சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Sunday, January 26, 2014
Chinese radio station fans meet in Erode
Arun P Mathew,TNN | Jan 26, 2014, 01.40AM IST
COIMBATORE: Pallavi K Paramasivam, a 52-year-
old social worker in Perundurai, remembers the
first radio he got when he was just 15 years old. He
would tune the radio in all possible ways to reach
stations that played Tamil programmes. It was
during one such attempt that he received the
broadcast of the Tamil service of the Chinese Radio
International (CRI). He went on to become such a
fan of this radio station and wrote several letters
that the station invited him on a two-week trip to
China in 1986.
Paramasivam visited Beijing and Shanghai and
tourist spots including The Great Wall of China.
When he travelled to China during the 2008
Olympics, CRI helped him find lodging and passes
to the games venues. "I was a regular listener of
many international radio stations including the
Tamil services of BBC, Moscow and Pakistan. But
what attracted me to CRI-Tamil service was that
they replied to my letters," he said.
There are several admirers of the CRI-Tamil
service, which started its broadcast in 1963. They
are so many in number that came together to set
up a listeners' association in 1986. The association
organises listeners' meets every year, which is
attended without fail by members from across the
state. Paramasivam, for instance, is a regular at
meetings since 1986.
On Saturday, about 300 listeners attended the
25{+t}{+h} CRI-Tamil service listeners meet at
Perundurai. Many of them became fans of the
radio station by writing letters. Prompt replies
from the station ensured that they developed a
kind of emotional relationship with the radio
station.
"Last year, the radio announced greetings for my
daughter's marriage," said S Porunaibalu from
Tirunelveli. He started listening to CRI a decade
ago after a friend told him about the radio station.
His first letter received an enquiry from the local
police station. But he was thrilled once he received
a reply and from then on sent the station several
letters. Even in this internet age, he sends letters
by post.
Zhao Jiang, director of the CRI, says that they
receive several thousands of letters from the
listeners every year. "This radio service has helped
improve ties between the countries and develop an
interest in China among the listeners," she said.
Interestingly, the listeners appreciate the way the
Chinese radio speaks Tamil. "They speak in pure
Tamil and the programmes are interesting and
their presentation is excellent," says S
Senthilkumar, a Pollachi resident.
The programmes are predominantly feature
stories. They also broadcast news which is, of
course, from a Chinese perspective. Some of the
listeners said these broadcasts help them
understand the Chinese view on issues like Tibet as
well as international affairs.
SOURCE: The Times of India
Monday, January 20, 2014
சீன வானொலி நேயர் மன்ற கருத்தரங்கு
அனைத்திந்திய சீன வானொலி நேயர் மன்றத்தின் 25வது கருத்தரங்கு மற்றும் சீன வானொலியின் பொன்விழா மலர் வெளியீடு ஆகியவை கீழ்கண்டவாறு நடைபெறவுள்ளது.
நாள்: ஜனவரி 25ஆம் நாள் சனிக்கிழமை
நேரம் : காலை 9:30 மணி
இடம் : கொங்கு வேளாளர் மெட்ரிக்குலேசன் மேனிலைப்பள்ளி
சென்னிமலை ரோடு, பெருந்துறை-638052, ஈரோடு மாவட்டம்
இதில் அனைத்து வானொலி நேயர்களையும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறது சீன வானொலி தமிழ்ப் பிரிவு.
Saturday, January 18, 2014
கேப்டன் தொலைக்காட்சியில் கலைமகள்
சென்னை வந்த சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு தலைவருக்கு உற்சாக வரவேற்பு
சென்னைக்கு வந்த சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு தலைவருக்கு பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு தலைவராக உள்ள சாவா ஜியாங் என்கிற பெண்மணி, தமிழ் மீது கொண்ட காதலால் தன்பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
சீன வானொலியின் தமிழ்ப்பிரிவு தலைவராக உள்ள சாவா ஜியாங் என்கிற பெண்மணி, தமிழ் மீது கொண்ட காதலால் தன்பெயரை கலைமகள் என்று மாற்றிக் கொண்டுள்ளார்.
பல்வேறு நிகழ்ச்சிகளுக்காக சென்னை வந்த அவருக்கு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தின் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது பேசிய அவர் கலைமகள், தமிழ் பண்பாட்டின் மீது கொண்ட ஆர்வத்தினால் தமிழை வளர்க்கும் முயற்சியில் இறங்கியதாக கூறினார்.
இதனைத் தொடர்ந்து 27 ஆயிரம் சொற்களை கொண்ட சீனம் – தமிழ் கலைச்சொற்கள் அகராதியை அவர் வெளியிட்டார்.
நன்றி: கேப்டன் செய்திகள்
பத்திரிகையாளர்களுடன் கலைமகள்
இந்தியா-சீனா உறவை வளர்க்க பாடுபடுவேன்: சீன பெண் எழுத்தாளர்
சீன வானொலியின் தமிழ் பிரிவு தலைவரும், சீன எழுத்தாளருமான சாவோ ஜியாங் என்னும் கலைமகள் என்பவர் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார். அவர் நேற்று மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
சீன வானொலி 1911-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் தமிழ் பிரிவு தொடங்கி 50-வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஆண்டு (2013)-ல் பொன் விழாவாக கொண்டாடப்பட்டது. சீனாவில் தமிழக பிரிவு ஊடக சேவை என்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.
தமிழ் பிரிவின் செல்வாக்கு நாளுக்கு நாள் சீனாவில் அதிகரித்து வருகிறது. தமிழ் பிரிவு தொடங்கப்பட்டதன் நோக்கம், சீனா-இந்தியா நட்புறவை வளர்ப்பதுதான். சீன-தமிழ் வானொலி தொலை தொடர்பானது, சீன-தமிழக வணிக வாய்ப்பு மற்றும் சுற்றுலா துறையின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் தமிழகத்தில் உள்ள இயற்கை எழிலை சீனர்கள் பெரும் அளவில் கண்டு களிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
சீனா தலைநகரம் பெய்ஜிங்கில், இந்திய உணவு விழா மற்றும் திரைப்பட விழாக்கள் நடைபெற்றன. இதனை தமிழ் பிரிவில் ஒளிபரப்பு செய்தோம். இந்த தமிழ் நிகழ்ச்சிகள் எண்ணற்ற சீனர்களை ஈர்த்துள்ளது.
கடந்த 2013-ம் ஆண்டு ஜனவரி திங்கள் சென்னையில் நடைபெற்ற 36-வது புத்தக கண்காட்சியில் ‘சீனாவில் இன்ப உலா’ என்ற புத்தகத்தை தமிழில் அச்சடித்து வெளியிட்டேன். இது ஒரு சீனர் தமிழில் எழுதி இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் மொழி புத்தகம் ஆகும். இது என்னுடைய தனிப்பட்ட பெருமையாகும். இதில் சீனாவை பற்றி விளக்கமாக எழுதி உள்ளேன்.
இதே போன்று சீனம்-தமிழ் மொழிகளுக்கிடையே நேரடி அகராதி இல்லாத நிலையில், கடந்த 2013-ம் ஆண்டு சீனாவில் உள்ள பிரபலமான அகராதி நிறுவனத்துடன் இணைந்து, சீனம்-தமிழ் கலைச் சொல் அகராதியை வெளியிட்டேன். இந்த அகராதியில் 27 ஆயிரம் சொற்கள் உள்ளன. சீனம்-தமிழ் மொழி ஒளிபரப்பை உலக அளவில் மிகவும் புகழ் பெற்றதாகவும், அருமையான ஒளிபரப்பாகவும் வளரச்செய்து, இந்தியா-சீனா இடையிலான உறவை வளர்க்க பாடுபடுவேன் என அவர் கூறினார்.
படங்கள்: ஸ்டாலின்
நன்றி:நக்கீரன்

தி இந்து நாளிதழில் கலைமகள்
தமிழர்களின் பண்பாடு கவர்ந்ததால் தமிழ் பேச கற்றுக் கொண்டேன்- சீன வானொலி பெண் தொகுப்பாளர் பேட்டி
- சீன வானொலியின் தமிழ்ப் பிரிவு தலைவராக இருப்பவர் சவோ ஜியாங் (36).
தமிழ் மொழி மீது அதிக பற்று கொண்டதால், தனது பெயரை கலைமகள் என மாற்றிக் கொண்டார். பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக தமிழகம் வந்துள்ள இவருக்கு சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் வெள்ளிக்கிழமை பாராட்டு விழா நடந்தது நிகழ்ச்சிக்குப் பிறகு நிருபர்களிடம் கலைமகள் கூறியதாவது:
சீன நாட்டு வானொலியில் 1963-ம் ஆண்டு தமிழ்ப் பிரிவு தொடங்கப்பட்டது. இந்தப் பிரிவின் தலைவராக பணியாற்றி வருகிறேன். தமிழ்ப் பிரிவின் பொன்விழா, கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது. எங்கள் வானொலியின் தமிழ்ப் பிரிவுக்கு வாசகர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அதனால், செல்வாக்கும் கூடுகிறது.
இந்திய வரலாறு, தமிழர்களின் பண்பாடு ஆகியவை என்னை மிகவும் கவர்ந்தன. அதனால்தான் தமிழ் பேச கற்றுக் கொண்டேன். சீன தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழியில் பட்டம் பெற்றுள்ளேன். கடந்த ஆண்டு ஜனவரியில் ‘சீனாவில் இன்ப உலா’ என்ற புத்தகத்தை எழுதி வெளியிட்டேன். இதில் சீனாவைப் பற்றி எழுதியுள்ளேன். இந்த புத்தகத்தை தமிழ் நண்பர்கள் படிக்க வேண்டும். கடந்த ஆண்டு ஜூனில் ‘சீனம்-தமிழ் கலைச்சொல் அகராதி’யை தொகுத்து வெளியிட்டுள்ளேன். இந்த அகராதியில் சுமார் 27 ஆயிரம் சொற்கள் உள்ளன. தமிழர்கள் சீன மொழியை படிப்பதற்கு, இந்த அகராதி மிகவும் உதவியாக இருக்கும்.
பாரதியாரை பிடிக்கும்
எனக்கு மிகவும் பிடித்தவர் பாரதியார். சீனாவில் தமிழ் பேசும் மக்கள் குறைவு. சீன மக்களிடையே தமிழை கொண்டு செல்வதற்கான போதிய விளம்பரம் இல்லை. நான் பணியாற்றும் வானொலியின் தமிழ்ப் பிரிவு மூலம் சீன மக்களிடம் தமிழை கொண்டு செல்வேன். உலக அளவில் தமிழ் ஒலிபரப்பாளராக புகழ் பெற வேண்டும் என்பதே என் லட்சியம். அதற்காக கடுமையாக முயற்சி செய்வேன். 2002-ம் ஆண்டு தமிழகம் வந்தேன். அதன்பின், 10 ஆண்டுகள் கழித்து தமிழகம் வருவது மகிழ்ச்சி அளிக்கிறது.
சீனாவில் தமிழ்த் திரைப்படம் பார்க்கும் வாய்ப்பு இல்லை. விரைவில் தமிழ் படங்களை பார்க்க முயற்சி செய்வேன். போதி தர்மன் கதையை மையப்படுத்தி வந்துள்ள 7-ம் அறிவு படத்தை விரைவில் பார்ப்பேன். எனக்கு மிகவும் பிடித்த திருக்குறள், ‘நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது அன்றே மறப்பது நன்று’.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
பேட்டியின் போது சீன வானொலியில் தமிழ்ப் பிரிவில் பணியாற்றும் சவுசின் என்பவர் உடன் இருந்தார். இவரும் தமிழ் மீதுள்ள பற்றினால், தனது பெயரை ஈஸ்வரி என்று மாற்றிக் கொண்டார். இவர் புதுச்சேரியில் தங்கி தமிழ் படித்து வருகிறார்.
SOURCE: THE HINDU
இந்திய சீன உறவை வளர்க்கும் கலைமகள்
இந்தியா–சீனா உறவை வளர்க்க பாடுபடுவேன்: சீன பெண் எழுத்தாளர்
இந்தியா–சீனா உறவை வளர்க்க பாடுபடுவேன் என்று சீன எழுத்தாளர் சாவோ ஜியாங் என்னும் கலைமகள் தமிழில் பேட்டி அளித்தார்.
சீன வானொலியின் தமிழ் பிரிவு தலைவரும், சீன எழுத்தாளருமான சாவோ ஜியாங் என்னும் கலைமகள் என்பவர் தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதற்காக வருகை தந்துள்ளார். அவர் நேற்று மாலை சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
சீன வானொலி 1911–ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அதில் தமிழ் பிரிவு தொடங்கி 50–வது ஆண்டு நிறைவு விழாவை கடந்த ஆண்டு (2013)–ல் பொன் விழாவாக கொண்டாடப்பட்டது. சீனாவில் தமிழக பிரிவு ஊடக சேவை என்பது மிகவும் அரிதான ஒன்றாகும்.
தமிழ் பிரிவின் செல்வாக்கு நாளுக்கு நாள் சீனாவில் அதிகரித்து வருகிறது. தமிழ் பிரிவு தொடங்கப்பட்டதன் நோக்கம், சீனா–இந்தியா நட்புறவை வளர்ப்பதுதான். சீன–தமிழ் வானொலி தொலை தொடர்பானது, சீன–தமிழக வணிக வாய்ப்பு மற்றும் சுற்றுலா துறையின் வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும். அதன் மூலம் தமிழகத்தில் உள்ள இயற்கை எழிலை சீனர்கள் பெரும் அளவில் கண்டு களிக்க நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம்.
சீனா தலைநகரம் பெய்ஜிங்கில், இந்திய உணவு விழா மற்றும் திரைப்பட விழாக்கள் நடைபெற்றன. இதனை தமிழ் பிரிவில் ஒளிபரப்பு செய்தோம். இந்த தமிழ் நிகழ்ச்சிகள் எண்ணற்ற சீனர்களை ஈர்த்துள்ளது.
கடந்த 2013–ம் ஆண்டு ஜனவரி திங்கள் சென்னையில் நடைபெற்ற 36–வது புத்தக கண்காட்சியில் ‘சீனாவில் இன்ப உலா’ என்ற புத்தகத்தை தமிழில் அச்சடித்து வெளியிட்டேன். இது ஒரு சீனர் தமிழில் எழுதி இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் தமிழ் மொழி புத்தகம் ஆகும். இது என்னுடைய தனிப்பட்ட பெருமையாகும். இதில் சீனாவை பற்றி விளக்கமாக எழுதி உள்ளேன்.
இதே போன்று சீனம்–தமிழ் மொழிகளுக்கிடையே நேரடி அகராதி இல்லாத நிலையில், கடந்த 2013–ம் ஆண்டு சீனாவில் உள்ள பிரபலமான அகராதி நிறுவனத்துடன் இணைந்து, சீனம்–தமிழ் கலைச் சொல் அகராதியை வெளியிட்டேன். இந்த அகராதியில் 27 ஆயிரம் சொற்கள் உள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.
அதைத் தொடர்ந்து நிருபர்கள் கேள்வி கேட்க தொடங்கினார்கள். அதற்கு அவர் ‘‘நான் சீனாவில் தமிழ் மொழி கற்றுள்ளேன். தமிழ் மொழி பிரிவில் வேலை செய்கிறேன். அங்கு தமிழ் பேசும் வாய்ப்பு மிகவும் குறைவு எனவே மிகவும் மெதுவாக கேள்விகளை கேளுங்கள்’’ என்று கூறினார்.
நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதன் விவரங்களும் வருமாறு:–
கேள்வி:– நீங்கள் தமிழ் கற்றுக் – கொள்ள காரணம் என்ன?
பதில்:– இந்திய வரலாறும், தமிழ் பண்பாடும் என்னை கவர்ந்ததால் தமிழ் கற்றுக்கொண்டேன்.
கேள்வி:– நீங்கள் தமிழ் மொழியை எங்கு கற்றீர்கள்?
பதில்:– சீன தகவல் தொடர்பு பல்கலைக்கழகத்தில் தமிழ் மொழி பயின்றேன். முதல் 2 வருடங்கள் சீன ஆசிரியர்களாலும், 3–ம் ஆண்டு 2 தமிழ் ஆசிரியர்களாலும் தமிழ் மொழி பயின்றேன்.
கேள்வி:– தமிழகத்தில் உங்களுக்கு பிடித்த அரசியல் தலைவர் யார்?
பதில்:– தமிழகத்தில் நீண்டநாள் வாழ்ந்த பிறகு தெரிவிக்கிறேன்.
கேள்வி:– தமிழகத்தில் உங்களுக்கு பிடித்த கவிஞர் யார்?
பதில்:– பாரதியார்.
கேள்வி:– வருங்காலத்தில் உங்கள் நோக்கம் என்ன?
பதில்:– சீனம்–தமிழ் மொழி ஒளிபரப்பை உலக அளவில் மிகவும் புகழ் பெற்றதாகவும், அருமையான ஒளிபரப்பாகவும் வளரச்செய்து, இந்தியா–சீனா இடையிலான உறவை வளர்க்க பாடுபடுவேன்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
பேட்டியின் போது, அவரது உதவியாளரான, புதுச்சேரியில் தங்கி இருந்து தமிழ் பயின்று வரும் ஷுவோ ஷின் (வயது 27) என்ற ஈஸ்வரியும் உடன் இருந்தார்.
சீன வானொலியில், தமிழ், இந்தி, வங்காளம், உருது ஆகிய 4 இந்திய மொழிகள் உள்பட 63 உலக மொழிகளில் ஒளிபரப்பு நடைபெற்று வருகிறது. அதில் தமிழ் மொழி ஒளிபரப்புக்கு மட்டுமே அதிக அளவிலான விமர்சன கடிதங்கள் வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கலைமகளாக மாறிய ஃஜவோ ஜியாங்
கலைமகளாக மாறிய ஃஜவோ ஜியாங்-குக்கு சென்னையில் பாராட்டு விழா பதிவு செய்த நாள் - ஜனவரி 17, 2014
சீன வானொலி நிலையம் தமிழ் ஒலிபரப்பு சேவையின் தலைவரான கலைமகள் என்கிற ஃஜவோ ஜியாங் (ZHAO JIANG) என்பவருக்கு சென்னையில் இன்று பாராட்டு விழா நடைபெற்றது.
கலைமகளின் தமிழ்ச் சேவையைப் பாராட்டி சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் இந்த பாராட்டு விழா நடைபெற்றது. இந்தப் பாராட்டு விழாவில் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
27,000 சொற்கள் கொண்ட சீன தமிழ் அகராதி என்று நூலை வெளியிட்டுள்ள கலைமகள், தமிழ் மேல் உள்ள பற்றாலும், தமிழர்களின் பண்பாட்டின் மேல் கொண்ட ஈடுபாடு காரணமாகவும் தமது பெயரைக் கலைமகள் என்று மாற்றிக் கொண்டுள்ளதாகக் கூறினார்.
சீன வானொலியின் தமிழ் ஒலிபரப்புச் சேவை மூலமாக இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே கலாச்சாரம் மற்றும் பண்பாடு ஒருங்கிணைப்பு நிகழ்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
கடந்த 1963ம் ஆண்டு சீன வானொலியில் தமிழ் ஒலிபரப்பு சேவை தொடங்கப்பட்டது. இந்த வானொலி சேவை கடந்த ஆண்டு பொன் விழாவைக் கொண்டாடியது என்பது குறிப்பிடத்தக்கது.
SOURCE: PUTHIYA THALAIMURAI
Monday, January 13, 2014
சீன வானொலி பொன்விழா மலர்
கடந்த 15 ஆண்டுகளில் முதல் முறையாக முழுவதும் வண்ணப் பக்கங்களில் நமது சர்வதேச வானொலி வெளியாவது இதுவே முதல் முறை. அதற்கு வழிவகுத்த சீன வானொலித் தமிழ் பிரிவுக்கும் நிச்சயமாக ஒரு நன்றியைக் கூறியே ஆக வேண்டும்.
சீன வானொலியின் பொன் விழா சிறப்பு கருத்தரங்கம் வரும் 25 ஜனவரி 2014 அன்று பெருந்துறையில் வைத்து நடைபெற உள்ளது. இதில் இந்த பொன் விழா மலர் வெளியிடப்பட உள்ளது. மலரின் அட்டைப் படத்தினைத் தான் இங்கே நீங்கள் பார்கிறீர்கள்.
நிச்சயம் உங்கள் அனைவருக்கும் இந்த இதழ் பிடிக்கும் என நம்புகிறோம். இந்த இதழ் வெளியாவதற்கு காரணமாக இருந்த சீன வானொலித் தமிழ் பிரிவின் அனைத்து பணியாளர்களுக்கும், குறிப்பாக தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி. கலைமகள் அவர்களுக்கு நன்றியினைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
Labels:
சீன வானொலி,
சீன வானொலி பொன்விழா,
திருமதி. கலைமகள்
Saturday, January 11, 2014
தமிழகத்தில் சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவர்
சீன வானொலித் தமிழ்ப் பிரிவின் தலைவர் திருமதி. கலைமகள் வரும் 17 ஜனவரி 2014 அன்று மாலை சென்னைப் புத்தகக் காட்சியில் பேச உள்ளார்கள். புத்தகக் காட்சி நடக்கும் இடம் நந்தனம் ஒய்.எம்.சி.ஏ மைதானம். இதில் சீன வானொலி நேயர்கள் அனைவரும் கலந்து கொள்ளலாம். கீழே புத்தக்காட்சியின் சிறப்பு இணைய தளம்...
22 ஜனவரி 2014 அன்று கோவையில் தமிழ் பண்பாட்டு மையம் ஏற்பாடு செய்துள்ள “சர்வதேச கருத்தரங்கில்” திருமதி. கலைமகள் பேச உள்ளார்கள்.
Thursday, January 09, 2014
டி.எக்ஸ் போட்டி முடிவுகள் - 2013
DX Quiz Results - 2013
Indian Winners and Runners
1. Alagiriswamy, Coimbatore – WRTH 2014
sponsored by World Radio TV Handbook, UK.
2. Vijay Krishna Bhat.D, Puttur – COBY
World Band analogue receiver by Radio Free Asia, USA.
3. Mittul Kansal, Haryana – Kchibo KK-C37
PLL Receiver by China Radio International, China.
4. Sabareeshwaran, Tirupur – WRTH 2013
Sponsored by Ohtake Toshi (JSWC), Japan.
5. Prithwiraj Purkayastha, Assam – WRTH
archive CD ROM by ADDX, Germany.
6. Sakthivel.S, Thasappa Koundan Puthur,
Erode - Kchibo PLL Receiver by China Radio International
7. Ganesan.M, Goa – Kchibo PLL Receiver by
China Radio International, China.
8. Ashok Kumar, Haryana – WRTH collector’s
edition by T.Elampooranan, Chennai.
9. Neelaveni Sivaraj.N, Idappadi, Selam – Let’s
Learn Chinese through Tamil, (6 Books+ 1 DVD) China Radio International, China.
10. Shanmugam.N.T., Thasappa Koundan
Puthur, Erode – Radio France International cap + DW Pendrive by RFI, DW,
Germany.
11. Muralidhar.M, Bangalore – ADXL-DL
T-shirt, RMRC Aktuel Magazine by ADXL, Germany.
12. Muhammad Shamim, Tiruvananthapuram –
RMRC Collectors QSL calendar + DRM logo Pen by RMRC club, Germany, DRM
Consortium, UK.
13. Vetrivel raj.S, Idappadi, Selam – DW
Pen drive by DW radio, Germany.
14. Shanmugasundaram.S, Madurai – Passport
to World Band Radio collector’s edition by Japan Premium, Japan.
15. Sivaraj.K.C, Idappadi, Selam – DW
T-shirt + DW Pennant by DW radio, Germany.
16. Santhosh Raj.S, Idappadi, Selam – RFA
Diary + Stick pad by RFA, USA, DW, Germany.
17. Sekar.P.S, Thalainayar, TN – DW big
Note book + Long wire antenna by DW radio Germany, CRI, China.
18. Sudarshan.S, Thasappa Koundan Puthur,
Erode – DW Note book by DW radio, Germany.
19. Vedamoorthi.S, Sivakasi – DW Cube game
+ DW Bag by DW radio, Germany.
20. Raju.K.M, Andarasan Patti, Dindigul –
DW Rummy cards, Stick pad, RMRC Pen.
21. Bedant Das, Assam – DW Memory game + DW
Pen by DW radio, Germany.
22. Mohanmed Ilyas, Hubli – DW Cube game +
DW Bag by DW radio, Germany.
23. Kathiresan.P, Madurai – DW Cube game by
DW radio, Germany.
24. Breshneve.K, Tirunelveli – DW Cube game
by DW radio, Germany.
25. Boopathi.M.C, Erode – DW Note Book by
DW radio, Germany.
26. Porunai Balu, Tirunelveli – RFA Diary +
RMRC Pen + DW Pennant by RFA, RMRC and DW.
27. Subramanian.A.M, Neyveli – DW writing
pads + DW Pen by DW radio, Germany.
28. Kumaran.V.S, Cuddalore – DW Diary + DW
Pen by DW radio, Germany.
International winners
29. Matthias Martin, Germany – British DX
Club B13 Booklet by BDXC, UK + Art of Radio special card by Radio
Heritage, New Zealand.
30. Kurt Enders, Germany – Domestic
broadcasting Survey by DSWCI, Denmark + Art of Radio special card by
Radio Heritage, New Zealand.
31.
Patrick Robic, Austria – British DX Club Communication
Magazine by BDXC, UK + Art of Radio special card by Radio Heritage, New
Zealand.
32.
Christian Ghibauda, France – EMWC’s Medium Wave Guide by
EMS, Germany + Art of Radio special card by
Radio Heritage, New Zealand.
33. Rudolf Sonntag, Germany – EMWC’s Medium Wave Guide by
EMS, Germany + DW Radio Pennant by DW Radio.
34. Stefan Druschke, Germany – Soft copy of One Year Dxers Guide by
ADXC, India.
35. Andreas
Muecklich, Germany – Soft copy of One Year Dxers Guide by ADXC,
India.
36. Kalaus Kohler, Germany – Soft copy of One Year Dxers Guide by ADXC, India.
37. Werner Reimers, Germany – Soft copy of One Year Dxers Guide by ADXC, India.
38. Arnold Heiles, Luxembourg – ADXC Special
QSL card.
39. Jose Roberto Da Silva Cunha, Brazil –
ADXC Special QSL card**.
*All
the entries received the Gyanvani Pennant, AIR 75th anniversary
pennant, Special QSL, Special First Day cover, Sticker, Calendar, Ardic DX Club
sticker.
**
Entry fee were not send.
Once again, we acknowledge with appreciation the many entries in this
year come from different parts of the world. Thank you for participating, and
we trust that you enjoyed participating as much as we did in perusing all of
the interesting entries. All entries will be acknowledged through the post, and
all reception reports will be verified, though it will take time, to process
them all.
Monday, January 06, 2014
அந்தமானில் வானொலி
சமூகத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் ஊடகங்களுள் வானொலிக்கென்று ஒரு தனி இடம் உண்டு.பாமரர்களுக்கும், எளியவர்களுக்கும் இதமானதொரு பொழுது போக்கும் என்று சொல்வதை விட பொழுதை ஆக்கும் ஒரு சாதனமாக வானொலி இருந்து வந்திருக்கிறது.இன்றும் அகில இந்திய வானொலி நிலையங்களின் தமிழ் நிகழ்ச்சிகள் தமிழ் வளர்க்கும் செவ்விய பணியில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இந்தியாவிலேயே அந்தமான் நிகோபார் ஒன்றியப்பகுதியில் தான் ஏழு மொழிகளில் ஒலிபரப்பும் அகில இந்திய வானொலி நிலையம் உள்ளது.1963,ஜூன் 2ம் நாள் தனது முதல் ஒலிபரப்பை ஆரம்பித்த இந்த நிலையத்தில் ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, நிகோபாரி, மலையாளம், வங்காளம் ஆகிய மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படுகிறது.அந்தமான் வானொலி நிலையத்தில் பண்பலை ஒலிபரப்பு செய்யப்படுவதில்லை.புதுமையான நிகழ்ச்சிகளை நேயர்களின் ரசனைக்கேற்றவாறு கொடுப்பதாகச்சொல்லி தனித் தமிழ் நடையிலிருந்து தடம் மாற்றி வழங்கப்படும் பண்பலை நிகழ்ச்சிகள் தமிழ் கூர் நல்லுலகிற்கு நன்மையைச்செய்யவில்லை என்பதே உண்மை.
அந்தமான் வானொலியில் முதன் முதலில் 1965ம் ஆண்டிலிருந்து தமிழ் நிகழ்ச்சிகளை வழங்கி வருகிறது.இந்நிலையத்தின் முதல் அறிவிப்பாளர் திரு.S.D.ராஜன் அவர்கள்.அப்போதெல்லாம் காலை 7மணி முதல் 7.15 மணி வரை தமிழ் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பாயின.அதன் பிறகு வட்டார மொழிகள் நிகழ்ச்சிக்கு 30 நிமிடங்கள் ஒதுக்கப்பட்டு ஒலிபரப்பப்படுகிறது.அந்தமானில் எங்கு தமிழ் நிகழ்ச்சிகள் நடந்தாலும் ஒலிப்பதிவு செய்து ஒலிபரப்புவது வழக்கம். அந்தமான் கிராமப்பகுதிகளில் நேரடியாகச்சென்று தமிழ் மக்களைச்சந்தித்து ஒலிப்பதிவு செய்து வந்து ஒலிபரப்பும் பழக்கமும் உண்டு.1993ம் ஆண்டு பதினாறு கவனகர் கனக சுப்புரத்தினம் அவர்கள் தீவுகளுக்கு வருகை தந்திருந்த போது, வானொலி நிலைய நிகழ்ச்சிக்கு வருகை தந்திருந்தார்.அப்போது பார்வையாளர் பகுதியிலிருந்து திரு மா.அய்யா ராஜு அவர்கள் (தற்போது அந்தமான் கல்விதுறையின் துணை இயக்குனர்) ,'போர்ட் பிளேயர் வானொலியைப்போற்று' என்ற ஈற்றடியை நல்க கவனகர் திரு கனக சுப்புரத்தினம் அவர்கள்,
அக்கரைநம் இந்தியத்தின் ஆன்ற மொழிகளில்
மக்கள் வியக்கும் நிகழ்ச்சிகளை - அக்கறையாய்
வார்த்தே வழங்கி வளங்கள் குவித்திடும்
போர்ட் பிளேயர் வானொலியைப்போற்று'
என்ற அழகான வெண்பாவினை இயற்றிப்பாடினார்.அந்தமானில் ஒவ்வொரு வருடமும் 'தீவுக் கண்காட்சி' நடைபெறும்.இக்கண்காட்சியில் பங்கு பெற நாட்டின் எல்லா மாநிலங்களிலிருந்தும் தீவுகளின் நிர்வாகத்தினர் நாட்டுப்புறக்கலைஞர்களை வரவழைப்பர்.அவர்களிடமும் தமிழ் நிகழ்ச்சிகளுக்கென ஒலிப்பதிவு செய்வதுண்டு.
இன்று செவ்வாய்க்கிழமைகளில் மகளீர் மட்டும் - பெண்களுக்கான நிகழ்ச்சி,வியாழக்கிழமை தோறும் வேளாண் உலகம், வெள்ளிக்கிழமைகளில் இலக்கியச்சோலை,சனிக்கிழமைகளில் சிறுவர் பூங்கா,இளைய பாரதம் ஆகியன ஒலிபரப்பபடுகிறது.பிற மொழிக்கலப்பின்றி நல்ல தமிழில் நிகழ்ச்சிகள் ஒலிபரப்பப்படுகின்றன.இங்குள்ள கவிஞர்கள்,எழுத்தாளர்கள் அனைவரையும் பட்டை தீட்டியது அந்தமான் வானொலி நிலையத்தின் தமிழ்ப்பிரிவு என்று சொன்னால் அது மிகையாகாது.
இதோடு வாரத்தில் இரண்டு நாள் வெள்ளி மற்றும் ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை மணி 6.15 முதல் 6.30 வரை தமிழில்,'பக்தி மாலை' நிகழ்ச்சி ஒலிபரப்பாகும்.முன்னாட்களில் இசைத்தட்டுகளை எடுத்து வைத்துவிட்டு வந்துவிட்டால் இந்தி அறிவிப்பாளர்கள் ஒலிபரப்புவார்கள்.ஆனால் நிகழ்ச்சி பொறுப்பாளராக ஐயா தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் அவர்கள்பொறுப்பேற்ற பின், ' அதென்ன,மொழி தெரியாத ஒரு ஆளு தமிழ்ல பக்தி பாட்ட போடுறது. அப்டிப் போகக் கூடாது' என்று கூறிய நாள்முதல் தமிழில் அழகுற தொகுப்புரை வழங்கி பாடல்களை ஒலிபரப்பினார். அவரது கவனிப்பில் தமிழ்,தெலுங்கு,மலையாளம் என்று மூன்று தென்னிந்திய மொழிகள் பிரிவும் இருந்தன.இன்றும் மூன்று பிரிவுகளிலும் பக்தி மாலை நிகழ்ச்சி இப்படித்தான் போகிறது.மார்கழி மாதத்தில் திருப்பாவை,திரு வெம்பாவை விளக்க உரையுடன்,நவராத்திரி தினங்களில் நவராத்திரி பாடல்கள்,இஸ்லாமிய,கிறித்துவ பன்டிகைகளின் போது உரிய விளக்க உரைகளுடன் பக்திமாலை நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது.எங்கள் ஒவ்வொருவரிடமும் கீதை,குரான்,பைபிள் புத்தகங்கள் இருக்கும்.
1993ல் முசிறி டி.வீராச்சாமி அவர்கள், சிதம்பரம்.ஏ.சுவாமிநாதன் அவர்கள் இருந்தார்கள்.அவர்கள் இருந்த காலம் அந்தமான் வானொலித் தமிழ்ப் பிரிவின் பொற்காலம்.அதன் பிறகு அந்தப்பொற்காலம் 2001 ம் ஆண்டு தான் திரும்பியது.நிகழ்ச்சி பொறுப்பாளராக ஐயா தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் அவர்கள் வந்த பிறகு யார் யாருக்கு திறமை இருக்கிறதோ அவர்கள் வானொலி நிகழ்ச்சி வழங்க வாருங்கள் என்று அழைக்கவில்லை.யார் யாருக்கெல்லாம் ஆசை இருக்கிறதோ வாருங்கள் என்று அழைப்பு விடுத்தார். தமிழ்நாட்டிலிருந்து புத்தங்கள் வரவழைத்து அவரவர் ஆர்வத்திற்கு ஏற்றபடி புத்தகங்களைக் கொடுத்தனுப்பி பிறகு எழுதிவரச்சொல்லி வாசித்துக்காட்டச்சொல்லி உச்சரிப்பைச்சரிசெய்து ஒலிப்பதிவு செய்ய எங்களைப் பணிப்பார்.உச்சரிப்பு சரியில்லாது நாங்கள் ஒலிப்பதிவு செய்து விட்டால் யார் நிகழ்ச்சியை ஒலிப்பதிவு செய்தார்களோ அவர் தான் மீண்டும் சம்பந்தப்பட்டவரை வரச்சொல்லி ஒலிப்பதிவு செய்யவேண்டும்.அவர் வந்த பிறகு தான் தீவின் தமிழ்ப் பெரியவர்களை அழைத்து 'இவர்களைச்சந்தியுங்கள்' என்ற நிகழ்ச்சியின் மூலம் அவர்கள் தீவுத் தமிழர்களுக்கு ஆற்றிய பணிகளை வெளியுலகம் அறியும்படி செய்தார்.'ரசிகர் தேன் கிண்ணம்' என்ற நிகழ்ச்சியின் மூலம் படிக்காதவர்களையும் பங்கு கொள்ள வைத்தார். தங்கள் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவங்கள் சில திரைப்பட பாடல்களை நினைவூட்டுமில்லையா? அப்படிபட்ட பாடல்களைப் நேயர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று சொல்லி இல்லத்தரசிகள் பலரைப் பங்கு பெறச்செய்தார்.இவரது பணிக்காலத்தில் நிறைய கவிதைகள்,கவியரங்கங்கள்,வரலாற்று,சமூக,நகைச்சுவை நாடகங்கள்,குழந்தைகள், மகளீர் மற்றும் மருத்துவ நிகழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்யப்பட்டு காற்றலைகளில் கலந்தன.தமிழர் சங்கத்துடன் நெருங்கிய தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார்.இன்றொரு தகவல் புகழ் அமரர். தென் கச்சி சுவாமிநாதன் அவர்கள்,நடிகர்.எஸ்.வீ.சேகர் அவர்கள்,இயக்குனர் ஆர்.கே.செல்வமணி அவர்கள் மற்றும் பல பிரமுகர்கள் தீவுக்கு வருகை தந்த போது வானொலிக்கென நிக்ழ்ச்சிகள் ஒலிப்பதிவு செய்தார். 2001ம் ஆண்டில் தெய்வத்திரு இலஞ்சி நடராஜன் ஐயா அவர்கள் தனது பெரு முயற்சியாலும் மற்றும் பல தமிழ்ப்பெருமக்களின் ஆதரவோடும்,'கம்பன் கழகத்தை'த் தொடங்கினார்.தமிழ்நாட்டின் கம்பன் கழக அமைப்புகளுடன் தொடர்பு கொண்டு கம்பராமாயணம் சம்பந்தப்பட்ட புத்தங்களை வரவழைத்து கம்பன் கழக உறுப்பினர்களுக்கு வழங்கி,ஒவ்வொரு சனிக்கிழமை மாலை கம்பன் கழகக்கூட்டங்களை ஏற்பாடு செய்து,உறுப்பினர்களுக்கு ஒவ்வொரு தலைப்பு கொடுத்து அவர்களை உரையாற்ற வைத்து ஒலிப்பதிவு செய்து வானொலியில் ஒலிபரப்பினார்.இலஞ்சி நடராஜன் ஐயா அவர்கள் மாற்றலாகிப் போன சில காலத்தில் கம்பன் கழகம் காணாமல் போய்விட்டது வருத்தத்திற்குரியது.
அவருக்குப்பிறகு நிகழ்ச்சி பொறுப்பாளராக உயர்திரு.ராமஸ்வாமி சுதர்சன் அவர்கள் வந்து நேரடித்தொலை பேசி நிகழ்ச்சிகளை அறிமுகம் செய்தார். நாடகங்கள் பலவற்றில் நடித்து, ஒலிப்பதிவு செய்து,அழகுற வடிவாக்கம் செய்தார்.அவர் நாடகங்கள் ஒத்திகை செய்யும் போது எங்களை சரியாக நிமிர்த்திவிடுவார். அவர் வசனம் வரும் போது வாசித்துக்காட்டுவார். என்ன நம்மை இப்படி வேலை வாங்கிவிட்டு இவர் வாசிக்கிறார் என்று நினைத்தோம்.முதல் நாடகம் இந்திர விழா என்ற வரலாற்று நாடகம்.ஓ.கேம்மா!.டேக்! என்பார்.ஒலிப்பதிவு செய்யும் போது ஒலிவாங்கியைக் கையில் பிடித்து ஆடாமல் அசையாமல் ஒலியிலும் உச்சரிப்பிலும் வர்ண ஜாலம் காட்டுவதைப்பார்த்து எங்கள் வசனம் மறந்துவிட்டது.ஒரு நாடகத்தில் இவர் எதிர்பார்த்த தரம் கிடைக்காது போக இவரே நான்கு வேடம் ஏற்று நடித்ததும் உண்டு.
அடுத்து வந்த உயர்திரு.ராமச்சந்திரன் அவர்களால் இவர்கள் அளவு பிரகாசிக்க முடியாது போனது எங்களது துரதிர்ஷ்டம்.அந்தமான் வானொலித் தமிழ்ப்பிரிவிற்கு விடியல் எப்போது? காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.பல ஜாம்பவான்கள் அலங்கரித்த நிகழ்ச்சிப் பொறுப்பாளர் பதவி நிரப்பப்படாது இருப்பதால் தமிழ்ப்பிரிவு வேற்று மொழி மேலதிகாரிகளின் கீழ் தற்காலிக அறிவிப்பளர்களான எங்கள் பொறுப்பில் தான் இருக்கிறது. எங்களின் திறமையின் எல்லை எவ்வளவோ அதுவரை தான் தமிழ்ப்பிரிவின் செயல் பாடுகளும் உள்ளது.நிரந்தரமற்ற பணியில் இருக்கும் எங்களுக்கு எவ்வளவு சுதந்திரம் கொடுக்கப்பட்டுள்ளதோ அதற்குள் தான் சுற்றிச்சுழல வேண்டியுள்ளது.நாங்கள் எல்லோருமே வெவ்வேறு துறைகளில் இருக்கிறோம்.அது வயிற்றுக்கு. இது உயிருக்கு.இருந்தாலும் வேற்று மொழி மேலதிகாரிகள் அலுவலகச்சட்டதிட்டங்களுக்குட்பட்டு என்ன உதவி செய்யமுடியுமோ அதை வட்டார மொழிப்பிரிவுகளுக்கு வழங்கி வருகிறார்கள்.
கடந்த மாதம் அந்தமான் தமிழர் சங்கத்தில் நடை பெற்ற வி.ஜி.பி.உலகத்தமிழ்ச்சங்கமும்,அந்தமான் தமிழர் சங்கமும் இணைந்து நடத்தியபிரம்மாண்ட 9வது திருக்குறள் மாநாட்டில் நடைபெற்ற நிகழ்ச்சிகளை இரண்டு நாட்கள் ஒலிப்பதிவு செய்தோம். தமிழ் நாட்டில் இருந்து வருகை தந்திருந்த பெருமக்கள் அனைவரின் உரைக்கோவைகள், கவிதைகள், பட்டிமன்றங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து பிறகு கணிப்பொறிக்கு அதை மாற்றி,வெட்டி,ஒட்டி வானொலிக்கேற்ற வடிவமாக்கி, இரண்டு நாள் நிகழ்ச்சிகளை ஒரு நாள் வானொலித்தொகுப்பாக, மற்ற நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிக்கேற்றவாறு ஒலிபரப்பு செய்கிறோம்.தூரத்தீவுகளில் இருக்கும் நேயர்களுக்கு வானொலி நிகழ்ச்சிகள் தலை நகர் நிகழ்வுகளைத் தெரிந்து கொள்ள உதவும் ஒரு கருவி. ஆகவே எந்த ஊதியமும் எதிர்பாராது,இது போன்ற தருணங்களை எங்களுக்குக் கிடைத்த வாய்ப்புகளாகக் கருதி ஆர்வமுடன் செய்து வருகிறோம்.
அந்தமான் வானொலித் தமிழ்ப்பிரிவு ஒரு விடியலை நோக்கிக் காத்திருக்கிறது.
நன்றி: க.நா.சாந்தி லெட்சுமணன்.
http://andamantamizhosai.blogspot.in

Subscribe to:
Posts (Atom)