Monday, November 22, 2010

20ஆம் ஆண்டில் புலிகளின் குரல் வானொலி

ஒர்நாட்டின் அரசாங்கத்தின் நிலையினையும், பன்னாடுகளின் நிலையினையும் மக்களுக்கு தெரிவிக்கும் கருவியாக காணப்படுவது ஊடகங்கள். ஊடகங்களின் நிலையில்தான் மக்கள் தங்கிஇருக்கின்றார்கள். அச்சு ஊடகங்கள் இலத்திரனியல் ஊடகங்கள் என்று மக்களுக்கு கருத்து கூறும் ஊடகங்களாக காணப்படுகின்றன.

இவ்வாறுதான் விடுதலைக்காக போராடிக்கொண்டிருக்கும் போரளிகளால் தமது விடுதலையினையும் விடுதலை தொடர்பாக மக்களுக்கான கருத்துக்களையும் வழங்கும் ஊடாகமாக 21ஆம்நாள் நவம்பர் மாதம் 1990 ஆண்டு புலிகளின் குரல் வானொலி தமிழ்த் தேசியத்தலைவர் அவர்களினால் தொடங்கிவைக்கப்படுகின்றது.

யாழ்குடாநாட்டினை முதன்மையாக கொண்டு அன்றைய காலப்பகுதியில் விடுதலைப்புலிகளின் செயற்பாடுகள் காணப்படுகின்றன, யாழ்ப்பாணத்தில் மக்கள் செறிந்துவாழும் நிலையில் யாழ்ப்பாண கோட்டைக்கு அருகில் வைத்து பண்பலையில் 98 அதிர்வெண்ணில் புலிகளின் குரல் வானொலி இயங்கிக்கொண்டிருந்தது.

தமிழீழ விடுதலையினை சீர்குலைக்கும் நோக்கில் சில தீயசக்திகளின் எதிர்ப்புக்களுக்கு மத்தியிலும்,நாசகார வேலைகளுக்கு மத்தியிலும் புலிகளின் குரல் தனதுசெயற்பாட்டினை மக்கள் மத்தியில் முன்னெடுத்துசெல்கின்றது.

சிறீலங்காப்படையினரின் வன்னிஇனஅழிப்பின் போது ஆறிற்கு மேற்பட்ட தடவை ஸ்ரீலங்காபடையின் வான்தாக்குதல்களைஎதிர்கொண்டு 2007 ஆம்ஆண்டு 11மாதம் 27 ஆம்நாள்கிளிநொச்சியில் அமைந்துள்ள புலிகளின் குரல் வானொலியின் நடுப்பணிமனை மீது சிறீலங்கா வான்படையினர் நடத்திய ஊடக அடக்குமுறையின் வான்தாக்கதலின போது வானொலியின் அறிவிப்பாளர் உள்ளிட்ட மூன்று பணியாளர்களை இழந்துள்ளது.

நாட்டுப்பற்றாளர்களான அறிவிப்பாளர் இசைவிழி, மற்றும் தொழில்நுட்டபவியலாளர்களான சுரேஸ்லிம்பியோ, தர்மலிங்கம் ஆகியோரை இழந்தது பின்னர் 23 தாடவைக்கு மேல் இடப்பெயர்வுகளை சந்தித்து முள்ளிவாய்கால் வரை மக்களுக்கான செய்தியினையும் விழிப்பினையும் சொல்லிக்கொண்டிருந்த நிலையில் மே மாதம் 15 ஆம்நாளுடன் தனது செயற்பாட்டினை பண்பலையில் இடைநிறுத்தியது, அதாவது ஒடுக்கப்பட்ட தமிழ் மக்களின் உரிமைக்குரலாகவும், எதிரியின் பொய்மைக்கு எதிரான, உண்மைக்குரலாகவும், ஓங்கிஒலிக்கவேண்டும் என்ற தமிழீழ தேசியத்தலைவர் அவர்களின் விருப்பத்துடன் செயற்பட்டுக்கொண்டிருக்கும் ஊடாகமாக அன்று புலிகளின் குரல் காணப்படுகின்றது, கடந்த ஆண்டு மே மாதத்தின் பின்னர் புலிகளின் குரல் வானொலி தனக்கான அறிவிப்புக்களை இணையத்தளத்திலும் செய்கோளிலும் தற்போதும் மேற்கொண்டுவருகின்றது அந்தவகையில் எதிர்வரும் மாவீரர் நாள் சிறப்பு ஒலிபரப்புக்களை சிற்றலை ஊடாக உலத்தமிழ்மக்களுக்கும் செய்கோள் மற்றும் பண்பலை ஊடாகவும் மேற்கொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இன்றையநாள் வானோசை 20ஆம் ஆண்டில் புலிகளின் குரல் வானொலியோடு இணைந்துகொண்டிருக்கம் நேயர்கள் மற்றும் தமிழ் உறவுகள் அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

Thanks to Mr. Kalyan Kumar

No comments: