Saturday, October 13, 2012

இலங்கையின் சிட்டி எஃப்.எம்

சிட்டி எஃப்.எம்: இலங்கையின் தலைநகர் கொழும்புவில் இருந்து முற்றிலும் ஆங்கிலத்தில் ஒலிபரப்பாகிவரும் சிட்டி எஃப்.எம் இனி மூன்று மொழிகளிலும் ஒலிபரப்பாக உள்ளதாக அதன் இயக்குனர் ஹட்சன் சமரசிங்கே தெரிவித்துள்ளார். அவ்வப்போது சிங்களத்திலும் ஒலிபரப்பான இந்த வர்த்தக வானொலி,  இனி தமிழிலும் ஒலிபரப்பாவது கண்டு நமக்கெல்லாம் மகிழ்ச்சியே.
இந்த மகிழ்ச்சிக்கு காரணமானவர் நமது முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் ஆவார். அவர் சமீபத்தில் இலங்கை சென்றபோது “நாடு அமைதியாக இருக்க அனைத்து துறைகளிலும் கட்டாயம் மும்மொழிக் கொள்கை அவசியம்” என்று கூறியதன் பயனாக இந்த அறிவிப்பினை வெளியிட்டுள்ளது இலங்கை வானொலி. அப்படியே நமக்கும் கொழும்பு சர்வதேச வானொலியைக் கிடைக்கச் ஏற்பாடுச் செய்திருக்கலாம் நமது முன்னாள் குடியரசுத் தலைவர்?.

2 comments:

கரிகாலன் said...

உங்ககள் வானொலி மலரை(வலைப்பதிவை ) தவறாமல் வாசித்து வருகிறேன் .வானொலி தொடர்பாக அளப்பரிய சேவை செய்து வருகின்றிர்கள் .தொடருங்கள் உங்கள் சேவையை .
இந்தியாவில் ஓலிபரப்பாகும் தமிழ் வானொலிகள் பற்றி ஒரு பதிவு தரலாமே
அரசு மாற்றும் தனியார் வானொலிகள் பற்றி .எங்கெங்கு ,என்ன அலைவரிசைகளில் ,இனைய முகவரி
இப்படி பலவற்றை தந்தால் வெளிநாடுகளில் உள்ள பலருக்கு பிரயோசனமாக இருக்கும் ,நான் இந்தியாவில் இருந்த காலங்களில் தனியார் எவ்எம் வானொலிகள் இல்லை .
இந்தியாவில் கேட்ட முடிகிற இலங்கை வானொலிகள் பற்றியும் அதே போல இலங்கையில் கேட்க முடிகிற இந்திய தமிழ வானொலிகள் பாறியும் கொஞ்சம் எழுதுங்களேன்.

'வாழ்த்துக்களுடன்

கரிகாலன்

Unknown said...

இந்த ப்ளாக்ஸ்பாட்டின் பக்கத்திலேயே இதற்கான லிங்க் உள்ளதே.

இலங்கைக்கு தூத்துக்குடி வானொலி நிலையமும்,கோடைப் பண்பலை 100.5 வானொலியும் கிடைக்கும் என் அறிகிறோம்..