Wednesday, August 12, 2015

வண்ணமயமான வாழ்க்கை என்ற ஓவிய போட்டி

வண்ணம், வாழ்க்கையில் முக்கியமான அம்சமாகும். சிவப்பான மலர். பச்சையான இலை. நீலமான வானம். வெள்ளையான மேகம். இப்படி எங்கள் கண்களில் பல வண்ணங்கள் வரும். உங்கள் வாழ்க்கை என்ன வண்ணம்? அது பற்றி எளிதாக பதில் அளிக்க முடியாது என்று நினைக்கிறேன். நமது வாழ்க்கையில், இன்பம் வரும் போது அழகான வண்ணங்களைப் பார்ப்பேன். துன்பம் வரும் போது கறுப்பு வண்ண கார் மேகம் சூழும். இதனால், அனைவரின் சொந்த வாழ்க்கையை ஒரு வண்ணத்தைப் பயன்படுத்தி தெரிவிக்க முடியாது. ஆனால், நமது வாழ்க்கையை நமது கைகளைப் பயன்படுத்தி, பல்வகை வண்ணங்களை வரையலாம்.
அண்மையில், சீனாவில் ஒரு மாதிரி ஓவிய விளையாட்டு மிக புகழ் பெற்றது. இதனால், வண்ணமயமான வாழ்க்கை என்ற ஓவிய போட்டி நடைபெறுகிறது. அது தாளில் வரையப்பட்ட ஓவியத்திற்கு வண்ணம் தீட்டுவது. வெறும் தாளில், மாதிரி ஓவியத்திற்கு வேறுபட்ட வண்ணங்களை போடுவது. ஓவியம், வாழ்க்கையை விளக்கும் ஒரு வழிமுறையாகும். உங்கள் விருப்பப் படி, உங்கள் மன நிலைமையின் படி, வேறு பகுதிகளில் வேறுபட்ட வண்ணத்தை போடலாம்.
சீன வானொலி தமிழ் பிரிவின் பணியாளர்கள் 16 ஓவியத்தில் வண்ணம் தீட்டினோம். ஆக்ஸ்ட் 10ஆம் நாள், நாங்கள் இவற்றை நமது இணையத்தளத்தில் பதிவேற்றினோம். நேயர்கள் இணையத்தளத்தில், உங்களுக்கு மிக பிடிக்கும் ஓவியத்திற்கு வாக்களிக்கலாம். மிக அதிகமான வாக்குகளை பெற்றவருக்கு தமிழ் பிரிவின் தலைவர் கலைமகள் பரிசுப் பொருளை கொடுப்பார்.
இது தமிழகத்தில் போடப்படும் கோலம் போன்றது தான். அதற்கு எப்படி வண்ணம் கொடுப்பீர்களோ. அதே போல் இதற்கும் நீங்கள் சுயமாய் வண்ணம் தீட்டலாம், புதிய பல முயற்சிகளையும், சிலவற்றையும் நீங்களே வரையலாம். நமது CRI வடிவத்தை கூட நீங்கள் அழகாய் வரைந்து வண்ணம் தீட்டி அனுப்பலாம்.

  • முதல் கட்டம்—வண்ணம் தீட்டுதல்

  • ஆக்ஸ்ட் 10ஆம் நாள், 6 மாதிரி ஓவியங்களை சீன வானொலி தமிழ் இணையத்தளத்தில் வைத்துள்ளோம். நீங்கள் அதை பதிவிறக்கம் செய்து, அச்சடிக்கலாம். நேயர்கள், வண்ண எழுதுகோலைப் பயன்படுத்தி, அனைத்து மாதிரி ஓவியங்களுக்கும் வண்ணங்களை தீட்டலாம். குறைந்தது ஒரு மாதிரி ஓவியத்திற்கு வண்ணங்களைப் தீட்ட வேண்டும்.

    ஆக்ஸ்ட் 31ஆம் நாளுக்குள், வண்ணம் தீட்டிய பிறகு, படம் பிடித்து அல்லது , மின்னஞ்சல் மூலம், எங்களுக்கு அனுப்புங்கள். மின்னஞ்சலில் ஓவிய படத்தையும், இந்த ஓவியத்தின் பெயரையும், உங்கள் பெயரையும் போடுங்கள். நேயர்கள் வரைந்து அனுப்பிய அனைத்து ஓவியங்களிலிருந்து 9 தனிச்சிறப்புடைய ஓவியங்களை நாங்கள் தேர்ந்தெடுத்து, இணையத்தளத்தில் வெளியிடுவோம்.

  • மூன்றாவது கட்டம்-வாக்கெடுப்பு

  • செப்டம்பர் முதல் நாள், நேயர்கள் வரைந்த ஓவியங்களில் உங்களுக்கு மிக பிடித்த ஒன்றை தேர்ந்தெடுத்து வாக்களிக்க வேண்டும். பெறும் வாக்குகளின் எண்ணிக்கை தரவரிசையின் படி, ஒருவர் முதல் பரிசு பெறுவார். 3 நேயர்கள் 2வது பரிசு பெறுவர். 5 நேயர்கள் 3வது பரிசு பெறுவர். மேலும் ஓவியத்துக்கு வண்ணம் தீட்டி அனுப்பிய இதர நேயர்களுக்கு நினைவு பரிசுப் பொருட்கள் வழங்கப்படும்.

    http://tamil.cri.cn/121/2015/08/10/Zt1s157689.htm

    Sunday, August 09, 2015

    Workshop on community broadband

    சமுதாய வானொலிக்கான பயிற்சி பட்டறை.

    This is to bring to your notice that IT for Change, Society for Knowledge Commons, Ideosync Media Combine and Digital Empowerment Foundation, are together organising a workshop on/*"Taking Internet to rural communities: Last Mile Models for the National Optical Fibre Network"*/, at India International Centre, New Delhi, on 5th September.
    For details:
    parminder@itforchange.net
    Via CR India

    Friday, August 07, 2015

    சிங்கப்பூர் மீடியாகார்ப்பின் தேசிய தின நிகழ்ச்சிகள்

    நாட்டின் பொன்விழாக் கொண்டாட்டத்தின் தொடர்பில் மீடியாகார்ப் நிறுவனம் சில முக்கிய தேசிய தின நிகழ்ச்சிகளைத் தொலைக்காட்சி, வானொலி, இணையம் ஆகியவற்றில் ஒலி, ஒளிபரப்பவிருக்கிறது. Toggle, Channel News asia இணையத்தளம் ஆகியவற்றின் வழியாக உள்ளூர், வெளியூர் நேயர்கள் நிகழ்ச்சிகளைக் காணலாம்.

    http://seithi.mediacorp.sg/mobilet/singapore/04-aug-sg50-specials-by/2028450.html

    இலங்கை சூரியன் FM - பண்பலையின் முதலிடத்தில் 17 ஆண்டுகள்

    17 ஆண்டுகள் பல துறை சாதனை படைத்து தமிழ் ஒலிபரப்பில் தனக்கென்று தனி இடம்பிடித்து தமிழ் பேசுவோரின் தரமான தெரிவாக முதல் தரமாக மகத்தான தமிழ் பரப்பும் சூரியன் வானொலிக்கு  25ஆம் திகதி மற்றுமொரு சாதனை ஆண்டு ஆரம்பமாகியுள்ளது.

    http://www.virakesari.lk/articles/2015/07/25/சூரியன்-fm-பண்பலையின்-முதலிடத்தில்-17-ஆண்டுகள்

    தமிழை விரும்பும் சீனப் பெண்

    தமிழில் பேசுவதையே பல தமிழர்கள் தரக்குறைவாக நினைக்கும் போது சீன மாணவியான நிலானி, தன் தமிழ் அறிவை மேம்படுத்தி க்கொள்வதற்காக இந்தியா வந்திருக்கிறார். சீன வானொலி தமிழ்ப் பிரிவில் அறிவிப்பாளராகப் பணிபுரியும் அவர் தற்போது வந்திருப்பது பேச்சுத் தமிழ் கற்க.

    http://m.tamil.thehindu.com/society/women/தமிழை-விரும்பும்-சீனப்-பெண்/article7490014.ece

    இருந்தபடி சர்வதேச விண்வெளி நிலையத்துடன் பேசியவர்

    வானொலி மீது ஆர்வம் கொண்ட பிரிட்டனில் வசிக்கும் ஒருவர் தனது தோட்டத்தில் இருக்கும் கொட்டகையில் அமர்ந்தபடியே சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர் ஒருவரிடம் சிறிது நேரம் அரட்டை அடித்துள்ளார்.

    http://www.bbc.com/tamil/global/2015/08/150806_space