Showing posts with label பண்பலை வானொலி. Show all posts
Showing posts with label பண்பலை வானொலி. Show all posts

Monday, December 17, 2018

காரைக்கால் வானொலி

 
காரைக்கால் அகில இந்திய வானொலி நிலையத்தின் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவையை மாவட்ட ஆட்சியர் திங்கள்கிழமை தொடங்கிவைத்தார்.

காரைக்கால் பண்பலை வானொலி (100.3) ஒலிபரப்புத் திறன் 6 கிலோ வாட்டிலிருந்து 10 கிலோ வாட்டாக திங்கள்கிழமை முதல் அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையை தொடங்கிவைக்கும் நிகழ்ச்சி நிலைய வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட ஆட்சியர் ஆர். கேசவன் கலந்துகொண்டு, நிலைய கட்டுப்பாட்டு அறையில் புதிய கூடுதல் திறனை மக்களின் பயன்பாட்டுக்குத் தொடங்கிவைத்தார்.
நிலைய நேரடி நிகழ்ச்சியில், நேயர்களிடையே ஆட்சியர் பேசினார். காரைக்கால் வானொலி நிலையத்தில் ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு செய்ததன் மூலம் பல மாவட்டங்களைச் சேர்ந்த நேயர்கள் நல்ல பயனை அடைவார்கள். கஜா புயலின்போது, காரைக்கால் வானொலியின் சேவை மிகுந்த பாராட்டுக்குரியது.
தொடர்ந்து புயல் குறித்து பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தியதன் மூலம் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது. வானொலி நிலையத்தின் பணி வரவேற்புக்குரியதாக இருந்தது. தொடர்ந்து அரசின் நலத் திட்டங்களின் மூலம் மக்கள் பயன்பெறும் வகையில் சேவையை தொடர்ந்து செய்ய வேண்டும். ஒலிபரப்புத் திறன் அதிகரிப்பு சேவை வெற்றிபெற வாழ்த்துவதாக நிகழ்ச்சியின்போது ஆட்சியர் குறிப்பிட்டார்.

விரிவாக படிக்க

Wednesday, August 15, 2018

இந்தியாவில் 347 வானொலிகள்


 இந்தியாவில் தனியார் துறை பண்பலை வானொலிகள் 2000-த்திற்கு பிறகே வந்தன. இன்று இவை பொதுத் துறை வானொலிகளுக்கு சவால் விடும் அளவுக்கு தனது ஒலிபரப்புகளை செய்து வருகின்றன. 2018 ஜூலை 23-ன் கணக்கின் படி இந்தியாவில் 347 வானொலிகள் ஒலிபரப்பாகி வருகின்றன. இவற்றில் மிக அதிக வானொலிகளை பெற்றுள்ள முதல் மூன்று நிலையங்களாக சூரியன் எஃப்.எம் (ரெட் எஃப்.எம்), பிக் எஃப்.எம் மற்றும் ரேடியோ மிர்ச்சி ஆகியவற்றை கூறலாம். தமிழகத்தில் 29 தனியார் பண்பலை நிலையங்கள் ஒன்பது வெவ்வேறு ஊர்களில் இருந்து தற்பொழுது ஒலிபரப்பி வருகின்றன.

Wednesday, July 08, 2015

பண்பலை வானொலி நிலையத்தில் நடந்த பாபநாசம் இசை வெளியீட்டு விழா!

கமல்ஹாஸன் நடித்துள்ள பாபநாசம் படத்தின் இசை வெளியீட்டு விழா தனியார் பண்பலை வானொலி நிலையத்தில் இன்று நடந்தது. மலையாளத்தில் உருவாகி வெற்றி பெற்ற த்ரிஷ்யம் படம் இந்தியாவின் முன்னணி மொழி சினிமாக்களில் ரீமேக் செய்யப்பட்டு, வெற்றியடைந்து வருகிறது. கன்னடத்திலும், தெலுங்கிலும் இந்தப் படம் சிறப்பான வெற்றியைப் பெற்றது.

Read more at: http://tamil.filmibeat.com/music/papanasam-audio-launched-at-fm-station-035299.html