சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Sunday, January 10, 2010
வாய்ஸ் ஆப் ரஷ்யா, ரேடியோ பிரீ ஆசியா
வெனிசுலாவின் அதிபர் புதிதாக 29 வானொலிகளைத் தொடங்க அனுமதித்துள்ளார். நிகரகுவா நாட்டில் உள்ள வானொலிகள் பொருளாதார நெருக்கடி காரணமாக நிறுத்திக்கொள்ள தீர்மானித்துள்ளது. அமெரிக்காவின் மிகப் பெரிய பொதுத்துறை வானொலியான WNYC தற்பொழுது பாரம்பரிய இசைக்கு என ஒரு தனியான 24 மணி நேர வானொலியை WQXR என்ற பெயரில் தொடங்கியுள்ளது. ரஷ்யாவின் தகவல் தொடர்பு அமைச்சகம் டிஜிட்டல் முறையில் வானொலி மற்றும் தொலைக்காட்சி ஒலி-ஒளிபரப்ப அனுமதி வழங்கியுள்ளது. தற்பொழுது ஆப்பிள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ள ஐபாடில் பண்பலை ஒலிபரப்புகள் மட்டுமல்லாமல் ஒரு சில செயற்கைக்கோள் வானொலிகளையும் கேட்க வழிவகை செய்துள்ள இந்ந தொழில்நுட்பத்திற்கு பெயர் “லைவ் பாஸ்” வாய்ஸ் ஆப் ரஷ்யா தற்பொழுது 1000 வருட பழமையான இசையை மையப்படுத்தி நிகழ்ச்சி ஒன்றைத் தொடங்கியுள்ளது. ரேடியோ பிரீ ஆசியா தற்பொழுது 13வது வண்ண அட்டையை தனது நேயர்களுக்கு அனுப்பி வருகிறது. தொகுப்பு: மின்னக்கல் இ. செல்வராஜ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment