ஹாம் வானொலி வரலாற்றில் முதல் முறையாக ஒரு பல்கலைக்கழகம் ஹாம் வானொலியை பாடத்திட்டத்தில்
கொண்டு வந்துள்ளது. சென்னைப் பல்கலைக்கழகத்தின் இதழியல் மற்றும் தொடர்பியல் துறை ‘ஹாம்
வானொலி’ (Ham Radio) என்ற ஒரு விருப்பத் (Elective) தாளை கொண்டு வந்துள்ளது. சென்னைப்
பல்கலைக்கழகத்தில் எந்த படிப்பினைப் படிக்கும் மாணவரும், இந்தத் தாளை எடுத்துப் படிக்கலாம். முதுகலைப் பாடத்திட்டத்தில்
கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் தாளை தெரிவு செய்வதன் ஊடாக அந்த மாணவர்கள், தனிப்பட்ட முறையில்
ஹாம் தேர்வினை எழுதவும் வழிகாட்டப்படுவார்கள். ஆறு மாதங்கள் இந்த தாளானது வகுப்பில்
எடுக்கப்படும். ஆர்வம் உள்ள மாணவர்கள் நேரடியாக ஹாம் தேர்வினையும் எழுத வழிவகை செய்யப்படும்.
சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Saturday, April 07, 2018
சென்னைப் பல்கலைக்கழக பாடத்திட்டத்தில் ஹாம் வானொலி
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment