இது நாள் வரை நாம் வானொலிப் பெட்டிமூலமே சிற்றலை ஒலிபரப்புகளை கேட்டுவந்துள்ளோம். இதன் அடுத்த கட்டமாக நாம் கம்ப்யூட்டர் மூலம் வானொலிகளை கேட்கத்துவங்கினோம், இப்பொழுது இன்னும் ஒரு படிமேலே சென்று சிற்றலை வானொலிகளை கம்ப்யூட்டருடன் இணைத்து கேட்பதற்காகவே தனியான மென்பொருட்கள் விற்பனைக்கு வந்துள்ளன.இத்தாலிய நிறுவனமான மைக்ரோ டெலிகாம் பெர்சூயஸ் புதிய சிற்றலை மென் பொருளை ICOM-க்கு போட்டியாக விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. இதன் மூலம் 10 KHz முதல் 30 KHz வரையிலான வானொலிகளின் ஒலிபரப்புகளைக் கேட்கலாம். எந்த வானொலிப் பெட்டிகளுடனும் ஒப்பிட முடியாதத் தொழில் நுட்பத்துடன் வெளிவந்துள்ள இந்த வானொலிப் பெட்டியைக்கேட்க கம்ப்யூட்டர் அவசியம் தேவை.
Spectrum எனப்படும் ஒலிக்கற்றைகளைத் தெளிவாகக் காணும் வசதியுடன் இந்த மென்பொருள் தயாரிக்கப்பட்டுள்ளது. நல்ல ஸ்பீக்கர்இணைக்கப்பட்டால், முழுமையாக இதன் ஒலித்தரத்தினை அனுபவிக்கலாம். அடிப்படைவசதிகள் உள்ள அனைத்து கம்ப்யூட்டர்களிலும் இந்த வானொலி மென்பொருளை இணைத்துக் கேட்கலாம்.இந்த சிற்றலை வானொலி மென்பொருளின்விலை ரூ 52,000/- கிடைக்குமிடம்: Martin Lynch &Sons Ltd, Outline House, 73, Guild Ford Street,Chertsey, Surrey, KT16 9AS, UK. Email: sales@hamradio.co.uk
No comments:
Post a Comment