தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதை உலகுக்கு உணர்த்திய அறிவியலறிஞர், ஜெகதீஷ் சந்திர போஸ், 1858-ம் ஆண்டு இதே நாளில்தான் பிறந்தார். தற்போதைய பங்களாதேஷின் பிர்காம்பூர் என்ற ஊரில், பிறந்தார் ஜெகதீஷ் சந்திரபோஸ். ஜெகதீஷின் தந்தை பகவான் சந்திரபோஸ், இவர் பரித்பூரின் காவல் துணை ஆணையராக பணிபுரிந்தவர்.
கொல்கத்தாவில் உயர் நிலைப்பள்ளிப் படிப்பை முடித்த போஸ், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டத்தை முடித்தார். 1885 - ல் நாடு திரும்பிய ஜெகதீஷ், சென்னை மாநிலக் கல்லூரியில் இயற்பியல் துறையில் பேராசிரியராக பணியில் சேர்ந்தார். அக்கல்லூரியில், முதல்முதலில் இயற்பியல் துறைக்கு செய்முறை கூடம் அமைத்தார் போஸ்.
பின்னர், அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஈடுபட்ட போஸ், 1893 - ல் வானொலி கண்டுபிடிப்புக்கான ஆய்வுகளை தொடங்கினார். 1897- ம் ஆண்டு கொல்கத்தாவில் வானொலிக்கான ஆய்வு முழுமைப் பெற்றது. இதே காலகட்டத்தில், மார்கோனியும் வானொலி கண்டுபிடிப்பில் ஈடுபட்டிருந்தார்.
வானொலி கண்டுபிடிப்பைப் பற்றி இருவரும் லண்டனில் விவாதித்தும் இருந்தனர். எனினும், மார்கோனி தான் வானொலி கண்டுபிடித்தறக்கான காப்புரிமையைப் பெற்று, வானொலி கண்டுபிடித்தவர் என்ற பெருமையைப் பெற்றார்.
இயற்பியல் தவிர, தாவரவியலிலும் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்ட போஸ், 1927 - ம் ஆண்டு தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்பதைக் கண்டுபிடித்தார். இயற்பியல் மற்றும் தாவரவியலில் பல்வேறு ஆய்வுகள் செய்து வெற்றி கண்ட போஸ், 1937-ம் ஆண்டு உயிரிழந்தார்.
No comments:
Post a Comment