டெல்லியில் உள்ள அகில இந்திய வானொலி நிலைய வளாகத்தினுள் போலீஸார் அத்துமீறிய நிலையில் அவர்கள் மீது பாதுகாப்புப் படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். உச்சகட்ட பாதுகாப்பை மீறி இத்தகைய சம்பவம் நடந்தது அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது இது குறித்து டெல்லியைச் சேர்ந்த மூத்த போலீஸ் அதிகாரி கூறும்போது, "இன்று காலை 3 மணிக்கு, அங்கித் குமார் மற்றும் இன்னொரு போலீஸார் ஆகியோர் குடிபோதையில் காரில் வந்து, பூட்டி இருந்த நுழைவு வாயில் கதவை உடைத்து முன்னேறிய நிலையில், அவர்களை தீவிரவாதிகள் என நினைத்து பாதுகாப்பு பணியில் இருந்த நாகாலாந்து போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். http://m.tamil.thehindu.com/india/%E0%AE%85%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%88%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%80%E0%AE%B8%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B1%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7392147.ece |
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Wednesday, July 22, 2015
அகில இந்திய வானொலி நிலையத்தில் போலீஸார் அத்துமீறல்: துப்பாக்கிச்சூட்டால் பரபரப்பு
எப்.எம். வானொலி ஏலத்தில் சன் குழுமத்தை அனுமதிக்கக் கோரி வழக்கு: தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
பண்பலை வானொலி (எப்.எம்) நிலையங்களுக்கான ஏலத்தில் பங்கேற்க சன் குழுமத்தை அனுமதிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது. இது குறித்த விவரம்: பண்பலை வானொலி நிலையங்களை நடத்துவதற்கான அனுமதியை மத்திய அரசு ஏலம் மூலம் ஒதுக்குகிறது. இந்நிலையில், இந்த ஏலத்தில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள், தங்களது விண்ணப்பங்களை மத்திய செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்தன. http://www.dinamani.com/india/2015/07/21/%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D.%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D.-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8A%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%8F%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95/article2932717.ece |
Wednesday, July 15, 2015
ஒலி 96.8இன் பாமாவுக்கு அமைச்சர் சண்முகம் இரங்கல்
மீடியாகார்ப் ஒலி 96.8இன் மூத்த தயாரிப்பாளர் பாமா பாலகிருஷ்ணன் காலமானது குறித்து அமைச்சர் சண்முகம் வருத்தம் தெரிவித்திருக்கிறார். நீ சூன் குழுத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான அமைச்சர் சண்முகம், தமது வட்டாரத்தில் திருமதி பாமா குடியிருந்ததை ஃபேஸ்புக் பதிவில் சுட்டினார்.
சிங்கப்பூரின் முதல் பிரதமர் அமரர் திரு லீ குவான் இயூவிற்காக நீ சூனில் அமைக்கப்பட்டிருந்த சமூக அஞ்சலித்தளத்தில் திருமதி பாமாவைச் சந்தித்ததாக திரு சண்முகம் கூறினார். திரு லீயைப் பற்றி திருமதி பாமா மிக உருக்கமாய் உரையாற்றியதாக அவர் சொன்னார். துடிப்பும் வசீகரமும் நிறைந்த திருமதி பாமாவின் குரல் ஒலி 96.8இன் நேயர்களுக்குப் பல நேரங்களில் ஆறுதலாய் அமைந்திருந்ததாகக் கூறினார் திரு சண்முகம்.
இந்தியச் சமூகத்தில் பிரபலமாகத் திகழ்ந்த திருமதி பாமா, சமூகப் பணிகளுக்கு ஆதரவாளராக இருந்ததையும் வானொலி வழியே பலருக்கு அறிவுரைகளும் ஆலோசனைகளும் கூறியதையும் அவர் சுட்டினார். பாமாவின் மென்மையான இயல்பே பலரையும் ஈர்த்தது. பாமாவின் மறைவு, வானலைகளில் மட்டுமல்லாமல் பலரின் மனங்களிலும் வெற்றிடத்தை ஏற்படுத்தியிருப்பதாக நெகிழ்ந்தார் திரு. சண்முகம்.
திருமதி பாமா பாலகிருஷ்ணனின் இறுதிச்சடங்கு இன்று மண்டாய் தகனச்சாலையில் நடைபெறும்.
Source: http://seithi.mediacorp.sg/
Wednesday, July 08, 2015
பண்பலை வானொலி நிலையத்தில் நடந்த பாபநாசம் இசை வெளியீட்டு விழா!
கமல்ஹாஸன் நடித்துள்ள பாபநாசம் படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் பண்பலை வானொலி நிலையத்தில் இன்று நடந்தது. மலையாளத்தில் உருவாகி வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் இந்தியாவின் முன்னணி மொழி சினிமாக்களில் ரீமேக் செய்யப்பட்டு, வெற்றியடைந்து வருகிறது. கன்னடத்திலும், தெலுங்கிலும் இந்தப் படம் சிறப்பான வெற்றியைப் பெற்றது.
Read more at: http://tamil.filmibeat.com/music/papanasam-audio-launched-at-fm-station-035299.html
Read more at: http://tamil.filmibeat.com/music/papanasam-audio-launched-at-fm-station-035299.html
Tuesday, July 07, 2015
Friday, July 03, 2015
Voice of Greece back on short wave
வாய்ஸ் ஆஃப் கிரீஸ் மீண்டும் சிற்றலைவரிசையில் தனது ஒலிபரப்பினைத் தொடங்கியது. Voice of Greece in Greek in 0900-1400UT time slot on July 2: till 1200 on 9420 AVL 170 kW / 323 deg to WeEu, at 0905 frequency schedule* till 1202 on 11645 AVL 100 kW / 182 deg to NoAf, terrible audio, with hum tone from 1200 on 9420 AVL 170 kW / 323 deg to WeEu, at 1201UT frequency schedule* from 1207 on 9935 AVL 100 kW / 285 deg to WeEu, terrible audio, with hum tone *announcement of frequencies 9420 to WeEu/NoAm,11645 to NoAf,9935 to WeEu/NoAm Both frequencies are off around 1410 UTC and back again on air around 1440 UTC http://swldxbulgaria.blogspot.com/2015/07/voice-of-greece-in-greek-in-0900-1400ut.html |
Georgia Shifts to Digital Broadcasting
ஜார்ஜிய வானொலி டிஜிட்டல் தொலைக்காட்சி ஒலிபரப்புக்கு மாற்றம் Natia Mikeladze, the Deputy Minister of the Ministry of Economy and Sustainable Development reported that the regions of Tbilisi, Sagarejo, Kojori, Marneuli and Rustavi have shifted to digital broadcasting as of July 1, adding that the remianing regions will shift to the new system by August 25th. http://georgiatoday.ge/news/482/Georgia-Shifts-to-Digital-Broadcasting |
Radio Iceland Saved From The Brink
ரேடியோ ஐஸ்லாந்து நிறுத்தப்படுவதில் இருந்து தப்பித்தது! Radio Iceland – an English-language radio station in Iceland – was saved from having to go off the air by a mystery investor. Only yesterday, Radio Icelandannounced that they would have to go off the air, owing to revenue not being able to meet monthly expenses. This would have been a short life for the station, which first went on the air last February 16 on a mission to provide non-Icelandic speakers with a source for news and information on the radio. http://grapevine.is/news/2015/07/01/radio-iceland-saved-from-the-brink/ |
BBC will make job cuts
பட்ஜெட் குறைப்பு காரணமாக பிபிசியில் 1000 பணியாளர்கள் வரை வேலை இழக்கும் அபாயம்! The BBC will make cuts due to a budget shortfall. Shortwave not mentioned, but I suspect more reductions are on the way. This was also reported on BBCWS as the last item in the 1200 newscast July 2. http://www.bbc.com/news/entertainment-arts-33363225 Stephen Luce Houston, Texas |
Wednesday, July 01, 2015
தூர்தர்சனின் பிரசார் பாரதி குழுவில் நடிகை கஜோல்: மத்திய அரசு சிபாரிசு
மத்திய தகவல் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் அகில இந்திய வானொலி மற்றும் தூர்தசன் டெலிவிஷனுக்கு நிகழ்ச்சிகள் தொடர்பான ஆலோசனைகள் வழங்க ‘பிரசார் பாரதி போர்டு’ என்ற அமைப்பு செயல்பட்டு வருகிறது. ‘பிரசார் பாரதி‘யானது தூர்தர்சன் தவிர, நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் நடிப்பு பயிற்சி கல்லூரிகளையும் நிர்வகித்து வருகிறது.
‘பிரசார் பாரதி’ போர்டில் தலைவர், முதன்மை நிர்வாக அதிகாரி, தனி உறுப்பினர் மற்றும் 6 பகுதி நேர உறுப்பினர்களும், தகவல் – ஒலிபரப்பு அமைச்சக பிரதிநிதி, அகில இந்திய வானொலி, தூர்தர்சன் முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது ‘பிரசார் பாரதி’ பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஜே.என். தீட்சித்தின் மகள் தீபா தீட்சித், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலான ராஜாஜியின் பேரன் கே.ஆர்.கேசவன் ஆகியோர் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ராஜினாமா செய்தனர். இவர்கள் தவிர மேலும் 2 உறுப்பினர்கள் பதவியும் காலியாக உள்ளது.
இதையடுத்து காலியாக உள்ள 4 இடங்களுக்கு 7 பேர் கொண்ட பெயர் பட்டியலை மத்திய தகவல் – ஒலிபரப்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதில் நடிகை கஜோல் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரபல பஜன் பாடகர் அனுப் ஜவோட்டா, வாஜ்பாயின் மீடியா ஆலோசகர் அசோக் தாண்டன், மூத்த பத்திரிகையாளர் மின்ஹஸ் மெர்ச்சன்ட் ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளனர்.
இன்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் பிரஸ் கவுன்சில் தலைவர் ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பிரசார் பாரதி உறுப்பினர்கள் 4 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
‘பிரசார் பாரதி’ போர்டில் தலைவர், முதன்மை நிர்வாக அதிகாரி, தனி உறுப்பினர் மற்றும் 6 பகுதி நேர உறுப்பினர்களும், தகவல் – ஒலிபரப்பு அமைச்சக பிரதிநிதி, அகில இந்திய வானொலி, தூர்தர்சன் முன்னாள் அதிகாரிகள் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். மத்தியில் காங்கிரஸ் கூட்டணி ஆட்சியின் போது ‘பிரசார் பாரதி’ பகுதி நேர உறுப்பினர்களாக நியமிக்கப்பட்ட முன்னாள் வெளியுறவுத் துறை செயலாளர் ஜே.என். தீட்சித்தின் மகள் தீபா தீட்சித், இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலான ராஜாஜியின் பேரன் கே.ஆர்.கேசவன் ஆகியோர் பா.ஜனதா ஆட்சிக்கு வந்ததும் ராஜினாமா செய்தனர். இவர்கள் தவிர மேலும் 2 உறுப்பினர்கள் பதவியும் காலியாக உள்ளது.
இதையடுத்து காலியாக உள்ள 4 இடங்களுக்கு 7 பேர் கொண்ட பெயர் பட்டியலை மத்திய தகவல் – ஒலிபரப்பு அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இதில் நடிகை கஜோல் பெயரும் இடம் பெற்றுள்ளது. மேலும் பிரபல பஜன் பாடகர் அனுப் ஜவோட்டா, வாஜ்பாயின் மீடியா ஆலோசகர் அசோக் தாண்டன், மூத்த பத்திரிகையாளர் மின்ஹஸ் மெர்ச்சன்ட் ஆகியோர் பெயரும் இடம் பெற்றுள்ளனர்.
இன்று தகவல் தொடர்பு அமைச்சகத்தின் செயலாளர் மற்றும் பிரஸ் கவுன்சில் தலைவர் ஆகியோர் தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் பிரசார் பாரதி உறுப்பினர்கள் 4 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.
Source: maalaimalar.com
Subscribe to:
Posts (Atom)