Friday, November 21, 2008

இலங்கை: வெற்றி எப்.எம்மின் நிர்வாகி கைது

இலங்கையில் ஊடகத்துறையை சேர்ந்த திரு லோஷன் அவர்கள், வெற்றி எப்.எம் மேலாளராக / இயக்குனராக இருக்கிறார்...

அவர் சிரீலங்கா அரசாங்கத்தால் சனிக்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்...

வெற்றி எப்.எம்மின் மற்றொரு நிர்வாகியான சஞ்ஜெய்யும் கைது செய்யப்பட்டுள்ளார்...

பயங்கரவாதிகளுடன் தொடர்புவைத்திருந்தார் என்று அவரை கைது செய்யப்பட்டபோது அளிப்பட்ட குற்றச்சாட்டு சீட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது...

கைது செய்யப்பட்டவர் இப்போது எங்கே இருக்கிறார் என்ற தகவல் கூட அவருடைய குடும்பத்தாருக்கு தெரிவிக்கப்படவில்லை...

இது ஜனநாயகமா ? இது தான் ஊடகவியலாளர்களை நடத்தும் முறையா ?

பயங்கரவாதிகளோடு தொடர்புள்ளவர் எப்.எம் நடத்திக்கொண்டு, வீட்டில் வாழ்ந்துகொண்டு இருந்தார் என்று கூறுவதை ஏற்றுக்கொள்ளமுடியாது...

ஊடகவியலாளர் என்ற அடிப்படையில் அவருக்கு எந்த இயக்கத்தினரையும் தொடர்புகொள்ளவோ, சந்திக்கவோ கூட உரிமை உள்ளது....

அவர் எங்கே அடைத்து வைக்கப்பட்டுள்ளார் என்று கூட அறிவிக்காமல் இருக்கும் சிரீலங்கா அரசு தான் பயங்கரவாத செயலில் ஈடுபட்டுள்ளத்து...

ஊடகவியளார்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கவேண்டிய அரசு, பத்திரிக்கை சுகந்திரத்தை காக்கவேண்டிய அரசு, இப்படி செயல்படுவது முறையல்ல...

உடனே சர்வதேச அளவிலான அழுத்தங்கள் தந்து, லோஷன் அவர்களை காக்க நடவடிக்கை எடுக்க சர்வதேச சமுதாயம் தன்னால் ஆன முயற்சிகளை எடுக்கவேண்டும்...

பத்திரிக்கை சுகந்திரம் காக்கப்படவேண்டும்...

மனித உரிமைகள் காக்கப்படவேண்டும்...

பேச்சுரிமை, எழுத்துரிமை ஆகியவை நிலைநாட்டப்படவேண்டும்...

அவரது உயிருக்கு எந்த விதமான ஆபத்தும் ஏற்பட்டிருக்காது என்று நம்புகிறேன், அவர் நல்லபடியாக திரும்ப வரவேண்டும் !!!

சீரீலங்கா அரசாங்கத்துக்கு என்னுடைய கண்டனங்களை இந்த பதிவு மூலமாக தெரிவித்துக்கொள்கிறேன்...

வலைப்பதிவு உலகில் இருக்கும் ஊடகவியளாலர்கள் இந்த நிகழ்வை தமிழக முதல்வரின் பார்வைக்கு உடனே கொண்டுசெல்லவேண்டும் என்று தெரிவித்துக்கொள்கிறேன்...!!!

Source: http://tvpravi.blogspot.com

Tuesday, November 18, 2008

ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் வானொலி


பதிவர் சந்திப்பு நிகழ்ந்த அந்த சனிக்கிழமை ஒரு விஷேசமான நாள். ஒவ்வொரு வருடமும் ஒரு நாள் மட்டும் ஒலிபரப்பும் ஒரு வானொலி நிலையம் உள்ளது. அதன் பெயர் ரேடியோ செயின்ட் ஹேலீனா. அது தெற்கு அட்லான்டிக் பெருங்கடலில் அமைந்துள்ளது. அன்றைய தினம் அவர்கள் இந்திய நேயர்களுக்காக ஒரு மணி நேரம் மட்டும் ஒலிபரப்பினர். அந்த ஒலிபரப்பினைக் கேட்கத் தாயார்படுத்திக் கொண்டு இருந்ததால் எங்களது பதிவுலக நண்பர்கள் சந்திப்பில் கலந்து கொள்ள இயலவில்லை. நீங்களும் அந்த ஒலிபரப்பினை கேட்க எனது ஆங்கில பக்கத்தினை சொடுக்கலாம் www.dxersguide.blogspot.com

dxersguide

Hi everyone, I posted an episode to my podcast, Jais podcast.

Click this link to check it out:
Radio St. Helena on 15 Nov 2008

- Jai


dxersguide



Thursday, November 06, 2008

தமிழ் சிற்றலை வானொலிகள் (26 அக்டோபர் 2008 முதல் 29 மார்ச் 2009)

வானொலி I நேரம் I அலைவாரிசை I மீட்டர்

தமிழ் நாதம் (இந்தியா) I 0530-0615 காலை I 7360,9835,9910,11740,11985,13795 I 41,31,25,22
0445-0545 மாலை I 7270,13710,15050,15770,17810,17860 I 41,22,19,16
IBC தமிழ்-இங்கிலாந்து I 0530-0630 காலை I 7205 (5935,6045 - A08) I41
அ.இ.வா (இந்தியா) I0545-0815 காலை I 4920 I 60
0830-1000 காலை I 7160 I 41
1240-0300 மதியம் I 7160 I 41
0530-1105 இரவு I 4920 I 60
பீபா (இங்கிலாந்து) I 0600-0630 காலை I 5885 I 49
வோரித்தாஸ்-பிலிப்பைன்ஸ் I 0600-0630 காலை I 11935 I 25
0730-0800 இரவு I9520 I 31
ஆத்மீக யாத்திரை (அமொரிக்கா) I 0630-0700 காலை I 6140 I 49
வத்திகான் வானொலி (வத்திகான்) I 0630-0650 காலை I 5915,7335 I 49,41
0750-0810 காலை I12070 I 22
0820-0840 இரவு I 9310,11850,13765 I 31,25,22
FM கோல்ட் (சென்னை) I 0700-1000 காலை I 7360 I 41
சீன வானொலி I 0730-0830 காலை I 11870,13715 I 25,22
0830-0930 காலை I 1360,013735 I 22
0730-0830 இரவு I 9570, 9665 I 31
0830-0930 இரவு I 9730,13600 I 31,22
பிபிசி தமிழோசை I 0915-0945 இரவு I 6135, 7205,9540 I 49,41,31
அ.இ.வா (திருவணந்தபுரம்) I 1108-1200 மதியம் I 7290 I 41
அ.இ.வா (அந்தமான்) I 0500-0530 மாலை I 4760 I 60
ஆசிய சேவை (இலங்கை) I 0500-0700 மாலை I 7190,11905 - A08 I 41,25
ஆட்வண்டிஸ்ட் வானொலி (அமொரிக்கா) I 0830-0900 இரவு I 11985 I 25
I 1100-1130 இரவு I 11695 I 25
Family Radio (அமொரிக்கா) I 0730-0830 இரவு I 17810 I 16
I 0830-0930 இரவு I 13655 I 22
HCJB (ஆஸ்திரேலியா) I0815-0830 இரவு(சனி மட்டும்) I 15425 - A08 I 19

Wednesday, November 05, 2008

சர்வதேச வானொலி செப்டம்பர் - அக்டோபர் 2008

வெளிவந்து விட்டது இந்த மாத சர்வதேச வானொலி இதழ்.

இந்த இதழில்...

  • இலங்கை வானொலி சிவராஜா தக்கீசன் சிறப்பு செவ்வி
  • ஆண்டு விழா போட்டி முடிவுகள்
  • அலைகளுக்கென்ன வேலி
  • ரேடியோ பிராஹா - ஒரு கண்ணோட்டம்
  • தமிழ் சிற்றலை வானொலிகளின் புதிய அலைவரிசை பட்டியல்

என பல்வேறு புதியத் தகவல்களுடன் வெளிவந்துவிட்டது.
இதழின் ஆண்டு சந்தா ரூ. 100/-
தொடர்புகளுக்கு: 98413 66086
வாங்குவதற்கு முன் பார்க்க வேண்டாமா?!
படிக்க ஆர்வமுள்ளவர்கள், சொடுக்கவும் கீழ்கண்ட தொடுப்பினை
http://vaanoliulagam.googlepages.com/Oct2k8F.pdf