In my recent International Radio tour, I have a chance to visit the Kajang tx site, (KAJ MLA 03N01 101E46) which is located 26 km away from Kuala Lumpur, Malasiya. This site started on 1964. Purpose of this site is broadcast both international and national radio of Radio Television Malasiya (RTM). Right now it is broadcast only the local FM relays. They are using 5965 (100 kw), 6050 (50 kw), 7295 (100 kw), 9835 (100 kw) and 11665 (100 kw). They got permission from ITU to broadcast on 54; 55; 58; 59; 60 CIRAF-Zones. Radio-Television Malaysia got three 100 kilowatt DRM-ready HF transmitters from Continental along with other associated equipment that were installed in Kajang. Earlier it were used 11885 and 6175 kHz for DRM.
வானொலி பயணங்களில் மிக முக்கியமானது, அந்த அந்த வானொலி நிலையங்களின் ஒலிபரப்பி அமைந்துள்ள இடங்களுக்கு செல்வது. சர்வதேச வானொலிகளின் பயண வரிசையில் சீனா, இலங்கை, பிலிப்பைன்ஸ் மற்றும் சிங்கப்பூரை அடுத்து சமீபத்தில் சென்ற மற்றும் ஒரு இடம் மலேசியா. 1980களில் 'வானொலி 6' என்ற பெயரில் தமிழில் ஒலித்த இந்த மலேசிய வானொலி, சிற்றலையிலும் தமிழக நேயர்களை இந்த ஒலிப்ரப்பி தளத்தில் இருந்துதான் வந்தடைந்தது. இப்பொழுது 'மின்னல் எப்.எம்' என்ற பெயரில் பண்பலையில் மட்டுமே ஒலித்து வருகிறது. தலைநகர் மலேசியாவில் இருந்து 26 கி.மீ தொலைவில் உள்ளது இந்த கஜாங் சிற்றலை ஒலிபரப்பி தளம். சமீப காலமாக உள்ளூர் பண்பலை நிகழ்ச்சிகளை மட்டுமே சிற்றலையில் அஞ்சல் செய்கிறது. டி.ஆர்.எம் ஒலிபரப்பியையும் இந்த நிலையம் கொண்டுள்ளது இதன் மற்றும் ஒரு சிறப்பு. (நன்றி: Pon Kogilam)