சர்வதேச வானொலிகளை கேட்பதில்/அறிந்துகொள்வதில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் கண்டிப்பாக பார்த்து படிக்க வேண்டிய வலைப்பூ. இந்தக் குழுவில் இணைவதன் மூலம் உடனுக்குடன் சர்வதேச வானொலிகளைப் பற்றிய தகவல்களைப் படித்து பயன்பெறலாம்.
Tuesday, May 29, 2018
Radio Drama Festival 2018
வானொலி நாடக விழா இந்த ஆண்டு 3 ஜூன் முதல் 8 ஜூன் 2018 வரை தினமும் இரவு 8 மணிக்கு தமிழகத்தின் அனைத்து அகில இந்திய வானொலிகளில் ஒலிப்ரப்ப உள்ளது.
Tuesday, May 22, 2018
கிஸான் வாணி
‘கிஸான் வாணி’ நிகழ்ச்சிப் பிரிவு பொறுப்பாளர் ஆர்.வெங்கடேஸ்வரன் கூறியபோது, “மத்திய அரசின் வேளாண் மற்றும் கூட்டுறவு அமைச்சகத்தின் நேரடி நிதியுதவியுடன் 2004 பிப்ரவரி முதல், நாட்டில் தேர்வு செய்யப்பட்ட 96 வானொலி நிலையங்களில் கிஸான் வாணி நிகழ்ச்சி ஒலிபரப்பப்பட்டு வருகிறது. தமிழகம், புதுச்சேரியில் உள்ள 12 வானொலி நிலையங்களில் காரைக்கால், நாகர்கோவில் ஆகிய 2 வானொலி நிலையங்களுக்கு மட்டுமே இந்நிகழ்ச்சிக்கென மத்திய வேளாண் அமைச்சகத்தின் மூலம் நேரடியாக ஆண்டுக்கு ரூ.12 லட்சம் ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
மேலும் படிக்க
Saturday, May 19, 2018
திருச்சி வானொலிக்கு வயது 80
திருச்சி வானொலி நிலையம் தொடங்கி 80 ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதையொட்டி ஆண்டு முழுவதும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றார் அதன் நிகழ்ச்சி இயக்குநர் கே. நடராஜன்.
கடந்த 1939 மே 16-ல் தொடங்கப்பட்ட அகில இந்திய திருச்சி வானொலி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்ற 80ஆவது ஆண்டு தொடக்க விழாவில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 10 மணிக்கு மங்கள இசை, திருவையாறு பி.வி. ஜெயஸ்ரீ குழுவினரின் பாமாலை நிகழ்ச்சியைச் தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி நிகழ்ச்சிகளைத் தொடங்கி வைத்தார், மாநகரக் காவல் ஆணையர் அ. அமல்ராஜ், முன்னாள் காவல் துறை மாவட்டக் கண்காணிப்பாளர் அ. கலியமூர்த்தி உள்ளிட்டோர் வாழ்த்தினர்.
விரிவாக படிக்க
Wednesday, May 16, 2018
AIR Tiruchi celebrates it's 80th anniversary / திருச்சி வானொலிக்கு 80 வயது
திருச்சி வானொலிக்கு இன்று 80 வயது. காலையிலேயே தொலைபேசியில் அழைத்து வாழ்த்து சொன்னேன். என் வாழ்த்துச்செய்திவானொலியில் நேரலையில் ஒலிபரப்பானது. பாரம்பரியக் கலை வடிவங்களை , இசையை வானொலி வளர்த்துவருகிறது. திருச்சி வானொலியில் ஒலிபரப்பாகும் நாதஸ்வர இசை வெகு கம்பீரமானது. எல்லா உயிர்களும் அவ்விசைக்கு மயங்கிக் கிடக்கின்றன. இந்நிலையம் கர்நாடக இசையை இராகம் DTH அலைவரிசையில் ஒலிபரப்பி வருகிறது. பண்பலை ஒலிபரப்பும் உண்டு. வாழ்த்துகள் வானொலி என்னும் தேனொலிக்கு !!!
- ஜெயக்குமார்
Monday, May 14, 2018
Radio World's eBook "New Directions for HD Radio"
ரேடியோ வோல்ட் வெளியிட்டுள்ள மிக முக்கியமான புத்தகம் தான் இந்த New Directions for HD Radio. இலவசமாக கிடைக்கும் இந்த புத்தகத்தினை பெற கீழ்கண்ட இணைப்பிற்கு செல்லுங்கள்.
Radio World's eBook "New Directions for HD Radio" explores what's next for the digital radio format as well as best practices for 2018 and beyond. Nothing sparks passion among radio technologists like discussion of the future of digital radio.
Via Jaisakthivel
Ardicdxclub
India
Sent from
India Radio Forum / இந்தியா ரேடியோ போரம் - 201
தனியார் துறை பண்பலை வானொலிகளின் சங்கமம். "இந்தியா ரேடியோ போரம் - 2018" வரும் மே 18 அன்று புது தில்லி, குருகிராமில் உள்ள லீலா ஆம்பியன்சில் நடைபெற உள்ளது.
A warm welcome to the 13th edition of the 'India Radio Forum and Excellence in Radio Awards 2018'. This is to celebrate the growth of a promising new chapter in the radio industry on the back of Demonetisation, GST & RERA roll out! The forum not only honors the outstanding work done by radio professionals, but is also dedicated to bringing forth interesting discussions from industry stalwarts.
https://www.indiaradioforum.com/
Sent from Yahoo Mail for iPhone
Sunday, May 13, 2018
RVA Closing / வேரித்தாஸ் வானொலி நிறுத்தப்படுகிறது
முக்கிய செய்தி:
வேரித்தாஸ் வானொலியின் அனைத்து சிற்றலை ஒலிபரப்புகளும் வரும் 30 ஜூன் 2018-டன் நிறுத்தப்படுகிறது. இனி வேரித்தாஸ் வானொலியை இணையத்தில் மட்டுமே கேட்கமுடியும் என AWR Wavesacn தெரிவிக்கிறது.
There is nothing to be found on the RVA website about its closing:
http://www.rveritas-asia.org/about-us
Here`s the schedule for what we now know to be its final sesquimonth:
http://hfcc.org/data/schedbyfmo.php?seas=A18&fmor=RVA
Sent from Yahoo Mail for iPhone
HaM Radio (ASOC) exam in 2018 / சென்னையில் ஹாம் ரேடியோ தேர்வு
சென்னையில் ஹாம் ரேடியோ தேர்வுக்கான வழிகாட்டி வகுப்பில் சேர....
Chennai folks, if you wish to appear for the HaM Radio (ASOC) exam in 2018 and start your own radio station in your home, We are here to help you in getting your Amateur Station Operator's license. Summer classes for interested people.
For more details
http://www.siars.org.in/asoc-batch-2018/
Sent from Yahoo Mail for iPhone
CubeSats with Amateur Radio / அமெச்சூர் வானொலிக்காக
அமெச்சூர் வானொலிக்காக மற்றும் மூன்று க்யூப்சேட்-ஸ் இந்த மே மாதத்தில். செலுத்தப்பட்டுள்ளது.
Three CubeSats with Amateur Radio Payloads Deployed from ISS
The Japan Aerospace Exploration Agency (JAXA) has announced that three CubeSats carrying Amateur Radio payloads, including one with a V/U linear transponder, were deployed from the International Space Station (ISS) on May 11 at around 1030 UTC.
#அமெச்சூர் #அமெச்சூர் #Ham #Radii
Sent from Yahoo Mail for iPhone
Saturday, May 12, 2018
ஹாம் ரேடியோ ஒலிப்பியல் முறை
சர்வதேச தொலைத்தொடர்பு குழுமம் அனைத்து ஆங்கில எழுத்துக்களுக்கும் பொதுவான ஒலிப்பியல்
முறையை அகர வரிசைப் படி கொடுத்துள்ளது. அவற்றை இப்பொழுது காணலாம்.
A – Alfa (ஆல்ஃபா)
B – Bravo (ப்ராவோ)
C – Charlie (சார்லி)
D – Delta (டெல்டா)
E – Echo (எக்கோ)
F – Foxtrot (பாஃக்ஸ்ட்ராட்)
G – Golf (கோல்ஃப்)
H – Hotel (ஹோட்டல்)
I – India (இந்தியா)
J – Juliet (ஜூலியட்)
K – Kilo (கிலோ)
L – Lima (லீமா)
M – Mike (மைக்)
N – November (நவம்பர்)
O – Oscar (ஆஸ்கர்)
P – Papa (பாப்பா)
Q – Quebec (க்யூபெக்)
R – Romeo (ரோமியோ)
S – Sierra (சியர்ரா)
T – Tango (டேங்கோ)
U – Uniform (யூனிபார்ம்)
V – Victor (விக்டர்)
W – Whiskey (விஸ்கி)
X – X-ray (எக்ஸ்ரே)
Y – Yankee (யாங்கீ)
Z – Zulu (ஜூலு)
ஹாம் வானொலி ஒலிபரப்பின் போது, இந்த ஒலிப்பியல் முறையை உலகம் முழுவதும் பயன்படுத்தி
வருகின்றனர். இதனால் தான், ஹாம் வானொலியை “ஒரே மொழி, ஒரே உலகம்” என்று கூறுகிறோம்.
காரணம், அனைத்து மொழி பேசுபவர்களும் இந்த ஒலிப்பியல் முறையைப் பயன்படுத்துவதால், இதில்
எந்த வித குழப்பமும் ஏற்படுவதில்லை.
Saturday, May 05, 2018
ஹெச்.எஃப் ஒலிபரப்பு
பொதுவாக நாம் உள்ளூர் வானொலி நிலையங்களைத் தொடர்பு கொள்வதை விட வெளிநாட்டு ஹாம்
வானொலிகளைத் தொடர்பு கொள்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டவர்களாக இருப்போம். அந்த வகையில்
ஹெச்.எஃப் ஒலிபரப்புகளை செய்யும் பொழுது, எப்படி தொடங்குவது? என்பதை அறிந்து கொள்வோம்.
1. நிலையங்களைத் தேடுதல்
ஒரு பரந்த ஒலி வெளியில் தேடுதல் என்பது சாதாரண விடயம் அல்ல. சாதாரணமாக தொலைப்பேசியில்
அழைப்பது போன்று ஹாம் வானொலியில் அழைக்க முடியாது, அழைக்கவும் கூடாது. அதற்கு என்று
ஒரு முறை உள்ளது. ஆங்கிலத்தில் சி.க்யூ (CQ) என்பர். தொடக்க காலத்தில் Calling CQ என்று
அழைப்பு விடுத்தனர். இன்று “CQ CQ CQ, this is Victor Uniform Three Uniform Oscar
Mike, standing by….” என்று அழைப்பு விடுப்பது நடைமுறையில் உள்ளது. இதில் Uniform
Oscar Mike என்பது எனது அழைப்புக் குறியீட்டின் (Call Sign) முதல் எழுத்துக்களின் சுருக்கம்
அதாவது UOM என்பதாகும். ஒலிபரப்பின் போது ஒரே சத்தம் உள்ள எழுத்துக்களின் குழப்பத்தினைப்
போக்க வேண்டியே, இதற்கு ஒவ்வொரு வார்த்தையைப் பயன்படுத்துகின்றனர். உதாரணமாக B, E,
T, P ஆகிய வார்த்தைகளைக் கூறலாம். இந்த வார்த்தைகளை வானொலியில் ஒலிபரப்பும் பொழுது
பெரிய குழப்பங்கள் ஏற்படுகிறது.
சர்வதேச தொலைத்தொடர்பு குழுமம் அனைத்து ஆங்கில எழுத்துக்களும் பொதுவான ஒலிப்பியல்
முறையை வழங்கியுள்ளது. ஒரு சில சமயங்களில் G என்பதற்கு Golf என்று கூறவேண்டும், ஆனால்
அதுவும் புரியவில்லை என்றால், சற்றே விளக்குவதற்காக அதனை Germany என்றும் கூறுவதுண்டு.
ஆனால், இது எல்லா சமயங்களிலும் பயன்படுத்தப்படுவதில்லை.
2. கவனியுங்கள்
ஹாம் ஒலிபரப்பின் போது, உங்கள் எதிர் புறம் தொடர்பு கொள்பவரின் அழைப்புக் குறியீட்டை
நன்றாக கவனித்து குறித்துக் கொள்வது அவசியம். ஒலிபரப்பு தெளிவாக இருந்தால், எளிதில்
குறித்துக் கொள்ளலாம், ஒரு சில சமயங்களில் தெளிவில்லாமல் இருக்கும். அந்த சமயங்களில்
ஒரு முறைக்கு மூன்று முறை உங்களின் அழைப்புக் குறியைச் சொல்வது அவசியம் ஆகும். அதே
சமயத்தில் நீங்கள், அவர்களின் அழைப்புக் குறியீட்டை ஒரு முறை சொன்னால் போதுமானது. ஆங்கிலத்தில்
இதனை 1-by-3 call என்பர்.
3. பதில் தாருங்கள்
உங்களைப் போன்றே, உங்களைத் தொடர்பு கொள்பவரும், உங்களின் அழைப்புக் குறியீட்டினை
தெளிவாக அறிந்து கொள்ள விரும்புவார். அதனால், உங்களின் அழைப்புக் குறியீட்டினை தெளிவாக
மூன்று முறை கண்டிப்பாக சொல்லவும். அதன் ஊடாகத் தான் அவர் உங்களின் முகவரியைக் குறித்துக்
கொண்டு, உங்களுக்கான க்யூ.எஸ்.எல். அட்டையை அனுப்புவார். அதேப் போன்று அவருக்கு, உங்கள்
வானொலிப் பெட்டியில் கிடைக்கும் சிக்னல் ரிப்போர்டை தெரிவியுங்கள். தொடர்பு கொள்பவரின்
விபரங்களை உங்களின் log book-ல் கண்டிப்பாக தெளிவாக குறித்துக் கொள்ளவும். அதன் துணை
கொண்டே அவருக்கான க்யூ.எஸ்.எல். அட்டையை அனுப்ப வேண்டியிருக்கும்.
Subscribe to:
Posts (Atom)