை. தொடங்கப்பட்ட இரண்டாம் நாளே இந்தத் தவறு
அதில் ஒலிபரப்பாகியது. அன்றைய தினம் கேட்க நிறுத்தியவன் தான், இன்று வரை அந்த வானொலியைக் கேட்கவில்லை. வானொலி அறிவிப்பாளர்களுக்கு பொது அறிவு அதுவும், திரைப்படம் சார்ந்த அறிவு அதிகம் தேவை. ஆனால் இன்றைய அறிவிப்பாளர்களுக்கு அது மிகவும் குறைவாகவே உள்ளது என ஆதங்கப் படுகிறார் விஜயராம் அ. கண்ணன். இதே இலங்கை வானொலியின் அறிவிப் பாளர்களில் பலர் புள்ளி விபரங்களுடன் தகவல்களை வைத்திருப்பர். குறிப்பாக பி.ஹெச். அப்துல் ஹமீது 1960களில் வந்த படங்களில் உள்ள பாடல்கள், பாடலைப் பாடியவர், இயற்றியவர் மற்றும் இசை அமைத்தவரின் விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். இதனால் அவர்களின் மீது மதிப்பு கூடுகிறது. இவ்வாறு நமக்குத் தேவையானது ஒரே இடத்தில் கிடைக்கும் போது நாம் ஏன் வேறு வானொலிகளைக் கேட்க வேண்டும்?
நம்மில் பலருக்கு வானொலிகளைக் கேட்ப துடன் ஆர்வம் நின்றுவிடும். ஆனால் விஜயராம் கண்ணன் அவர்களின் ஆர்வம் அதோடு நிற்கவில்லை. ஒலிபரப்பாகும் ஒவ்வொரு பாடல்களும் பதிவு செய்யப் பட்டதோடு, அது ஆவணப்படுத்தவும் பட்டது. முதலில் குறைவாகக் கிடைத்தது, இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிறைய கிடைக்கிறது என மகிழ்ச்சியாகக் கூறுகிறார்
இலங்கை வானொலியைச் சென்று நேரடியாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், 1975ல் வந்தது. அதற்கு மூல காரணமாக இருந்தது அன்றைய கால கட்டத்தில் ஒலிபரப்பான எம்ஜிஆர், சிவாஜி மற்றும் இளையராஜா ஆகியோரின் பேட்டிகள் எனலாம்.
1975-ல் நினைத்தது 28 வருடங்கள் கழித்து நிறைவடைந்தது. 2003-ல் முதன் முறையாக இலங்கை வானொலியை காணச் சென்றேன். அதில் மறக்க முடியாத சம்பவங்கள் ஏராளம் உள்ளன. குறிப்பாக அங்கு இருந்த 50 அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் ஒன்றரை மணிநேரம் உரையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினமே "விருந்தினர் விருப்பம்' நிகழ்ச்சியில் எனது பேட்டி அரை மணிநேரம் பாடல்களுடன் ஒலிபரப் பாகியது. தென்னிந்தியாவில் இருந்து சென்று, அவ்வாறு பேட்டி காணப் பட்டதில் முதலாமவர் என்ற பெருமைக்குரியவர் இவர் என்றால், அது மிகையில்லை.
இலங்கை வானொலியில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு இடம் "ஒலிக் களஞ்சியம்'. காரணம் 1,45,000 பாடல்களைக் கொண்ட ஒரு அறிய இசை நூலகம். நான் சென்றபோது, கம்ப்யூட்டர் எதுவும் கிடையாது. ஆனால் சித்திர குப்தன் வைத்திருப்பது போன்ற பெரிய புத்தகத்தை, அகர வரிசைப்படி வைத்துள்ளனர். இதன் துணை கொண்டே தேவையான பாடல்களை தேடி எடுக்கின்றனர். பழைய அரக்கு இசைத்தட்டில் இருந்து இன்றைய குறுந்தகடு வரை இதில் அடக்கம்.
மேலும் நம் வானொலிகளைப் போன்று ஒரு படத்தின் இசைத்தட்டு ஒன்று மட்டுமே இங்கு வைத்திருப்பதில்லை. மாறாக இசைத்தட்டு, கேஸட், குறுந்தகடு ஆகிய வற்றையும் வைத்துள்ளனர். இந்த விபரங்கள் அனைத்தும் அந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இருப்பதில் தரமானதை எடுத்து ஒலிபரப்பிற்குப் பயன்படுத்தப் படுகிறது.
தான் சேகரித்து வைத்துள்ள பாடல்களின் சிறப்பு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, இணையம் ஊடாக ஒரு சிறப்பான சேவையைச் செய்து வருகின்றார் ஆத்தூர் அ. கண்ணன். 1940களில் வந்த பாடல்களாக இருந்தாலும் அதனை இணையம் மூலம் பெறும் வசதி இன்று உள்ளது. ஜ்ஜ்ஜ்.ள்ன்ந்ழ்ஹஸ்ஹற்ட்ஹய்ங்ங்.ற்ந் மற்றும் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீர்ர்ப்ஞ்ர்ர்ள்ங்.ஸ்ரீர்ம் போன்ற இணையத் தளங்களின் ஊடாக எமக்கு தேவையான அரியப் பாடல்களையும் பெற்றுக் கொள்வதோடு, தேவைப்படுபவர் களுக்கானப் பாடல்களையும் அதில் தான் பதிவேற்றம் செய்வதாகக் கூறுகிறார்.
மேற்கண்ட இணைய தளங்களில் வெறுமனே பாடல்களை மட்டும் வெளி யிடாமல், அந்தப் பாடல்களைப் பற்றிய சுவாரஸ்யமானத் தகவல்களையும் வெளி யிடுவர். இதனால் பழைய பாடல்களின் சிறப்பு வெளி உலகிற்கு தெரிய வருகிறது.
இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் களுக்காக முதன் முதலில் தனியானதொரு இணைய தளத்தினை உருவாக்கியப் பெருமை, இவருக்கு உண்டு. ஜ்ஜ்ஜ்.ஸ்ண்த்ஹஹ்ழ்ஹம்ர்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீர்ம் எனும் இணைய தளத்தினில் ஒரு சில முக்கிய அறிவிப்பாளர் களின் புகைப்படத்துடன், அவர்களின் அறிவிப்பின் ஒரு கீற்றினையும் அதில் கேட்கலாம். ஆனால் அதில் இன்னும் நிறைய அறிவிப்பாளர்களின் குரல்களைப் பதிவேற்ற எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். தன்னிடம் ஒரு சில முக்கிய அறிவிப்பாளர்களின் அறிய குரல்கள் இல்லை, அவைகளும் கிடைத்தால், இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் புகழினை உலகரியச் செய்யலாம்.
இன்று இலங்கை வானொலியை இணையத் திலும் கேட்கும் வசதி உள்ளது. ஆனாலும், இது சாதாரண மக்களைச் சென்றடைவது இல்லை. இன்றும், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் உள்ள மக்கள் மட்டுமே இவர்களின் பண்பலை ஒலிபரப்புகளை கேட்க முடிகிறது.
இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் பிதாமகன் என்றால், அது எஸ்.பி. மயில்வாகணன் தான். நடிகர் தங்கவேல் "நான் கண்ட சொர்க்கம்' படத்தில் எமலோகத்தில் ரேடியோவை கேட்கும் பொழுது, ""நேயர்கள் கேட்பது இலங்கை வானொலி'' என்று எஸ்.பி. மயில்வாகணன் குரலில் ஒலிக்கும், அதனைக் கேட்கும் தங்கவேல் ""என்ன மயில்வாகணன் எங்கு சென்றாலும் விடமாட்டேன் என்கிறார்'' என்று கூறுவார்.
இலங்கை வானொலியின் புகழானது எங்கும் பரவியிருக்கிறது என்ற கோணத்தில் அந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டு இருந்ததை நினைவு கூற்கிறார். அப்படிப்பட்ட அந்த அறிவிப்பாளரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், எங்களுக்கு வந்தது. அந்தச் சமயத்தில் ஒரு அருமையான படம் கிடைத்தது. உலகத் தமிழர்கள் அந்த அறிவிப்பாளரைப் பார்ப்பதோடு, அவரின் குரலையும் கேட்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர், சென்னை சூரியன் எப்.எம்.மில் உள்ள அருமையான அறிவிப் பாளர் யாழ் சுதாகர். அவரது ஜ்ஜ்ஜ்.ர்ப்ண்ஸ்ஹஹய்ந்ண்.க்ஷப்ர்ஞ்ள்ல்ர்ற்.ஸ்ரீர்ம் எனும் இணைய தளத்தினில் மயில்வாகணன் அவர்களின் அறிய குரலும் புகைப்படமும் பதிவேற்றியுள்ளோம்.
அதே போன்று கே.எஸ். ராஜா அவர்களின் புகைப்படங்கள் மற்றும் குரலினையும் அந்த இணைய தளத்தினில் கேட்கலாம். ஆனால், அவரது முத்திரை நிகழ்ச்சி ஒன்று உள்ளது. அது இன்று வரை நமக்கு கிடைக்கவில்லை. "திரை விருந்து' என்ற அந்த நிகழ்ச்சியை யாரேனும் வைத்திருந்தால், அதனை தந்து உதவலாம். அதன் மூலம் உங்கள் அபிமான அறிவிப்பாளரின் குரல் உலகம் முழுவதும் பரவ வித்திடலாம்.
இலங்கை வானொலியின் முதல் வர்த்தக சேவை அறிவிப்பாளர் ஜஸ்டின் முத்துக் குமார். இவரது பேட்டியை கடந்த 2005-ல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பியதோடு, அன்றைய இவரின் முதல் அறிவிப்பினையும், அதில் ஒலிபரப்பினர் என்பதை நினைவு கூறுகின்றார் ஆத்தூர் அ. கண்ணன்.
வானொலி அறிவிப்பாளர்களில் இன்றளவும் மறக்க முடியாத அறிவிப்பாளராக தனக்கு இருப்பவர் பி.ஹெச். அப்துல் ஹமீது என்று கூறும் கண்ணன், நிகழ்ச்சிகளை வழங்குவதில் அவருக்கு நிகர் அவரே. அவரது கணீர் குரல் யாரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும். மேலும் அவரது நினைவாற்றல் எல்லோரையும் அசர வைக்கும். 60-வது வருட சினிமா சரித்திரத் தினை தனது மூளையில் பதிந்து வைத்திருப்பவர். உலகத் தமிழர்கள் அனை வரும், இன்றும் அவரது பெயரை அறிவர்.
எனது மனதில் என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றால் அது "நினைவூட்டுகிறோம்' என்ற நிகழ்ச்சியே ஆகும். அந்த நிகழ்ச்சியில் பழைய பாடல்களை ஒவ்வொன்றாக ஒலிக்களஞ்சியத்தில் இருந்து எடுத்து ஒலிபரப்புவர். இன்றும் "நினைவில் நின்றவை' என்ற பெயரில் அந்த நிகழ்ச்சி யானது ஒலி உலா வருகிறது. அதே போன்று "இரவின் மடியில்' நிகழ்ச்சி யினையும் கூறலாம். தூங்க வைக்கும் நெஞ்சங்களைத் தாலாட்டும் நிகழ்ச்சி' என்ற அடை மொழியுடன் ஒலிபரப்புவர். அர்ப்பணிப்புடன் அனைவரும் நிகழ்ச்சியை வழங்குவர்.
பிபிசி உலக சேவையில் அன்றைய 'ஏர்ற் டஹழ்ஹக்ங்' எனும் புகழ்பெற்ற நிகழ்ச்சியை அடி ஒட்டி, இலங்கை வானொலியில் பி.ஹெச். அப்துல் ஹமீது வழங்கிய "இசைச் செல்வம்' 1980களில் அனைவராலும் விரும்பிக் கேட்ட இசை அணித்தேர்வு இன்றும் அனை வராலும் நினைவு கூறப்படும் நிகழ்ச்சி.
அதே போன்று சனிக்கிழமைகளில் காலை வேலையில் இவரால் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பான "திரைக் கதம்பம்' நிகழ்ச்சி யைக் கூறலாம். இசைஞானி இளையராஜா வின் இசைக் கோர்ப்புகளை 15 நிமிடங் களுக்கு ஒலிபரப்புவார். 1980களில் வந்த புகழ்பெற்ற பாடல்கள் இசை அமைத்தவிதம் எங்களைப் போன்ற வானொலி நேயர் களுக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு.
இலங்கை வானொலியைப் போன்ற வித்தியாசம் வேறு எங்கும் கேட்க முடியாது எனக் கூறும் விஜயராம் அ. கண்ணன், இலங்கை வானொலி ஒன்று மட்டுமே நேயர்களை மதித்து, அவர்கள் அனுப்பும் ஆக்கங்களை அருமையான நிகழ்ச்சிகளாகப் படைப்பர். "=கவிதைச் செண்டு, முத்தமிழ் ஆரம், வானொலி மலர் மற்றும் இன்றைய நேயர்'+ போன்ற நிகழ்ச்சிகளை அந்த வரிசையில் கூறலாம். இதன் மூலம் நேயர்களின் பெயர் நாள் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
விஜயராம் அ. கண்ணன் அவர்களுக்கு மறக்க முடியாத சக நேயராக இருப்பவர் சேலம் கே. ராஜகோபால். இவரது பெயரில் இலங்கை வானொலியில் 500-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஒலித்துள்ளது. அந்த நிகழ்ச்சிகள் அனைத்தினையும், ஒலிப்பதிவு செய்து வைத்துள்ளாராம். இன்றும் ஒரு சூட்கேஸ் நிறைய ஒலிநாடாக்களாக அதனைப் பாதுகாத்து வைத்துள்ளார். இவரைப் போன்று திருமங்கலக்குடி கோபால்சாமி மற்றும் திருநீலக்குடி உலகநாதன் ஆகியோரைக் கூறலாம். இவர்களைப் போல் ஆக்கங்களை எழுதக்கூடிய இன்னும் பல நேயர்கள் உள்ளதாகவும் கூறுகிறார்.
பணிப்பாளர் நாயகம் சிவராஜா இருந்த காலகட்டத்தில், தான் இலங்கை வானொலி க்கு சென்றதாகவும், அந்தச் சமயத்தில் அவரின் உதவி முக்கியமானதாக இருந்தது. அதேபோல் அறிவிப்பாளர்களில் கணேஷ்வரன், ஏ.எல். ஜஃபீர், ஜெயகிருஷ்ணா, முத்தையா ஜெகன்மோகன், நாகபூசணி, சந்திரமோகன் ஆகியோர் இல்லையென்றால் நான் இலங்கை வானொலிக்குச் சென்றிருக்க முடியாது.
இன்றும் எனது பூஜை அறையில் அன்றைய தினம் சிவராஜா அவர்களின் அறைக்கு முன் எடுக்கப்பட்ட மண்ணை ஒரு கைக் குட்டையில் கட்டி, எடுத்து வந்து அதனை பத்திரமாக வைத்துள் ளேன். அதனை ஒரு பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன்.
இலங்கை வானொலியில் ஒலிக்கும் பழைய பாடல்களைப் பதிவு செய்வதற்காக நான் போகாத ஊர் இல்லை. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம், தென் தமிழகத்திற்கு சென்று விடுவோம். பல முறை இராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக் கானல் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள் ளோம். குறிப்பாக கொடைக்கானலில் செட்டியார் பூங்காவில் மிகத் தெளிவாக பெரும்பாலான இலங்கை வானொலிகள் எடுக்கும்.
இலங்கை சென்று வந்தபோது அங்குள்ள 50 அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் சந்திர மோகன் அவர்கள் கூறியதை என்றும் மறக்க முடியாது எனக் கூறுகிறார் கண்ணன், ""நாம் நமது நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி, இவரைப் போன்று இலங்கை வானொலி யின் மீது பித்து பிடித்தவரைப் பார்த்ததே இல்லை'' என்று கூறிய அந்த வரிகளை இன்றும் தனது மனதில் பதிய வைத்திருக் கிறார். அதனை இன்றும் பெருமையாகக் கருதுகிறார்.
இலங்கை வானொலியைக் கேட்கும் நேயர்களுக்கு மத்தியில், வித்தியாசமான இவரைப் பற்றிக் கூற இன்னும் ஏராளம் உண்டு. நமது முத்திரை நேயர் பகுதி இவ்வாறானவர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துவதன் மூலம் பெருமை கொள்கிறது. இன்றும் தனது பணியை செவ்வனே செய்து வருகிறார் விஜயராம் அ. கண்ணன். அவரது பணி சிறக்க வாழ்த்துவோமாக! அவரது தொடர்பு முகவரி: 14, தாயுமானவர் தெரு, ஆத்தூர் – 636102, சேலம் மாவட்டம். பேச: 98946 70004 
-சந்திப்பு: தங்க. ஜெய்சக்திவேல்

AIR Tamil External Service A09

UTC kHz

0000-0045 1053(T) 7270(Ch) 9835(Ki) 11740(P) 11985(Kh) Sri Lanka
0000-0045 9910(A) 11740(P) 13795(B) SE Asia
0115-0330 1053(T) Sri Lanka
1100-1300 1053(T) 7270(Ch) ,,
1115-1215 13695(B) 15770(A) 17810(P) SE Asia
1115-1215 15050(Kh) 17860(Ki) Sri Lanka
1500-1530 1053(T) ,,

Add +5.30 with UTC for local time

Transmitter Sites used for External Services

No. Code Location kW kHz
1 A Aligarh 4x250 SW
2 B Bengaluru (Bangalore) 6x500 SW
3 C Chinsurah (Kolkata / Calcutta) 1x500 594 1134
4 Ch Chennai (Madras) 1x100 7270
5 G Gorakhpur 1x50 3945 7250
6 Gu Guwahati 1x50 7420
7 J Jalandhar 1x300 702
8 Kh Khampur (Delhi) 7x250 SW
9 Ki Kingsway (Delhi) 3x50, 2x100 SW
10 M Mumbai (Bombay) 1x100 7340 11935
11 P Panaji 2x250 SW
12 T Tuticorin 1x200 1053
Prepared by Jose Jacob, India. Email: vu2jos@gmail.com

Friday, March 20, 2009

சென்னை வானொலி அலைவரிசை மாற்றம்

அகில இந்திய வானொலியின் சென்னை நிலையம் வரும் 29 மார்ச் 2009 முதல் அலைவரிசை மாற்றத்தினை செய்ய உள்ளது. இதுவரை ஒலிபரப்பி வந்த 7270 (41மீ) கிலோ ஹெர்ட்ஸில் இருந்து 7360 கிலோ ஹெர்ட்ஸ்-க்கு மாற்றம் செய்துள்ளது.

காலை 0530 முதல் 0615 வரை சிங்களம்
காலை 0616 முதல் 0645 வரை தமிழ்
காலை 0646 முதல் 1000 வரை எப்.எம் கோல்ட் ஆகிய ஒலிபரப்புகளை கேட்கலாம்.

Wednesday, March 18, 2009

மீண்டும் பண்பலை பாசப் பறவைகள்


தமிழகத்தில் உள்ள வானொலி நேயர்களை ஒருங்கினைக்கும் நோக்கில் நேயர்களின் புகைப்படம், முகவரி மற்றும் இன்னும் பல விபரங்களோடு மீண்டும் பண்பலை பாசப் பறவைகள் புத்தகம் வெளிவரவுள்ளது. இந்த புத்தகத்தில் உங்களின் முகவரியும் இடம்பெற நீங்கள் உங்கள் புகைப்படத்துடன் பெயர், வயது, பிறந்த நாள், படிப்பு, தொழில், லட்சியம், இரத்தப்பிரிவு, திருமண நாள், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணுடன் ரூ.125 பணவிடையுடன் அனுப்ப வேண்டும் . முகவரி: இரத்தினபுரி இராஜா முகமது, #5, கக்கன் வீதி, இரத்தினபுரி, கோவை - 641 027, பேச: 98430 87633.

Friday, March 13, 2009

சர்வதேச வானொலி - ஜனவரி 2009 (மாத இதழ்)


முத்திரை நேயர் - விஜயராம் அ. கண்ணன்
இலங்கை வானொலி இளம் அறிவிப்பாளர் ராதிகா கலைமணி செவ்வி -கன்னியாகுமரி சகாதேவன் விஜயகுமார்
ஏற்காடு ஹாம் சந்திப்பு என பல பகுதிகளுடன் வெளி வந்த இதழை நீங்களும் படிக்க வேண்டாமா...
ஆண்டு சந்தா ரூ. 100/- மட்டுமே.
சந்தாவை பண விடையாக (எம்.ஒ) அனுப்ப வேண்டிய முகவரி

தங்க. ஜெய்சக்திவேல்,
# 59, அன்னை சத்யா நகர்,
அரும்பாக்கம்,
சென்னை - 600106,
பேச : 98413 66086.