Wednesday, December 09, 2015

ஏன் ஊடகங்கள் வெள்ளத்தில் அமைதியானது? கேள்விக்கான பதில் இதோ

வயதான தாயை நினைத்து ஏங்கும் மகள். கர்ப்பமாக உள்ள மனைவியை நினைத்து வருத்தப்படும் கணவன். வேலைக்கு சென்ற தாயை தொடர்பு கொள்ள முடியாமல் கையறு நிலையில் உள்ள குழந்தைகள் என எல்லோரும் அகதிகளாக தொடர்பற்று தனித்துவிடப்பட்டோம். இப்போது சரி. தொலைபேசி, செல்பேசி, இணையம் எல்லாம் நமக்கு கை கொடுக்கிறது. ஆனால் வெள்ளம் ஏற்பட்ட முதல் ஐந்து நாட்கள் நம் கையின் ஆறாவது விரலாக இருந்த செல்பேசி அதற்குள்ளே இருந்த இணையம், டார்ச் லைட், எஃப்.எம், என எல்லாவுமாய் இருந்தது நம்மை கைவிட்டது. அப்போது மட்டும் செய்திகளை தெரிந்துக் கொள்ள நமது தாத்தா, பாட்டி பயன்படுத்திய வானொலி பெட்டி, தொடர்பு கொள்ள ஹாம் ரேடியோ இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்?
“சாதாரண மக்கள் மட்டும் இல்லாமல் ஊடகத்தில் பணிபுரிபவர்களிடமே ஹாம் ரேடியோ இல்லை. ஹாம் ரேடியோ இருந்திருந்தால் மக்களுக்கு சொல்கிறோமோ இல்லையோ பிரச்சனைகள அரசுக்காவது உடனடியாக தெரிவித்திருக்கலாம். அரசே இந்த வெள்ளத்தில் செயலற்று போனதற்கு காரணம் தொடர்புகள் அறுந்து போனதுதான்.”, என சென்னை பல்கலைக்கழக இதழியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியரும் வானொலி மற்றும் ஹாம் ரேடியோ ஆராய்ச்சியாளருமான டாக்டர்.தங்க ஜெய்சக்திவேல் கூறுகிறார்.
பேராசிரியர். தங்க ஜெய்சக்திவேல்
பேராசிரியர். தங்க ஜெய்சக்திவேல்
ஏன் முக்கியம் ஹாம் ரேடியோ?
மொபைல் கம்யூனிகேஷனை எப்பவும் நம்ப முடியாது. மின்சார பிரச்சனைகள் இருக்கும். சென்னையில் இருக்கின்ற 4,500 டவர்களில் 4,000 டவர்கள் நீரில் மூழ்கிவிட்டன. அப்புறம் எப்படி செல்லில் தொடர்பு கொண்டு பேச முடியும்? இதை எல்லோரும் பயன்படுத்த முடியும். அவசரமான காலங்களில் முக்கியமாக சுனாமி ஏற்பட்ட நேரத்தில் அகில இந்திய வானொலிக்கு தொடர்பு கொள்ள உதவியதே ஹாம் ரேடியோக்கள் தான்.
“சென்னையில் 50 பேர் ஹாம் ரேடியோ பயன்படுத்துகிறார்கள். நாங்கள் அவர்களையெல்லாம் ஒன்றிணைத்து எங்கெல்லாம் தொடர்பில்லாமல் உதவி தேவைப்பட்டதோ அங்கெல்லாம் அவர்கள் நன்றாக செயல்பட்டார்கள்”, என்று இந்த வெள்ளத்தில் ஹாம் ரேடியோ எவ்வளவு அவசியம் என்பதை உணர்த்துகிறார், பேராசிரியர்.
வானொலி கேள்விபட்டிருக்கிறோம். அது என்ன ஹாம் வானொலி? போலீஸ்லாம் கையில வச்சிக்கிட்டு “ஓவர், ஓவர்”னு சொல்லுவாங்களே அதுவா? அது வாக்கி டாக்கியாச்சே? என்கிறீர்களா! இல்லை ஹாம் வானொலி என்பது வேறு. பூவரசம் பீப்பி படத்தை பார்த்திருக்கிறீர்களா? அதில் அந்த நான்கு குழந்தைகளும் ஒரு பெரிய விசயத்தை ஹாம் ரேடியோ மூலம்தான் சாதிப்பார்கள்.
வாக்கி டாக்கி என்பது 500 மீட்டர் முதல் 1 கி.மீ வரை உள்ள சுற்றளவில் தனது சக்தியை பொருத்து மற்றவர்களை தொடர்பு கொள்ள உதவும் சாதனம். ஆனால், ஹாம் ரேடியோ என்பது 10 கி.மீ வரை செயல்படக்கூடியது. போலீசார் வைத்திருப்பதன் பெயர் வாக்கி டாக்கி அல்ல. வயர்லஸ் வானொலி. இந்த வயர்லஸ் வானொலி போன்றதுதான் ஹாம் ரேடியோ.
28TY_AMATEUR_RADIO_1501389f
ஹாம் ரேடியோவை வாங்க உடனேயே புறப்படுறீங்களா? கொஞ்சம் இருங்கள். அதை எப்படி வாங்குவது என்பதையும் பேரா.ஜெய்சக்திவேல் கூறுகிறார்.
“எல்லோரும் ஹாம் ரேடியோவை வாங்கி உபயோகிக்கலாம். ஆனால், அதற்கு உரிமம் வாங்க வேண்டும். ஹாம் ரேடியோ மற்றும் அதற்கான லைசென்ஸையும் பெறுவதற்கு மத்திய அரசின் தகவல் தொடர்பு துறை நடத்தும் தேர்வில் கலந்து கொண்டு தேர்வாக வேண்டும். இதற்கான பயிற்சி மையங்கள் சென்னையில் இலவசமாக நடத்தப்படுகின்றன. ஆனால், ஆட்கள் குறைவாகத்தான் வருகிறார்கள். இப்பொழுது கூட கோபாலபுரம், பள்ளிக்கரணை ஆகிய இடங்களில் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. முடிந்த அளவுக்கு இதனை ஊடகவியலாளர்களும் அது சார்ந்து படிக்கும் தொடர்பியல் மாணவர்களும் வைத்துக்கொள்ளுதல் அவசியம்.”
வானொலி இந்த வெள்ளக்காலத்தில் எப்படி செயல்பட்டது?
நம்முடைய அகில இந்திய வானொலி வெள்ள காலத்தில் நன்றாக செயல்பட்டது. தங்களது உடைமைகளை இழந்தவர்கள், அதை கொடுக்க வேண்டும் என நினைப்பவர்களை ஒன்றைணைத்து ஒரு பாலமாக வானொலி செயல்பட்டது. இப்பொழுது நீங்கள் வானொலி மார்க்கெட்டுக்கு சென்று வானொலி வாங்க வேண்டும் என்றால் கூட வானொலி பெட்டியே இல்லை. ஏனென்றால், நாம்தான் வானொலி பெட்டியே வாங்காமல் உற்பத்தியாளர்களை ஓட ஓட விரட்டி விட்டோமே.
images
இனி என்ன செய்வது? உடனடியாக ஹாம் ரேடியோ பெறுவதற்கான முயற்சிகளை எடுங்கள். தாத்தா, பாட்டி உபயோகித்த வானொலியை தூசு தட்டுங்கள்.

Monday, December 07, 2015

வெள்ள நிவாரணத்தில் வானொலி அறிவிப்பாளர்கள்

ஆர்.ஜே ரஞ்சித்  :-
 தனியார் வானொலி ஒன்றில் வேலை செய்யும் ரஞ்சித் உணவு மற்றும் மருந்துகள் விநியோகத்தில் முக்கியத்துவம் கொடுக்கிறார். கொசுக்கடி, சளி, காய்ச்சல் எனப் பலரும் அவதிப் படுகின்றனர், இவர்களுக்கு தொடர்ந்து இடைவிடாது காலை முதல் இரவு வரை ஒவ்வொரு பகுதியையும் தேர்ந்தெடுத்து  அங்குள்ள மக்களுக்கு மருந்துகளை வழங்கி வருகின்றனது இவரது குழு.

r%20j%20ranjith%20.jpgதண்ணீர் பாட்டில்கள், நாப்கின் போன்றவற்றையும் இவரது குழு  விநியோகிக்கிறார்கள்.  ஸ்டேட்டஸ் தட்டுவதை விட இவர் வீடியோ பதிவாக போடுவதால், பலருக்கு தகவல் சென்றடைகிறது. தன்னார்வலர்கள் எண்ணிக்கை குறைவாக இருக்கிறது, நிறைய தன்னார்வலர்கள் வந்தால் நிறைய பேருக்கு உதவமுடியும் என்கிறார் ரஞ்சித்.
https://web.facebook.com/RJ.RANJITH.0303/?fref=photo


ஆர்.ஜே பாலாஜி  :-
ஆர்.ஜே பாலாஜி பற்றிய அறிமுகம் தேவையில்லை. தான் வேலை பார்க்கும் எஃப்.எம் மூலமாக பல  தன்னார்வாலர்களை ஒருங்கிணைத்தார் பாலாஜி.

மேலும் டுவிட்டர், ஃபேஸ்புக் மூலமாகவும்  தொடர்ந்து யார், எங்கே வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள், எங்கே உணவு தேவைப்படுகிறது, யார் உணவு வழங்க தயாராக இருக்கிறார்கள் போன்ற விவரங்களை அப்டேட் செய்து கொண்டே இருந்தார்.

மேலும் மக்களுக்கு அவசியம் தேவைப்படக்கூடிய போர்வை, தண்ணீர் பாட்டில்கள் போன்ற அத்தியாவசிய பொருட்களை பல  இளைஞர்களோடு சேர்ந்து இணைந்து வாங்கி பல்வேறு பகுதியில் இருக்கும் மக்களுக்கு விநியோகம் செய்தார். ஆர். ஜே.பாலாஜியின் முயற்சி காரணமாக ட்விட்டரில் சென்னையில் மழை என்பது தேசிய அளவில் டிரென்ட் ஆனது. நடிகர் சித்தார்த், விஷ்ணு விஷால் ஆகியோரோடும் இணைந்து  தொடர்ந்து இடைவெளியின்றி மீட்பு பணியில் ஈடுபட்டார் ஆர்.ஜே.பாலாஜி.   

நன்றி: அபராஜிதன்

வானொலியின் அருமை

வானொலியின் அருமை, பெருமை பற்றி சென்னைவாசிகள் மறுபடியும் உணர ஒரு வாய்ப்பு அண்மையில் கிடைத்தது.

நகரின் பல பகுதிகளில் 3 நாட்களுக்கு மேல் மின்சாரம் இல்லாமலிருந்தது. அந்தப் பகுதிகளில் வாழும் மக்கள் தங்கள் பழைய வானொலிப் பெட்டிகளைத் தேடியெடுத்து ஒலிபரப்புகளைக் கேட்டனர்.
வானொலி நிலையங்களும் நிலைமைக்கு ஏற்ப செயற்பட்டன. அவதிக்குள்ளானவர்கள் வானொலி நிலையங்களை அழைத்து தங்கள் நிலை பற்றிக் கூறினார்கள். உணவு, குடிநீர், மீட்புப்படை உதவிகளைக் கோரினார்கள்.

பல பண்பலை வானொலி நிலையங்கள் தங்கள் வழமையான நிகழ்ச்சிகளை நிறுத்திவிட்டு, 24 மணி நேரமும் வெள்ள நிலைமை பற்றி தகவல்களை ஒலிபரப்பின.

ஆலந்தூரைச் சேர்ந்த தேவி என்ற பெண்மணி தான் வழமையாக சமையல் செய்யும்போது வானொலியில் பாடல்கள் கேட்பதாகவும் ஆனால் தனது ஃப்ரிட்ஜ்க்கு மேல் இருக்கும் அந்த சிறிய பெட்டி எவ்வளவு அற்புதமானது என்பதை தான் முன்னர் உணரவில்லை என்றும் கூறினார்.

நேயர்கள் நிலையங்களைத் தொடர்பு கொண்டு தங்கள் பகுதி நிலைமைகளை உடனுக்குடன் நேரடியாக தகவல் கொடுத்தார்கள். வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கும் இத் தகவல்கள் பயனளித்தன. வெள்ளிக்கிழமை (4/12) நண்பகல் வெள்ளத்தில் மூழ்கியிருந்த சைதாப்பேட்டை பாலம் மீண்டும் திறக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும் மக்கள் ஆரவாரம் செய்து அத்தகவலை வரவேற்றனர். 
செம்பரம்பாக்கம் ஏரி திறக்கப்பட்டதால் இந்த முக்கிய இணைப்புப்பாலம் புதன்கிழமை தொடக்கம் பல அடி வெள்ள நீரில் மூழ்கியிருந்தது.

தொலைபேசி இல்லாமல் இருந்தவர்களுக்கு வானொலி நிலையங்கள் தகவல் பரிமாற்ற நிலையங்களாகவும் செயற்பட்டன. குடும்பத்தினர்கள், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பற்றிய தகவல்களை அறிந்து அவர்களைப்பற்றிக் கேட்டவர்களுக்கு எடுத்துச் சொல்லின.

பல அறிவிப்பாளர்கள் நீண்ட நேரம் பணியாற்றினார்கள். அறிவிப்புகள் சரியான ஆட்களுக்கு, சரியான முறையில் கிடைப்பதை உறுதிப்படுத்தினார்கள்.

வானொலி நிலையங்கள் மூலமாக உதவித்தொகைகளும் வந்து சேர்ந்தன. சிக்காகோவில் உள்ள எஸ். ராஜேஷ் என்ற சென்னைவாசி வெள்ள நிவாரண நிதியாக தன் நண்பர்களிடம் பணம் திரட்டி 4,000 டாலரை ஒரு பண்பலை வானொலி நிலையத்துக்கு அனுப்பி வைத்தார்.

வானொலி நிலையங்களும் தங்கள் ஊழியரை அனுப்பி வெள்ளத்தில் சிக்கிய மக்களுக்கு உணவு மற்றும் மருந்துகள் விநியோகம் செய்தன.
(தகவல்: டைம்ஸ் ஆஃப் இந்தியா http://bit.ly/1OJ6UEo)
நன்றி: திரு. உமாகாந்தன்




Wednesday, December 02, 2015

திருநெல்வேலி வானொலியின் 53 ஆம் ஆண்டுவிழாக் கொண்டாட்டம்

திருநெல்வேலி வானொலி 1.12.1961 அன்று தொடங்கப்பட்டு 53 ஆம் ஆண்டுகள் ஆவதை முன்னிட்டு 1.12.2015 மாலை 3 மணிக்கு திருநெல்வேலி அகிலஇந்திய வானொலி வளாகத்தில் ஆண்டுவிழா நடைபெற்றது.


 
நிகழ்ச்சி அறிவிப்பாளர் உமாகனகராஜ், கரைசுற்றுப்புதூர் கவிப்பாண்டியன் ஆகியோர் வரவேற்றுப் பேசினர்.

 நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.கண்ணையன் தட்சணாமூர்த்தி நிகழ்ச்சிக்குத் தலைமைவகித்துத் தலைமையுரையாற்றினார். 

அறிவிப்பாளர் திரு.கரைசுற்றுப்புதூர் கவிப்பாண்டியன் அறிமுகவுரையாற்றினார். 

அறிவிப்பாளர் சந்திரபுஷ்பம் வானொலிநிலையத்தை வாழ்த்திப் பாடல் பாடினார். எழுத்தாளர் திரு.நாறும்பூநாதன் சிறப்புவிருந்தினராய் பங்கேற்று, அவர் சிறுகதைகளுக்கு நெல்லை வானொலி தந்த முக்கியத்துவத்தைச் சொல்லி மிக அழகாகப் பேசினார்.

 மூத்த ஊழியர் கே.ஆர்.கே.பாண்டியன் முன்னிலை வகித்தார். நிலையச் செயற்பொறியாளர் இவாஞ்சலின் வாழ்த்துரை வழங்கினார்.


நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.கண்ணையன் தட்சணாமூர்த்தி தன் தலைமையுரையில், “1961 ஆம் ஆண்டு டிசம்பர் 1 அன்று தொடங்கப்பட்ட திருநெல்வேலி வானொலியின் விவசாயப் பண்ணை இல்லப் பிரிவில்தான் தென்கச்சி சுவாமிநாதன் பணியாற்றினார். மக்கள் மனதில் பெரிதும் இடம்பெற்ற இன்றுஒருதகவல் நிகழ்ச்சியை ஒரு நாள்கூட இடைவிடாது 13 ஆண்டுகள் ஆயிரக்கணக்கான புதியதகவல்களைச் சொல்லி ஊடகத்துறையில் அசைக்கமுடியாத சாதனைகள் செய்த தென்கச்சி சுவாமிநாதன் பணியாற்றிய திருநெல்வேலி  வானொலி 53 ஆம் ஆண்டினைத் தொட்டு ஆண்டுவிழாவைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறது.
 ஆகாஷ்வாணி நடத்திய நாடகப்போட்டியில் திருநெல்வேலி வானொலி நிலையம் தயாரித்த கம்ப்யூட்டர் எக்ஸ்.ஒய்.இசட் என்னும் நாடகம் தேசியஅளவில் பரிசினை வென்று சாதனை படைத்தது” என்று பேசினார்.


சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரித் தமிழ்த் துறைத்தலைவர் முனைவர் சௌந்தர மகாதேவன் சிறப்பு விருந்தினராய் பங்கேற்றுச் சிறப்புரையாற்றும்போது, 

  “ திருநெல்வேலி வானொலி அரைநூறாண்டுகளைக்கடந்து தரமான நிகழ்ச்சிகளைத் திறமாகத் தந்துகொண்டிருக்கிறது. எத்தனை ஊடகங்கள் வந்தாலும் வானொலியின் தேவை இந்தச் சமூகத்தில் இருந்துகொண்டேதான் இருக்கும்.வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்கள் வந்தபோது யாரும் எட்டமுடியாத பாதிக்கப்பட்ட மக்களோடு வானொலி மூலமே தொடர்பு கொள்ளமுடிகிறது. 

சான்றோர் சிந்தனைகளைச் சமயவேறுபாடுஇல்லாமல் கேட்கும் மக்கள் பரந்தமனம் உடைய, பிற மதங்களை மதிக்கும் உயர்ந்த இலட்சியமுள்ள மனிதர்களாக மாறுகின்றனர். நூல்களைப் படிக்கவேண்டுமென்றால் கூட எழுத்தறிவு அவசியம்.ஆனால் படிக்காத பாமரரும் வானொலி கேட்கலாம். உலகியல் நடப்புகளைத் தெரிந்துகொள்ளலாம். 

திருநெல்வேலி வானொலியில் தரமான சரியான உச்சரிப்போடு பேசும் அறிவிப்பாளர்களிடம் இருந்து தமிழைத் தவறின்றிப் பேசக்கற்றுக்கொண்டேன்.

சிறுவர்களில் தொடங்கி, இளையோர்,பெண்கள், மூத்தோர், மாற்றுத்திறனாளிகள் என அனைவருக்கும் சிறப்பான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகின்றன. 

திருநெல்வேலி வானொலி தாமிரபரணி நதி குறித்த, சுற்றுச்சூழல் குறித்த,தமிழ்ப்பண்பாடு குறித்த, சாதனைபடைத்த ஆளுமைகள் குறித்த, மனதைப் பக்குவப்படுத்தும் இசைகுறித்த, தமிழ்இலக்கியம் குறித்த தரமான நிகழ்ச்சிகளை அரைநூற்றாண்டினைக் கடந்தும் தந்துகொண்டிருக்கிறது.

 தரமாகப் பேசத்தினமும் வானொலி கேட்கவேண்டும். டெல்லி செய்தியறிக்கை வாசித்த சரோஜ்நாராயண்சாமி,சென்னை வானொலியில் செய்திகள் வாசித்த ஜெயாபாலாஜி, பாலசுப்ரமணியன்,சென்னை தொலைக்காட்சியில் செய்திகள் வாசித்த ஷோபனா ரவி, நெல்லை வானொலியின் உமாகனகராஜ், சந்திரபுஷ்பம் பிரபு, கரைசுற்றுப்புதூர் கவிப்பாண்டியன், குடந்தை வேங்கடபதி, கீழப்பாவூர் சண்முகையா, மேலப்பாவூர் ராமகிருஷ்ணன் ஆகியோரிடமிருந்து கல்லூரிநாட்களில்  தமிழைச் சரியாக உச்சரிக்கக் கற்றுக்கொள்ள முடிந்தது.

 திருநெல்வேலி நேயர்கள் பங்கேற்றுப் பேசும் ஆனந்தப்பூங்காற்றே நேரலை நிகழ்ச்சியின் மூலம் தினமும் புதுப்புதுச் செய்திகளை அறிந்துகொள்ளமுடிகிறது.

 மகாத்மா காந்தியின் வாழ்க்கைச் சரித்திரத்தை காந்திஅஞ்சலி என்ற நிகழ்ச்சியாக நெல்லை வானொலி தொடர்ந்து தந்துகொண்டிருக்கிறது. 

வரலாற்று நாவலாசிரியர் கல்கி எழுத்திய பொன்னியின் செல்வன் நாவலை வாராவாரம் நெல்லை வானொலி தந்துகொண்டே இருக்கிறது.

 எம்.கே.தியாகராஜபாகவதர் போன்றோர் பாடிய பாடல்கள், திருமுருகக் கிருபானந்தவாரியார்,புலவர் கீரன்,எம்பார் விஜயராகவாச்சாரியார் உரைகள், மகாகவி பாரதி குறித்த, மனிதநேயம் குறித்த அரிய உரைச்சித்திரங்கள், சாகித்ய அகாடமி விருது பெற்ற எழுத்தாளர்களின் அரிய நேர்காணல்களை நெல்லை வானொலி ஆவணப்படுத்தி வைத்திருக்கிறது.” என்று பேசினார்.

 வானொலி நேயர்கள் திருமலைமுருகன்,பத்தமடை கந்தசாமி, பொருநைமைந்தன், கதிர்,திருக்களூர் பாலு ஆகியோர் வாழ்த்திப்பேசினர். 


கவிப்பாண்டியன் நன்றி கூறினார். ஆண்டுவிழா நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை திருநெல்வேலி வானொலி நிலையம் சிறப்பாகச் செய்திருந்தது.
படத்தில் ; திருநெல்வேலி வானொலி நிலையத்தின் திருநெல்வேலி வானொலியின் 53 ஆம் ஆண்டுவிழாவை முன்னிட்டு நிலையத்தின் மூத்த ஊழியர் கே.ஆர்.கே.பாண்டியன் கேக் வெட்டித் தொடங்கிவைக்கிறார்.அருகில் நிகழ்ச்சித் தயாரிப்பாளர் திரு.கண்ணையன் தட்சணாமூர்த்தி,முனைவர் சௌந்தர மகாதேவன்,எழுத்தாளர் நாறும்பூநாதன்,பொறியாளர் இவாஞ்சலின் ஆகியோர் உள்ளனர்.

Source: http://mahakavithai.blogspot.in/2015/12/53.html

Saturday, November 14, 2015

வானொலி போட்டிகள்

வெளி நாட்டு வானொலி நிலையங்கள் வைத்துள்ள போட்டிகள்

Radio Prague - Mailbox - http://www.radio.cz/en/section/mailbox/mailbox-2015-10-31

Radio Prague - http://www.radio.cz/en/static/monthly-quiz/

KBS World Radio Quarterly Quiz /About KBS World Radio/KBS World Radio - https://world.kbs.co.kr/english/about/about_quiz.htm

ஞானவாணி மீண்டும் ஒலிபரப்பு

ஞானவாணி மீண்டும் ஒலிபரப்பு செய்ய நிதி உதவி செய்தது மத்திய அரசு.

Gyan Vani, Gyan Darshan back on air, soon
  <http://timesofindia.indiatimes.com/city/lucknow/Gyan-Vani-Gyan-Darshan-back-on-air-soon/articleshow/49665451.cms>

Friday, November 13, 2015

Special EDXC Broadcast

ஐரோப்பிய டி.எக்ஸ்.கவுன்சிலின் சிறப்பு சிற்றலை ஒலிபரப்பு.

Special EDXC Broadcast 5-7 December
Rhein-Main-Radio-Club will be broadcasting on shortwave about EDXC - Conference at St.Petersburg. Special QSL-Card for reception reports to RMRC mail@rmrc.de or by post Rhein-Main-Radio-Club e.V. , Postfach 700849, 60558 Frankfurt, Germany.
Via Lithuania:
5 December 0800-0900 on 11690 to Asia (Japan) in English
5 December 0900-1000 on 11690 to Russia in Russian.

Via WRMI, USA:
5 December at 2200-2300 on 11580 may be audible in Europe
6 December at 0100-0200 on 11580 may be audible in Europe
6 December at 2300-0000 on 5850 to North America
6 December at 0500-0600 on 9955 to Caribbean and Latin America
7 December at 2100-2200 on 7570 to North America. This may also be audible in Europe.
7 December at 2100-2200 on 15770 to Europe and North America. (DX-clusive via Lehtinen)
.
(DX-Window No. 542, Danish  Shortwave  Club  International).  Via Alokesh Gupta