Friday, March 27, 2009

முத்திரை நேயர் - விஜயராம் அ. கண்ணன்

நீண்ட இடைவெளிக்குப் பிறகு இந்த முத்திரை நேயர் பகுதியில் உங்கள் அனைவரையும் சந்திக்கின்றோம். வானொலி சார்ந்து சாதனைப் படைத்தவர்கள் பலரினைத் இந்தப் பகுதியில் நாம் அறிமுகப்படுத்தி வந்துள்ளோம். யாரும் செய்ய முடியாத சாதனையை மிகவும் அமைதியாக, எந்த ஒரு விளம்பரமும் இன்றி செய்து வருபவர்கள் பலர் உள்ளனர். அவர்கள் தம்மை விளம்பரப்படுத்திக் கொள்ள என்றுமே விரும்பியதில்லை. அவ்வகையானவர்களை தெரிவு செய்து இந்தப் பகுதியில் நாம் வழங்கி வந்துள்ளோம். இந்த மாதமும் அவ்வாறு சாதனைச் செய்த ஒருவரை நாம் காணவுள்ளோம்.
சேலம் மாவட்டம், பல்வேறு சிறப்புகள் நிறைந்த மாவட்டம். வானொலித் துறையிலும் பல்வேறு சாதனையாளர்களைக் கொண்ட மாவட்டம் இது. அந்த வகையில் நாம் பார்க்கும் இந்த மாத முத்திரை நேயர் ஆத்தூரைச் சேர்ந்த விஜயராம் அ. கண்ணன். இலங்கை வானொலியைக் கேட்கும் பெரும்பாலான நேயர்களுக்கு தெரிந்தவர். இலங்கை வானொலியின் தீவிர ரசிகர் என்றால் அது மிகையில்லை.
வானொலி நிலையங்கள் வைக்கும் பொது அறிவுப் போட்டிகளில் வென்று அந்த நாட்டின் வானொலி நிலையத்தினை இலவசமாக சென்று பார்ப்பது போன்று அல்லாமல், தனது சொந்த செலவிலேயே இலங்கை வானொலிக்கு இரண்டு முறை சென்று வந்தவர். இலங்கை வானொலி நிலையத்தின் வளாகத்தில் எடுத்த "மண்ணை' தமது பொக்கிசமாக பூஜை அறையில் பாதுகாத்து வருகிறார்.
நமது வாழ்நாளில் ஒருமுறையேனும் இலங்கை வானொலி வளாகத்தில் காலடி எடுத்து வைத்துவிட வேண்டும் என்ற கனவில் இருப்போர் பலர். ஆனால் அந்த வாய்ப்பு அனைவருக்கும் எளிதாக வாய்த்து விடுவதில்லை. விஜயராம் அ. கண்ணன் போன்றோர் கிடைத்த அந்த அறிய வாய்ப்பினையும் நன்றாக பயன்படுத்திக் கொண்டவர்கள் என்றால் அது மிகையில்லை.
""வானொலி கேட்கத் தொடங்கிய காலகட்டங்களில் வேறு எந்த ஒரு பொழுதுபோக்கு சாதனங்களும் இல்லாத காலம்++ என்று கூறும் இவர், 1976களில் தான் பள்ளியில் படித்துக் கொண்டு இருக்கும் காலகட்டங்களில், வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாகயே இலங்கை வானொலியைக் கேட்பதுதான் என்கிறார்.
இலங்கை வானொலியை பெரும்பான்மையான நேயர்கள் விரும்பிக் கேட்கக் காரணம், அவர்களின் அறிவிப்பு பாணி. நமது உள்ளூர் நிலையங்களின் அறிவிப்புகளில் ஒருவித சோர்வு தெரியும். ஆனால் அவர்களின் ஒவ்வொரு நிகழ்ச்சிகளும் துள்ளல் நிறைந்ததாக இருக்கும் எனக் கூறும் அ. கண்ணன், ""தூங்க வைப்பதல்ல வானொலி - நம்மைத் துடித்தௌச் செய்வது வானொலி'' என யாழ் சுதாகரின் வரிகளை நினைவூட்டுகிறார்
அப்பொழுது இலங்கை வானொலியில் இருந்த கே.எஸ். ராஜா, பி. ஹெச். அப்துல் ஹமீத் மற்றும் ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோர், நேயர்களை தனது குரல்களால் ஈர்த்தனர். அவர்கள் ஒலிபரப்பில் இருக்கும்போது, நம்மையும் அறியாமல் ஒலிபரப்பினைத் தொடர்ந்து கேட்க வேண்டும் என்ற ஆர்வம் தொற்றிக் கொள்ளும்.
மேலும் அவர்கள் ஒலிபரப்புகின்றப் பாடல்களில் "வெரைட்டி' இருக்கும். ஒரு அதிரடி பாடல் ஒலித்தால், அடுத்த பாடலே மனதை வருடும் மெலடியாக இருக்கும் எனக் கூறுகிறார் கண்ணன். இலங்கை வானொலி நேயர்களில் பெரும்பாலானவர்கள் இதனை அறிவர். இன்றும் இவரிடம், ஏராளமான பழைய பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் இலங்கை வானொலியில் இருந்து ஒலிபரப்பின் போது பதிவு செய்யப்பட்டவை ஆகும்.
இலங்கை வானொலியில் அறிவிப்பாளர்களுக்கு இருக்கும் சுதந்திரம், இங்குள்ள நமது வானொலிகளின் அறிவிப்பாளர்களுக்கு இல்லை. குறிப்பாக அகில இந்திய வானொலியில் இல்லை. இதனால், இங்குள்ள வானொலி அறிவிப்பாளர்கள் தனக்கு வழங்கப்பட்ட எல்லையிலேயே நிகழ்ச்சிகளை வழங்க வேண்டி உள்ளது. மேலும் இங்குள்ள இயக்குனர்களுக்கும் ஏராளமான நெருக்கடிகள் உள்ளன. இதனால், அவர்களும் பல்வேறு கட்டுப்பாடுகளை அறிவிப்பாளர்களுக்கு விதிக்கின்றனர். நமது அறிவிப்பாளர்களும், சுதந்திரம் கிடைப்பின் நிகழ்ச்சியின் தரத்தினை கண்டிப்பாக உயர்த்துவர்.
நல்ல ரசனை, ஆர்வம், தமிழ் மொழியை நன்றாக எழுதக் கற்றுக் கொடுத்தது இந்த இலங்கை வானொலி. ==முத்தமிழ் ஆரம், கவிதைச் செண்டு, வானொலி மலர்++ போன்ற நிகழ்ச்சிகளில் நேயர்களை பங்கெடுக்கச் செய்தது. அரை மணி நேரமும் ஒரு நேயரின் படைப்பிற்கு பாடல்களுடன் வழங்கிய வானொலி தான் இந்த =இலங்கை வானொலி+ என மகிழ்ச்சியோடு கூறுகிறார்.
இலங்கை வானொலியைத் தவிர வேறு எந்த வானொலிகளையும் கேட்காததற்கு காரணம், இதில் அனைத்தும் உள்ளது. நாம் விரும்புவது அனைத்தும் ஒரே வானொலியில் கிடைக்கும் பொழுது, அதனை கேட்காமல் இருக்க நிச்சயமாக மனம் வராது. மேலும் நமது உள்ளூர் தனியார் வானொலிகளைக் கேட்காததற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.
எம்.ஜி.ஆர். அவர்கள் நடித்த "வேட்டைக்காரன்' படத்தில் இருந்து "உன்னை அறிந்தால்' பாடலை ஒலிபரப்பிய அந்த தனியார் வானொலியின் அறிவிப்பாளர் அந்த படத்தின் இசை அமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன் என்கிறார். எப்பொழுதுமே தேவர் பிலிம்ஸில் எம்ஜிஆர் நடித்தால் அதற்கு இசை அமைப்பாளர் கே.வி. மகாதேவனாகத்தான் இருக்கும். இந்த சாதாரண விஷயம் இன்று இங்குள்ள தனியார் எப்.எம். அறிவிப்பாளர்களுக்கு தெரியவில்லை. தொடங்கப்பட்ட இரண்டாம் நாளே இந்தத் தவறு
அதில் ஒலிபரப்பாகியது. அன்றைய தினம் கேட்க நிறுத்தியவன் தான், இன்று வரை அந்த வானொலியைக் கேட்கவில்லை. வானொலி அறிவிப்பாளர்களுக்கு பொது அறிவு அதுவும், திரைப்படம் சார்ந்த அறிவு அதிகம் தேவை. ஆனால் இன்றைய அறிவிப்பாளர்களுக்கு அது மிகவும் குறைவாகவே உள்ளது என ஆதங்கப் படுகிறார் விஜயராம் அ. கண்ணன். இதே இலங்கை வானொலியின் அறிவிப் பாளர்களில் பலர் புள்ளி விபரங்களுடன் தகவல்களை வைத்திருப்பர். குறிப்பாக பி.ஹெச். அப்துல் ஹமீது 1960களில் வந்த படங்களில் உள்ள பாடல்கள், பாடலைப் பாடியவர், இயற்றியவர் மற்றும் இசை அமைத்தவரின் விபரங்களை விரல் நுனியில் வைத்திருப்பார். இதனால் அவர்களின் மீது மதிப்பு கூடுகிறது. இவ்வாறு நமக்குத் தேவையானது ஒரே இடத்தில் கிடைக்கும் போது நாம் ஏன் வேறு வானொலிகளைக் கேட்க வேண்டும்?
நம்மில் பலருக்கு வானொலிகளைக் கேட்ப துடன் ஆர்வம் நின்றுவிடும். ஆனால் விஜயராம் கண்ணன் அவர்களின் ஆர்வம் அதோடு நிற்கவில்லை. ஒலிபரப்பாகும் ஒவ்வொரு பாடல்களும் பதிவு செய்யப் பட்டதோடு, அது ஆவணப்படுத்தவும் பட்டது. முதலில் குறைவாகக் கிடைத்தது, இன்று தொழில்நுட்பத்தின் உதவியுடன் நிறைய கிடைக்கிறது என மகிழ்ச்சியாகக் கூறுகிறார்
இலங்கை வானொலியைச் சென்று நேரடியாகப் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், 1975ல் வந்தது. அதற்கு மூல காரணமாக இருந்தது அன்றைய கால கட்டத்தில் ஒலிபரப்பான எம்ஜிஆர், சிவாஜி மற்றும் இளையராஜா ஆகியோரின் பேட்டிகள் எனலாம்.
1975-ல் நினைத்தது 28 வருடங்கள் கழித்து நிறைவடைந்தது. 2003-ல் முதன் முறையாக இலங்கை வானொலியை காணச் சென்றேன். அதில் மறக்க முடியாத சம்பவங்கள் ஏராளம் உள்ளன. குறிப்பாக அங்கு இருந்த 50 அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் ஒன்றரை மணிநேரம் உரையாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தது. அன்றைய தினமே "விருந்தினர் விருப்பம்' நிகழ்ச்சியில் எனது பேட்டி அரை மணிநேரம் பாடல்களுடன் ஒலிபரப் பாகியது. தென்னிந்தியாவில் இருந்து சென்று, அவ்வாறு பேட்டி காணப் பட்டதில் முதலாமவர் என்ற பெருமைக்குரியவர் இவர் என்றால், அது மிகையில்லை.
இலங்கை வானொலியில் குறிப்பிட்டு சொல்ல வேண்டிய ஒரு இடம் "ஒலிக் களஞ்சியம்'. காரணம் 1,45,000 பாடல்களைக் கொண்ட ஒரு அறிய இசை நூலகம். நான் சென்றபோது, கம்ப்யூட்டர் எதுவும் கிடையாது. ஆனால் சித்திர குப்தன் வைத்திருப்பது போன்ற பெரிய புத்தகத்தை, அகர வரிசைப்படி வைத்துள்ளனர். இதன் துணை கொண்டே தேவையான பாடல்களை தேடி எடுக்கின்றனர். பழைய அரக்கு இசைத்தட்டில் இருந்து இன்றைய குறுந்தகடு வரை இதில் அடக்கம்.
மேலும் நம் வானொலிகளைப் போன்று ஒரு படத்தின் இசைத்தட்டு ஒன்று மட்டுமே இங்கு வைத்திருப்பதில்லை. மாறாக இசைத்தட்டு, கேஸட், குறுந்தகடு ஆகிய வற்றையும் வைத்துள்ளனர். இந்த விபரங்கள் அனைத்தும் அந்தப் புத்தகத்தில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. இருப்பதில் தரமானதை எடுத்து ஒலிபரப்பிற்குப் பயன்படுத்தப் படுகிறது.
தான் சேகரித்து வைத்துள்ள பாடல்களின் சிறப்பு அனைவருக்கும் தெரிய வேண்டும் என்பதற்காக, இணையம் ஊடாக ஒரு சிறப்பான சேவையைச் செய்து வருகின்றார் ஆத்தூர் அ. கண்ணன். 1940களில் வந்த பாடல்களாக இருந்தாலும் அதனை இணையம் மூலம் பெறும் வசதி இன்று உள்ளது. ஜ்ஜ்ஜ்.ள்ன்ந்ழ்ஹஸ்ஹற்ட்ஹய்ங்ங்.ற்ந் மற்றும் ஜ்ஜ்ஜ்.ஸ்ரீர்ர்ப்ஞ்ர்ர்ள்ங்.ஸ்ரீர்ம் போன்ற இணையத் தளங்களின் ஊடாக எமக்கு தேவையான அரியப் பாடல்களையும் பெற்றுக் கொள்வதோடு, தேவைப்படுபவர் களுக்கானப் பாடல்களையும் அதில் தான் பதிவேற்றம் செய்வதாகக் கூறுகிறார்.
மேற்கண்ட இணைய தளங்களில் வெறுமனே பாடல்களை மட்டும் வெளி யிடாமல், அந்தப் பாடல்களைப் பற்றிய சுவாரஸ்யமானத் தகவல்களையும் வெளி யிடுவர். இதனால் பழைய பாடல்களின் சிறப்பு வெளி உலகிற்கு தெரிய வருகிறது.
இலங்கை வானொலியின் அறிவிப்பாளர் களுக்காக முதன் முதலில் தனியானதொரு இணைய தளத்தினை உருவாக்கியப் பெருமை, இவருக்கு உண்டு. ஜ்ஜ்ஜ்.ஸ்ண்த்ஹஹ்ழ்ஹம்ர்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீர்ம் எனும் இணைய தளத்தினில் ஒரு சில முக்கிய அறிவிப்பாளர் களின் புகைப்படத்துடன், அவர்களின் அறிவிப்பின் ஒரு கீற்றினையும் அதில் கேட்கலாம். ஆனால் அதில் இன்னும் நிறைய அறிவிப்பாளர்களின் குரல்களைப் பதிவேற்ற எண்ணம் கொண்டுள்ளதாகக் கூறுகிறார். தன்னிடம் ஒரு சில முக்கிய அறிவிப்பாளர்களின் அறிய குரல்கள் இல்லை, அவைகளும் கிடைத்தால், இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் புகழினை உலகரியச் செய்யலாம்.
இன்று இலங்கை வானொலியை இணையத் திலும் கேட்கும் வசதி உள்ளது. ஆனாலும், இது சாதாரண மக்களைச் சென்றடைவது இல்லை. இன்றும், தமிழகத்தின் கிழக்குக் கடற்கரையோரம் உள்ள மக்கள் மட்டுமே இவர்களின் பண்பலை ஒலிபரப்புகளை கேட்க முடிகிறது.
இலங்கை வானொலி அறிவிப்பாளர்களின் பிதாமகன் என்றால், அது எஸ்.பி. மயில்வாகணன் தான். நடிகர் தங்கவேல் "நான் கண்ட சொர்க்கம்' படத்தில் எமலோகத்தில் ரேடியோவை கேட்கும் பொழுது, ""நேயர்கள் கேட்பது இலங்கை வானொலி'' என்று எஸ்.பி. மயில்வாகணன் குரலில் ஒலிக்கும், அதனைக் கேட்கும் தங்கவேல் ""என்ன மயில்வாகணன் எங்கு சென்றாலும் விடமாட்டேன் என்கிறார்'' என்று கூறுவார்.
இலங்கை வானொலியின் புகழானது எங்கும் பரவியிருக்கிறது என்ற கோணத்தில் அந்தக் காட்சி வடிவமைக்கப்பட்டு இருந்ததை நினைவு கூற்கிறார். அப்படிப்பட்ட அந்த அறிவிப்பாளரை பார்க்க வேண்டும் என்ற ஆர்வம், எங்களுக்கு வந்தது. அந்தச் சமயத்தில் ஒரு அருமையான படம் கிடைத்தது. உலகத் தமிழர்கள் அந்த அறிவிப்பாளரைப் பார்ப்பதோடு, அவரின் குரலையும் கேட்க வேண்டும் என்று நாங்கள் நினைத்தோம். அதற்கு செயல் வடிவம் கொடுத்தவர், சென்னை சூரியன் எப்.எம்.மில் உள்ள அருமையான அறிவிப் பாளர் யாழ் சுதாகர். அவரது ஜ்ஜ்ஜ்.ர்ப்ண்ஸ்ஹஹய்ந்ண்.க்ஷப்ர்ஞ்ள்ல்ர்ற்.ஸ்ரீர்ம் எனும் இணைய தளத்தினில் மயில்வாகணன் அவர்களின் அறிய குரலும் புகைப்படமும் பதிவேற்றியுள்ளோம்.
அதே போன்று கே.எஸ். ராஜா அவர்களின் புகைப்படங்கள் மற்றும் குரலினையும் அந்த இணைய தளத்தினில் கேட்கலாம். ஆனால், அவரது முத்திரை நிகழ்ச்சி ஒன்று உள்ளது. அது இன்று வரை நமக்கு கிடைக்கவில்லை. "திரை விருந்து' என்ற அந்த நிகழ்ச்சியை யாரேனும் வைத்திருந்தால், அதனை தந்து உதவலாம். அதன் மூலம் உங்கள் அபிமான அறிவிப்பாளரின் குரல் உலகம் முழுவதும் பரவ வித்திடலாம்.
இலங்கை வானொலியின் முதல் வர்த்தக சேவை அறிவிப்பாளர் ஜஸ்டின் முத்துக் குமார். இவரது பேட்டியை கடந்த 2005-ல் இலங்கை வானொலியில் ஒலிபரப்பியதோடு, அன்றைய இவரின் முதல் அறிவிப்பினையும், அதில் ஒலிபரப்பினர் என்பதை நினைவு கூறுகின்றார் ஆத்தூர் அ. கண்ணன்.
வானொலி அறிவிப்பாளர்களில் இன்றளவும் மறக்க முடியாத அறிவிப்பாளராக தனக்கு இருப்பவர் பி.ஹெச். அப்துல் ஹமீது என்று கூறும் கண்ணன், நிகழ்ச்சிகளை வழங்குவதில் அவருக்கு நிகர் அவரே. அவரது கணீர் குரல் யாரையும் திரும்பிப் பார்க்கச் செய்யும். மேலும் அவரது நினைவாற்றல் எல்லோரையும் அசர வைக்கும். 60-வது வருட சினிமா சரித்திரத் தினை தனது மூளையில் பதிந்து வைத்திருப்பவர். உலகத் தமிழர்கள் அனை வரும், இன்றும் அவரது பெயரை அறிவர்.
எனது மனதில் என்றும் மறக்க முடியாத நிகழ்ச்சி என்றால் அது "நினைவூட்டுகிறோம்' என்ற நிகழ்ச்சியே ஆகும். அந்த நிகழ்ச்சியில் பழைய பாடல்களை ஒவ்வொன்றாக ஒலிக்களஞ்சியத்தில் இருந்து எடுத்து ஒலிபரப்புவர். இன்றும் "நினைவில் நின்றவை' என்ற பெயரில் அந்த நிகழ்ச்சி யானது ஒலி உலா வருகிறது. அதே போன்று "இரவின் மடியில்' நிகழ்ச்சி யினையும் கூறலாம். தூங்க வைக்கும் நெஞ்சங்களைத் தாலாட்டும் நிகழ்ச்சி' என்ற அடை மொழியுடன் ஒலிபரப்புவர். அர்ப்பணிப்புடன் அனைவரும் நிகழ்ச்சியை வழங்குவர்.
பிபிசி உலக சேவையில் அன்றைய 'ஏர்ற் டஹழ்ஹக்ங்' எனும் புகழ்பெற்ற நிகழ்ச்சியை அடி ஒட்டி, இலங்கை வானொலியில் பி.ஹெச். அப்துல் ஹமீது வழங்கிய "இசைச் செல்வம்' 1980களில் அனைவராலும் விரும்பிக் கேட்ட இசை அணித்தேர்வு இன்றும் அனை வராலும் நினைவு கூறப்படும் நிகழ்ச்சி.
அதே போன்று சனிக்கிழமைகளில் காலை வேலையில் இவரால் தயாரிக்கப்பட்டு ஒலிபரப்பான "திரைக் கதம்பம்' நிகழ்ச்சி யைக் கூறலாம். இசைஞானி இளையராஜா வின் இசைக் கோர்ப்புகளை 15 நிமிடங் களுக்கு ஒலிபரப்புவார். 1980களில் வந்த புகழ்பெற்ற பாடல்கள் இசை அமைத்தவிதம் எங்களைப் போன்ற வானொலி நேயர் களுக்கு கிடைத்தற்கரிய வாய்ப்பு.
இலங்கை வானொலியைப் போன்ற வித்தியாசம் வேறு எங்கும் கேட்க முடியாது எனக் கூறும் விஜயராம் அ. கண்ணன், இலங்கை வானொலி ஒன்று மட்டுமே நேயர்களை மதித்து, அவர்கள் அனுப்பும் ஆக்கங்களை அருமையான நிகழ்ச்சிகளாகப் படைப்பர். "=கவிதைச் செண்டு, முத்தமிழ் ஆரம், வானொலி மலர் மற்றும் இன்றைய நேயர்'+ போன்ற நிகழ்ச்சிகளை அந்த வரிசையில் கூறலாம். இதன் மூலம் நேயர்களின் பெயர் நாள் முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கும்.
விஜயராம் அ. கண்ணன் அவர்களுக்கு மறக்க முடியாத சக நேயராக இருப்பவர் சேலம் கே. ராஜகோபால். இவரது பெயரில் இலங்கை வானொலியில் 500-க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகள் ஒலித்துள்ளது. அந்த நிகழ்ச்சிகள் அனைத்தினையும், ஒலிப்பதிவு செய்து வைத்துள்ளாராம். இன்றும் ஒரு சூட்கேஸ் நிறைய ஒலிநாடாக்களாக அதனைப் பாதுகாத்து வைத்துள்ளார். இவரைப் போன்று திருமங்கலக்குடி கோபால்சாமி மற்றும் திருநீலக்குடி உலகநாதன் ஆகியோரைக் கூறலாம். இவர்களைப் போல் ஆக்கங்களை எழுதக்கூடிய இன்னும் பல நேயர்கள் உள்ளதாகவும் கூறுகிறார்.
பணிப்பாளர் நாயகம் சிவராஜா இருந்த காலகட்டத்தில், தான் இலங்கை வானொலி க்கு சென்றதாகவும், அந்தச் சமயத்தில் அவரின் உதவி முக்கியமானதாக இருந்தது. அதேபோல் அறிவிப்பாளர்களில் கணேஷ்வரன், ஏ.எல். ஜஃபீர், ஜெயகிருஷ்ணா, முத்தையா ஜெகன்மோகன், நாகபூசணி, சந்திரமோகன் ஆகியோர் இல்லையென்றால் நான் இலங்கை வானொலிக்குச் சென்றிருக்க முடியாது.
இன்றும் எனது பூஜை அறையில் அன்றைய தினம் சிவராஜா அவர்களின் அறைக்கு முன் எடுக்கப்பட்ட மண்ணை ஒரு கைக் குட்டையில் கட்டி, எடுத்து வந்து அதனை பத்திரமாக வைத்துள் ளேன். அதனை ஒரு பெரிய பாக்கியமாகவே கருதுகிறேன்.
இலங்கை வானொலியில் ஒலிக்கும் பழைய பாடல்களைப் பதிவு செய்வதற்காக நான் போகாத ஊர் இல்லை. சமயம் கிடைக்கும் பொழுதெல்லாம், தென் தமிழகத்திற்கு சென்று விடுவோம். பல முறை இராமேஸ்வரம், கன்னியாகுமரி, கொடைக் கானல் ஆகிய ஊர்களுக்குச் சென்றுள் ளோம். குறிப்பாக கொடைக்கானலில் செட்டியார் பூங்காவில் மிகத் தெளிவாக பெரும்பாலான இலங்கை வானொலிகள் எடுக்கும்.
இலங்கை சென்று வந்தபோது அங்குள்ள 50 அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் சந்திர மோகன் அவர்கள் கூறியதை என்றும் மறக்க முடியாது எனக் கூறுகிறார் கண்ணன், ""நாம் நமது நாட்டிலும் சரி, இந்தியாவிலும் சரி, இவரைப் போன்று இலங்கை வானொலி யின் மீது பித்து பிடித்தவரைப் பார்த்ததே இல்லை'' என்று கூறிய அந்த வரிகளை இன்றும் தனது மனதில் பதிய வைத்திருக் கிறார். அதனை இன்றும் பெருமையாகக் கருதுகிறார்.
இலங்கை வானொலியைக் கேட்கும் நேயர்களுக்கு மத்தியில், வித்தியாசமான இவரைப் பற்றிக் கூற இன்னும் ஏராளம் உண்டு. நமது முத்திரை நேயர் பகுதி இவ்வாறானவர்களை ஒவ்வொருவராக அறிமுகப்படுத்துவதன் மூலம் பெருமை கொள்கிறது. இன்றும் தனது பணியை செவ்வனே செய்து வருகிறார் விஜயராம் அ. கண்ணன். அவரது பணி சிறக்க வாழ்த்துவோமாக! அவரது தொடர்பு முகவரி: 14, தாயுமானவர் தெரு, ஆத்தூர் – 636102, சேலம் மாவட்டம். பேச: 98946 70004 
-சந்திப்பு: தங்க. ஜெய்சக்திவேல்

1 comment:

UK Sharma said...

ஜ்ஜ்ஜ்.ள்ன்ந்ழ்ஹஸ்ஹற்ட்ஹய்ங்ங்.ற்ந்
ஜ்ஜ்ஜ்.ஸ்ரீர்ர்ப்ஞ்ர்ர்ள்ங்.ஸ்ரீர்ம்
ஜ்ஜ்ஜ்.ஸ்ண்த்ஹஹ்ழ்ஹம்ர்ய்ப்ண்ய்ங்.ஸ்ரீர்ம்
ஜ்ஜ்ஜ்.ர்ப்ண்ஸ்ஹஹய்ந்ண்.க்ஷப்ர்ஞ்ள்ல்ர்ற்.ஸ்ரீர்ம்

கட்டுரையில் காணப்படும் இவை என்ன இணைய தளங்கள்?