ஆம்.!வானொலி நேயர்களை அழைத்து ,சீனாவை சுற்றிவரச் செய்த பெருமைஉலக அளவில் சீனவானொலி தமிழ்ப் பிரிவையே சாரும் .உண்மை வெறும் புகழ்ச்சியில்லை . அன்றொரு நாள் (1973-களில் )இப்படித்தான் என் வானொலிப் பெட்டியைத் திருகிகொண்டிருந்தேன். (அப்பொழுதெல்லாம் பொழுது போக்குவதற்கென்று இருந்தது வானொலியும் திரைப்படமும் தானே )இரண்டாவது அலைவரிசையில்திடீரென்று பீகிங் வானொலி நிலையம் தமிழ் ஒலிபரப்பு என்று ஒரு மழலைத் தமிழ்க் குரல் கேட்டது .வியந்து போய்,அதச் சரியாகக் கேட்பதற்கு[ tuning]தடவித் தடவிசரிசெய்து கேட்டேன்.இப்பொழுது போல மின்னியல் வானொலிப் பெட்டி அப்போது அறிமுகமாகவில்லை.
அன்றிலிருந்து ,ஒலிபரப்பைகேட்டு மகிழ்ந்து கருத்துக் கடிதங்கள்எழுதலானேன் என் கடிதத்தைக் கண்ட திரு .சுந்தரன் அவர்கள் (மேனாள் தலைவர்)மற்றும் கலையரசி எனக்கு நேயர் எண் 05-6436 என அளித்து வாழ்த்தும் காட்சிப் படமும் அனுப்பினார்கள் வானொலி கேட்கக் கேட்க ,உலகச் செய்திகளை அறிந்து கொள்ளும் ஆர்வமும் , நிகழ்ச்சிகளில் பங்கு கொள்ளும் ஆற்றலும் என்னுள் முளைவிட்டன
எல்லோரையும் போல நானும் பரிசுப் பொருள் ஆசையில் தான் தொடர்ந்து நிகழ்ச்சி கேட்டேன்.பின்னர் ஆழமான செய்தி விமர்சனங்களும் .
சீனப் பாரம்பரிய கலாச்சாரங்களின் பரிமாணங்கள்( விருந்தோம்பல், பொதுநோக்கு,இன்முகம், போன்ற
இவற்றை அறியத் தொடங்கினேன். நிகழ்ச்சியின் பால் அதிக ஈர்ப்பு உண்டாகியது.
பல்லவி பரமசிவன் பிள்ளையார் சுழி போட்டுத் தொடங்கி வைத்த கருத்தரங்குகளில் கலந்து கொண்டேன்.அங்கே பலதரப்பட்ட நேயர்களின் அறிமுகம், .நட்பு கிடைத்தது. என் நட்பு வட்டமும் , மனமும் விசாலமானது நிகழ்ச்சிகள்:
நிகழ்ச்சிகளில் அறிவிப்பாளர்கள் காட்டும் ஆர்வம் ,ஆழம் ,பக்கச் சார்பில்லா பார்வை, நேயர்களை பங்கெடுக்கச் செய்யும் ஊக்கம்,தூண்டுதல் இவைஎல்லாம் சீன வானொலி தமிழ்ப் பிரிவின் தனித்தன்மை எனலாம்
.
மேற்கண்ட நிகழ்வுகள் கணினி வருவதற்கு முன் நடந்தவை.
இணைய தளம் தொடங்கியபிறகு நம் வானொலியின் அசுர வளர்ச்சியை சொல்லி மாளாது. கடிதங்கள் அனுப்பிய அடுத்த நாளே பதில் மின்னஞ்சல், இணைய தளம் வழியாக போட்டிகள்,புதிய அறிவிப்புகள் என தமிழ்ப் பிரிவு நாளும் புதிய வடிவம் பெற்று வருகிறது.
அறிவிப்பாளர்கள்;
இளம்தலைமுறையினர் 18 பேர், நிலையத்தில் சுறு சுறு வெனச் சுழன்று பணியாற்றிவருவதை ,நிகழ்ச்சிகள் எங்களுக்குச் சொல்கிறது.
பொன்விழா குறித்த செய்திகள் தமிழக நாளேடுகளில் ,(புதிய தலைமுறை,தீக்கதிர், தினமணி )வலம் வந்துகொண்டிருக்கிறது.
நானும் சிறப்பாக எழுதவேண்டும் என்ற எண்ணத்திலேயே இவ்வளவு நாள் காலம் கடத்திவிட்டேன்.
எனினும் என் பங்களிப்பும் பொன் விழாக் கொண்டாட்டங்களில் ஒன்று கலக்கட்டும்
முக நூலில் மா.உலகநாதன், திருநீலக்குடி

No comments:
Post a Comment