ஹாம் வானொலி எனப்படும் அமெச்சூர் வானொலிப்
பற்றி இன்றைய இளைஞர்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வாய்ப்பிள்ளை. சொல்வதற்கும் சொற்பமானவர்களே
உள்ளனர். ஏன் இது பற்றி இன்றைய இளைஞர்களுக்கு சொல்ல வேண்டும்? இன்றைய இளைஞர்களுக்கு
சமூக ஊடகங்கள் ஒரு பொழுதுபோக்கு அம்சங்களாக திகழ்கின்றன. ஹாம் வானொலியும ஒரு விதத்தில்
பொழுபோக்கு அம்சமாக இருந்தாலும், இதன் பயன் வேறுபட்டது.
மிக முக்கியமாக ஹாம் வானொலியின் பயன்
இயற்கை சீற்றங்களின் போது தான். அனைத்து தொலைத்தொடர்பு சாதனங்களும் செயல் இழந்துவிட்ட
சூழ்நிலைகளில் இந்த ஹாம் வானொலிகள் தான் பெரிதும் பயன்படுகின்றன. ஆபத்துகால மேலாண்மையின்
அனைத்து நாடுகளிலும் இதன் பங்கு பெரியது.
இன்றைய மின் அஞ்சல் மற்றும் முகநூல்
காலகட்டத்திற்கு முன் நாம் அனைவரும் வானொலியையே ஹாம் வானொலியையே சார்ந்து இருந்தோம்.
அதற்கு காரணம் ஒரு பைசா செலவு இல்லாமல் உலகம் முழுவதும் ஹாம் வானொலி ஊடாக பேசிக்கொள்ளலாம்.
அதுவும் ஆபத்து காலகட்டத்திலும், இயற்கை சீற்றங்களின் போதும் இதன் பயன் அளவிடமுடியாதது.
இன்றும் ஹாம் வானொலியின் பயன்பாடு தவிர்க்க
முடியாததாகவே இருக்கிறது. ஆனால் இன்றைய ஹாம் வானொலிகள் படங்களையும் இணையத்தினையும்
பயன்படுத்த ஏதுவாக அமைந்துள்ளது. இது பெரும்பான்மையோருக்கு தெரிய வாய்ப்பில்லை. இணையத்தினை
ஹாம் வானொலியோடு தொடர்புபடுத்தினால் செலவு எதுவும் இல்லாமல் பயன்படுத்த முடியும். அது
எப்படி என்பதை தொடர்ந்து இந்தத் தொடரில் காணலாம்.
இந்தத் தொடரில் ஹாம் வானொலி என்றால்
என்ன? அது எவ்வாறு செயல்படுகிறது? உங்களுக்கான குழுவை எப்படி இதன் ஊடாக கண்டுபிடிப்பது.
ஹாம் வானொலியில் எத்தனை வகைகள் உள்ளன. ஹாம் வானொலி உரிமத்தினை இந்தியாவில் பெற என்ன
செய்ய வேண்டும். எப்படி எளிதாக ஹாம் தேர்வில் தேர்ச்சி பெறலாம்? உங்களுக்கான அடையாள
குறியீட்டினை (Call Sign) எப்படி எளிதாகத் தேர்வு செய்வது போன்றவற்றை பார்க்கலாம்.
ஹாம் வானொலிகளை பயன்படுத்துவதற்கு முன்
அது எந்த வகையான வானொலி அலைவரிசைகளில் கேட்கலாம். அதற்கான வானொலிப் பெட்டிகள் எவை?
SSB, FM, HF, VHF மற்றும் UHF அலைரிசைகள் பற்றியும் விரிவாக அறிந்துகொள்ள இந்தத் தொடர்
பயன்படும். பெரும்பான்மையோர் இது என்ன புதுக் கதை எனக் குழம்ப அவசியம் இல்லை. இவை பற்றி
தெளிவாகவும் விரிவாகவும் பார்க்கவுள்ளோம்.
மேலும் உங்களுக்கான வானொலி நிலையத்தினை
உங்கள் இல்லத்திலேயே குறைந்த செலவில் எப்படி அமைத்துக்கொள்வது? அந்த வானொலியில் எவற்றையெல்லாம்
பேசலாம்? உலகம் முழுவதும் உங்கள் வானொலியை ஒலிக்கச் செய்ய எந்த வகையான ஆண்டனாக்களைப்
பயன்படுத்தி ஒலிபரப்பலாம்? போன்றவையும் மிகப் பயனுள்ளதாக இருக்கும்.
ஹாம் வானொலியைப் பயன்படுத்துவது ஒரு
கலை. எப்படி சர்வதேச ஹாம் வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொள்வது? உள்நாட்டில் உள்ள
நிலையங்களை எப்படி அனுகுவது? சர்தேவ போட்டிகளில் எப்படி கலந்துகொள்வது போன்ற விபரங்களையும்
காணலாம்.
ஹாம் வானொலி நிலையம் உங்களுடையது எனில்
நீ்ங்கள் தான் அதன் இயக்குனரும் ஆவீர்கள். அப்படியான பணியில் உள்ள நீங்கள், உங்களுக்கான
ஹாம் வானொலிப் பெட்டியை எப்படித் தேர்ந்தெடுப்பீர்கள்? உங்களுக்கான நிலையத்தினை எப்படி
வடிவமைப்பீர்கள்? அந்த வானொலி நிலையத்தின் துணை கொண்டு எப்படியெல்லாம் இந்த சமுதாயத்திற்கு
உதவலாம்? என்பனப் போன்றவற்றையும் இந்தத் தொடர் உங்களுக்கு தெளிவாக்கும்.
மிக முக்கியமாக இந்தத் தொடரை ஐந்து
பாகங்களாக பிரித்து வழங்கியுள்ளோம். முதல் பாகத்தில் ஹாம் வானொலியின் அறிமுகம், இரண்டாவதாக
ஹாம் வானொலி உரிமத்தினை பெருவதற்கு செய்ய வேண்டியவை, மூன்றாவதாக எப்படி ஹாம் வானொலி
துணைகொண்டு உலகம் முழுவதும் தொடர்பு கொள்வது, நான்காவதாக உங்களுடைய நிலையத்தினை எளிதாக
அமைக்கும் முறை, ஐந்தாவதாக தொடக்க நிலையினர்க்கான அடிப்படைத் தகவல்களை காணலாம்.
- முனைவர் தங்க.ஜெய்சக்திவேல் (VU3UOM)
No comments:
Post a Comment