Tuesday, February 27, 2018

குறைந்த செலவில் எஃப். எம் தொடங்கலாம்!


உலகம் முழுவது யாரும் நினைத்தவுடன் வானொலிகளை நடத்திவிட முடியாது. அதற்கு காரணம் வானொலி என்பது எளிதாக அனைவரையும் சென்று அடையும் ஒரு ஊடகம். வானொலி ஒலிபரப்பில் பல்வேறு வகைகள் உள்ளன. சிற்றலை ஒலிபரப்பினை நீங்களோ நானோ நினைத்தவுடன் நடத்திவிட முடியாது. அதற்கு காரணம், சிற்றலை ஒலிபரப்பிற்கு ஒலிபரப்பிகள் பெரியதாக அமைக்க வேண்டும். மின்சாரமும் அதிகம் தேவை. இது போன்றதே மத்திய அலை ஒலிபரப்பும். ஆனால் இதற்கு முற்றிலும் மாறானது பண்பலை எனப்படும் எஃப்.எம் ஒலிபரப்பு


இங்கிலாந்து போன்ற நாடுகளில் எஃப்.எம். ஒலிபரப்பினைத் தொடங்குவது எளிதானது. ஆனால் இந்தியா போன்ற நாடுகளில் வானொலி தொடங்குவது என்பது மிகவும் சிரமான ஒன்று. அதற்கு காரணங்கள் பல. தனியார் துறை பண்பலை வானொலிகள் பல கோடிகள் கொடுத்து ஏலம் எடுத்தே தனது எஃப்.எம். ஒலிபரப்புகளை நடத்திவருகின்றன

சமுதாய வானொலிகள் தொடங்க வேண்டும் என்றால் கூட, அதற்கு பல லட்சங்கள் தேவைபடுகின்றது. அது மட்டுமல்லாது, மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்களிடம் அனுமதி பெற வேண்டியுள்ளது. இது வானொலி தொடங்க நினைப்பவர்களுக்கு பெரிய சிரமத்தினை அளிக்கிறது. சமுதாய வானொலிகளையும் தனி மனிதர்கள் தொடங்கி விட முடியாது. கல்வி நிறுவனங்களும் பதிவு செய்யப்பட்ட என்.ஜி.-கள் மட்டுமே இந்தியாவில் சமுதாய வானொலியை தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளது

சமீபத்தில் ஒரு சிறிய எஃப்.எம்.ஒலிபரப்பி விற்பனைக்கு சந்தையில் வந்துள்ளது. இதன் துணை கொண்டு ஐந்து முதல் ஏழு கி.மீ வரை எஃப்.எம் ஒலிபரப்பினை செய்ய முடியும். இந்தியாவில் சமுதாய வானொலிகளின் ஒலிபரப்பினை ஐந்து முதல் பத்து கி.மீட்டருக்குள் தான் கேட்க முடிகிறது. அதற்கு காரணம் 50 வாட் சக்தியில் மட்டுமே அந்த ஒலிபரப்பானது செய்யப்படுகிறது. இப்பொழுது விற்பனைக்கு வந்துள்ள இந்த எஃப்.எம் ஒலிபரப்பியின் விலை  ரூ. 3410 மட்டுமே. மொபைல் போன் விலையில் ஒரு எஃப்.எம். வானொலியைத் தொடங்கிவிட ஒரு நல்ல வாய்ப்பினை ஏற்படுத்தி கொடுத்துள்ளது இந்த நிறுவனம்.

இனி மேல் யார் வேண்டுமானாலும் ஒரு வானொலி நிலையத்தினைத் தொடங்கி விட முடியும். ஆனால் அரசின் அனுமதி இல்லாமல் ஒலிபரப்ப முடியாது. இங்கிலாந்தில் வரையறுக்கப்பட்ட வானொலி உரிமத்தினை வழங்குகின்றனர். இதன் துணை கொண்டு கிருஸ்மஸ், ரம்ஜான் காலங்களில் மட்டும் ஒலிபரப்பு செய்ய அனுமதி வழங்குகின்றனர். இந்த வானொலிகள் குறுகிய காலத்திற்கு மட்டும் ஒலிபரப்பினைச் செய்கிறது.


இனி மேல், நம் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு எஃப்.எம். வானொலியை தொடங்கி நடத்த முடியும். இதன் மூலம், வானொலி மீண்டும் புத்துயிர்பெரும். வேலை வாய்ப்பும் பெருகும்.  ஆனால் அரசின் உதவி இதற்கு கண்டிப்பாக தேவை. அரசு அனுமதி அளித்தால் மட்டுமே இது போன்ற ஒலிபரப்புகளை அனைவரும் ஒலிபரப்ப முடியும். இந்த எஃப்.எம் ஒலிபரப்பி தேவைப்படும் ஹாம்கள் https://goo.gl/39Zben என்ற இந்த இணைய தளத்திற்கு சென்று ஆர்டர் செய்து பெற்றுக்கொள்ளலாம்.

No comments: