Thursday, December 27, 2018

இலங்கை வானொலி கேண்டீன்





இந்த புகைப்படம் நமக்கு பல முக்கிய தகவல்களை கொடுக்கிறது. அதில் மிக முக்கியமானது, ஒலிப்பதிவு! இன்று போல் இல்லை அன்று. ஒலிப்பதிவு செய்ய கையோடு பெரிய டேப் ரெக்கார்டரையும் எடுத்து செல்லவேண்டிய காலகட்டம். குறிப்பாக கையடக்க ஒலிப்பதிவு கருவி (Walkman) கூட அறிமுகமாகாத காலகட்டம்.


அடுத்து, இதில் பயன்படுத்தப்பட்டுள்ள சிறிய மைக். இது போன்ற மைக்குகளை இன்று நாம் காண்பது அரிது. எப்.எம் மைக் என்று பார்த்திருப்போம், அது போன்றது தான் இதுவும். ஆனால் இது ஒரு வயருடன் இணைக்கப்பட்டுள்ளது. அதனை அடுத்து டேபிளில் உள்ள கண்ணாடி டீ டம்ளர் மற்றும் குளிர்பான பாட்டில்.

அன்றைய இலங்கை வானொலியின் கேண்டீன், இருவரின் உடல் மொழி, ஆடைகள், சிகை அழங்காரம், டை, கிருதா என இது போல இன்னும் இன்னும் சொல்லிக்கொண்டே போகலாம். தொடர்பியல் ஆய்வுக்கு பெரிதும் உதவும் படம் இது. இந்த புகைப்படத்தை பதிவிட்டது போல, அந்த பேட்டியையும் முழுமையாக வெளியிடலாம். கூடவே உங்களின் இலங்கை வானொலி பயண அனுபவத்தினையும். நன்றி: திரு ராமகிருஷ்ணன்

#இலங்கை #வானொலி #SLBC #Radio

Monday, December 24, 2018

மதுரையில் இருந்து ஒரு புதிய வானொலி / A new Internet Radio from Madurai

நான்மாடக் கூடலில் இசைத் தேடலுக்கு தீர்வாக (25 12 2018 ) இன்று இணைய உலகில் தடம் பதித்து,தமிழ் மக்கள் மனதில் இடம் பிடிக்க வரும் ரேடியோ மதுரை குழுவினருக்கு என் நேசமான வாழ்த்துகள்!

தூங்கா நகரிலிருந்து நெஞ்சை விட்டு நீங்காத பாடல்களை சுழல விட்டு,
இதயங்களுக்கு ஆறுதல் அளித்து,
தமிழரின் கலை,இலக்கியம்,மரபு,கலாச்சாரம் சார்ந்து எண்ணற்ற படைப்புகளை உலகத் தமிழர்களுக்கு வழங்க வரும் உங்கள் முயற்சிக்கு நிச்சயம் வெற்றி உண்டு!


குழுவினருக்கு பாராட்டுகள்! 

Via காரைக்கால் கே.பிரபாகரன்

Monday, December 17, 2018

காரைக்கால் வானொலி

 
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவையை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

காரைக்கால் பண்பலை வானொலி (100.3) ஒலிபரப்புத் திறன் 6 கிலோ வாட்டிலிருந்து 10 கிலோ வாட்டாக திங்கள்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கலந்துகொண்டு, நிலைய கட்டுப்பாட்டு அறையில் புதிய கூடுதல் திறனை மக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கிவைத்தார்.
நிலைய நேரடி நிகழ்ச்சியில், நேயர்களிடையே ஆட்சியர் பேசினார். காரைக்கால் வானொலி நிலையத்தில் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு செய்ததன் மூலம் பல மாவட்டங்களைச் சேர்ந்த நேயர்கள் நல்ல பயனை அடைவார்கள். கஜா புயலின்போது, காரைக்கால் வானொலியின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது.
தொடர்ந்து புயல் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதன் மூலம் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வானொலி நிலையத்தின் பணி வரவேற்புக்குரியதாக இருந்தது. தொடர்ந்து அரசின் நலத் திட்டங்களின் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவை வெற்றிபெற வாழ்த்துவதாக நிகழ்ச்சியின்போது ஆட்சியர் குறிப்பிட்டார்.

விரிவாக படிக்க

Sunday, December 16, 2018

புதுவை அகில இந்திய வானொலி


புதுவை அகில இந்திய வானொலியில் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சிகள் ஞாயிற்றுக்கிழமை (டிச. 16-ஆம் தேதி) முதல் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.

இதுகுறித்து புதுவை அகில இந்திய வானொலி நிகழ்ச்சி தலைவர் தட்சிணாமூர்த்தி கூறியதாவது:
மார்கழி மாதம் பிறக்கும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாள்தோறும் அந்த மாதம் முடியும் வரை காலை 6. 10 மணிக்கு புதுவை வானொலியின் முதல் அலைவரிசையில் திருப்பாவை, திருவெம்பாவை நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.
டாக்டர் எம்.எல்.வசந்தகுமாரி பாடிய திருப்பாவை பாடல்களுடன், ஸ்ரீரங்கம், ஸ்ரீமத் ஆண்டவன் ஸ்ரீரங்கராமனுஜ மகாதேசிகன், திருக்கோயிலூர் ஜீயர் எம்பெருமானார் ஸ்ரீநிவாச ராமனுஜ ஆச்சார்யா, தேரெழுந்தூர் ராமபத்ராச்சாரி ஆகியோர் வழங்கிய விளக்க உரைகளை வானொலி தனது ஒலிக் களஞ்சியத்தில் இருந்து ஒலிபரப்பு செய்கிறது.

இதேபோல, பிரேமா, ஜெயா ஆகியோர் இணைந்து பாடியுள்ள திருவெம்பாவை பாடல்களுடன், சுகி சிவம், தெய்வநாயகம் ஆகியோர் வழங்கிய விளக்கவுரைகளும் ஒலிபரப்பாகின்றன. திருப்பள்ளி எழுச்சியில் சுகி சிவம் விளக்கவுரையுடன், சீர்காழி திருஞான சம்பந்தம் பாடியுள்ள பக்திப் பாடல்கள்
ஒலிபரப்பாகும். புதுவை வானொலியின் ரெயின்போ பண்பலை 102.8-இல் திருப்பாவை - திருப்பள்ளி எழுச்சிப் பாடல்களும், விளக்க உரைகளும் ஞாயிற்றுக்கிழமை முதல் நாள்தோறும் அதிகாலை 5 மணிக்கு ஒலிபரப்பாகும் என அந்தச் செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

நன்றி தினமணி

Tuesday, December 11, 2018

இலங்கை வானொலி துறையில் தடம்பதித்த Yes Fm



நாட்டின் முதற்தர ஆங்கில வானொலி சேவையான Yes FM இன்று (10) தனது 25 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியது. ​1993 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி Yes FM இலங்கை வானொலி துறையில் தடம்பதித்தது.
சமகால இசையை இளம் இசை இரசிகர்கள் வசம் கொண்டுசேர்த்த Yes FM அவர்களை தம்வசம் ஈர்த்துக்கொண்டது.

சாதாரண வானொலிகளை மிஞ்சிய வகையில் கடந்த 25 வருடங்களாக இசைப்புரட்சி நடத்திவரும் Yes FM, எம்.எல்.ரீ.ஆர், மைக்கல் போல்ட்டன் மற்றும் வெங்க போய்ஸ் போன்ற புகழ்பூத்த மேலைத்தேய இசைக்குழுக்களின் இசைப்படைப்புக்களையும் ரசிகர்கள் மத்தியில் கொண்டுசேர்த்தது.

இலங்கை வானொலி வரலாற்றில் ஆங்கிலம் பேசும் ரசிகர்கள் மத்தியில் தொடர்ச்சியாக முதற்தரத்துடன் திகழும் யெஸ் எப்.எம். ரசிகர்களுக்கு இசையை மட்டும் வழங்காது தகவல்களையும் கொண்டுசேர்க்கும் ஊடகமாக பரிணமித்தது. யெஸ் எப்.எம். தனது 25 ஆவது பிறந்ததினத்தை எச்சலன் சதுக்கத்தில் இன்று கொண்டாடியது.

மேலும் படிக்க

Thursday, December 06, 2018

Ham Conference / ஹாம் ரேடியோ கருத்தரங்கு

தமிழ் நாட்டில் ஹாம் ரேடியோவிற்காக ஆண்டு தோறும் நடக்கும் ஒரே சந்திப்பு வரும் 9 பிப்ரவரி 2019-ல் மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது. கலந்து கொள்ளும் அனைவருக்கும் நினைவுப் பரிசுடன் சான்றிதழும் வழங்கப்படும். ஆனால் அதற்கு பதிவு செய்தல் அவசியம்.

Those who are interested to know about Ham Radio. Please attend this  Mahameet conference. Registration is free. Register delegates will get the certificate. 

பதிவு செய்ய கீழ்கண்ட விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யவும்.

https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfYDrg4C8ma5RJVgQV3LeyWfvdppi6pcOGFmKiIaOrWJ3XHDw/viewform

Saturday, December 01, 2018

மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் - ஜகதீஷ் சந்திர போஸ்







முப்பத்தைந்து வயது வரை பாடங்கள் மட்டுமே நடத்திக்கொண்டு இருந்த போஸுக்கு ஆய்வு செய்ய வேண்டும் என்று தோன்றியது. மாக்ஸ்வெல் மின்காந்த அலைகள் பற்றி குறித்திருந்தார் , அவற்றை உருவாக்கி காட்டியிருந்தார் ஹெர்ட்ஸ். இருபத்தி நான்கு அடி மட்டுமே அளவு கொண்ட சிறிய அறையில் எந்த அறிவியல் உபகரணங்களோ, வழிகாட்டியோ இல்லாமல் இது சார்ந்த ஆய்வில் தானே இறங்கினார் போஸ். லாட்ஜின் ஹெர்ட்ஸ் மற்றும் அவருக்கு பின்வந்தவர்கள் என்கிற புத்தகம் தந்த உந்துதலில் இயங்கினார்.

கொஹரர் என்கிற கருவியை ஏற்கனவே பான்லி என்கிற அறிஞர் உருவாக்கி இருந்தார். அதன் மூலம் ரேடியோ அலைகளை கண்டறிய முடியும் என்று அதை செம்மைப்படுத்திய லாட்ஜ் சொன்னார். ஆனால், அந்தக் கருவி நிறைய குறைபாடுகளோடு இருந்தது. அதனால் சீராக எந்த ரேடியோ அலைகளையும் உணர முடியவில்லை. போஸ் நிறைய மாற்றங்களை அந்த கருவியில் கொண்டுவந்தார்.

மேலும் குறித்து சொல்வதென்றால் அதை முழுமையாக மாற்றி அமைத்தார். பாதரசத்தை அதில் சேர்த்தார் ; சுருள் வடிவ ஸ்ப்ரிங்குகளை இணைத்தார். கூடவே டெலிபோனை பயன்படுத்தினார். கூடவே குறை கடத்தி படிகத்தை கருவியில் இணைத்து பார்த்தார். வெறுமனே அலைகள் இருக்கிறது என்று கண்டறிந்து கொண்டிருந்த கருவியானது அலைகளை உற்பத்தி செய்து, மீண்டும் அதை திரும்பப் பெறுகிற மாயத்தை செய்தது.

அந்த அற்புதம் அப்பொழுது தான் நிகழ்ந்து. ஐந்து மில்லிமீட்டர் அளவில் அலைகள் உண்டானது. இவையே இன்றைக்கு "மைக்ரோவேவ்" என்று அறியப்படுகின்றன. மின்காந்த அலைகளின் எல்லா பண்பும் அவற்றிடம் இருப்பதை நிரூபித்தார் போஸ். கம்பியில்லா தகவல் தொடர்பை சாதித்த முதல் ஆளுமை ஆனார். அதைக்கொண்டு ஒரு பெல்லை ஒலிக்க வைத்து வெடி மருந்தை வெடிக்க வைத்தும் காண்பித்தார் போஸ்.

அதைக்கொண்டு சில மைல் தூரத்துக்கு ரேடியோ கொண்டு சென்று மீண்டும் பெறவும் செய்து சாதித்து காண்பித்தார் போஸ். அதாவது உலகின் முதல் ரேடியோ எழுந்தது. இது நடந்து இரண்டு வருடங்கள் கழித்து மார்க்கோனி ரேடியோ பற்றிய ஆய்வுகளில் ஈடுபடுவதாக சொன்னார்.


ஜகதீஷ் சந்திர போஸ் பயன்படுத்திய கொஹரரை மார்க்கோனிக்கு இத்தாலிய கடற்படையில் இருந்த அவரின் நண்பர் சோலாரி அறிமுகப்படுத்தினார். அப்படியே அதை எடுத்து தன்னுடைய கருவியில் பொருத்தினார் மார்க்கோனி. ஒரே ஒரு மாற்றம் "U" வடிவத்தில் போஸ் அமைத்திருந்த பாதரச ட்யூபை நேராக மாற்றினார். "S" என்கிற மோர்ஸ் குறியீட்டை தான் அனுப்பியதாக வேறு அறிவித்தார். அதை பதிவு செய்த ஆவணங்கள் இல்லை என்பது தனிக்கதை. போஸ் செய்த ஒரு தவறு, "தான் கண்டுபிடித்த கொஹரர் கருவியை பேடண்ட் செய்ய மறுத்தது",

“என் தந்தையைப் போல நானும் மக்களுக்கு சேவை செய்ய எண்ணுகிறேன் வணிக நோக்கங்கள் எனக்கில்லை” என்றார். அந்த போஸ் கண்டுபிடித்த கருவியை "தான் கண்டுபிடித்தேன்" என்று பதிவும் செய்து கொண்டார் மார்க்கோனி.

போஸ் தான் அதைக் கண்டு பிடித்தார் என்று வருங்காலத்தில் வந்த அறிவியல் அறிஞர்கள் கண்டறிந்தார்கள். உலகின் முதல் ரேடியோவை உருவாக்கியவர் போஸ் என்று IEEE அதிகாரப்பூர்வமாக நூறு வருடங்கள் கழித்து அறிவித்தது....

விரிவாக படிக்க

நன்றி newstm.in