Thursday, May 31, 2012

வயலக வானொலி 90.4


தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் மற்றும் ஒரு சமுதாய வானொலி தொடங்கப்பட்டுள்ளது. ‘வயலக வானொலி 90.4’ என்ற பெயரில் தொடங்கப்பட்ட இந்த வானொலி கொட்டாம்பட்டியை மையமாக வைத்து ஒலிபரப்பி வருகிறது. “வானொலித் தொடங்கப்பட்டு நான்கு மாதம் மட்டுமே ஆவதால் தற்சமயம் நேயர்கள் அவ்வளவாக பங்கு கொள்வதில்லை, ஆனால் வரும் காலங்களில் சமுதாயத்தின் பங்களிப்பு வெகுவாக இருக்கும் என நம்புகிறோம்” என்றார் தற்பொழுது இதன் மேலாளராக இருக்கும் முத்துகுமாரசாமி. இந்த வானொலியைத் தொடர்பு கொள்ள முகவரி:  வயலக வானொலி 90.4, No: W5/5655, MDCC  வங்கி, முதல் தளம், மதுரை மெயின் ரோடு, கொட்டாம்பட்டி - 625103,
தொ: 04544-230485, 99448 28346, Email: vayalagavanoli@gmail.com,
Web: www.vayalagavanoli.co.cc

Monday, May 28, 2012

நாடுகடந்த தமிழீழ அரசின் வானொலியை இலங்கையில் கேட்பதை தடுக்க முடியாது



tgte_001
நாடுகடந்த தமிழீழ அரசினால் அண்மையில் தொடங்கப்பட்ட சிற்றலை வானொலி ஒலிபரப்பை இலங்கையில் கேட்காமல் தடுக்க முடியாது என்று இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார்.
நாடு கடந்த தமிழீழ அரசினால் நடத்தப்படும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுப்பதற்கான கருவிகள் எம்மிடம் இல்லை. ஆனால் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அதைச் செய்ய முடியும்.
இலங்கையில் சிற்றலை ஒலிபரப்புக்கு இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது. அவர்களுக்கு மட்டும் தான் இந்த ஒலிபரப்பைத் தடுக்கும் வசதி உள்ளது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இதுகுறித்து இலங்கை ஒலிபரப்பக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கருத்து வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார். நாதம் வானொலிச் சேவை என்ற பெயரில் கடந்த 18ஆம் திகதி தொடக்கம் நாடு கடந்த தமிழீழ அரசு, அரைமணி நேர வானொலி ஒலிபரப்பை நடத்தி வருகிறது.
இலங்கை, இந்தியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதனை செவிமடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது (தகவல் உதவி: http://sankathi.com/dailynews/?p=670)

நாடுகடந்த தமிழீழ அரசின் வானொலியை சிறிலங்காவில் தடுக்க முடியாது – அனுச பல்பிட்ட

நாடுகடந்த தமிழீழ அரசினால் அண்மையில் தொடங்கப்பட்ட சிற்றலை வானொலி ஒலிபரப்பை சிறிலங்காவில் கேட்காமல் தடுக்க முடியாது என்று சிறிலங்காவின் தொலைத்தொடர்பு ஒழுங்கமைப்பு ஆணையத்தின் பணிப்பாளர் நாயகம் அனுச பல்பிட்ட தெரிவித்துள்ளார்.

“நாடு கடந்த தமிழீழ அரசினால் நடத்தப்படும் சிற்றலை வானொலி ஒலிபரப்பு சமிக்ஞைகளை தடுப்பதற்கான கருவிகள் எம்மிடம் இல்லை.

ஆனால் சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தினால் அதைச் செய்ய முடியும்.

சிறிலங்காவில் சிற்றலை ஒலிபரப்புக்கு சிறிலங்கா ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் மட்டுமே அனுமதி பெற்றுள்ளது.

அவர்களுக்கு மட்டும் தான் இந்த ஒலிபரப்பைத் தடுக்கும் வசதி உள்ளது“ என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேவேளை இதுகுறித்து சிறிலங்கா ஒலிபரப்பக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ஹட்சன் சமரசிங்க கருத்து வெளியிட மறுப்புத் தெரிவித்துள்ளார்.

நாதம் வானொலிச் சேவை என்ற பெயரில் கடந்த 18ம் நாள் தொடக்கம் நாடு கடந்த தமிழீழ அரசு, அரைமணி நேர வானொலி ஒலிபரப்பை நடத்தி வருகிறது.

இந்தியா, சிறிலங்கா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் இதனை செவிமடுக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
 தகவல் உதவி: http://www.puthinapp...?20120528106281

நாடு கடந்த தமிழீழ அரசின் வானொலி

நாடு கடந்த தமிழீழ அரசின் வானொலியை தடைசெய்யும் விதமான எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என இலங்கையின் தொலைத்தொடர்பு ஒழுங்கு முறை ஆணையத்தின் இயக்குனர் அனுஷா பல்பிட்டா தெரிவித்துள்ளார்.

ஆனாலும் நாடு கடந்த தமிழீழ அரசின் வானொலியானது 12225 அலை எண்களில் ஒலிபரப்பும் போது, வேறு ஒலிபரப்புகள் வேண்டுமென்றே குறுக்கிடுவதாக இந்திய டி.எக்ஸ். கிளப் இண்டர்நேசனல் தனது பேஸ் புக்கில் (http://www.facebook.com/groups/idxci/) தெரிவித்துள்ளது.

முன்னதாக இந்த வானொலி கடந்த 18 மே 2012 முதல் தினமும் இரவு 8.30 முதல் 9.30 வரை தனது சேவையை இந்திய இலங்கைத் தமிழர்களுக்காக தொடங்கியது குறிப்பிடத்தக்கது.

வானொலி தொடர்பான படிப்புகள்

”தினமணி மாணவர் மலர் 2012”-னை தவறாமல் வாங்கிப் படியுங்கள். 460 பக்கங்கள் கொண்ட இந்த மலரின் விலை வெறும் ரூ.25/- மட்டுமே. வானொலி பற்றிய எனது இரண்டு கட்டுரைகள் வெளிவந்துள்ளது. ஒன்று இங்கே....



Thursday, May 24, 2012

இந்தியாவில் 1000 சமுதாய வானொலிகள்

இந்தியாவில் விரைவில் 1000 சமுதாய வானொலி நிலையங்களுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக தகவல் மற்றும் ஒலிபரப்பு துறையின் செயலாளர் நாயகம் உதய குமார் வர்மா புது தில்லியில் நடைபெற்ற ரேடியோ சம்மேளன் நிகழ்ச்சியில் தெரிவித்தார். எனவே இனி வரும் நாட்களில் தமிழகத்தில் மட்டுமே 100க்கும் அதிகமான சமுதாய வானொலிகள் தொடங்கப்படலாம்.

Tuesday, May 22, 2012

புதிய சிற்றலை ஒலிபரப்பு

இந்திய இலங்கை நேரம்: இரவு 8.30 முதல் 9.30 வரை

சிற்றலைவரிசை: 12250kHz

Tamil Gov't Starts Radio Broadcast to Sri Lanka on May 18th

Heard non stop music from 1500-1600 UTC on 12250 kHz, 21 May 2012.
Here two audio files recorded at 1531 & 1535 UTC.

https://www.box.com/s/83e37becfa5655caddf2
https://www.box.com/s/722a4ce8c7ca22a25135

Thanks
Swopan Chakroborty
Kolkata, India

On 20 May 2012 21:21, Alan Roe <alan-roe@tiscali.co.uk> wrote:
>
>
>
> Report via http://www.tgte-us.org/ and
> http://world.einnews.com/pr_news/96213939/tamil-gov-t-starts-radio-broadcast-to-sri-lanka-on-may-18th-3rd-anniversary-of-tamil-genocide
> states that the Transnational Government of Tamil Eelam (TGTE) is to
> start radio broadcast to Sri Lanka on May 18th, scheduled from
> 15.00-16.00. No indication given as to whether daily, weekly etc. No
> frequency was given in the report, but graphic on
> http://www.tgte-us.org/ shows 12.250MHz
>
> Alan Roe, Teddington, UK
>
> Transnational Government of Tamil Eelam (TGTE)* today announced that it
> will start broadcasting Radio News to the Island of Sri Lanka starting
> from May 18, 2012; the 3rd anniversary of the Genocide of Tamils by the
> Sri Lankan Government forces.
>
> The Tamil Government's Radio called Naatham will broadcast in shortwave
> frequency. This Radio can also be heard in India, Malaysia and Singapore
> where large number of Tamils live. While this broadcast will become a
> bridge between the Tamil diaspora and the Tamils living in Tamil
> homeland, it will also play a role of politically and emotionally link
> Tamils worldwide.
>
> The first special broadcast will be on May 18 th (Friday), for one hour
> from 8:30 pm to 9:30 pm, Sri Lanka time. TGTE has designated May 18th as
> the Tamil National Mourning Day to remember tens of thousands of Tamils
> who were killed simply and solely on account of their Tamil nationality.
>
> "While the Tamils in the island of Sri Lanka are struggling to cope with
> the mass killing and be subject to systematic and pervasive human rights
> violation on account of their Tamil nationality, this broadcast will
> ease the pain and give them confidence that their dream of achieving
> sovereign and independent state of Tamil Eelam will become a reality"
> said Visuvanathan Rudrakumaran, Prime Minister of the Transnational
> Government of Tamil Eelam (TGTE). "This broadcast will pierce the strict
> media censorship in Sri Lanka and reach the Tamils to give them unbiased
> information."
>
> Via Swopan ChakrobortyIndian DX Club International

இலங்கைக்கான புதிய சிற்றலை ஒலிபரப்பு

இந்திய இலங்கை நேரம்: 8.30 முதல் 9.30 வரை

சிற்றலைவரிசை: 12250kHz


Tamil Gov't Starts Radio Broadcast to Sri Lanka on May 18th - 3rd Anniversary of Tamil Genocide

"The first special broadcast will be on May 18th (Friday), for one hour from 8:30 pm to 9:30 pm, Sri Lanka time." 

Transnational Government of Tamil Eelam (TGTE)* today announced that it will start broadcasting Radio News to the Island of Sri Lanka starting from May 18, 2012; the 3rd anniversary of the Genocide of Tamils by the Sri Lankan Government forces. 

The Tamil Government's Radio called Naatham will broadcast in shortwave frequency. This Radio can also be heard in India, Malaysia and Singapore where large number of Tamils live. While this broadcast will become a bridge between the Tamil diaspora and the Tamils living in Tamil homeland, it will also play a role of politically and emotionally link Tamils worldwide. 

The first special broadcast will be on May 18 th (Friday), for one hour from 8:30 pm to 9:30 pm, Sri Lanka time. TGTE has designated May 18th as the Tamil National Mourning Day to remember tens of thousands of Tamils who were killed simply and solely on account of their Tamil nationality. 

"While the Tamils in the island of Sri Lanka are struggling to cope with the mass killing and be subject to systematic and pervasive human rights violation on account of their Tamil nationality, this broadcast will ease the pain and give them confidence that their dream of achieving sovereign and independent state of Tamil Eelam will become a reality" said Visuvanathan Rudrakumaran, Prime Minister of the Transnational Government of Tamil Eelam (TGTE). "This broadcast will pierce the strict media censorship in Sri Lanka and reach the Tamils to give them unbiased information." 

Background: 

Tamils faced repeated mass killings since 1958 and the killings in 2009 prompted UN Secretary General Ban Ki-Moon to appoint a Panel of Experts to report on the scale of killings. According to this UN report over 40,000 were killed in five months in 2009, due to deliberate and intense carpet bombing of areas designated by the government as "no-fire zones", where Tamils assembled for safety. The Sri Lankan Government used cluster bombs and restricted food and medicine for Tamils, resulting in large numbers of people dying from starvation and many of the injured bleeding to death. 

According to the UN, Tamil women were sexually assaulted and raped by Sri Lankan forces. According to a recent UK government report there are over 90,000 Tamil war widows. There are also reports that detained Tamil women are used as sex slaves by the Security Forces. According to the Bishop of Mannar, Dr. Rayappu Joseph, 146,679 Tamils were unaccounted for when Sri Lankan forces attacked Tamil people in 2009. Members of the Sri Lankan Security forces are almost exclusively from the Sinhalese community and the victims are all from the Tamil community. 

For information contact: media@tgte.org 

*Transnational Government of Tamil Eelam (TGTE) is a democratically elected government of Tamil Diaspora from the island of Sri Lanka. Its actions are strictly non-violent, democratic and diplomatic. It held internationally supervised elections in twelve countries to elect Members of Parliament (MPs). These MPs drafted and ratified a Constitution and elected a Prime Minister, a 10 member Cabinet and a Speaker. Web: www.tgte-us.orgwww.govthamileelam.org orwww.en.naathamnews.com (Via EINPresswire.com/ May 16, 2012)

Thursday, May 17, 2012

சமுதாய வானொலிகள் தொடர்பான தேசிய கருத்தரங்கம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் தொடர்பியல் துறை சார்பினில் கடந்த மார்ச் 16 மற்றும் 17 ஆகிய தினங்களில் சமுதாய வானொலிகள் தொடர்பான தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த ஆய்வாளர்களால் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டார் முனைவர். ஸ்ரீதர். இவர் இந்தியாவின் முதல் சமுதாய வானொலியை தொடங்கியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நாள் கருத்தரங்கின் முத்தாய்ப்பாக நாகப்பட்டிணம் களஞ்சியம் சமுதாய வானொலி, மதுரை திருமங்களம் பார்டு வானொலி, திருச்செந்தூர் சிவந்தி சமுதாய வானொலி மற்றும் மதுரை, கொட்டாம்பட்டி வயலக வானொலிகளின் மேலாளர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Tuesday, May 15, 2012

பிபிசி உலக சேவைக்கு பிரிட்டிஷ் வானொலி விருது

பிபிசி உலக சேவை வானொலி
பிரிட்டிஷ் வானொலி ஒலிபரப்பு தொழில்துறைக்கான மிக உயரிய விருதான சோனி ரேடியோ அகாடமியின் தங்க விருதை பிபிசி உலக சேவை வென்றுள்ளது.
சென்ற வருடம் நடந்த பிரிட்டிஷ் இளவரசர் வில்லியம் அவர்களது திருமணத்தை நேரடி ஒலிபரப்பு செய்த நிகழ்ச்சிக்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மத நிந்தனை - வாழ்வா சாவா என்பதை நிர்ணயிக்கும் ஒரு விடயம்
என்ற தலைப்பில் ஒலிபரப்பான ஒரு அஸைன்மெண்ட் நிகழ்ச்சிக்கு சிறந்த செய்தி நிகழ்ச்சிக்கான பிரிவில் வெள்ளி விருது கிடைத்துள்ளது.
நேயர் கருத்துகளை ஒலிபரப்பும் வோர்ல்ட் ஹேவ் யுவர் சே நிகழ்ச்சி ஒன்றுக்கு வெண்கல விருது அளிக்கப்பட்டுள்ளது.
உலக சேவை வானொலிக்காக மத்திய கிழக்கிலிருந்து அதிகம் செய்திகளை வழங்கிய பிபிசி செய்தியாளர் ஹியு சைக்ஸுக்கு, எகிப்து தொடர்பிலும் பிற அரபு நாடுகளில் நடந்த மக்கள் எழுச்சி தொடர்பிலும் சிறப்பான செய்திகளை வழங்கியதற்கான விருது ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. (Soure: BBC Tamil Facebook)

பெல்ஜியம் வானொலி மன்றம்

பெல்ஜியம் வானொலி மன்றம் தனது 30ஆவது ஆண்டு விழாவினை கொண்டாடி வருகிறது. அதற்கு நமது சர்வதேச வானொலியின் வாழ்த்துக்கள்.
அவர்களது மன்றம் பற்றிய மேலதிக விபரங்களுக்கு
e-mail adres:

contactadres:
DX-Antwerp vzw
Steynstraat 104
2660 Hoboken
België


Thursday, May 10, 2012

சந்தா பற்றிய ஒரு அறிவிப்பு:

இந்த மாதம் முதல் இனி நமது இதழின் ஆண்டு சந்தா ரூ.50 மட்டுமே. வருடத்திற்கு நான்கு இதழ் என, இனி காலாண்டு இதழாக உங்கள் இல்லம் நாடி வரவுள்ளது. ஏற்கனவே சந்தா கட்டியவர்களுக்கு இதழின் சந்தா நிறைவடையும் போது தெரிவிக்கப்படும். எனவே தகவல் தெரிவிக்கும் பொழுது சந்தாவை புதுப்பித்தால் போதுமானது. அதே போன்று இனி இதழின் எண்ணிக்கையைக் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். அதாவது வருடத்திற்கு நான்கு இதழ்கள் என்றால், இதழ் எண்: 138-ல் இருந்து இதழ் எண்: 141 வரை அனுப்பப்படும். ஆக வருடத்திற்கு அல்லது இதழ் வெளியாகும் போது நான்கு இதழ் சேர்ந்தால் மட்டுமே ஒரு ஆண்டு நிறைவுபெறும். ஆதலால் கவலை வேண்டாம் மாதத்தினை ஞாபகம் வைத்து சந்தா கட்டியவர்கள், இனி அறிவிப்பு வரும் போது மட்டும் சந்தா கட்டினால் போதுமானது. குழப்பம் இருப்பின் கடிதம் எழுதவும், விளக்கப்படும். –ஆர். 

Monday, May 07, 2012

உலகத் தமிழ் சிற்றலை வானொலிகள் (A12)



(25 மார்ச் 2012 முதல் 28 அக்டோபர் 2012 வரையிலான தமிழ் சிற்றலை ஒலிபரப்புகளின் விபரங்கள்)



வானொலி  / நேரம் / அலைவரிசை (மீட்டர்)


தமிழ் நாதம் (இந்தியா)
0530-0615 காலை 1053,7270,9835,9910,11740,11985,13795 (49,41,31,25,22)
0445-0545 மாலை 1053,7270,13695,15050,15770,17810,17860 (41,22,19,16)

அ.இ.வா (இந்தியா)
0545-0815 காலை   4920 (60)
0830-1000 காலை 7380 (41)
1240-0300 மதியம் 7380 (41)
0530-1105 இரவு 4920 (60)
0600-0630 காலை 9770 (31)

வேரித்தாஸ் (பிலிப்பைன்ஸ்)
0600-0630 காலை 11935 (25)
0730-0800 இரவு 9520 (31)

ஆத்மீக யாத்திரை (அமெரிக்கா)
0630-0645 காலை 6145 (49)

வத்திகான் வானொலி 
0630-0650 காலை 9580,11730 (31,25)
0750-0810 காலை 15460 (19)
0820-0840 இரவு 11850,13765,17520 (25,22,16)

சீன வானொலி
0730-0830 காலை 13600 (22)
0830-0930 காலை 13600,13730 (22)
0730-0830 இரவு 11685,13600 (25,22)
0830-0930 இரவு 9490,11800 (31,25)

பாகிஸ்தான் வானொலி
0630-0700 இரவு 1188,015540 (19,25)

பிபிசி தமிழோசை
0915-0945 இரவு 7600,9500,15390,15690 (41,31,19)

அ.இ.வா (திருவனந்தபுரம்)
1108-1200 மதியம் 7290 (41)

அ.இ.வா (அந்தமான்)
0500-0530 மாலை 4760 (60)

ஆசிய சேவை (இலங்கை)
0500-0700 மாலை 6005,7190,11905 (49,41,25)

TWR
0600-0630 காலை 882
1015-1045 இரவு 882

அட்வண்டிஸ்ட் வானொலி (அமெரிக்கா)
0830-0900 இரவு 11870 (25)

குடும்ப வானொலி (அமெரிக்கா)
0730-0830 இரவு 17715 (16)
0830-0930 இரவு 13790 (22)

HCJB(ஆஸ்திரேலியா)
0645-0700 காலை(சனி மட்டும்)  15400 (19)
0645-0700 இரவு(சனி மட்டும்)  15340 (19)



Thursday, May 03, 2012

உங்களோடு…

இதழ் வழியே சந்திப்பது அறிதாகி வருகிறது. தவிர்க்க முடியவில்லை. சர்வதேச வானொலி வலைப்பூவில் அவ்வப்போது தகவல்கள் புதுபிக்கப்படுகிறது. ஆனாலும் அச்சில் எழுதி, அதில் படிப்பது என்பது ஒரு சுகமே. இந்த ஆண்டுக்கான டி.எக்ஸ். போட்டி இந்த இதழில் தொடங்குகிறது. ஆங்கிலத்தில் ஏற்கனவே அறிவித்துவிட்டோம். சர்வதேச அளவில் நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. சர்வதேச வானொலி வாசகர்களிடம் இருந்தும் ஏராளமான பதில்களை எதிர்பார்க்கிறோம். விடைகள் தெரிவது கடினமாக இருந்தாலும் தெரிந்த விடைகளை எழுதி அனுப்பத் தவறாதீர்கள். சொல்ல நிறையத் தகவல்கள் உண்டு, ஆனால் இடம் கருதி இத்துடன் நிறைவு செய்கிறேன்.
- சிறப்பாசிரியர்.