Saturday, February 28, 2015

எண்களை ஒலிபரப்பும் வானொலிகள்

எண்களை மட்டுமே ஒலிபரப்பும் வானொலிகள் கேட்டுள்ளீர்களா? இதோ அப்படியொரு வானொலியின் அலைவரிசை விபரம். Number station E07a on 9347, 8147 USB - 2 videos
http://swldxbulgaria.blogspot.com/2015/02/unidentified-number-station-on-9702-am.html

UNIDentified number station on 9702 AM and Number station E11a on 14410 USB
http://swldxbulgaria.blogspot.com/2015/02/unidentified-number-station-on-9702-am.html

Radio Spaceshuttle probably via Secretbrod
http://swldxbulgaria.blogspot.com/2015/02/upcoming-transmission-of-radio.html

ஒலிபரப்பிகள் அமைந்துள்ள இடங்கள்

வானொலி நிலையங்களின் ஒலிபரப்பிகள்  அமைந்துள்ள இடங்களின் விபரங்களை இந்த இணைய தளத்தில் காணலாம் 
radio-locator.com 

Tuesday, February 24, 2015

உலக வானொலி தினம் 2015

உலக வானொலி தினம் 2015 சென்னைப் பல்கலைக்கழகத்தில் 13 பிப்ரவரி 2015 அன்று கொண்டாடப்பட்டது. அந்த நிகழ்வில் கலந்துகொண்ட மாணவர்களின் கருத்துக்களை இங்கேக் காணலாம்.

சென்னை பல்கலைக்கழகத்தில் பொது வானொலி சேவை: மக்கள் ஆர்வத்தை ஊக்குவிக்க மாணவர்கள் முயற்சி

பொது வெளிகளில் வானொலி கேட்கும் பழக்கத்தை மீண்டும் உயிர்பிக்க சென்னை பல்கலைக் கழகத்தில் பொது வானொலியை மாணவர்கள் அமைத்துள்ளனர்.
சென்னைப் பல்கலைக்கழக வளாகத்தில் தேனீர் கடைக்கு அருகில் வானொலிப் பெட்டி ஒன்றை வைத்து, அதன் மூலம் சிற்றலை யில் செய்திகள், நிகழ்ச்சிகள் கேட்க ஆரம்பித்துள்ளனர். இதன் தொடக்க விழா உலக வானொலி தினத்தையொட்டி பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று நடைபெற்றது. தேநீர் கடையை நடத்தும் கார்த்திக் மற்றும் ராஜா வானொலி சேவையை தொடக்கி வைத்தனர்.
இதில் அகில இந்திய வானொலியின் முன்னாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் ‘வானொலி அண்ணா’ சி.ஞான பிரகாசம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அவர் பேசியதாவது: இன்று எத்தனை ஊடகங்கள் வந்தாலும் அவை எல்லாவற்றுக்கும் தாய் வானொலிதான். நல்ல செய்திகளை கேட்க இளைய தலைமுறையினர் கண்டிப்பாக நேரம் ஒதுக்க வேண்டும். அரசு நடத்தும் வானொலி நிலைய செய்திகளில் நம்பகத்தன்மை இருக்கும். நாங்கள் தவறு செய்தால் அதை கண்ணியமாக ஒப்புக் கொள்வோம்” என்றார்.
இந்நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்த இதழியல் துறையின் தலைவர் பேராசிரியர் கோபாலன் ரவீந்திரன் கூறும்போது, “சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திலும், கண்ணகி சிலை அருகிலும்தான் சென்னையின் முதல் வானொலிகள் பொது மக்கள் கேட்பதற்காக வைக்கப் பட்டிருந்தன. அதன் பிறகு நரிக்குறவர்கள் வானொலிப் பெட்டிகளை தங்கள் உடையுடன் அணிந்து கொண்டு வானொலி கேட்பதை பிரபலப்படுத்தினர். காலப்போக்கில் வானொலியை மறந்து விட்டோம். அதை மீண்டும் உயிர்ப்பிக்கும் முயற்சி அனைத்து தரப்பிலும் தேவை,” என்றார்.
தமிழ் ஒலி வானொலி மன்றத்தை சேர்ந்த எஸ்.உமாகாந்தன், வானொலி நேயர் வட்டங்களை சேர்ந்த கு.மா.பா.கபிலன், மயிலை பட்டாபி உள்ளிட்டோர் இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
சென்னைப் பல்கலைக்கழக மாணவர்கள் இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக் கழகத்தோடு இணைந்து இணையதள வானொலி நிலையத்தை சோதனை முறையில் நடத்தி வருகின்றனர்.
நன்றி தி இந்து 

Monday, February 23, 2015

மறந்து போன வானொலி கலாச்சாரம்

நன்றி தினகரன்

சமூக வானொலிகள் ஆற்றும் பணிகள்

நாட்டில் வேறு எங்கும் இல்லாத மிகவும் "மக்கள் சக்தி" வாய்ந்த ஒரு பண்பலை சமூக வானொலி ஒடிஸ்சாவில் இயங்கி வருகிறது. 'ரேடியோ நமஸ்கார்' என்ற இந்த வானொலி 50 வாட் மின் அலை செலுத்தி (Transmitter) மூலம் 20 கி. மீட்டர் சுற்றளவுக்கு ஒலிபரப்பி வருகிறது.
சமூக வானொலிகள் ஆற்றிய சில சமூகப் பணிகளை இங்கே பார்ப்போம்.
Case No.1
2011 ஆம் ஆண்டு இந்த ரேடியோ நமஸ்கார் அரசின் "குழந்தை வளர்ச்சித் திட்டம்" பற்றி ஒலிபரப்பி வந்தது. இதன் மூலம் பலர் அத்திட்டத்தில் சேர்ந்தனர்.
ஆனால் விநியோகிக்கப்பட்ட தானியங்கள் வண்டரித்து பழுதடைந்தவையாக இருந்தன. தாய்மார்கள் இந்த தானியங்களை எடுத்துக்கொண்டு வானொலி நிலையத்துக்கு வந்தனர். அவர்களது முறையீட்டை வானொலி நிலையம் தொடர்ந்து ஒலிபரப்பியது.
விசாரணைகள் நடைபெற்று 2000 கோடி ரூபா ஊழல் கண்டு பிடிக்கப்பட்டது. உணவுப் பொருள் விநியோக முறையும் மாற்றப்பட்டது.

Case No.2
ஹரிஷ் கோத்தாரி என்பவர் உத்தராகண்ட் மாநிலம் கார்வால் மாவட்டம் ஹதம் மல்லா கிராமத்தைச் சேர்ந்த 42 வயதான மின்சார சபை ஊழியர்.
ஒரு சமயம் இவர் மின் கம்பத்திலிர்ந்து தவறி விழுந்தார். அதனால் அவரது முதுகெலும்பு உடைந்து 3 வருடங்கள் மயக்க (கோமா) நிலையிலிருந்தார். பின்னர் பிழைத்தெழுந்த அவரால் நடக்க முடியவில்லை. எழுதவும் முடியவில்லை. ஆனால் பேச முடிந்தது. இவர் படுக்கையில் இருந்தபடியே "ஹென்வல்வாணி" பண்பலை சமூக வானொலியை கேட்டு வந்ததோடு நிலையத்தோடு தொடர்பும் கொண்டார். இவரது நிலையை அறியாத வானொலி நிலையத்தினர் அவரை நிலையத்துக்கு அழைத்தனர். அவருக்கு வானொலி நிலையம் செல்ல வாய்ப்பு கிடைத்தது.
இப்போது அவர் அந்த வானொலியின் பிரபலமான சீதி பாட் (Seedhi Bhat) என்ற நிகழ்ச்சியை அவர் தயாரித்து அளிப்பதோடு, வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கு பற்றி வருகிறார்.

Case No.3
இராஜஸ்தான் மாநிலத்தில் தொழிலாளர்களுக்கு ஒரு அடையாள அட்டை வழங்கப்படுகிறது.
அஜ்மீரிலுள்ள பெயார்ஃபுட் கல்லூரியில் (Barefoot College) உள்ள சமூக வானொலி பல தடவைகள் இந்த அடையாள அட்டை பற்றி தனது ஒலிபரப்பில் எடுத்துக் கூறியது. இதனைக் கேட்ட நூற்றுக் கணக்கான தொழிலாளர்கள் அந்த சமூக வானொலிக்கு வந்தனர். வானொலி நிலையத்தில் இருந்தவர்கள் அவர்களுக்கு அவர்களது விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப உதவி செய்தனர்.
இந்த அட்டையை வைத்திருப்பவர்களுக்கு நலத் திட்டங்கள் மூலம் பல நன்மைகள் கிடைக்க வாய்ப்புண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
(http://bit.ly/18fndH9)

அன்புடன்
S S உமாகாந்தன்

Sunday, February 22, 2015

பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரை

மனதின் குரல்: இன்று இரவு பிரதமர் நரேந்திர மோடி வானொலியில் உரை


பிரதமர் நரேந்திர மோடி இன்று  ஞாயிற்றுக்கிழமை இரவு 8 மணிக்கு மனதின் குரல் என்ற தலைப்பில் நாட்டு மக்களுக்கு அகில இந்திய வானொலி மூலம் ஐந்தாவது முறையாக உரையாற்ற உள்ளார்.
இதில் தேர்வுகளை சந்திக்கும் மாணவர்களுக்கான கருத்துக்கள் இடம்பெறும். இந்நிகழ்ச்சி நாடெங்கும் உள்ள அகில இந்திய வானொலியின் அனைத்து அலைவரிசைகளிலும் ஒலிபரப்பாகும்.
பிரதமர் உரையின் தமிழாக்கத்தை நாளை 23 -ம் தேதி காலை 9 மணிக்கு சென்னை வானொலி நிலையம் ஒலிபரப்பும். இந்த இரு நிகழ்ச்சிகளையும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் உள்ள அனைத்து வானொலி நிலையங்களும் அஞ்சல் செய்கின்றன.

நன்றி தினமணி

Monday, February 16, 2015

உலக வானொலி தினம்

வாயாடி வானொலி!
சென்னைப் பல்கலைக்கழகம் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை முதலாமாண்டு இரண்டாமாண்டு மாணவ - மாணவிகள் ‘உலக வானொலி  தினத்தை’ முன்னிட்டு பிப்ரவரி  13 ஆம் தேதி அன்று ‘வாயாடி வானொலிக்கு’ என்ற  தலைப்பில் கவிதை கடிதங்கள் எழுதி வளாகம் எங்கும் ஒட்டினர்.

இது தவிர பல்கலைக்கழக வளாகத்தில் இருக்கும் தேநீர் கடையருகே, ‘வானொலி’ பெட்டியை வைத்து, அந்த கடையின் உரிமையாளர் ராஜாவை கொண்டே ரிப்பன் வெட்டி திறக்க வைத்து நாள் முழுக்க ஒலிக்கவிட்டனர். வானொலி பற்றிய ஞாபகங்களையும், கருத்துகளையும் தெரிவிக்க கையேட்டினையும் வைத்திருந்தனர்.

ஆசிரியர்கள், மாணவர்கள் என்று பலபேர் அவரவர் கருத்துகளை கையேட்டில் பதிவு செய்து சென்றனர். பதிவு செய்யப்பட்ட கருத்துக்களில் பலவை மாணவர்களின் இந்த முயற்சிக்கு ஊக்குவிப்பாகவும், வானொலிக்கு வாழ்த்துக்களாகவும் இருந்தன.
இதுமட்டுமல்லாமல், ‘வானொலி மன்றங்கள் அன்றும் இன்றும்’ என்றத் தலைப்பில் கருத்தரங்கமும் நடத்தப்பட்டது. இந்தக் கருத்தரங்கில் துறைத் தலைவர் கோ. இரவீந்திரன், உதவிப் பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளோடு, அகில இந்திய வானொலி மேனாள் நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்.சி. ஞானபிரகாசம் சிறப்புரையாற்றினார். கருத்தரங்கில் தமிழ்ஒலி வானொலி மன்றம் எஸ். உமாகாந்தன், வானொலி நேயர் வட்டம் கு.மா.பா. கபிலன், மயிலை பட்டாபி, வானவில் வானொலி நண்பர்கள் குழு எம். செல்வகுமார், குரலோவியம் புதுக்காவியம் வானொலி மன்றம் மயிலை சிங்கார வேலு சென்னை டிஎக்ஸ் மன்றம் கே.ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.

வானொலி நேயர்கள் எவ்வாறு குழுவாக இணைந்து செயல்பட்டனர், செயல்பட்டு வருகின்றனர். வானொலியில் ஒலிபரப்பாகக்கூடிய நிகழ்ச்சிகளின் நன்மை, வானொலியின் வரலாறுகள் பற்றி கருத்தரங்கில் பேசப்பட்டது.  ‘சர்வதேச வானொலி’ என்ற புத்தகமும் வெளியிடப்பட்டது.
பழைய வானொலிகள், வானொலி சார்ந்த இதழ்கள், நாளிதழ்கள், வானொலியின் நிகழ்ச்சிகளில் நேயர்கள் பரிசாக வாங்கிய பொருட்கள், அயல்நாடுகளில் வானொலியின் நிலைமை குறித்த தகவல்கள் சார்ந்த குறிப்புகள் மாணவ -மாணவிகளின் பார்வைக்காக வைக்கப்பட்டிருந்தது.

“இன்று தகவல் தொழில்நுட்பங்கள் வளர்ந்த கொண்டே போனாலும், இதில் வானொலியின் பங்கு யாராலும் மறைக்கப்பட முடியாத, தவிர்க்க முடியாத ஒன்றாகும். ஒரு நாள் மட்டும், பொதுவெளியில் வைத்த வானொலியை எல்லா நாளும், எல்லா இடங்களிலும் வைத்து பொது மக்கள் தகவல்களை பெற வேண்டுமென்பதே, இந்த ‘உலக வானொலி தினம்’ கொண்டாட்டத்தின் நோக்கமே” என்பது ஊடக மாணவ- மாணவிகளின் உற்சாக கருத்தாக இருந்தது.

-கு.முத்துராஜா
 (மாணவர் பத்திரிகையாளர்)
நன்றி http://news.vikatan.com/article.php?aid=38586#rss

Monday, February 09, 2015

CTN தொலைக்காட்சியில் உலக வானொலி தினம்

CTN தொலைக்காட்சியில் உலக வானொலி தினத்திற்கு ஒளிபரப்பிய சிறப்புப் பேட்டியை காண....
Part 1
https://www.youtube.com/watch?v=HA6PvxdRyv8
Part 2
https://www.youtube.com/watch?v=xq3POxDmvsc