சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Wednesday, November 30, 2011
இலங்கை மீனவர்களுக்காக புதிதாக ‘சாயுரா எப்.எம்’
மீனவர்களுக்கான எப்.எம்: இலங்கை ஒலிபரப்பு கூட்டுஸ்தாபனம் இலங்கை மீனவர்களுக்காக புதிதாக ‘சாயுரா எப்.எம்’ என்ற பெயரில் ஒரு வானொலியைத் தொடங்கியுள்ளது. இது தினமும் அதிகாலை நான்கு மணி முதல் தனது சேவையைச் செய்யது வருகிறது என மீன் வளத்துறை அமைச்சகத்தின் செயலாளர் நாயகம் நந்தனா ராஜபக்ஷா தெரிவித்துள்ளார்.
(Sunday observer)
Monday, November 28, 2011
சீன வானொலியின் 70வது ஆண்டு
சீன வானொலி நிலையம் 1941ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 3ம் நாள் முதல்முறையாக தனது ஒலிபரப்பைத் துவங்கியது. இவ்வாண்டு டிசம்பர் திங்களில் சீன வானொலியின் 70வது ஆண்டு நிறைவை வரவேற்பதை முன்னிட்டு, சீன வானொலிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவிக்க விரும்பும் நேயர்களுக்கு வசதியளிக்கும் வகையில், தமிழ்ப் பிரிவு செல்லிடபேசி எண்ணை ஏற்பாடு செய்துள்ளது. அழகான ஆனால் சுருக்கமான வாழ்த்துக்களை நீங்கள் இந்தச் செல்லிடபேசிக்கு குறுந்தகவல்களாக அனுப்பலாம்.
இது குறுந்தகவல்களுக்கு மட்டும் தான். அழைத்துப் பேசுவதற்கானது அல்ல. ஆங்கிலத்திலோ அல்லது தமிழ்ச் சொற்களை அப்படியே ஆங்கிலத்திலோ குறுந்தகவல்களாக அனுப்பவும். குறுந்தகவலில் தங்களுடைய பெயர் மற்றும் நேயர் எண் ஆகியவை இருக்க வேண்டும். தவிர, நீங்கள் மின் அஞ்சல் மூலமும் tamil@cri.com.cn என்ற முகவரிக்கு மேலதிக வாழ்த்துச் செய்திகளை அனுப்பலாம்..
Wednesday, November 23, 2011
இந்தியாவில் டி.ஆர்.எம்
பண்பலையில் டி.ஆர்.எம் குறித்த ஆய்வு ஒன்று சமீபத்தில் புது தில்லியில் சோதனை செய்துப் பார்க்கப்பட்டது. அகில இந்திய வானொலியோடு டி.ஆர்.எம் அமைப்பு இணைந்து இந்த ஏற்பாட்டினைச் செய்திருந்தது. பண்பலையில் செய்யப்படும் டி.ஆர்.எம் ஒலிபரப்பிற்கு ‘டி.ஆர்.எம் ப்ளஸ்’ என்று பெயர். ஏற்கனவே மத்திய அலையில் டி.ஆர்.எம் ஆய்வு நடந்து வருகிறது, இதற்கு ‘டி.ஆர்.எம் 30’ என்று பெயர். புது தில்−யில் டி.ஆர்.எம் ப்ளஸ் ஆய்விற்காக 100.1 அலைவரிசையில் 500 வாட் சக்தியில் ஒ−பரப்பு செய்யப்பட்டது. டி.ஆர்.எம் பற்றிய அந்த ஆய்வின் முடிவுகளை தெரிந்துகொள்ள சொடுக்கவும் www.drm.org. நீங்களும் இது போன்ற இனிவரும் டி.ஆர்.எம் ஆய்வினில் கலந்துகொள்ள விரும்பினால், தொடர்புகொள்ளவும் projectoffice@drm.org.
Wednesday, November 16, 2011
டி.ஆர்.எம் தகவல்கள்
* டி.ஆர்.எம் அமைப்பிற்கு பிரேசிலின் தொடர்பியல் அமைச்சகம் “டிஜிட்டல் ரேடியோ சிஸ்டம்” பற்றி விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியுள்ளது.
* தென்ஆப்பிரிக்காவில் விரைவில் டி.ஆர்.எம் தொடங்கப்பட உள்ளது. கொரியாவில் நடைபெறவிருக்கும் 21வது கொரிய ஒலிபரப்புக் கண்காட்சியில் டி.ஆர்.எம் ஸ்டால் இடம்பெருகிறது. அதில் பல்வேறுத் தலைப்பினில் டி.ஆர்.எம் பற்றியக் கட்டுரைகளும்
வாசிக்கப்படுகின்றன.
* ஆப்பிரிக்க நாடான சைல், டி.ஆர்.எம் தொடங்குவது பற்றி ஆய்வு நடத்தி வருகிறது.
* புது தில்லியில் நடைபெற்ற ‘புராட்காஸ்ட் ஆசியா’ கருத்தரங்கில் தனியான ஸ்டால் ஒன்றை அமைத்திருந்தது டி.ஆர்.எம் அமைப்பு. இது அனைவரின் பாராட்டினையும் பெற்றது.
* 2011ஆம் வருடத்திற்கான சர்வதேச ஒலிபரப்பு தொடர்பியல் கூட்டத்தினில் டி.ஆர்.எம் அமைப்பினர் கலந்துகொள்ள உள்ளனர். டி.ஆர்.எம் பற்றிய உடனுக்குடனான தகவல்களுக்கு சொடுக்கவும் http://newsletters.lavishcreative.com
Wednesday, November 09, 2011
ஹாம் வானொலியில் ரிப்பீட்டர்களின் பங்கு
தொட்டபெட்டா ரிப்பீட்டர்: ஹாம் வானொலியில் ரிப்பீட்டர்களின் பங்கு அதாவது அஞ்சல் கோபுரங்களின் பங்கு மிகமுக்கியமானது. தமிழகத்தில் கொடைக்கானல், திருச்சங்கோடு மற்றும் சென்னைப் போன்ற இடங்களில் ஏற்கனவே செயல்பட்டு வருகின்றன. தற்பொழுது நீலகிரி மாவட்டத்தில் உள்ள தொட்டபெட்டாவில் ஆனைமலை அமெச்சூர் ரேடியோ சொசைட்டியினரால் சீரமைக்கப்பட்டு வெற்றிகரமாக செயல்படத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் இதற்கான சிறப்பு வலைப்பூ ஒன்று தொடங்கப்பட்டது. ஏறாளமான புகைப்படங்களுடன் இந்த வலைப்பூ ரிப்பீட்டரைப் பற்றிய பல்வேறு விபரங்களை நமக்குத் தருகிறது. அவற்றைக் கான www.vu2irt.blogspot.com (Ibrahim-VU3IRH For AARC-Pollachi).
Wednesday, November 02, 2011
இஸ்ரோ ஹாம் வானொலி
ஹாம் சாட்: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ ஹாம் வானொலிக்காகத் தனியான செயற்கைக்கோள் ஒன்றை ஏற்கனவே விண்ணில் ஏவியுள்ளது. விரைவில் அதனை மேம்படுத்தி மேலும் ஒரு செயற்கைக்கோள் ஒன்றை ஏவவுள்ளது. இதற்கான கலந்தாய்வு கூட்டத்தினைக் கடந்த ஏப்ரலில் பெங்களூரில் இஸ்ரோ ஏற்பாடு செய்திருந்தது. இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாதவர்கள் தங்களின் கருத்துக்களை திரு. சோமு (VU3HCJ) அவர்களுக்கு மின் அஞ்சல் மூலம் தெரிவிக்கலாம். முகவரி: sskummur@bsnl.in ஹாம் சாட் பற்றிய மேலதிக தகவல்களுக்கு www.amsatindia.org (Via Nitin [VU3TYG], Secretary,AMSAT INDIA).
Subscribe to:
Posts (Atom)