ஹாம் ப்ரோசைன்ஸ்
மோர்ஸ்
குறியீட்டில் ஒலிபரப்பும் பொழுது, கவனமாக கேட்டல் வேண்டும். எந்த அளவிற்கு நம் சிந்தனையை
ஒருங்கிணைத்து கேட்கிறோமோ, அந்த அளவிற்கு நாம் பதிலினையும் உடனடியாக கொடுக்க முடியும்.
மோர்ஸ் குறியீட்டில் ஒரு சில புதிய எழுத்துக்களை நீங்கள் கேட்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக
மோர்ஸ் குறியீட்டில் தொடங்கும் போதும், முடிக்கும் போதும் சொல்லுகின்ற வார்த்தை. இப்படியான
சுருக்க வார்த்தைகளை நாம் ‘ப்ரோசைன்ஸ்’ என்கிறோம். Procedural Signs என்பதன் சுருக்கமே
இந்த ‘ப்ரோசைன்ஸ்’.
நம்
குரலின் ஊடாக தொடர்புகொள்ளும் பொழுது, நாம் நம் உரையாடலை முடிக்கும் பொழுது ‘ஓவர்’
என்போம். அதனையோ ப்ரோசைனில் சொல்லும் பொழுது ‘கே’ என்ற வார்த்தைக்கான மோர்ஸ் குறியீட்டினைப்
பயன்படுத்துவோம். ஒரு சில ப்ரோசைன்ஸ் இரண்டு வார்த்தைகளைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக
பி.கே எனும் எழுத்து. இதற்கு அர்த்தம், ‘பிரேக்’ என்பதாகும்.
ஒரு
சில சமயங்களில் இரண்டு, இரண்டு எழுத்துக்களை சேர்த்து அனுப்புவதும் உண்டு. உதாரணமாக
‘எஸ்.கே’ மற்றும் ‘கே.என்’. இங்கு ‘எஸ். கே’
எனில், “end of contact” என்று அர்த்தம், ‘கே.என்’ எனில், “only the station I am
in contact with start transmitting” என்று அர்த்தம். இது போன்று இன்னும் ஏராளமான ப்ரோசைன்ஸ்
எழுத்துக்கள் உள்ளன. அவற்றை விரிவாக இந்த பகுதியில்
நாம் காணலாம்.
மோர்ஸ்
குறியீட்டில் ஒலிபரப்பும் பொழுதும், ஒலிபரப்பினை நிறைவு செய்யும் பொழுதும், நாம்
‘73’ என்ற எண்ணைப் பயன்படுத்துகிறோம். இதற்கு ‘best regards’ என்று பொருள். CUL என்ற
மூன்று எழுத்து வார்த்தைக்கு see you
later என்று பொருள். ப்ரோசைனில் சரியான எழுத்துக்களை பயன்படுத்த வேண்டியது மிகவும்
முக்கியம். குறிப்பாக ‘எஸ்.கே’ எனில் “உங்களுடனான இந்த ஒலிபரப்பினை மட்டும் இத்துடன்
நிறைவு செய்கிறேன்” என்று பொருள். ஆனால் அதுவே ‘சி.எல்’ என்று நீங்கள் ஒலிபரப்பும்
பட்சத்தில் அதற்கு “ஹாம் வானொலி பெட்டியை ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டு செல்கிறேன்”
என்று அர்த்தம்.
நகைச்சுவையாக
ஒரு சில சமயங்களில் இந்த ஹாம் குறியீடுகள் பயன்படுத்தப்படுவதும் உண்டு. உதாரணமாக
shave and haircut என்பதற்கு ‘டிட்-டிடிடிட்-டிட்’ என்றும், அதற்கு பதிலாக ‘டிட்டிட்’
என்று அனுப்புவதும் உண்டு. மேலும், நண்பர்களோடு பேசிக் கொண்டு இருக்கும் பொழுது, பேச்சினை
முடிக்கும் முன்னர், “டிட்லி பம்ப்-டி-பம்ப்” என்று நகைச்சுவையாக சொல்வதுண்டு. இதற்கு ‘எஸ்.கே’ என்பது பொருள். அதாவது “எனது பேச்சை
இத்துடன் முடித்துக் கொண்டு கிளம்புகிறேன்” என்று பொருள்.
ப்ரோசைன்ஸ்
AA - அனைத்துக்கும் பிறகு (All after)
- வரி முடிவு (End Of Line)
AB – அனைத்திற்கும் முன் (All before)
ABT – பற்றி (About)
ADEE – முகவரியாளர் (Addressee)
ADR – முகவரி (Address)
ADS – முகவரி (Address)
AGN – மீண்டும் (Again)
AM – பண்பேற்ற அலைவீச்சு (Amplitude Modulation)
ANI – ஏதேனும் (Any)
ANS – பதில் (Answer)
ANT – உணர்கொம்பு (Antenna)
- செய்தியின் முடிவு (End of message)
- நிற்க, காத்திரு (Stand by; wait)
- மின் அஞ்சல் முகவரியில் பயன்படுத்தப்படும்
ஒரு குறியீடு (used for the @ sign for E-Mail Addresses New proposal is AC run
together)
BCI – ஒலிபரப்பு குறிக்கீடு (Broadcast
Interference)
BCL – ஒலிபரப்பினைக் கேட்பவர் (Broadcast
Listener)
BCNU – உங்களைப் பார்ப்பது (Be seeing you)
BD – மோசமான (Bad)
BK – தடை (Break, Break in)
BN – எல்லாவற்றிற்கும்; இருந்திருக்கும் (All
between; Been)
- முகவரி மற்றும் உரையின் இடையே (Separation
(break) between address and text) உரை மற்றும் கையொப்பத்திற்கு இடையில் (between
text and signature)
BTH - இருவரும் (Both)
BTR – சிறந்த (Better)
BTW – வழி மூலம் (By The Way)
BUG – அரை தானியங்கி சாவி (Semi-Automatic key)
BURO – பணியகம் (Bureau)
B4 – முன் (Before)
1 comment:
வணக்கம்
உங்களை தொலைபேசியிலோ மின்னஞ்சலிலோ தொடர்பு கொள்ள விரும்புகிறேன். லண்டன் தொலைக் காட்சியில் பணியோயாற்றும் நான் ஒரு ஒலிபரப்பாளன். இலங்கை வானொலியில் 12 ஆண்டுகாலம் கடனையாற்றியவன். தொடர்பிலக்கம் கிடைக்குமா?
அன்புடன்
இளையதம்பி தயானந்தா
elayathambi@gmail.com
Post a Comment