இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் இது ஜனவரி 5 1967 அன்று இலங்கை வானொலி கூட்டுத்தாபனமாக மாற்றம் பெற்ற போது உருவாக்கப்பட்டதாகும். இலங்கையின் அப்போதைய பிரதமரான டட்லி சேனாநாயக்கமற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் ரணசிங்க பிரேமதாசாவும் வைபரீதியாக அங்குரார்பணம் செய்து வைத்தனர்.
வானொலி சேவைகள்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் உள் நாட்டு ஒலிபரப்புக்காக ஆறு தொடர்ச்சியான அதிர்வெண் மட்டிசைக்கப்பட்ட (எஃப்.எம்.) சேவைகளை நடத்தி வருகின்றது. அவையாவன;
- சிங்கள சுதேச சேவை
- தமிழ் தேசிய சேவை
- ஆங்கில சேவை
- சிட்டி எஃப்.எம்.
- வெளந்த சேவய (சிங்கள வர்த்தக சேவை)
- தென்றல் (தமிழ் வர்த்தக சேவை) என்பனவாகும்.
இதில் முதல் மூன்று சேவைகளும் பொதுவான சிங்கள் தமிழ் ஆங்கில நேயர்களுக்காக ஒலிபரப்பட்டாலும் நான்காவது சேவை வாலிபர்களுக்கன விசேட சேவையாகும். கடைசி இரண்டு சேவைகளும் தற்கால நிகழ்வுகளுடன் வர்தக நோக்கங்களுக்காகவும் ஒலிபரப்பப் படுகின்றது. இவ்வாறு சேவைகளுக்கு மேலதிகமாக விளையாடுச் சேவை முக்கிய விளையாட்டு நிகழ்வுகளின் போது மாத்திரம் நாடு முழுவது ஒலிபரப்ப படுகிறது. இவற்றுக்கு மேலதிகமாக, பிரதேச நிகழ்வுகளுக்கு முக்கியதுவம் கொடுத்து இ.ஒ.கூ. நான்கு பிரதேச ஒலிபரப்புகளையும் நடத்தி வருகின்றது.
வெளிநாட்டு நேயர்களுக்காக இ.ஒ.கூ. அலைவீச்சு மட்டிசைக்கப்பட்ட (ஏ.எம்.) சேவைகளை மத்திய மற்றும் சிற்றலை வரிசைகளில் ந்டத்தி வருகின்றது. இவை தெற்காசியா, மத்திய கிழக்கு நாடுகள், தென்-மேற்கு ஆசிய பிரதேசங்களுக்கு ஆங்கிலம், சிங்களம், ஹிந்தி போன்ற மொழிகளில் ஒலிபரப்புகிறது. தென்னிந்தியாவுக்கு ஒலிபரப்புவதற்கான தனிப்பட்ட சேவைகளும் காணப்படுகிறது.
[தொகு]தமிழ் ஒலிபரப்பாளர்கள்
- எஸ். பி. மயில்வாகனம் (வர்த்தக சேவையின் முதல் தமிழ் அறிவிப்பாளர்)
- ஆர். சுந்தரலிங்கம் (சுந்தா சுந்தரலிங்கம்)
- ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
- வீ. ஏ. கபூர்
- எஸ். புண்ணியமூர்த்தி
- எஸ். கே. பரராஜசிங்கம்
- சற்சொரூபவதி நாதன்
- கே. எஸ். ராஜா
- பி. எச். அப்துல் ஹமீட்
- விமல் சொக்கநாதன்
- சரா இம்மானுவேல்
- சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியம்
- ராஜேஸ்வரி சண்முகம்
- பி. விக்னேஸ்வரன்
- ஜோர்ஜ் சந்திரசேகரன்
- எஸ். நடராஜசிவம்
- ஜோக்கிம் பெர்னாண்டோ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
http://ta.wikipedia.org/wiki/இலங்கை_ஒலிபரப்புக்_கூட்டுத்தாபனம்
No comments:
Post a Comment