இலங்கையின் இஸ்லாமிய ஊடக நிறுவனமான “தேசிய நியுஸ் ஏஜென்சி ” இன்று உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
கொழும்பு கிங்ஸ்பெரி ஹோட்டலில் ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் இடம் பெற்ற நிகழ்வில் பிரதம அதிதியாக பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும் கௌரவ அதிதிகளாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரிய, அமைச்சர்களான றிஷாட் பதியுதீன், ரவுப் ஹக்கீம், உட்பட பல பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், விஷேட அதிதியாக சர்வதேச மனிதவள அபிவிருத்திக்கான அமைப்பின் இந்திய உப கண்டத்திற்கான பொறுப்பாளர் அஷ் ஷெய்க். காலித்பின் சாலிஹ் அல்-தாவூத் கொழும்பு மாநகர முதல்வர் ஏ.ஜே.எம்.முஸம்மில், சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விமான்கள், இலங்கையில் உள்ள தூதுவராலயங்களின் தூதுவர்கள், பிரதிநிதிகள், ஊடகவியலாளர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
“செரண்டிப்” எனும் பெயரில் தமது ஊடகத்தை ஆரம்பித்துள்ள “தேசிய நியுஸ் ஏஜென்சி ” இன்று முதல் செரண்டிப் தினசரி பத்திகை ஒன்றை வெளியிடவிருக்கும் அதேவேளை “செரண்டிப் கேர்பில் தொலைக்காட்சி மற்றும் செரண்டிப் இணைய வானொலி ஒன்றையும் ஆரம்பித்துள்ளார்.
மேற்படி நிகழ்வில் வரவேற்புரையை முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவர் என்.எம்.அமீனும் தலைமை உரையை ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபாவும் நிகழ்த்தினர்.
இதன்போது இணைய தொலைக்காட்சி சேவையை அமைச்சர் பஷில் ராஜபக்ஷவும், இணைய வானொலி சேiவையை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் கரு ஜெயசூரியவும், பத்திரிகை வெளியீட்டினை உலக முஸ்லிம் முன்னணியின் தலைவர் அஷ் ஷெய்க். காலித்பின் சாலிஹ் அல்-தாவூத் ஆகியோரும் உத்தியோக பூர்வமாக வெளியிட்டு வைத்தனர். (ஸ)
தகவல்/ http://dailyceylon.com/ 16/12/2014
No comments:
Post a Comment