நோர்வேயில் 'தமிழ்3′ எனும் பெயரில் புதிய வானொலி சேவை இன்று முதல் ஆரம்பம்இதன் முதலாவது ஒலிபரப்பு நாளை புதன்கிழமை (16.01.2013) இடம்பெறவுள்ளது. ஓவ்வொரு புதன் கிழமைகளிலும், மாலை 8 மணி முதல் பின்னிரவு 11 மணி வரையான 3 மணி நேரம் தமிழ்3 வானொலியின் ஒலிபரப்புகளை நோர்வேயிலும் உலகெங்குமுள்ள தமிழ் மக்களும் கேட்க முடியும். கடந்த புதன் அன்று இடம்பெற்ற பரீட்சார்த்த ஒலிபரப்பினைத் தொடர்ந்து, நாளை முதல் சிறப்பு நிகழ்ச்சிகளுடன் வழமையான ஒலிபரப்பு இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். தமிழர் வாழ்வை எதிரொலிக்கும் வானொலியாக இது தனது ஊடகபப் ணிகளை முன்னெடுக்கும் என என இந்த வானொலி முயற்சி பற்றித் நோர்வே தமிழர் கற்கை மையம் தெரிவித்துள்ளது. ஓஸ்லோ பகுதிகளில் வசிப்போர் FM107.7 பண்பலை ஊடாகவும், ஒஸ்லோவிற்கு வெளியில் வசிப்பவர்கள் Cable TV இணைப்பின் ஊடாக 95.5 அலைவரிசையிலும், உலகெங்கும் வாழும் தமிழ் மக்கள் http://interfm.no/ இணையத்தின் ஊடாகவும், தமிழ்3 இன் ஒலிபரப்பினைக் கேட்டு மகிழலாம். அறிவித்தல், விளம்பரம், கருத்துகள் மற்றும் ஆலோசனைகளுக்கு: radiotamil3@gmail.com எனும் மின்னஞ்சலுடன் தொடர்புகளை ஏற்படுத்துமாறும் அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது Source: http://www.yarl.com |
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Tuesday, January 22, 2013
நோர்வேயில் ‘தமிழ்3′ எனும் புதிய வானொலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment