Monday, April 13, 2009

டிஜிட்டல் முறையில் அகில இந்திய வானொலி

உலக நாடுகள் பலவும் தனது ஒலிபரப்பினை டிஜிட்டல் முறையில் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் நமது அகில இந்திய வானொலியும் டிஜிட்டல் ஒலிபரப்பினைத் தொடங்கியுள்ளது. கடந்த 16 ஜனவரி அன்று பிரசார் பாரதியின் முதன்மை செயல் அலுவலர் பி.எஸ்.. லாலி அவர்களால், புது தில்லிக்கு அருகில் உள்ள காம்ப்பூர் ஒலிபரப்பு தளத்தினில் இருந்து இது தொடங்கி வைக்கப்பட்டது. வெளிநாட்டு சேவை மற்றும் விவித பாரதி நிகழ்ச்சிகளை இதில் கேட்கலாம். டிஜிட்டல் ஒலிபரப்பு பற்றிய உங்களின் கருத்துக்களை அகில இந்திய வானொலி வரவேற்கிறது. இந்திய நேரம் இரவு 11.15 முதல் அதிகாலை 4 மணி வரை 9950 கி.ஹெ. (31 மீட்டர்) டி.ஆர்.எம். வானொலிப் பெட்டியில் கேட்கலாம். உங்கள் கடிதம் சென்று சேர வேண்டிய முகவரி: The Spectrum Manager, All India Radio, Room No: 204, Akashvani Bhavan, New Delhi - 110001. E-mail: v_baleja@hotmail.com (Jose Jacob)

No comments: