உலக அளவில் ரோபோட்டிக்ஸ் எனப்படும் இயந்திர மனிதனை வடிவமைக்கும் தொழிற்நுட்பத் துறையின் மிக உயர்ந்த விருதான எங்கல்பர்கர் விருது முதல் முறையாக ஒரு பெண்மணிக்கு வழங்கப்பட்டுள்ளது.
தமிழத்தை சேர்ந்தவரும் தற்போது அமெரிக்காவில் வாழ்ந்து வருபவருமான டாக்டர் பாலா கிருஷ்ணமூர்த்திக்கு அவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
கடந்த 25 வருடங்களாக இயந்திர மனிதனை உருவாக்குவதற்கு தேவையான பல வகையான மென்பொருள் மொழிகளை அவர் உருவாக்கியுள்ளார். 1980 களின் தொடக்கம் 1990 ஆம் ஆண்டுகளின் மைய காலம் வரை மருத்துவ துறையில் உதவக் கூடிய வகையில் தன்னிறைவுடன் செயல்படக் கூடிய வகையில் இயந்திர மனிதனின் வடிவமைப்பில் அவர் முக்கிய பங்காற்றியதற்காக இந்த விருது அவருக்கு வழங்கப்படுகிறது.
தான் வடிவைமைத்துள்ள இந்த இயந்திர மனிதன் மருத்துவமனைகளில் பெரிதும் உதவியாக இருக்கும் என டாக்டர் பாலா கிருஷ்ணமூர்த்தி கூறுகிறார். இந்த ரோபோவின் விலை தற்போது 70,000 அமெரிக்க டாலர்கள் அளவில் இருந்தாலும், வணிக ரீதியில் தயாராகும் போது அதன் விலை குறைவதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.
/////////////
Source: http://www.bbc.co.uk/tamil/news/story
/2004/05/040528_tamil_currentaffairs.shtml
No comments:
Post a Comment