Saturday, January 22, 2022

சீன வானொலியின் புதிய ஒளிபரப்பு


Inline image


அகில இந்திய வானொலி சமீப காலமாக பல ஒலிபரப்புகளை மூடியும், மாற்றம் செய்தும் வருகின்றது. குறிப்பாக முதலில் டெல்லி அகில இந்திய வானொலியில் செயல்பட்ட  செய்திக் குழுவை அந்தந்த மாநிலங்களுக்கு மாற்றம் செய்யதது. அதன் பின் வெளிநாட்டு சேவை நிறுத்தப்பட்டது. தமிழகத்திற்கு என்று இருந்த ஒரே ஒரு சிற்றலை ஒலிபரப்பும் அதன் பின் நிறுத்தப்பட்டது. சமீபத்தில் மத்திய அலைவரிசையிலும் கை வைத்துள்ளார்கள். 


இந்த சூழலில் தான் பல சர்வதேச ஊடங்கள் புதிதாக தனது பணிகளைத் தொடங்கியுள்ளது. குறிப்பாக பிபிசி தமிழ், தந்தி தொலைக்காட்சியில் தினமும் இரவு 7.40க்கு உலக செய்தியறிக்கையை வழங்கி வருகிறது. இது தவிர வார இறுதியில் 'கிளிக்' என்ற அறிவியல் நிகழ்ச்சியையும் ஒளிபரப்பி வருகிறது.


அதேப் போன்று சமீபத்தில் ஜெர்மனியின் பொது சேவை ஒலிபரப்பு நிறுவனமான Deutsch Welle (DW) புதிய தலைமுறையுடன் இணைந்து Eco India என்ற தமிழ் நிகழ்ச்சியை சனிக்கிழமை மாலை வேலையில் ஒளிபரப்பி வருகிறது.


கடந்த வாரம் முதல் நம் அண்டை நாடான சீனாவின் பொது சேவை ஒலிபரப்பு நிறுவனமான China Media Group (CMG), தந்தி தொலைக்காட்சியுடன் இணைந்து தினமும் மாலை 6.40க்கு "சி.எம்.ஜி. செய்திகளை" ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது. மிக நேர்த்தியாக, சுவாரஷ்யமான செய்திகளை திருமலை சோமு தொகுத்து வழங்கிவருகிறார்.


20-1-2022 முதல் இலங்கை வானொலியும் மீண்டும் "கொழும்பு சர்வதேச ஒலிபரப்பினை" மத்தியலை 873 கிலோ ஹெர்ட்சில் காலை 7.00 முதல் 8.00 மணி வரை ஒலிபரப்பத் தொடங்கியுள்ளது.


அனைத்துல நாடுகள் தங்களின் ஒலி, ஒளிபரப்புகளை மீட்டுருவாக்கம் செய்துவரும் இந்த சுழலில் தான், நமது அகில இந்திய வானொலி பல்வேறு ஒலிபரப்புகளையும், தூர்தர்ஷனின்  LPT மற்றும் HPT ஒளிபரப்பிகளையும் நிறுத்திவருகிறது. சமூக ஊடங்களை மட்டுமே நம்பி களத்தில் இறங்கியுள்ளது பெரிதும் ஆபத்தான ஒன்று. ஒலி, ஒளிபரப்புத் துறையில் முன் அனுபவம் இல்லாதவர்கள் தலைமைப் பொறுப்புக்கு வருவதே இவற்றிற்கெல்லாம் ஒரு காரணமாக நோக்கர்களால்  கருதப்படுகிறது.



2 comments:

Unknown said...

நன்றி வணக்கம்

GNUAnwar said...

நன்று