Saturday, January 26, 2019

உலக வானொலி தினம்

உலக வானொலி தினத்தினைக் கொண்டாட தயாராகுங்கள். வரும் 13 பிப்ரவரி 2019, புதன் கிழமை காலை 11 மணிக்கு!

World Radio Day
13-2-2019, 11 am.
DJC studios 
Dept of Journalism and Communication 
University Of Madras

#WRD #WorldRadioDay #வானொலி


Inline image

Inline image


Wednesday, January 23, 2019

ரேடியோ கார்டனும் இஸ்ரோவும் / Radio Garden was designed by Jonathan Puckey not by ISRO

Radio Garden பற்றி தொடர்ந்து பறப்படும் பொய்ச்செய்தி குறித்து இந்த பதிவு. இது தவறான செய்தி. இஸ்ரோவுக்கும் இந்த புராஜெட்டுக்கும் துளியும் தொடர்பில்லை. எப்படி படித்த நாமும் இதை cross check செய்யாமல், அப்படியே forward செய்கிறோம் என ஆச்சர்யமாக உள்ளது. இது ஒரு ஐரோப்பிய பல்கலைக்கழகங்களின் கூட்டு முயற்சியில் உருவான மகத்தான புராஜெக்ட், குறிப்பாக  Netherlands Institute for Sound and Vision. மேலதிக விபரங்கள் இணையத்திலேயே கிடைக்கிறது. இனி மேல் இது போன்ற பொய் செய்தி வந்தால், அந்த தகவலை அனுப்பியவருக்கே , அதனை திருப்பி அனுப்பி, பொய் செய்தி பரவுவதை தடுக்கவும். துறை சார்ந்த நாமே இது போன்ற தகவல்களை அனுப்பினால், அது இன்னும் வேகமாக பரவும். 
https://www.quora.com/Is-Radio-Garden-connected-to-ISRO's-104-satellites

It's basically an awesome real-time adventure to hear voices and music from around the planet. Radio Garden was designed by Jonathan Puckey in collaboration with the Netherlands Institute for Sound and Vision. You may listen the Jonathan Puckeys Interview in the following link.
https://www.npr.org/2016/12/18/506045527/jonathan-puckey-s-radio-garden-knows-no-borders

Monday, January 21, 2019

வானொலி பிறந்த ஊர் / Birth city of Radio

பிபிசி தமிழோசையின் முன்னால் ஆசிரியர் திரு.மணிவண்ணன் அவர்களின் முக நூலில் இருந்து!
————

வானொலி பிறந்த நகர்... 

வேலை விஷயமாக லண்டன் அருகே இருக்கும் செம்ஸ்ஃபோர்ட் நகருக்கு போக நேர்ந்தது. 

சிறிய நகரம்தான். அதற்கு இருக்கும் ஒரே பெருமை, வானொலியைக் கண்டுபிடித்த மார்க்கோனி , இத்தாலியில் இருந்து இந்த நகருக்கு வந்து வானொலிப்பெட்டி தயாரிக்கும் தொழிற்சாலையை ஆரம்பித்ததுதான். 

சொந்த நாட்டில் தனது கண்டுபிடிப்பை விற்பனைப் பொருளாக்கத் தேவையான நிதி உதவி கிடைக்காததால், இங்கிலாந்துக்கு வந்து நிதி ஆதரவு பெற்று தொழிற்சாலையை செம்ஸ்போர்டில் தொடங்கியிருக்கிறார், 

1899ல் தொடங்கப்பட்ட இந்த தொழிற்சாலைக்கு the Wireless Telegraph & Signal Company என்று முதலில் பெயர். பின்னர் அது மார்க்கோனி கம்பெனி என்றாகியிருக்கிறது.

சில பரீட்சார்த்த ஒலிபரப்புகளுக்குப் பின், முதல் வெற்றிகரமான, பொது வானொலி ஒலிபரப்பு 1920ல் நடந்திருக்கிறது. 

தன்னுடைய கண்டுபிடிப்புக்கு காப்புரிமை பெற்று பிறகு லண்டன் அருகே உள்ள இந்த நகரில் வானொலி பெட்டிகளை தயாரிக்கவும், கம்பியில்லாத் தந்திக் கருவிகளைத் தயாரிக்கவும் தொழிற்சாலையை தொடங்கியிருக்கிறார் மார்க்கோனி. 

இந்த தொழிற்சாலையின் உற்பத்தி உச்சகட்டத்தில் இருந்த போது உள்ளூருக்கு இது ஒரு பெரும் வரப்பிரசாதமாக விளங்கியதாம். சுமார் 4,500 பேருக்கு இத்தொழிற்சாலையால் வேலை வாய்ப்பு கிடைத்ததாகக் கூறப்படுகிறது. 

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் , இந்த தொழிற்சாலை இருந்த இடத்தை அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடமாக மாற்றியிருக்கிறார்கள். 
உள்ளூரில் சில வானொலி மற்றும் வரலாற்று ஆர்வலர்கள் இதைத் தடுத்து, இக்கட்டிடத்தை வானொலி வரலாற்று நினைவுச்சின்னமாகப் பராமரிக்க எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. 

இதை ஒரு வரலாற்று சின்னமாக மாற்ற உள்ளூர் கவுண்ட்டி ( உள்ளாட்சி நிறுவனம், County) பெரிய ஆர்வம் காட்டியதாகத் தெரியவில்லை. ஆனால் வானொலி பிறந்த ஊர் என்று பெருமையாகச் சொல்லிக்கொள்கிறார்கள் ! 

நகரின் மையப்பகுதியில் மார்க்கோனி சிலை ஒன்று அவரது நினைவை பறைசாற்றிக்கொண்டிருக்கிறது. 

குடியிருப்புக் கட்டிடமாக மாற்றப்பட்டாலும், இந்த இடத்தின் வரலாற்று முக்கியத்துவத்தை நினைவு கூரும் வண்ணம், பிரிட்டனில் இது போன்ற கட்டிடங்களில் பதிக்கப்படும் நீலத் தகவல் பலகை ( blue plaque) , இந்தக் கட்டிடத்திலும் வைக்கப்பட்டிருப்பது  சற்று ஆறுதல் தரும் விஷயம். 

மேலும் படிக்க:





Inline image

Inline image

Inline image


வானொலியின் ரொமான்ஸ் / A Radio Romance

In the last day of the Chennai Book Fair, I grab 
"A Radio Romance" by Garrison Keillor for only Rs.50/-. (Check the Amazon prize). It is about the radio story of WLT. Very interesting narration. A Must read book for Dxers. The story is about people associated with a fictional Minneapolis radio station called WLT. The events of the book span from the early years of radio broadcasting until the early years of television. The book reached the top ten of The New York Times Best Seller list in 1991. After read this book, you may also try to start a radio station!

புத்தகக் கண்காட்சியின் கடைசி நாள், "உங்களுக்கு மட்டும் எப்படி சார் இது போன்ற புத்தகங்கள் மாட்டுகிறது?" என்று பலரின் கேள்விகளுக்கு மத்தியில், இன்றும் ஒரு பொக்கிஷம் கிடைத்தது ரூ.50க்கு! Garrison Keillor* எழுதியுள்ள இந்த புத்தகத்தின் பெயர், A Radio Romance. 416 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தினை பென்குயின் பதிப்பகம் வெளியிட்டுள்ளது. வானொலியின் காதலர்களுக்கு உகந்த புத்தகம் இது என்றால், அது மிகையில்லை. 


*Garrison Keillor, author of nearly a dozen books, is founder and host of the acclaimed radio show A Prairie Home Companion and the daily program The Writer's Almanac. He is also a regular contributor to Time magazine.


Inline image


Sunday, January 20, 2019

பிபிசியில் பெண்களின் பங்களிப்பு / Radio Girls

The sub topic of this book is "1926, the BBC. The nation listens". This is a book about women and radio. Yesterday I bought this "Radio Girls" book in the Chennai Book Fair for Rs.50/-. It is written by Sarah-Jane Stratford. A woman finds her voice. London, 1926. Maisie Musgrave is thrilled to land a job at the fledgling British Broadcasting Corporation whose new and electrifying radio network is captivating the nation. The stories is going on that way...

நண்பர்கள் பலரும் முகநூலில் பதிவிடும் புத்தகங்களை பார்த்துவிட்டு எனக்கும் ஒன்று வாங்கிவிடுங்கள் என்று கூறுகின்றனர். ஆனால், அப்படி அவற்றை எளிதாக வாங்கிவிட முடியாது. காரணம் பதிவிடும் அனைத்து புத்தகங்களும் ஒழுங்காக அடுக்கிவைக்கப்பட்ட இடத்தில் இருந்து வாங்குபவை அல்ல. அவை அனைத்துமே பல மணி நேரம் செலவலித்து புத்தக குவியலில் இருந்து எடுப்பவை. அந்த வகையில் கிடைத்த மற்றும் ஒரு புத்தகம் தான் Sarah-Jane Stratford* எழுதிய Radio Girls. 448 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகமும் ரூ.50/-க்கு கிடைத்தது. 1926இல் பிபிசி உலக சேவையில் நடந்த சம்பவங்களை மையமாக வைத்து எழுத்தப்பட்ட இந்த நாவல் ஒரு வரலாற்று பெட்டகம். பிபிசியில் பெண்களின் பங்களிப்பும், மிக முக்கியமான காலகட்டங்களில் அவர்கள் எப்படி செயல்பட்டார்கள் என்பதை விரிவாக எழுதியுள்ளார் சாரா. இது போன்ற புத்தகங்கள் இன்னும் பல உள்ளன. தேடினால் கிடைக்கும், ஆனால் தேடத் தான் காலம் இல்லை.

*Sarah-Jane Stratford grew up in Los Angeles with a deep love of theatre and literature. After earning a bachelor's degree in history at UC Santa Cruz, she then obtained a master's degree in medieval history at the University of York in England.


#RadioGirls #SarahJaneStratford #வானொலி #பிபிசி

Inline image


B 18 Printed Schedule of All India Radio Home Services

Copy of B 18 Printed Schedule of All India Radio Home Services is available in the following link:


Via Jose Jacob, VU2JOS, DX INDIA YG

Saturday, January 19, 2019

வானொலி புத்தகங்களின் வரிசை / Radio

If you have a patience, then you will get what you want. In that way, today I bought this "Radio Head: Up and Down the Dial of British Radio" for Rs.50/- in the Chennai Book Fair. It is written by John Osborne. He has long been a fan of radio - from late night sessions of John Peel to Test Match Special at dawn, he has always enjoyed tuning in to the riches of our best broadcasts. John's daily life is directly affected by his radio habit as like me! 

வானொலி புத்தகங்களின் வரிசையில் ரூ.50/-க்கு கிடைத்த மற்றும் ஒரு புத்தகம் தான் இந்த Radio Head: Up and Down the Dial of British Radio. இந்த புத்தகத்தினை John Osborne அவர்கள் எழுதியுள்ளார். 304 பக்கங்கள் கொண்டு வெளிவந்துள்ள இந்த புத்தகத்தின் அமேசான் விலை ரூ.1300/-.  எந்த வருடமும் இல்லாமல், இந்த வருடம் அதிகமாக வானொலி தொடர்பான புத்தகங்கள் தொடர்ந்து கிடைத்த வண்ணம் உள்ளது. ஒரு வேலை தேடுதலும் ஒரு மிக முக்கிய காரணமாக இருக்கலாம். தேடுதல் மட்டும் இருந்தால் போதும், கிடைக்கவேண்டியது சரியான நேரத்தில் கிடைத்தே தீரும். இன்னும் தேடுவோம்!

* John Osborne graduated from the University of East Anglia in 2004. He has taught English in Austria and Germany, and has had poetry published in the Guardian and the Spectator. Radio Head is his first book.


#RadioHead #JohnOsborne #வானொலி #புத்தகம்

Inline image


Friday, January 18, 2019

பிபிசி தொடர்பான புத்தகங்கள் / BBC related book

One more BBC related book which I bought in the Chennai Book Fair was "Is It Me?". It is written by Terry Wogan. He is one of Britain's best-loved radio and television celebrities - witty, charming and relaxed - he has undoubtedly captured the nation's heart. Here, for the first time ever, Terry tells his life story from his beginnings as a young Limerick boy to his incredible success as an enduring celebrity of shows such as Wogan and The Eurovision Song Contest. Pages 336, published by BBC BOOKS, ISBN-13 978-0563534228

பிபிசி தொடர்பான புத்தகங்கள் சேகரிப்பில் நேற்று சென்னைப் புத்தகக் காட்சியில் கிடைத்த மற்றும் ஒரு முக்கிய புத்தகம் Is it me? , இந்த புத்தகத்தினை Terry Wogan மிகவும் சுவைபட எழுதியுள்ளார். பிபிசி Radio 2-ல் பணியாற்றிய இவருக்கு எட்டு மில்லியன் வானொலி ரசிகர்கள் இன்றும் உண்டு. அதனை மெய்பிக்கும் வகையில் பிரிட்டிஷ் ராணி வழங்கும் மிக உயர்ந்த  Knighthood விருதினைப் பெற்றுள்ளார். பிபிசியே வெளியிட்டுள்ள இந்த புத்தகத்தின் விலை ரூ.75/-.       புத்தகக் காட்சியில் Noble Publication (அரங்க எண் 596)-ல் கிடைத்த இந்த புத்தகத்தின் விலை ரூ.75/- மட்டுமே!

#IsItMe? #BBC #TerryWogan #Radio

Inline image


Thursday, January 17, 2019

வானொலியின் காதலி / Radio: A True Love Story

Today I have a chance to buy the "Radio: A True Love Story" in the Chennai Book Fair for Rs.50/-. It is a sharp and revealing, and at times hilarious memoir of Libby's own experiences woven into the story of radio's birth and development. 

அதிசயங்கள் ஏதேனும் ஒரு முறைதான் நிகழும். நாம் எதை தேடுகிறோமோ அதுவே நம் கண் முன் கிடைத்தால் மகிழ்ச்சிக்கு அளவே இருக்காது. அந்த வகையில் சென்னைப் புத்தகக் காட்சியில் நேற்று கிடைத்த மற்றும் ஒரு முக்கிய புத்தகம் தான் இந்த Radio: A True Love Story. இதை எழுதியவர் Libby Purves. இங்கிலாந்தின் புகழ்பெற்ற பிபிசின் ரேடியோ 4-ன்    ஒலிப்பரப்பாளராக பணியாற்றிவருகிறார். வானொலி காதலியின் கதை இது. தனக்கும் வானொலிக்குமான உறவினை அவ்வளவு சுவாரஷ்யமாக எழுதியுள்ளார் லிபி. கண்காட்சியில் புத்தகத்தின் விலை ரூ.50/- மட்டுமே!

* Libby Purves is a writer and also a broadcaster who has presented the talk programme Midweek on Radio 4 since 1984 and formerly presented Today. She is a main columnist on the Times and in 1999 was named the Granada "What the Papers Say" Columnist of the Year, and awarded a O.B.E for services to journalism. She lives in Suffolk with her husband the broadcaster and writer Paul Heiney.
#Radio #LibbyPurves #Radio4 #BBC

Inline image


Monday, January 14, 2019

இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பார்கள் / A Tamil book on Sri Lankan Broadcasting Corporation

A Tamil book on Sri Lankan Broadcasting Corporation announcers now available in the Chennai Book Fair 


இலங்கை வானொலி பற்றிய புத்தகங்களுக்கு என்றுமே சென்னைப் புத்தகக் கண்காட்சியில் வரவேற்பு அதிகம். இந்த ஆண்டு இரண்டு புத்தகங்கள் இலங்கை வானொலியை மையப்படுத்தி கிடைக்கிறது. அதில் இரண்டு பிரதிகள் மட்டுமே உள்ள "இலங்கை வானொலியின் இனிய ஒலிபரப்பார்கள்" புத்தகம் முக்கியமானது. இதனை திரு. தம்பஐயா தேவதாஸ் எழுதியுள்ளார். இந்த புத்தகம் குமரன் புத்தக அரங்கில்(289) மட்டுமே கிடைக்கிறது. இன்னொரு புத்தகம் "பன்முகப் பார்வையில் இலங்கை வானொலி" புத்தகம். இது பரிசல், ஹனிபீ, காந்தளகம், யாழ் ஆகிய இடங்களில் கிடைக்கிறது. 


#இலங்கை #வானொலி #SLBC #RADIO #SRILANKA

மறைமுகமாக செயல்பட்ட காங்கிரஸ் வானொலி / Untold Story of Broadcasting

One more important book available in the Chennai Book Fair is "'Untold Story of Broadcasting" written by Dr. Gautam Chatterjee is about behind-the-scenes developments during the quit India movement. It gives an authentic account of the secret broadcast which took place during the movement led by shri Ram Manohar Lohia.

இந்த வருடம் சென்னை புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டிய மற்றும் ஒரு முக்கிய புத்தகம் Untold Story of Broadcasting. இந்தியாவில் மறைமுகமாக செயல்பட்ட காங்கிரஸ் வானொலியை பற்றிய விரிவான புத்தகம் இது. சுதந்திர போராட்ட காலத்தில் பிரிட்டிஷ் அரசை எதிர்த்து நடத்தப்பட்டது இந்த வானொலி. இதே போன்று சுபாஷ் சந்திரபோஸ் நடத்திய ஆசாத் ஹிந்த் வானொலியைப் பற்றியும் ஒரு விரிவான புத்தகம் எழுத தகவல்கள் கொட்டிக் கிடக்கிறது. 164 பக்கங்கள் கொண்ட இந்த புத்தகத்தின் விலை ரூ.145. அரங்க எண் 736,737,  Publication Division கடையில் கிடைக்கிறது. அருகில் 726, 727 பரிசல் புத்தக அரங்கில் ஹாம் ரேடியோ புத்தகத்தினையும் பார்க்க ஒரு வாய்ப்பு!

#Broadcasting #Radio #Clandestine #வானொலி #PublicationDivision

Inline image


ரஷ்ய பதிப்பகங்களின் புத்தகங்கள் ரூ.20-க்கு / Rare Tamil Books from Russian Publishers now for Rs.20/-.

Rare Tamil Books from Russian Publishers now available in the Chennai Book Fair for Rs.20/-. Don't missed to grab the Russian Tamil Dictionary!

இந்த வருட சென்னை புத்தக கண்காட்சியின் சிறப்புகளில் ஒன்று, மீண்டும் ரஷ்ய பதிப்பகங்களின் புத்தகங்கள் கிடைக்க தொடங்கியிருப்பது. எந்த புத்தகத்தினை எடுத்தாலும் ரூ.20/- மட்டுமே. அது 100 பக்க புத்தகமானாலும் சரி 800 பக்க புத்தகமானாலும் சரி. கடைசி நாள் எடுத்துக் கொள்ளலாம் என்று இருந்த எனக்கே பல அரிய புத்தகங்கள் கிடைக்காமல் போய்விட்டது. எனவே இன்னும் தாமதிக்காமல் உடனே இயங்குங்கள். இதில் கெட்டி அட்டையில் வெளிவந்துள்ள ரஷ்ய தமிழ் அகராதி ஷ்பெசல்! Don't miss it. கூடவே இதே அரங்கில் உலக வானொலியும் கிடைக்கிறது. அருகில் 32-வது ஹனிபீ அரங்கில் ஹாம் ரேடியோ புத்தகங்களையும் வாங்கி படித்துவிட்டு உங்கள் கருத்துகளை கூற மறவாதீர்கள்! 

#ChennaiBookFair #RussianBooks #Rathuga #AmbetkarFoundation


Inline image

Inline image

Inline image

Picture: Muralidaran 

உள்ளூர் வானொலி உலக வானொலிகளாக / Local Radio, Going Global

One more important book on Radio Journalism written by Guy Starkey. (Rs.2561/- Publisher: Palgrave Macmillan, Book length 194,ISBN-13 978-1137477637)

வானொலி தொடர்பாக வெளிவந்த மற்றும் ஒரு மிக முக்கிய புத்தகம். உள்ளூர் வானொலி எப்படி இன்று உலக வானொலிகளாக மாறி வருகின்றன என்பதை மிக நேர்த்தியாக 2011-லேயே ஆய்வு செய்து வெளியிட்டுள்ளார் Guy Starkey.* இந்த புத்தகத்தினை ஒட்டியும் வெட்டியும் தமிழ் வானொலிகளை மையப்படுத்தியும் ஒரு புத்தகம் எழுதலாம். அவ்வளவு தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. என்ன இந்தியாவில் இதன் விலைதான் கொஞ்சம் அதிகம். (ரூ.2561)

* Guy Starkey is Professor of Radio and Journalism at the University of Sunderland, UK. He is Chair of the Radio Research Section of the European Communications Research and Education Association and has written several books, and textbook and journal chapters on Radio and Journalism.

#HuyStarkey #Radio #Journalism #வானொலி #இதழியல்


Inline image


Wednesday, January 09, 2019

ஹாம் ரேடியோ புத்தகங்கள் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் / Ham Radio Books in the Chennai Book Fair

வானொலி தொடர்பான எமது நூல்கள் இந்த ஆண்டும் நந்தனம் YMCA சென்னைப் புத்தகக் கண்காட்சியில் மேற்கண்ட ஐந்து கடைகளில் கிடைக்கிறது. நண்பர்களுக்கும் தெரியப்படுத்துங்கள்.

Books on Ham Radio written by me is now available in the Chennai Book Fair, YMCA Nandanam.


Inline image


Tuesday, January 08, 2019

தனியார் பண்பலை வானொலியில் செய்தி /

அகில இந்திய வானொலியின் பண்பலை செய்திகளை தனியார் பண்பலை வானொலி நிலையங்கள் எடுத்து ஒலிபரப்ப வகை செய்வதற்கான ஒப்பந்தம் இன்று தில்லியில் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் திரு ராஜ்யவர்தன் சிங் ராத்தோர் முன்னிலையில் கையெழுத்தானது. (Via AIR CHENNAI FB PAGE)

Public broadcaster 

All India Radio

 will begin to share its Hindi and English news broadcasts with private FM radio channels from Tuesday. (TOI)



Inline image


Saturday, January 05, 2019

தீவுகளில் (IOTA) ஹாம் வானொலி ஒலிபரப்பு / Island On The Air

தீவுகளில் (IOTA) ஹாம் வானொலி ஒலிபரப்பு (Island On The Air) வரிசையில் இந்த ஆண்டின் முதல் ஒலிபரப்பு மேற்கு வங்க வானொலி மன்றத்தால் (WBRC) வரும் 10 முதல் 17 ஜனவரி 2019 வரை சிற்றலையில் ஒலிபரப்பு செய்யவுள்ளது. இந்த நிலையத்தின் பெயர் AU2HAM. வண்ண அட்டை அனுசரனை NIAR.


West Bengal Radio Club (Amateur Club) is a non profitable organization founded by Mr. Ambarish Nag Biswas, VU2JFA. The organization was established in year 2010 with club station call sign VU2MQT at Sodepur High School (H.S) , Station Road, Sodepur, Kolkata – 700 110,West Bengal, India. The club conducts regular activities for promotion of Amateur (HAM) Radio communication in the state of West Bengal with true support of Dr. Sudip Chowdhury, Headmaster of Sodepur High School (H.S.) and National Institute of Amateur Radio (NIAR), Hyderabad.


Contact 

WBAR

17, Railway Park, Sodepur, 

North 24 Parganas, Kolkata, West Bengal 700110

M. : +91 - 9432 919 009

Email:vu2mqt@gmail.com

Source: Jose Jacob Inline image


அகில இந்திய வானொலி மூடப்பட்டதா?

தலைப்பிலேயே ஒரு கிலி ஏற்படுத்துவது, இன்றைய ஊடங்களுக்கு ஒரு வகையில் அகோரப்பசியை தீர்ப்பதாக அமைகிறது. ஐந்து மாநிலங்களில் உள்ள அகில இந்திய வானொலியின் பயிற்சி மையமும், யாருமே கேட்காத மூன்று தேசிய ஒலிபரப்பு நிலையங்கள்(1215 kHz New Delhi 20 kW, 1566 kHz Nagpur 1000 kW, 9380 kHz Aligarh  250 kW) மட்டுமே நிறுத்தப்படுகிறது. அதுவும் இரவு 6.50 முதல் காலை 6.10 வரை ஒலிபரப்பு செய்பவை அவை) ஆனால், கடந்த இரண்டு நாட்களாக வரும் செய்திகள் என்னவோ, ஐந்து மாநிலத்தில் உள்ள அகில இந்திய வானொலி நிலையமே மூடப்படுவது போன்ற ஒரு தவறான தகவல் தொடர்ந்து பல்வேறு ஊடங்களால் பகிரப்பட்டு வருகிறது. செய்திக்குறிப்பை சரியாக புரிந்து, சரியான மொழிபெயர்ப்பை செய்தால் மட்டுமே இது போன்ற 'கிலி' செய்திகளை தவிர்க்க முடியும்! ஆனால், நோக்கமே கிலியாக இருந்தால், ஒன்றும் செய்ய முடியாது! 

இணைப்பு:
1.அகில இந்திய வானொலியின் செய்திக்குறிப்பு.
2. தவறான செய்தி வெளியிட்ட ஊடங்கள்
(இன்னும் தொடர்ந்து வெளியிட்டுக் கொண்டு இருக்கின்றன)

5 மாநிலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்! - செலவைக் குறைக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை | All India Radio shuts down in 5 states

5 மாநிலத்தில் ஆல் இந்தியா ரேடியோ மூடல்! - செலவைக் குறைக்க மத்திய அரசு திடீர் நடவடிக்கை | All India Radio shuts down in 5 states

By Sathya Gopalan

இதனால் இந்தியாவில் உள்ள சில வானொலி மையங்களை மூடவிருப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. All India Radio shuts down in 5 states




Inline image

Inline image

Inline image

Inline image


Thursday, January 03, 2019

DRM in BES EXPO 2019

The DRM Consortium will highlight its recent achievements under the overarching theme "DRM Drives Forward" at the international BES (Broadcast Engineering Society –  www.besindia.co.in) conference and exhibition BES EXPO 2019 on terrestrial and satellite broadcasting at Pragati Maidan, New Delhi 110002, India, 17-19 January 2019.  BES EXPO is rated as the biggest broadcast technology show in India with nearly 300 exhibitors from 25 countries and an estimated 3,000 professionals and decision-makers attending. (Via Alokesh Gupta FB)

Inline image