இலங்கை வானொலி நிகழ்ச்சியில் சமீபகாலமாக ஏராளமான மாற்றங்கள் நடைபெற்றுவருகின்றன. அந்த வகையில் கடந்த 02.03.2008 அன்று காலை 7.05 முதல் 7.45 வரை இலங்கை சர்வதேசவானொலி ஒலிபரப்பிய 'தொடுவானம்' நிகழ்ச்சியில் மணிமேகலைப் பிரசுரத்தின் ரவி தமிழ்வாணன் இந்திய நேயர்களுடன் தொலைபேசி மூலம் நேரடியாக உரையாடியது இலங்கை வானொலி வரலாற்றில் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்.
ஒரு எழுத்தாளன் என்பதற்கு, ஒருவன் தோளில் பை, ஜிப்பா, பைஜாமா போட்டுக்கொண்டு வந்தால் அவனை எல்லோருக்கும் அடையாளம் தெரியும். அந்த வடிவத்தை மாற்றி அமைத்தவர் தமிழ்வாணன்தான். எப்படி என்றால் தமிழ்வாணன் என்பதற்குபதில் ஒரு கருப்புக் கண்ணாடி தொப்பி படமாக வரையப்பட்டு அனுப்பினால் மணிமேகலைப் பிரசுரத்துக்கு வந்து சேர்ந்துவிடும், அதேபோன்று லேனா தமிழ்வாணனுக்கு கருப்புக்கண்ணாடிவரைந்தால் போதும். தபால் உரிய முகவரிக்கு வந்து சேர்ந்துவிடுகிறது. தனக்கு அதுபோன்று ஒரு அடையாளம் இல்லை என்று சொல்லி ஆதங்கப்பட்டார் ரவி தமிழ்வாணன்.
மணிமேகலைப் பிரசுரத்தில் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பிரபலமானவர்களுடைய முகவரிகளை வெளியிட்டுள்ளது பற்றி நிகழ்ச்சியில் கூறினார். உலகத்தில் எந்த இடத்தில் தமிழர்கள் வசிக்கின்றார்களோ அந்தந்த இடங்களுக்குச் சென்று அவர்களுடன் கலந்து உரையாடியதைப் பெருமைப்படக் கூறினார். இலங்கைக்கு ஐந்து முறை சென்று, மலைப்பிரதேசங்களில் வாழ்கின்றவர்களிடம் நான்கு முறை அவர்களின் பழக்க வழக்கங்களை அறிந்துகொண்ட அனுபவத்தை நேயர்களுடன் நிகழ்ச்சியில் பகிர்ந்து கொண்டது பல நேயர்களின் மனதினைத் தொட்டது. காரணம் அந்த மக்கள் என்னசெய்கிறார்கள் மற்றும் எப்படி வாழ்கிறார்கள் என்பதை நானும் நன்கு அறிவேன்.
எம்.ஜி.ஆருக்கு எத்தனையோ பட்டங்கள் கிடைத்திருந்தாலும், தமிழ்வாணன் வழங்கிய மக்கள் திலகம் பட்டம்தான் எம்.ஜி.ஆருக்கு மிகவும் பிடித்தது என்று நிகழ்ச்சியில் சொன்னது பலருக்குப் புதிய செய்தியாக இருக்கலாம். கே.பாலாஜி திரைப்படத்தில் கதாநாயகன், நாயகிக்கு ராஜா- ராதா என்று பெயர் இருப்பதுபோல் எழுத்தாளர் சுஜாதா அவருடைய கதையில் கணேஷ்-வசந்த் என்றும், தமிழ்வாணன் துப்பறியும் நாவல்களில் சங்கர்லால் வருவதை இலங்கை வானொலி நேயர்கள் கேட்டவிதம், அதற்கு ரவி தமிழ்வாணன் பதிலளித்தவிதம் அனைவரின் மனதையும் கவர்ந்தது.
இலங்கை வானொலி அறிவிப்பாளர்கள், சக பணியாளர்களைப் பற்றி ஒரு வாழ்க்கை வரலாற்றுப் புத்தகம் வெளியிடுவதாகநிகழ்ச்சியில் அறிவித்தது, இலங்கை வானொலி நேயர்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சியை நிச்சயமாகத் தரும். இலங்கை சர்வதேச வானொலியில் நேரடி தொலைபேசி உரையாடல் நிகழ்ச்சியில்கலந்துகொண்ட முதல் நபர் ரவி தமிழ்வாணன் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.
கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால் இதே சர்வதேச வானொலியில் 14.05.2006 அன்று காலை 9.05க்கு ஒலிபரப்பு முடிகின்ற தறுவாயில் எனக்காக சிறப்பு ஒலிபரப்பு என்று கூறி பதினைந்து நிமிடங்கள், அதாவது 9.20 வரை நீடிக்கப்பட்டு, அன்றைய அறிவிப்பாளர் திருமதி. விசாலாட்சி ஹமீது அவர்கள்எம்.ஜி.ஆர் நடித்த நான்கு பாடல்களுக்கு விளக்கம் கேட்டு அந்தப் பாடலை ஒலிபரப்பு செய்தார்கள். இந்த வாய்ப்பு அந்த சர்வதேச வானொலியில் முதன் முதலில் நேயர் என்ற முறையில் எனக்குக் கிடைத்தது. - வள்ளியூர் ஏ.பி.எஸ். ரவீந்திரன்
2 comments:
எம்ப்பா ஒருத்தருக்குக் கூடவா இந்தப் பதிவ படிக்கிறதுக்கு நேரமில்ல..?! என்ன கொடும சார் இது - வானொலி
Post a Comment