சூரியனிலிருந்து வெளிக்கிளம்பியுள்ள அதிசக்திவாய்ந்த தீச்சுவாலையால் பாதிப்பு வானொலி,செய்மதி தொடர்பாடல்களுக்கு இடையூறு,இலங்கைக்கு ஆபத்தில்லை
சூரியனிலிருந்து அதிசக்திவாய்ந்த தீச்சுவாலை வெளிக்கிளம்பியிருப்பதானது பாரிய புவிக்காந்தப் புயலை ஏற்படுத்தியிருப்பதுடன் வானொலித் தொடர்பாடல்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும் அதேசமயம் மின்உபகரணங்கள்,வானொலி,செய்மதி தொடர்பாடல்களுக்கும் அடுத்துவரும் நாட்களில் பாதிப்பை ஏற்படுத்தும் என்று அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையமான நாசா தெரிவித்துள்ளது.
ஆயினும் இந்த தீச்சுவாலையானது இலங்கையிலுள்ள தொடர்பாடல் கட்டமைப்புகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் ஸ்கண்டிநேவிய நாடுகளையும் மற்றும் துருவப் பகுதிகளை அண்மித்திருக்கும் பிரதேசங்களையுமே பாதிக்கும் எனவும் இலங்கையிலுள்ள ஆர்த்தர் சி கிளார்க் நிலையத்தின் பேச்சாளர் நேற்று வெள்ளிக்கிழமை தெரிவித்திருக்கிறார்.
வியாழனின் பருமன் அளவு கொண்டதாக சூரியபுள்ளியிலிருந்து கதிரேற்றம் பெற்ற பிளாஸ்மா துகள்களைக்கொண்ட வலுவான அலையை பார்க்கக்கூடியதாக இருந்ததாகவும் இந்த நெருப்புச் சுவாலையால் தென் சீனாவின் வானொலி தொடர்பாடல் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் ஏ.எவ்.பி. செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
செவ்வாய் அதிகாலை இது வெளிக்கிளம்பியதாக நாசா கூறியுள்ளது.
ஙீதர சுவாலைகள் சகல சூரிய நிகழ்வுகளிலும் மிகவும் சக்திவாய்ந்தவையாகும். இவை வானொலி மற்றும் மின்சாரக்கட்டமைப்புகளை பாதிக்கும் என்றும் நாசாவை மேற்கோள்காட்டி ஏ.எவ்.பி. குறிப்பிட்டுள்ளது.
புவிகாந்தபுயல் வழமையாக 2448 மணித்தியாலயங்களுக்கு நீடிக்கும். ஆயினும் பல நாட்களுக்கு தொடரும் புவிக்காந்தப்புயலும் உள்ளது.
தரையிலிருந்து வானத்துக்கும் கடலிலிருந்து கரைக்கும் மற்றும் சிற்றலை ஒலிபரப்பு வானொலி என்பன புவிகாந்த புயல் வேளையில் பாதிக்கப்படும்.அத்துடன் கடல் பயண முறைமை கடும் மோசமாகப் பாதிக்கப்படும் என்று நாசாவின் சூரிய இயக்கவியல் அவதானிப்பு நிலையம் கூறியுள்ளது.செக்கனுக்கு 560 மைல் வேகத்தில் பூமியை நோக்கி ஒளிப்பிளம்புடன் பரிதி வட்டம் வெளிக்கிளம்பியதை பார்த்ததாக நாசா கூறியுள்ளது. சூரியனின் தென் அரைக்கோளத்திலுள்ள செயற்படும் பிராந்தியத்திலிருந்து தீச்சுவாலை பரவியுள்ளது. ஆயினும் இதுவரை வடவரைக்கோளத்தில் தீச்சுவாலை பரவவில்லை. அத்துடன். சமீப நாட்களில் சிறிய தீச்சுவாலைகளும் இதனைத் தொடர்ந்து வந்துள்ளன.
"புயலுக்கு முன் அமைதி' என்று அமெரிக்க தேசிய காலநிலை சேவை விண்வெளி காலநிலை எதிர்வு கூறல்சேவை
Source: http://www.thinakkural.com
No comments:
Post a Comment