சீனாவில் கம்யூனிஸ ஆட்சியின் மணி விழா கொண்டாட்டங்கள்
சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 60 வருட ஆட்சியின் பூர்த்தியை முன்னிட்டு தமது இராணுவ பலத்தை பறைசாற்றும் வகையில் கொண்டாட்டங்களை சீனா நடத்தியுள்ளது.
தலைநகர் பீஜிங்கில் நடந்த பேரணியில், நீண்ட வரிசையில் யுத்த தாங்கிகளும், ஏவுகணைகளும் சிப்பாய்களும் அணிவகுத்துச் சென்றனர்.
பின்னதாக தியானமன் சதுக்கத்தில் கண்கவர் வாண வேடிக்கை மற்றும் தேசபக்த பாடல்கள், நடனங்கள் நிறைந்த நிகழ்ச்சிகளும் நடைபெற்றன.
அதேவேளை, திபத்தில் சீன ஆட்சிக்கு எதிராக இந்த தினத்தை முன்னிட்டு எதிர்ப்புக் காட்டிய 70 நாடுகடந்த திபெத்தியர்களை நேபாளத்தில் பொலிஸார் கைது செய்தனர்.
சீனாவில் கம்யூனிஸ ஆட்சியின் மணிவிழா கொண்டாட்டங்கள் குறித்து சீன சர்வதேச வானொலியின் தமிழ்ப் பிரிவைச் சேர்ந்த கலையரசி தெரிவிக்கும் கருத்துகளை நேயர்கள் செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
கலையரசியின் பேட்டியியைக் கேட்க இங்கே சொடுக்கவும்
2 comments:
என்ன ?
சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு உள்ளதா ?
ஆச்சர்யமாக உள்ளது.......
ஆம் உள்ளது. இந்திய நேரம் இரவு 730 முதல் 930 வரை கேட்களாம். விரிவான விபரங்கள் http://tamil.cri.cn/1/2009/03/27/121s82737.htm
Post a Comment