Showing posts with label களஞ்சியம் சமுதாய வானொலி. Show all posts
Showing posts with label களஞ்சியம் சமுதாய வானொலி. Show all posts

Thursday, May 17, 2012

சமுதாய வானொலிகள் தொடர்பான தேசிய கருத்தரங்கம்

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழத்தின் தொடர்பியல் துறை சார்பினில் கடந்த மார்ச் 16 மற்றும் 17 ஆகிய தினங்களில் சமுதாய வானொலிகள் தொடர்பான தேசிய கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் இந்தியா முழுவதும் இருந்து வந்திருந்த ஆய்வாளர்களால் ஆய்வுக்கட்டுரைகள் வாசிக்கப்பட்டன. இந்த கருத்தரங்கிற்கு சிறப்பு விருந்தினராக வந்து கலந்து கொண்டார் முனைவர். ஸ்ரீதர். இவர் இந்தியாவின் முதல் சமுதாய வானொலியை தொடங்கியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இரண்டாம் நாள் கருத்தரங்கின் முத்தாய்ப்பாக நாகப்பட்டிணம் களஞ்சியம் சமுதாய வானொலி, மதுரை திருமங்களம் பார்டு வானொலி, திருச்செந்தூர் சிவந்தி சமுதாய வானொலி மற்றும் மதுரை, கொட்டாம்பட்டி வயலக வானொலிகளின் மேலாளர்கள் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர்.