அகில இந்திய வானொலி நிலையத்தின் மூலம் வழங்கப்படும் செய்தி தொகுப்புகளை தனியார் எஃப்.எம். வானொலிகளில் ஒலிபரப்ப அனுமதி வழங்குவது குறித்து மத்திய அரசு பரிசீலித்து வருவதாக மத்திய தகவல், ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் தில்லியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசியதாவது: தனியார் எஃப்.எம். வானொலிகளில் தற்போது போக்குவரத்து தொடர்பான தகவல்கள், அரசு அறிவிப்புகள் ஆகியவை மட்டுமே ஒலிபரப்ப அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
செய்திகளைப் பொருத்தவரை அகில இந்திய வானொலியின் செய்தி தொகுப்பை ஒலிபரப்ப எஃப்.எம். வானொலிகளுக்கு அனுமதியளிக்கப்படும். செய்தி தேவைப்படும் எஃப்.எம். வானொலிகள், அகில இந்திய வானொலியிடமிருந்து செய்திகளைப் பெற்றுக் கொள்ளலாம். அதற்கு அவர்களிடமிருந்து கட்டணம் வசூலிக்கப்படும் என்று ஜாவடேகர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment