வாய்ப்புக் கிடைக்கும் பொழுது எல்லாம் ஏதேனும் ஒரு வானொலி நிலையத்தினை சென்று பார்த்துவிடுவது எனது வழக்கம். அதில் ஒரு மகிழ்ச்சி உள்ளது. அதனை எப்படி சொல்வது எனப் புரியவில்லை. அப்படி சமீபத்தில் நான் சென்று பார்த்த வானொலி நாகப்பட்டிணத்திற்கு அருகில், விழுந்தமாவடி எனும் கிராமத்தில் இருந்து செயல்பட்டு வருகின்ற களஞ்சியம் சமூக வானொலியைக் கூறியே ஆக வேண்டும்.
இந்த வானொலியின் பொறுப்பாளர் திரு.நகுவீர் பிரசாத் எனது நீண்ட கால நண்பர். எங்களது பல்கலையில் சமுதாய வானொலிகள் குறித்த தேசிய கருத்தரங்கில் கலந்து கொண்டு தனது அனுபவங்களைப் பகிர்ந்து கொண்ட ஒரு எளிய நண்பர்.
பல இன்னல்களுக்கு இடையில் தமிழகத்தில் வெற்றிகரமாக செயல்பட்டுவரும் சமூக வானொலிகளில் இதுவும் ஒன்று. பல முறை இந்த வானொலியின் ஒலிபரப்பி புயல் காரணமாக விழுந்தது. தற்பொழுது ஸ்திரமாக அமைக்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டு வருகிறது நாகப்பட்டிணம் மாவட்டத்தைப் பற்றித்தான் நமக்குத் தெரியுமே!
ஊரின் பலப்பகுதிகளிலும் கீழ்கண்ட ஸ்டிக்கரை ஒட்டி வைத்துள்ளனர். இதன் மூலம் அந்த மக்களை ஒன்றிணைத்து செயல்பட்டுவருகிறது