மகாராஷ்டிரா மாநிலம், நாசிக் சிறையில் கைதிகளுக்காக கைதிகளே நடத்தும் "சுதார்வாணி' என்ற வானொலி நிலையம் வெள்ளிக்கிழமை தொடங்கப்பட்டது.
இந்த நிலையத்தை மகாராஷ்டிர உள்துறை இணையமைச்சர் ராம் ஷிண்டே தொடங்கிவைத்துப்பேசியதாவது:
கைதிகள் இந்த வானொலியில் வரும் நிகழ்ச்சிகளைக் கேட்பதன் மூலம் நல்ல விஷயங்களைக் கற்றுக்கொண்டு, சிறையிலிருந்து விடுதலையாகும்போது நல்ல குடிமகன்களாக மாறமுடியும் என்றார்.
இந்த வானொலியில் தினசரி காலை 10.30 மணியிலிருந்து மதியம் 1.30 மணி வரை கவிதைகள், பாடல்கள், பலகுரல் திறன், பஜனைப் பாடல்கள் போன்ற நிகழ்ச்சிகள், கைதிகள் பங்குபெற்று கைதிகளாலேயே தயாரித்து வழங்கப்படும். மேலும் அந்தந்தத் துறை நிபுணர்களால் சட்டம், சுகாதாரம் தொடர்பான நிகழ்ச்சிகளும் ஒலிபரப்பப்படும் என்று சிறை கண்காணிப்பாளர் ஜே.எஸ். நாயக் கூறினார்.
Source: http://www.dinamani.com/ First Published : 31 January 2015
No comments:
Post a Comment