1975 வரையில் ரேடியோஆஸ்திரேலியாவில் தமிழ் ஒலிபரப்பானது 41 மீட்டரில் செய்யப்பட்டு வந்தது. உலகச்செய்திகள், விளையாட்டுச்செய்திகள், ஆங்கில இசை, அறிவியல் செய்திகள், நேயர்களின்மடல்களுக்கு பதில் வழங்குதல், தமிழ்திரைப்படப் பாடல்கள் ஒலிபரப்பு போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளை ஆஸ்திரேலிய வானொலி ஒலி பரப்பியது. ரேடியோ ஆஸ்திரேலியாவில் கிரிக்கெட் வர்ணனையாளராகப் பணிபுரிந்தவர் தமிழகத்தைச் சார்ந்த வி.எம்.சக்ரபாணி ஆவார். இவருடைய குரல் வளத்தில் அனுதினமும்இந்திய நேரப்படி இரவு 9.55 முதல் 10.15 மணி வரையில் தமிழ்திரைப்படப் பாடல்களை ஒலிபரப்பி சிறப்புச் செய்தார். இந்த நிகழ்ச்சியில் அடிக்கடி எம்.ஜி.ஆர் பாடல்களைக்கேட்கலாம். அதிலும் குறிப்பாக அடிமைப் பெண்,குடியிருந்த கோயில், ஆயிரத்தில் ஒருவன், காதலிக்க நேரமில்லை போன்றப் படப் பாடல்களை ஒலிபரப்பினார். உலகிலுள்ள வெளிநாட்டு வானொலி நிலையங்களிலிருந்து நேயர்களுக்கு தரச் சான்று அறிக்கை தவறாதுஅனுப்பி வைப்பார்கள். அவ்வறிக்கையைப் பூர்த்திச் செய்து நேயர்கள் திருப்பி அனுப்பி வைப்பார்கள். அங்கிருந்து நேயர்களுக்கு ஸ்டிக்கர், நாள்காட்டி, டைரி, கீ-செயின்மற்றும் புத்தகங்களையும் அனுப்பி மகிழ்விப்பார்கள்.1975-ஆம் ஆண்டு ரேடியோ ஆஸ்திரேலியாவும், அமெரிக்காவும் தமிழ் நிகழ்ச்சிகளின் ஒலிபரப்பை நிறுத்திவிட்டன. பின்பு மாஸ்கோ வானொலியும், சமீபத்தில் பாகிஸ்தான் வானொலியும் தமிழ் ஒலிபரப்பினை நிறுத்தி விட்டன. 31-05-2008-டன் இலங்கை வானொலி சர்வதேச ஒலிபரப்பை நிறுத்திவிட்டன. கடந்த 84 ஆண்டுகளாக தமிழ் நிகழ்ச்சிகளை இலங்கை வானொலி ஒலிபரப்பி வந்தது என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. - பத்தமடை எஸ். கந்தசாமி (+91 94872 44449)
1 comment:
மிகவும் வருத்தமான ஒரு செய்தியை சொல்லியிருக்கிறீர்கள். என் பள்ளிப் பருவ வயதி்ல் 80களில் உலகில் இருக்கும் பல தமிழ் வானொலி நிலைய ஒலிபரப்புக்களை ரசித்துக் கேட்டவன். குறிப்பாக இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன ஒலிபரப்பை மிகவும் ரசித்துக் கேட்பேன். இன்று பல நிலையங்கள் தமிழ் ஒலிபரப்பை நிறுத்தி விட்டதை, மீண்டும் யாராவது ஒரு தமிழ் ஆர்வலரின் முயற்சியால் ஆரம்பித்தால் நன்றாக இருக்கும்.
Post a Comment