Saturday, April 14, 2018

க்யூ குறியீடுகள் (Q Codes)

 விமான போக்குவரத்தில் பயன்படுத்தப்பட்டுவரும் க்யூ குறியீடுகளை காணலாம்.


QCS – என்னுடைய …… …. எனும் அலைவரிசை தடங்களுக்குள்ளாகியுள்ளது.

QCX – உங்களுடைய முழுமையான அழைப்புக் குறியீடு என்ன?

QCY – செயல்பாட்டில் பின்தங்கிய ஒரு ஏரியலில் இப்பொழுது ஒலிபரப்பி வருகிறேன்.

QDB – தகவலை ……. இருந்து …….. இவருக்கு அனுப்பினீர்களா?

QDF – தற்சமயம் உங்களின் D-Value என்ன?

QDL – உங்களுடைய நோக்கம் என்னுடைய திசைநிலையை அறிந்துகொள்வதா?

QDM –  காற்றினால் காந்தபுலமானது விலகி செல்வதாக சுட்டிக்காட்டுகிறீர்களா?

QDP – இந்த சமயத்தில் எனது பொறுப்பினை ஏற்றுக் கொள்கிறேன்.

QDR – உங்கள் பகுதியில் இருந்து எனது காந்தப்புலம் என்ன?

QDT – காட்சி வளிமண்டலவியல் சார்ந்து பறந்துகொண்டு இருக்கிறேனா?

QDU – எனது IFR பறத்தலை ரத்து செய்கிறேன்.

QDV – நீங்கள் கண்ணுக்கு தெரியும் தூரத்தில் விமானத்தில் பறக்கிறீர்களா?

QEA – எனது முன்னாள் உள்ள ஓடுதளத்தினை தாண்டி சென்றுவிட்டேனா?

QEB – குறுக்குச் சந்திப்பில் நான் திரும்பலாமா?

QEC – நான் 180 டிகிரி திரும்பி ஓடுதளத்திற்கு வரலாமா?

QED – பைலட் வண்டியை தொடரட்டுமா?

QEF – நான் எனது பார்க்கிங் பகுதிக்கு சரியாக வந்துவிட்டேனா?

QEG – எனது பார்க்கிங் ஏரியாவில் இருந்து புறப்படலாமா?

QEH – ….……. என்ற எண் கொண்ட ஓடுதளத்தில் நிலைத்திருக்கட்டுமா?

QEJ – பறத்தலுக்கு தயாரான நிலையில் உள்ளேனா?

QEK – உடனடி பறத்தலுக்கு தயாரா?

QEL – பறக்கலாமா?

QEM – இறங்கும் இடத்தின் தற்போதைய நிலைமை என்ன?

QEN – என்னுடைய நிலையிலேயே இருக்கட்டுமா?

QEO – ஓடுதளத்தில் இருந்து வெளியேறட்டுமா?

QES – எனது வலது புற சுற்றுப்பாதையின் இடம் ……?

QFA – தற்சமயம் நான் உள்ள இடத்தின் வானிலை அறிக்கையைக் கூறுங்கள்.

QFB – எனது அணுகுமுறை மற்றும் ஓடுதளத்தின் வெளிச்சம்?

QFC – நான் இருக்கும் இடத்தின் உயரம், மேகங்களின் அளவு ஆகியவற்றைக் கூறவும்.

QFD – கண்ணுக்கு தெரியும் கலங்கரை விளக்கம் செயல்பாட்டில் உள்ளதா?

QFE – எனது உயரத்தினை அளக்கும் கருவியை சரிசெய்து கொள்ளட்டுமா?

QFF – கடல் மட்டத்தில் இருந்து தற்போதைய வளிமண்டல அழுத்தத்தினைக் கூறவும்.

QFG – நான் சரியாக மேலே இருக்கிறேனா?

QFH – மேகத்திற்கு கீழே இறங்குகிறேனா?

QFI – விமான நிலைய ஒளி விளக்குகள் எரிகின்றனவா?

QFL – வான வேடிக்கை கொடுக்கக் கூடிய ஒளி விளக்குகளை ஒளிரவிடட்டுமா?

QFM – தற்சமயம் விமானம் பறந்துகொண்டிருக்கும் உயரத்திலேயே பறக்கட்டுமா?

QFO – உடனடியாக இறங்கட்டுமா?

QFP – தற்சமயம் இறங்கக்கூடிய இடத்தின் தகவல்களை கொடுக்க முடியுமா?

QFQ – ஓடு தளத்தின் ஒளி விளக்குகளை ஒளிரவிடட்டுமா?

QFR – விமானம் இறங்க உதவி செய்யும் எனது landing gear சேதமடைந்துவிட்டது?

QFS – வானொலி பெட்டி ……. இடத்தில் கேட்கும் வசதியுடன் உள்ளதா?

QFT – எந்த உயரத்தில் பனிக்கட்டி உள்ளதாக அறிகிறீர்கள்?

QFU – காந்தபுல திசை ஓடுதளத்திற்கு அருகில் உள்ளதா?

QFV – ஒளி வெள்ளத்தினை பாய்ச்சக் கூடிய ஒளி விளக்குகள் எரிகின்றனவா?

QFW – ஓடு தளத்தின் நீளம் என்ன?

QFX – நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ள ஏரியலின் துணையில் செயல்படுகிறேன்.

QFY – இப்பொழுது நான் இறங்கக்கூடிய இடத்தின் வானிலை நிலவரத்தினைக் கூறவும்.

QFZ – ……. மணி நேரத்தில் இருந்து …… வரை விமான நிலையத்தின் வானிலை எவ்வளவு?

QGC – ஓடுதளத்தில் ஒரு சில இடைஞ்சல்கள் உள்ளது.

QGD – என்னுடைய வழியில் ஏதேனும் தடங்கள், என்னுடைய உயரத்தில் வேறு ஏதேனும் பறக்கின்றனவா?

QGE – நான் இருக்கும் இடத்தில் இருந்து உங்கள் நிலையம் அமைந்துள்ள தூரம் எவ்வளவு?

QGH – செயல்படு முறையில் நான் இறங்கட்டுமா?

ஆகிய இந்த க்யூ குறியீடுகள் வான்வழி விமான தொலைத்தொடர்புக்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

No comments: