Sri Lankan Broadcasting Corporation Museum.
வானொலி ஆர்வலர்கள் அருங்காட்சியகங்களை காணத் தவறக்கூடாது. சென்னையில் உள்ள எழும்பூர் அருங்காட்சியத்திலும், பெரியார் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அருங்காட்சியத்திலும் முதல் ஒலிபரப்பி மற்றும் வால்வ் வானொலி பெட்டிகளை காட்சிப்படுத்தியுள்ளனர். அது போல் இலங்கை வானொலி ஒரு அருமையான அருங்காட்சியகத்தினை
தனது கொழும்பு வளாகத்தில் அமைத்துள்ளது. அதில் காணக்கிடைக்காத பல அறிய பொருட்களை காட்சிப்படுத்தியுள்ளனர். இலங்கைக்கு சுற்றுலா செல்பவர்களும், ஊடகப்படிப்பினை படிப்பவர்களும் சென்று பார்க்கவேண்டிய இடங்களில் முதன்மையானது இலங்கை வானொலி.
#இலங்கை #வானொலி #SLBC #MUSEUM
No comments:
Post a Comment