Tuesday, April 30, 2013

SBS வானொலி தமிழ் ஒலிபரப்பிற்கு வாழ்த்துக்கள்!

SBS Radio
SBS தமிழ் ஒலிபரப்பு இன்று (29 ஏப்ரல் 20013 - திங்கள்கிழமை) முதல் வாரத்தில் நான்கு நாட்கள் ஒலிபரப்பை துவக்கியுள்ளது. SBS வானொலி நிர்வாகிகளும், ஆஸ்திரேலியாவில் இயங்கும் தமிழ் வானொலிகளின் நிகழ்ச்சி தயாரிப்பாளர்களும், பிரதிநிதிகளும், இயக்குனர்களும் SBS தமிழ் ஒலிபரப்பை இப்படி வாழ்த்துகின்றனர். வாழ்த்துக்களைக் கேட்க இங்கே சொடுக்கவும்

Friday, April 12, 2013

எஸ் எல் பி சி வழியான பி பி சி வானொலி ஒலிபரப்பு இடைநிறுத்தம்


பிபிசி வானொலி நிகழ்ச்சிகளை இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன பண்பலை சேவை மூலம் ஒலிபரப்புவதென்பதை 26 மார்ச் செவ்வாய்க்கிழமை முதல் பிபிசி இடைநிறுத்திக்கொள்கிறது.
இத்தகவலை பிபிசி உலக சேவையின் இயக்குநர் பீட்டர் ஹோரக்ஸ் வெளியிட்டார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் பிபிசி தமிழோசை நிகழ்ச்சிகள் தொடர்ந்து இடையில் தடுக்கப்படுவது மற்றும் வேறு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாவது போன்றவை தொடர்ந்து நடந்ததை அடுத்து இந்த நடவடிக்கை வருகிறது.
"இலங்கையில் எமது நிகழ்ச்சிகளைத் தொடர்ந்து கேட்டுவரும் நேயர்களுக்கு இந்த சேவை தரப்படுவதில் ஏற்பட்டிருக்கும் இத்தடை குறித்து நாங்கள் வருந்துகிறோம், ஆனால் எங்களது நிகழ்ச்சிகளை குறிவைத்து இது போன்ற இடைஞ்சல்கள் நடப்பது, அந்த நேயர்கள் எங்கள் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை பாரிய அளவில் மீறுவதான ஒரு செயல் இதை பிபிசி அனுமதிக்கமுடியாது." என பீட்டர் ஹோரக்ஸ் தனது அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.
பீட்டர் ஹோரக்ஸ் மேலும் கூறுகையில், "இது போன்ற நிகழ்ச்சித் தடங்கல்கள் கடந்த வாரம் மார்ச் 16 , 17 மற்றும் 18ம் தேதிகளில் நடந்த போது இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துடன் பேசினோம். அவர்கள் எங்களுடன் கொண்டிருக்கும் ஒலிபரப்பு ஒப்பந்த்த்தை மீறும் ஒரு செயல் இது என்று அவர்களுக்கு எச்சரித்தோம். ஆனால் மார்ச் 25ம் தேதி திங்கட்கிழமை மற்றுமொரு தடங்கல் சம்பவம் நடந்ததால், இந்தச் சேவையை உடனடியாக இடைநிறுத்துவதைத் தவிர பிபிசிக்கு வேறு வழிகள் இல்லாமல் செய்துவிட்டது" என்றார்.
"பிபிசியின் நிகழ்ச்சிகள் எவை பற்றியும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்துக்கு குறிப்பான புகார்கள் இருந்தால், பிரச்சினைகளை எங்களிடம் நேரடியாகக் கொண்டுவரவேண்டும் என்று நாங்கள் கோரியிருந்தோம். எங்களால் ஏற்கமுடியாதபடிக்கு ஒலிபரப்பில் நேரடியாக இடைஞ்சல்கள் செய்வது மற்றும் எங்களது நேயர்களை ஏமாற்றுவது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபடாமல் இருக்க வேண்டும் என்று நான்கள் கேட்டிருந்தோம்" என பீட்டர் ஹோரக்ஸ் தெரிவித்துள்ளார்.
இது போன்ற நடவடிக்கை ஒன்றை பிபிசி 2009ம் ஆண்டில், அதன் சேவைகள் இடைஞ்சலுக்கு உள்ளான போதும் எடுத்திருந்தது.

சிற்றலையிலும் இணையதளம் வழியாகவும் கேட்கலாம்

இலங்கயில் உள்ள எமது நேயர்கள் எமது நிகழ்ச்சிகளை இனி சிற்றலை வரிசைகள் மூலமாகவும், இணைய தளம் மூலமாகவும் கேட்கலாம்.
பிபிசி தமிழோசை ஒலிபரப்பை நேயர்கள் சிற்றலை ஒலிபரப்பு வரிசைகள்
  • 25 மீட்டர் பேண்டில், 11965 கிலோஹெர்ட்ஸ்,
  • 31 மீட்டர் பேண்டில் 9855 கிலோஹெர்ட்ஸ்
  • 49 மீட்டர் பேண்டில் 6135 கிலோஹெர்ட்ஸ் மற்றும்
  • 41 மீட்டர் பேண்டில் 7600 கிலோஹெர்ட்ஸ்
ஆகையவை மூலம் வரும் மார்ச் 30ம் தேதிவரை கேட்கலாம்.
மார்ச் 31 முதல் புதிய அலைவரிசைகள் அமலுக்கு வரும். அப்போது புதிய அறிவிப்பு ஒன்று வெளியாகும்.
எமது இணையதளம் வழியாகவும் தமிழோசை நிகழ்ச்சிகளை நேயர்கள் கேட்கலாம்.
நன்றி!

ஈழம் தொடர்பில் வானொலி

வானொலி சேவை ஆரம்பத்துடன் ஈழம் தொடர்பில் அடுத்த கட்ட நகர்வை ஆரம்பித்துள்ளனர் தமிழக மாணவர்கள்!


ஈழ ஆதரவு மாணவர் போராட்டம் தற்போது அடுத்தகட்டத்திற்கு நகரவுள்ளது. இதுதொடர்பான தகவலை தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் மணிகண்டன் விடுத்துள்ள அறிக்கையில் தமிழீழ விடுதலைக்காக நடைபெற்றுக் கொண்டிருக்கும் மாணவர்களின் போராட்டமானது ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில் ஐநா வாக்கெடுப்புக்குப் பி்ன்னர் மாணவர்களது போராட்டமானது ஈழத்தில் நடந்தவற்றை அதன் வரலாற்றை போராட்ட களத்தில் கலந்து கொள்ளாத சக மாணவர்களுக்கு எடுத்துச் செல்லும் பணியை அனைத்து மாவட்டங்களிலும் திறம்பட செய்து கொண்டுள்ளோம்.
  
அவ்வகையில் கல்லூரி திறந்த நாள் முதல் தினமும் காலை 11மணியிலலிருந்து 11:02 வரையிலான இரண்டு நிமிடங்களுக்கு இருக்கும் இடத்திலேயே எழுந்து நின்று மௌனம் கடைபிடிக்கிறோம். இது இறந்த தமிழர்களுக்கான அஞ்சலி அல்ல. நம் தமிழ் இனம் பட்ட வலியை இவ்வுலகம் உணர்வதற்காக நடத்தப்படும் மௌனப் போராட்டம். ஐநா மன்றம் மூடிய காதுகளை திறக்கும் வரையில் இந்த மௌன போராட்டம் தொடரும். ஐ.நா.மன்றம் தன்னுடைய பொறுப்பை தட்டிக்கழிப்பதாகவே உணர்கிறோம். எனவே அடுத்தகட்டமாக ஐ.நா.வை வலியுறுத்தி எங்கள் போராட்டத்தை துவக்கப் போகிறோம். ஈழத்தில் நடந்த கொடுமைகளையும் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டியதன் தேவையையும் மனித நேயம் கொண்ட உலக பொதுமக்கள் மற்றும் உலக மாணவர்களிடம் எடுத்துசெல்கிறோம்.
 
அடுத்த வாரம் மாணவ கூட்டமைப்பை சேர்ந்த சில மாணவர்கள் தலைநகர் டெல்லி சென்று அங்குள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்திற்கு சென்று மாணவர்களிடம் ஈழத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படவேண்டிய நியாயமான கோரிக்கைகளை எடுத்துரைத்து மௌன போராட்டத்திற்கு அந்த மாணவர்களின் ஆதரவையும் கோரவுள்ளோம். தொடர்ந்து அடுத்த கல்வியாண்டு தொடக்கத்திலிருந்து இதே போன்று அனைத்து மாநில மாணவர்களை சந்திப்பதற்கான திட்டத்தை வடிவமைப்போம். தமிழக மாணவர்களின் முறையீட்டு மடல் 20க்கும் மேற்பட்ட மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அனைத்துலக மாணவ சமுதாயத்திடம் கொண்டு சேர்க்கும் பணியை தொடர்ந்து மேற்கொள்வோம்.
 
பல்வேறு கல்லூரியில் தொடர்ந்து நடத்தப்பட்டுக்கொண்டிருக்கும் மாணவர்களின் இந்த அறவழியிலான நூதன போராட்டத்திற்கு சில கல்லூரி நிர்வாகம் தடை போடுகிறார்கள். மாணவர்களின் இந்த அறவழி போராட்ட முறையில் சில கல்லூரி நிர்வாகங்களுக்கு நம்பிக்கையில்லாமல் போவது வருந்தத்தக்க கண்டிக்கத்தக்க செயல். இந்த மௌன போராட்டத்திற்கு தடை விதிக்கும் கல்லூரிகளின் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். அந்தக் கல்லூரிகளை அந்த மாவட்டத்திலுள்ள மற்ற கல்லூரி மாணவர்கள் முற்றுகை போராட்டம் நடத்துவார்கள்.
 
கடந்த 60 ஆண்டு கால ஈழ வரலாற்றை தாங்கி நிற்கும் www.supporttamileelam.org என்ற இணைய முகவரியையும் வாக்கெடுப்பு நடத்துங்கள் (We Want Referendum) என்ற வாசகத்தையும் கொண்ட பேட்ஜ் அணிந்து கல்லூரி செல்வோம். இலங்கையில் தமிழ் இனப்படுகொலை நடத்திமுடிக்கப்பட்டதாக சொல்லப்படும் மே மாதம் 18ம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரிலும் மாணவர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பங்கேற்கும் பேரணி நடத்தப்படும். மாலை 4 மணிக்கு தொடங்கும் இந்தப் பேரணி அந்தந்த மாவட்டங்களில் எந்த இடத்தில் தொடங்கி எந்த இடத்தில் முடியும் என்பது பின்னர் அறிவிக்கப்படும் என்று அவர் கூறியுள்ளார்.
 
இதற்கிடையே, தமிழ் நாடு மாணவர் கூட்டமைப்பு சார்பாக வரும் 13ம் தேதி சென்னை எழும்பூர் இம்பீரியல் ஹோட்டலில் தமிழகம் முழுவதிலிருந்தும் அனைத்து மாவட்ட மாணவர் கூட்டமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொள்ளவுள்ளனர்.
 
மாணவர்களின் வானொலி
 
இந்த நிலையில் தமிழீழ மாணவர் அமைப்பு வானொலி ஒன்றை தொடக்கியுள்ளது. மக்கள் மத்தியில் மாணவர் போராட்டம் குறித்தும் இலங்கை இனப்படுகொலை குறித்தும் தகவல்களை கொண்டு சேர்க்கும் விதமாக இணையதள வானொலி ஒன்றை தொடஙகியுள்ளனர். இந்த வானொலி தற்போது ஒலிபரப்பை தொடங்கி நடத்தி வருகிறது.
 
இதற்கிடையே தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு சார்பாக கோவையில் வருகிற 20,21 தேதிகளில் நடைபெற இருக்கும் போற்குற்றமல்ல இனப்படுகொலையே. இலங்கை அல்ல தனி தமிழீழமே என்ற புகைப்பட ஓவிய கண்காட்சி , காணொளி திரைகாட்சி மற்றும் கருத்தருங்கினை ஏற்பாடு செய்வதில் மாணவர்கள் முழுவீச்சில் தங்களை ஈடுபடுத்தி கொண்டுள்ளனர்.
 
மேலும் இக்கண்காட்சியில் மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளோடு கையெழுத்து இயக்கம் மற்றும் மாதிரி பொது வாக்கெடுப்பு நடத்த இருப்பது குறிப்பிடத்தக்கது. இக்கண்காட்சியின் நோக்கம் மாணவர் போராட்டத்தை மக்கள் போராட்டமாக மாற்றுவதோடு மட்டுமல்லாமல் தமிழீழம் பற்றிய விழிப்புணர்வை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்ப்பதற்காக முதற்கட்ட பணியாக தொடங்க உள்ளனர்.

சீன-தெற்காசிய பொருட்காட்சித் தலைப்புப் பாடல் தேர்வு



இவ்வாண்டு ஜுன் திங்கள் முதலாவது சீன-தெற்காசிய பொருட்காட்சி சீனாவின் யுன்னான் மாநிலத்தின் குன்மிங் நகரில் நடைபெறும். இதை முன்னிட்டு, சீனாவுக்கும் தெற்காசிய நாடுகளுக்கும் இடையில் பண்பாட்டுப் பரிமாற்றம் மற்றும் ஒத்துழைப்பைத் தூண்டும் வகையில், இப்பொருட்காட்சிக்குத் தலைப்புப் பாடல் சேகரிப்பு நடவடிக்கை அதிகாரப்பூர்வமாகத் துவங்கியுள்ளது. சீன வானொலி நிலையமும் குன்மிங் நகரமும் தெற்காசிய பிரதேசத்தின் பல்வேறு துறையினர்களிடையில் தலைப்புப் பாடலையும் பாடல் வரிகளையும் சேகரிக்கும்.இந்தப் பாடல் மற்றும் பாடல் வரிகள், அருமையான இராயகமும் ஆழ்ந்த அர்த்தமுள்ள உள்ளட்டக்கமும் கொண்டு, ஒன்றுக்கொன்று திறப்பு, நடைமுறை ஒத்துழைப்பு, ஒன்றுக்கொன்று நலன் மற்றும் கூட்டு வெற்றி, இசைவான வளர்ச்சி ஆகியவை படைக்கும் சீன-தெற்காசிய பொருட்காட்சியின் தலைப்பை வெளிப்படுத்த வேண்டும். யுன்னான் மற்றும் தெற்காசிய நாடுகளின் வண்ணமயமான தேசிய இனப் பண்பாட்டையும் பண்பாட்டுடன் நெருங்கிய பழக்கவழக்கங்களையும் வெளிப்படுத்த வேண்டும். மொழி, பாணி மற்றும் வடிவம் எந்த கட்டுப்பாடுமின்றி உயர் கலை வெளிப்பாட்டுடன், வேறுபட்ட பண்பாட்டுப் பின்னணியிலுள்ள இரசிகர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு பரவது போல இப்பாடல் அமைய வேண்டும்.தமிழ் நண்பர்களை இந்தப் பாடல் சேகரிப்பு நடவடிக்கையில் ஆக்கமுடன் கலந்து கொள்ள வரவேற்கின்றோம். உங்கள் படைப்பை இவ்வாண்டு ஏப்ரல் 26ஆம் நாளுக்கு முன் வான் அல்லது மின்னஞ்சல் மூலம் சீன வானொலி தமிழ்ப் பிரிவுக்கு அனுப்பலாம்.

சீன-தெற்காசிய பொருட்காட்சித் தலைப்புப் பாடல் தேர்வுப் படிவம்
பாடல் தலைப்பு:

பாடல் அறிமுகம்:

பெயர்:

குடியுரிமை:

அடையாள அட்டை:

அடையாள அட்டை எண்:

பங்கெடுப்பு: □இசையமைப்பு □பாடல் வரி □பாடகர்/பாடகி

முகவரி:

அஞ்சல் எண்:

மின்னஞ்சல்:

தொலைபேசி/கைபேசி:

தொலைநகல்:

கையொப்பம்:

தேதி:

சீன வானொலி கட்டுரை போட்டி

                                                                             அன்புள்ள நண்பர்களே, இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ்ப் பிரிவு தனது பொன் விழா நாளை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரை போட்டியை நடத்துகின்றோம். இப்போட்டிக்கான கட்டுரைகளை மே திங்கள் 31ம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்ப் பிரிவுடன் உங்களது சுவைமிகு அனுபவங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். கிடைக்கப் பெற்ற கட்டுரைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழ்ப் பிரிவின் இணையத்தளம் மற்றும் வானொலி நிகழ்ச்சியில் வழங்குவோம். 

மொத்தம், 3 முதல் பரிசுகள், 5 இரண்டாம் பரிசுகள், 10 மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். இணையத்தளத்தில் மிகவும் விரும்பும் கட்டுரைக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நடப்புப் போட்டியில், அதிக வாக்குகளைப் பெற்ற கட்டுரையை எழுதியவருக்கு சிறப்புப் பரிசை வழங்குவோம்.
மேலும், ஏதாவது ஒரு தமிழ் ஊடகத்தில் உங்கள் கட்டுரை வெளியிடப்பாட்டால், அந்தக் கட்டுரைக்கு ஒரு சிறப்புப் பரிவு உண்டு.
நண்பர்களே, கட்டுரைப் போட்டியில் உற்சாகத்துடன் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தமிழ் பேசும் சீன வானொலி

"தேமதுரத் தமிழோசை உலகமெங்கும் பரவும் வகை செய்தல் வேண்டும்" என்ற மகாகவியின் கனவினை மெய்பிக்கும் விதமாக வேற்று நாட்டினர் மொழியினைக் கற்று, திறம்படக் கையாண்டு, தமிழோசையைப் பரப்புவது சிறப்பான விஷயமல்லவா? இப்பணியை தான் தொடர்ந்து 50 வருடங்களாக செம்மையாக செய்து வருகின்றனர் சீன வானொலியின் தமிழ்ப் பிரிவினர். 61 உலக மொழிகளில், ஹிந்தி, வங்காளம், தமிழ் என்ற மூன்று இந்திய மொழிகளில் நாள்தோறும் குறிப்பிட்ட நேரங்களில் நிகழ்ச்சிகளை தருகிறது சீன வானொலி. தமிழ் பேசும் சீன வானொலி தமிழ் வர்ணனையாளர்கள் ஒவ்வொருவரும் தனி ரகம். அவர்கள் புத்தாண்டு நிகழ்ச்சியில் தத்தம் விருப்பங்களைச் சுவையான முறையில் தரும் போது, தமிழை மேன்மேலும் கற்றுச் சிறக்க வேண்டும் என்று கூறியதைக் கேட்ட போது, தமிழொலியும் தமிழோசையும் பரப்பும் இந்தத் தமிழ்க் காவலர்களைப் பல்லாண்டு வாழ வேண்டும் என்று வாழ்த்தத் தோன்றியது.
எத்தனை தான் கணிப்பொறியும் தொலைக்காட்சியும் இருந்த போதும், தமிழகம் மட்டுமின்றி உலகெங்கிலும் அதைப் பலரும் கேட்டுப் பயன்பெறுவதை மின்னஞ்சல் மூலமும் நேருக்கு நேர், நேயர் நேரத்தில் குரல்களின் மூலம் கேட்கும் போது, அவர்களது தமிழ்ப் பணி மேலும் சிறப்பாகத் தொடர நல்வாழ்த்துக்களை தமிழ் விரும்பும் அனைத்து நெஞ்சங்களின் சார்பாகக் கூற விரும்புகின்றேன். வானொலியின் பணி தொடர்ந்து, தமிழ் நேயர்களுக்கு சீனா பற்றிய செய்திகள் பலவற்றையும் அறியும் வாய்ப்பினை ஏற்படுத்தி, மேன்மேலும் வளர யாவரும் வாழ்த்துக் கூறுவோம்.தற்போது இவ்வானொலியின் பொன்விழாவினையொட்டி ஒரு கட்டுரை போட்டியையும் அறிவித்துள்ளனர். சீன வானொலியுடனான நட்பினை வெளிப்படுத்தும் படியான கட்டுரையாக இது இருக்க வேண்டும். மே மாதம் 31 ம் தேதி வரை கட்டுரைகளை அனுப்பலாம்.
- நமது செய்தியாளர் சித்ரா சிவக்குமார்
நன்றி: http://www.dinamalar.com

இவ்வாண்டின் ஆகஸ்ட் திங்கள் முதல் நாள் சீன வானொலி தமிழ்ப் பிரிவு தனது பொன் விழா நாளை கொண்டாடவுள்ளது. இதனை முன்னிட்டு, தமிழ்ப் பிரிவின் பொன்விழாவுடன் நட்புறவு எனும் கட்டுரை போட்டியை நடத்துகின்றோம். இப்போட்டிக்கான கட்டுரைகளை மே திங்கள் 31ம் நாளுக்குள் அனுப்பி வைக்க வேண்டும். தமிழ்ப் பிரிவுடன் உங்களது சுவைமிகு அனுபவங்களை எழுதி எங்களுக்கு அனுப்புங்கள். கிடைக்கப் பெற்ற கட்டுரைகளிலிருந்து சிறந்தவற்றைத் தேர்ந்தெடுத்து தமிழ்ப் பிரிவின் இணையத்தளம் மற்றும் வானொலி நிகழ்ச்சியில் வழங்குவோம். மொத்தம், 3 முதல் பரிசுகள், 5 இரண்டாம் பரிசுகள், 10 மூன்றாம் பரிசுகள் வழங்கப்படும். இணையத்தளத்தில் மிகவும் விரும்பும் கட்டுரைக்கு வாக்களிக்க வேண்டுமாறு கேட்டுக்கொள்கின்றோம். இணையதள முகவரி: ://tamil.cri.cn வான் அஞ்சல் முகவரி: TAMIL SERVICE CRI-9, CHINA RADIO INTERNATIONAL P.O.Box 4216, BEIJING P.R.CHINA 100040 மின்னஞ்சல் முகவரி: tamil@cri.com.cn
- Nilaani Beijing,china