வீரசிங்கம் சுந்தரலிங்கம்
வீரசிங்கம் சுந்தரலிங்கம் (இ. அக்டோபர் 29, 2001) இலங்கை வானொலியின் மூத்த அறிவிப்பாளர்களில் ஒருவர். சந்திரனில் இறங்கிய அப்பல்லோவிண்வெளி யாத்திரை பற்றிய நேர்முகவர்ணனை செய்தவர் என்பதினால் 'அப்பலோ' சுந்தா என்று அழைக்கப்பட்டவர். ஒளிப்படக் கலையிலும் தேர்ச்சி மிக்கவர்.
இலங்கைப் பாராளுமன்றத்தில் சமகால மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றியவர். புலம்பெயர்ந்து, அமெரிக்காவிலும், இந்தியாவிலும்,அவுஸ்திரேலியாவிலும் வாழ்ந்தவர்.
வானொலியில்
இலங்கை வானொலியில் செய்திகள், நேர்முக வ்ர்ணனை என்பனவற்றோடு பஞ்சபாணம், விவேகச்சக்கரம் முதலான போட்டி நிகழ்ச்சிகளையும் தயாரித்து வழங்கியிருக்கிறார். பிபிசியின் தமிழோசை நிகழ்ச்சியில் சுந்தா சுந்தரலிங்கம் என்ற பெயரில் அறிவிப்பாளராக இருந்தவர்.
எழுதிய நூல்
படைப்பு இலக்கியத் துறையில் இவர் தீவிரமாக ஈடுபடாத போதிலும் தனது வானொலி அனுபவங்களை மார்ச் 1999 இல் மன ஓசை என்னும் பெயரில் எழுதி வெளியிட்டிருக்கிறார்.
- மன ஓசை, மார்ச் 1999, சென்னை
[தொகு]இறுதி நாட்கள்
தனது இறுதிக் காலங்களில் சக்கர நாற்காலியில் அமர்ந்தவாறே வானலைகளில் தமது குரலைப் பதிவு செய்தவர். இவரது மனைவிபராசக்தி சுந்தரலிங்கம் ஒரு இலக்கிய விமரிசகர்.
வெளி இணைப்புகள்
- மன ஓசை - ரேடியோ சிலோன் சுந்தா
- கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
2 comments:
அவர் பெயர் வீரசிங்கம் சுந்தரலிங்கம். நீங்கள் தவறாக ஆர். சுந்தரலிங்கம் என்று குறிப்பிட்டிருக்கிறீர்கள். சுந்தா சுந்தரலிங்கம் என்று தான் தன்னை அறிமுகப்படுத்திக் கொள்வார். அதனால் அவர் வீ. சுந்தரலிங்கம் என்பது பலருக்குத் தெரியாமல் போகலாம். அதனை மாற்றினால் அவர் துணைவியார் மகிழ்வார்.
நன்றி.
தகவலுக்கு நன்றி.
Post a Comment