சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Saturday, March 01, 2014
டி.என்.ஜி ஓய்வு பெறுகிறார்
பணி ஓய்வு பெறுகிறார் டி.என்.கோபாலன்
டி என் கோபாலன்
வெள்ளிக்கிழமையோடு நமது சென்னை செய்தியாளர்
டி.என்.கோபாலன் பணி ஓய்வு பெற்றுச்
செல்கிறார்.
தமிழோசையின் செய்தியாளராக
சென்னையிலிருந்து 1998லிருந்து பணியாற்றிய
கோபாலன், தமிழோசையில் பணிபுரிந்த பல
ஆண்டுகளில், பல்வேறு நடப்புச் செய்திகளோடு, பல
சிறப்புத் தொடர்களையும் தந்தவர்.
தமிழகத்தில் தலித்துகளின் நிலை, தமிழக
முஸ்லீம்களின் பிரச்சினைகள் குறித்த
அவரது தொடர்கள் நேயர்களின் பாராட்டுக்களைப்
பெற்றவை.
அரசியல் செய்திகள் மட்டுமின்றி,
கலை கலாசாரத்துறையிலும் அவர்
தனது ஆர்வத்தைப் பயன்படுத்தி திறம்பட
செய்திகளைத் தந்தார்.
தமிழ் நாடகத்துறையின் வளர்ச்சி குறித்து, அவர்
தயாரித்தளித்த 'காயாத கானகத்தே' தொடர் மற்றும்
தமிழிசை குறித்த தொடர்
போன்றவை நேயர்களுக்கு நினைவிருக்கலாம்.
இதழியல் மற்றும் ஒலிபரப்பு சேவையில் பல
ஆண்டுகள் பணியாற்றி ஓய்வு பெறும்
டி.என்.கோபாலனுக்கு நமது வாழ்த்துகள்.
தமிழோசையில் பணியாற்றிய அனுபவம்
குறித்து கூறும் கோபாலன் , பிபிசியில்
பணிபுரிந்த ஏறத்தாழ 16 ஆண்டுகள் காலம்
என்பது மகிழ்ச்சியான தருணங்களும்,
ஏமாற்றமளித்த தருணங்களும், கசப்பான
தருணங்களும் என எல்லாமுமான
ஒரு கலவை என்கிறார்.
புதிய மனிதர்கள், புதிய செய்திகள், புதிய
தொழில் நுணுக்கங்கள் இப்படிப் பலவற்றைத்
தெரிந்துகொள்ளும்
ஒரு வாய்ப்பு தனக்கு பிபிசியில்
கிடைத்ததாகவும் அவர் கூறுகிறார் .
தலித் மக்கள் மற்றும் முஸ்லீம்களின்
வாழ்நிலை, தமிழிசை, தமிழ் நாடகம்
குறித்த தொடர்கள் மனநிறைவைத் தந்தன
என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஊக்குவித்த, ஒத்துழைத்த,
பொறுத்துக்கொண்ட சக ஊழியர்களுக்கும்,
நேயர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றி என அவர்
தெரிவித்துள்ளார்
தமிழோசை மென்மேலும் சிறக்க
வாழ்த்துக்கள் என்றும் கோபாலன் கூறுகிறார்.
நன்றி: பிபிசி தமிழோசை
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment