சர்வதேச வானொலி
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Saturday, July 05, 2025
Sunday, March 02, 2025
20 ஆண்டைக் கொண்டாடும் எம்.ஓ.பி. சமுதாய வானொலி 107.8 MHz
எம்.ஓ.பி. வைஷ்ணவ் மகளிர் கல்லூரி (தன்னாட்சி) தனது எம்.ஓ.பி. சமுதாய வானொலி நிலையம் 107.8 MHz. சார்பில் தேசிய வானொலி கருத்தரங்கை நடத்துகிறது. "சமுதாய சேவையை கொண்டாடும் 20வது தேசிய வானொலி கருத்தரங்கு" என்ற தலைப்பில் இந்த கருத்தரங்கு நடைபெற உள்ளது.
இந்த கருத்தரங்கின் தொடக்க விழா கல்லூரியின் இரண்டாம் தளத்தில் உள்ள கலையரங்கில் மார்ச் 12, 2025 காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தமிழக அரசின் சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளிப்புத்துறை அமைச்சர் திருமதி பி. கீதா ஜீவன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு கருத்தரங்கைத் தொடங்கி வைக்கிறார். மேலும், சமுதாய வானொலி முன்னோடி டாக்டர். ஸ்ரீதர் ஆர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொள்கிறார்.
* முன்னாள் இயக்குனர் திரு. எம்.எஸ். பெருமாள், தூர்தர்ஷன் கேந்திரா, சென்னை அவர்கள் "சமுதாய வானொலிக்கான பயனுள்ள திட்ட மேலாண்மை" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
* சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தகவல் தொடர்புத் துறையின் உதவிப் பேராசிரியர் திரு. ஜெய்சக்திவேல் அவர்கள் "சமுதாய ஈடுபாடு மூலம் மக்களுக்களுடன் பாலங்களை உருவாக்குதல்" என்ற தலைப்பில் உரையாற்றுகிறார்.
இந்த கருத்தரங்கு சமுதாய வானொலியின் முக்கியத்துவம் மற்றும் அதன் பங்களிப்பு குறித்து விவாதிக்க ஒரு தளமாக அமையும். மேலும், சமுதாய வானொலி துறையில் உள்ள சவால்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து நிபுணர்கள் மற்றும் பங்கேற்பாளர்கள் கருத்துக்களை பகிர்ந்து கொள்கிறார்கள்.
இந்த கருத்தரங்கில் கலந்து கொள்ள வானொலி நேயர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேலும், இது தொடர்பான கூடுதல் தகவல்களைப் பெற கல்லூரியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்வையிடலாம்.
ஒரு வானவில் வாழ்க்கை - புத்தக வெளியீடு
ஆஸ்ட்ரோ ரேடியோ (முன்னர் ஏர்டைம் மேனேஜ்மென்ட் அண்ட் புரோகிராமிங்) என்பது ஒரு மலேசிய ரேடியோ நெட்வொர்க் நிறுவனமாகும், இது 1996 முதல் ரேடியோ ஒலிபரப்பு சேவைகளையும் மலேசியாவில் செய்துவருகிறது. இது மலேசியாவில் 12 தனியார் பண்பலை ரேடியோ நிலையங்களை சொந்தமாக வைத்து நிர்வகிக்கிறது.
நவம்பர் 2024 நிலவரப்படி, மலேசியாவில் ஆஸ்ட்ரோ ரேடியோ இன்றும் முதலிடத்திலும் மிகப்பெரிய ரேடியோ நெட்வொர்க் நிறுவனமாகவும் உள்ளது, தீபகற்ப மலேசியர்களில் 72% பேரும், வாரந்தோறும் 14.9 மில்லியன் மக்கள் இந்த வானொலியைக் கேட்கின்றனர்.
இதன் இணை நிறுவனமான மீடியா பிரைமா ஆடியோ - கூல் 101, ஃப்ளை எஃப்எம், எட்டு எஃப்எம், ஹாட் எஃப்எம் மற்றும் மோலெக் எஃப்எம் ஆகியவையும் பண்பலையில் ஒலிபரப்பி வருகின்றன.
இந்த வானொலி / தொலைக்காட்சியின் இயக்குநராக 25 வருடங்கள் இருந்த முனைவர்.என்.சி.ராஜாமணி அவர்களின் வாழ்க்கை வரலாற்றினை திரு.ராணிமைந்தன் "ஒரு வானவில் வாழ்க்கை" என்ற தலைப்பில் எழுதியுள்ளார்.
இந்த புத்தகம் நாளை இதழியல், தொடர்பியல் துறை சார்பில் சென்னைப் பல்கலைக்கழகத்தில் மதியம் 2.00 மணிக்கு F50 அரங்கில் வெளியிடப்படுகிறது. அனைத்து வானொலி உறவுகளையும் அன்புடன் அழைக்கிறோம்.
பழமையின் பெருமை பேசும் டெலிஃபன்கன் வானொலி விளம்பரம்!
நவீன தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில், பழங்கால பொருட்களை சேகரிப்பதில் பலருக்கும் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.
இந்த விளம்பரம் தகரத்தால் செய்யப்பட்டு, 11x13 அங்குல அளவில் உள்ளது. இதில், டெலிஃபன்கன் நிறுவனத்தின் "பஹார் 2-பாண்டு டிரான்ஸிஸ்டர்" வானொலி இடம்பெற்றுள்ளது. "ஜெர்மானிய அறிவுத்திறனில் உருவானது" என்ற வாசகத்துடன், ஒரு பெண்ணின் சிரித்த முகமும், வானொலியின் படமும் இடம்பெற்றுள்ளன.
இந்த விளம்பரம் 1960-70 காலகட்டத்தில் வெளியானதாக கூறப்படுகிறது. அந்த காலகட்டத்தில், வானொலி என்பது மக்களின் பொழுதுபோக்கு சாதனமாக இருந்தது. இந்த விளம்பரம், அந்த காலத்து நினைவுகளை மீட்டெடுக்கும் விதமாக அமைந்துள்ளது.
இந்த விளம்பரம், பழங்கால பொருட்களை சேகரிக்கும் நபர்களிடையே பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது. இது போன்ற பழமையான விளம்பரங்கள், அந்த காலத்து கலாச்சாரத்தையும், தொழில்நுட்பத்தையும் பிரதிபலிப்பதாக சேகரிப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
டெலிஃபன்கன் நிறுவனத்தின் வரலாறு:
டெலிஃபன்கன் நிறுவனம், ஜெர்மனியை சேர்ந்த ஒரு பழமையான மின்னணு பொருட்கள் தயாரிக்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம், வானொலி, தொலைக்காட்சி போன்ற பல பொருட்களை தயாரித்துள்ளது.
இந்த விளம்பரம், பழங்கால பொருட்களை சேகரிக்கும் ஆர்வலர்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது. இது போன்ற பழமையான பொருட்கள், நம் வரலாற்றையும், கலாச்சாரத்தையும் பாதுகாக்கும் விதமாக அமைந்துள்ளன.
புகைப்பட உதவி: ஸ்தனிஸ் ராஜா
Friday, February 14, 2025
இலங்கை வானொலியின் நூற்றாண்டு நினைவுத் தபால்தலை
இலங்கை வானொலியின் நூற்றாண்டை (1924-2024) நினைவுகூரும் வகையில் இந்த தபால்தலைகளை வெளியிட்டுள்ளது இலங்கை அஞ்சல்துறை. இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் முகப்புக் கட்டடம் இதில் இடம்பெற்றுள்ளது. கூடவே, SLBC இன் Logo மற்றும் Transmitter ஒன்றும் பின்னணியில் உள்ளது.
இந்த தபால்தலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் "SRI LANKA" என்று அச்சிட்டுள்ளனர், மேலும் இதன் முக மதிப்பு 50.00 இலங்கை ரூபாய் ஆகும். "இலங்கை வானொலி தொலைத்தொடர்பாடலின் நூற்றாண்டு" (தமிழ்), என்று மூன்று மொழிகளிலும் அச்சிட்டுள்ளனர். இந்த தபால்தலையைப் பாதுகாப்பாக அனுப்பி வைத்த ஜெயக்குமார் அவர்களுக்கு நன்றி!
இந்த தபால்தலை தேவைப்படுபவர்கள் இந்த இணைய தளத்தில் வாங்கலாம்.
https://stamps.slpost.gov.lk/product/6439
Wednesday, February 12, 2025
K.S.R. கலை மற்றும் அறிவியல் கல்லூரி உலக வானொலி தினத்தைக் கொண்டாடுகிறது
திருச்செங்கோடு, பிப்ரவரி 13, 2025 – கே.எஸ்.ஆர். கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் விஷுவல் கம்யூனிகேஷன் துறை, "வானொலியில் புரட்சி" என்ற தலைப்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கை பிப்ரவரி 13, 2025 அன்று நடத்துகிறது.
இந்த கருத்தரங்கு, ஒலிபரப்பின் பாரம்பரியத்தையும் புதுமையையும் கொண்டாடும் வகையில், சங்கமம் அரங்கில் காலை 10:00 மணிக்கு நடைபெறும். சென்னை பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை உதவி பேராசிரியர் முனைவர். தங்க.ஜெயசக்திவேல் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
கே.எஸ்.ஆர். கல்வி நிறுவனங்கள் பொறியியல், பல் மருத்துவம், கலை மற்றும் அறிவியல், டிப்ளமோ, ஐடிஐ, துணை சுகாதார அறிவியல், நர்சிங், பார்மசி மற்றும் ஆசிரியர் கல்வி போன்ற பல்வேறு படிப்புகளை வழங்கி வருகின்றன. கே.எஸ்.ஆர். கல்வி நகர், திருச்செங்கோடு, நாமக்கல் - 637215, தமிழ்நாடு என்ற முகவரியில் அமைந்துள்ளது.
Monday, January 27, 2025
சீனாவின் வசந்த விழா அஞ்சலட்டைகள்
2025ஆம் ஆண்டு வசந்த விழா சீனாவில் சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. சீனப் புத்தாண்டு விழா என பொதுவாக அறியப்பட்ட வசந்த விழா, யுனெஸ்கோவின் கலாச்சாரப் பாரம்பரிய பட்டியலில் இந்த ஆண்டு தேர்வு செய்யப்பட்டுள்ளது இங்கு குறிப்பிடத்தக்கது.
சீன ஊடகக் குழுமத்தின் தமிழ் பிரிவும், சீனப் பாரம்பரிய பண்பாடுகளுடன் கூடிய பாடல்கள், ஆடல்கள் உள்ளிட்ட பல்வகை நிகழ்ச்சிகளை ஒலிபரப்ப உள்ளது. கேட்டு மகிழத் தவறாதீர்கள்.
#