Monday, July 30, 2018

சர்வதேச விண்வெளி நிலையம்


 

 

ஹாம் வானொலி பயன்பாட்டாளர் ஒவ்வொருவருக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்தோடு தொடர்பு கொள்ள என்றுமே ஒரு ஆர்வம் இருக்கும். அப்படி ஆர்வம் உள்ளவராக நீங்கள் இருந்தால், இந்த வாரம் Slow-Scan டிவி ஒலிபரப்பினை வானலைகள் ஊடாக செய்ய உள்ளனர். 2018 ஜூலை 30 தேதி இந்திய நேரம் இரவு 9.30 முதல் நள்ளிரவு 1.00 மணி வரையும், 31-ஆம் தேதி மாலை 6.55 முதல் நள்ளிரவு 12.45 வரையும்  145.800 மெ.ஹெ-ல் ஒலிபரப்ப உள்ளது. இந்த ஒலிபரப்பினை கென்வுட் டிஎம்-டி710 எனும் மாடல் கொண்ட ஹாம் வானொலிப் பெட்டியின் துணைகொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஒலிபரப்ப உள்ளதாக ‘ஆம்சாட் யூகே’ இணையதளம்  தெரிவிக்கிறது. அவர்களின் இணைய தள முகவரி http://amsat-uk.org

 

சர்வதேச விண்வெளி நிலைய ஒலிபரப்பினை எப்படி நாம் கேட்பது? நம்மிடம் உள்ள சாதாரண வானொலிப் பெட்டியில் இதனை கேட்கலாமா? போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு ஜான் பிரையர் தனது வலைப்பூவில் விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அந்த வலைப்பூ முகவரி https://spacecomms.wordpress.com/iss-sstv-reception-hints. சர்வதேச விண்வெளி நிலையத்தினை (ஐஎஸ்எஸ்) தொடர்ந்து கேட்பவர்கள் ஒன்றிணைந்து “ஐஎஸ்எஸ் ரசிகர் மன்றத்தினை” தொடங்கியுள்ளனர். அவர்கள் மன்றத்தில் நீங்களும் உறுப்பினர் ஆக விரும்பினால், https://www.issfanclub.com எனும் இணைய முகவரியை பார்க்கலாம்.

 

 

Friday, July 27, 2018

347 operational Private FM Channels in India / இந்தியாவில் 347 தனியார் பண்பலை வானொலிகள்

இந்தியாவில் 23 ஜூலை 2018 கணக்கின் படி 347 தனியார் பண்பலை வானொலிகள் செயல்பட்டு வருகிறது. இதில் சேலம், வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய ஊர்களில் ரெட் எப்.எம் என்ற பெயரில் உரிமம் பெற்றுவிட்டு, சூரியன் எப்.எம் என்ற பெயரில் ஒலிபரப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

List of 347 operational Private FM Channels in India as on 23 July 2018 issued by Ministry of Information & Broadcasting, Govt. of India is given in the following link:

https://mib.gov.in/sites/default/files/Operational%20channels.pdf

Via Jose Jacob, VU2JOS


Monday, July 23, 2018

ஊடகங்களில் காலமும் வெளியும்

Immanuel Kant அவர்களின் கூற்றுப்படி பொதுத்துறை ஊடக வெளியை நுகர்வதற்கான (sense the space experience) வாய்ப்பு ஒன்று எனக்கும் கிடைத்தது. அந்த வெளியில் என்னால் Invariance மற்றும் covariance-ஐ காண முடிந்தது.

பொதுவாகவே 'வெளி' - ஊடகங்களில் மிக அருமையாக பயன்படுத்தப்படுகிறது. அந்த வெளியை சரியான வகையில் பயன்படுத்தும் ஒரு ஊடகமாக பொதிகை தொலைக்காட்சி இருந்து வந்துள்ளது. வெளி-யில் வண்ணங்கள் முக்கியமானதாகிறது. 'ழகரம்' அதை சரியான முறையில் கையாண்டுள்ளது. 12.05-க்கு தொடங்க வேண்டிய நிகழ்ச்சி. 12.00 மணி வரை பதட்டமின்றி 'ழகரம்' குழுவினர் அந்த வெளியைப் பயன்படுத்தியது, முதன் முறையாக நேரலை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட யாருக்கும் பதட்டத்தினை ஏற்படுத்தும். ஆனால் நெறியாள்கை செய்த முனைவர் ஜெய்கணேஷ் ஆகட்டும், அவரோடு இணைந்து குரல் கொடுத்த செல்வ முத்துமாரி ஆகட்டும், அந்த கலையக வெளியை அருமையாக பயன்படுத்தினர்.

Endurantism and perdurantism-த்தினையும் அந்த வெளியில் காண முடிந்தது.David Lewis இதனை மிக அழகாக கூறியுள்ளார். அவரது பார்வையில் நான் 'ழகரத்தினை' பார்த்தது கொஞ்சம் அதிகம் தான். எனினும் அதன் "temporal parts" -ஐ என்னால் பார்க்காமல் இருக்க முடியவில்லை.

காலமும் வெளியும் ஒரு நேரலை நிகழ்ச்சியில் மிக முக்கியமானதாகிறது. அங்கே "temporal parts"
முக்கியமாகிறது. காலத்தினை கட்டுப்படுத்துவது இயலாது. ஆனால் நெறியாளர், நேரலை நிகழ்ச்சியில் அதனை செய்தே ஆகவேண்டும். அதில் இம்மியளவும் முகத்தில் பதட்டத்தினைக் காட்டாமல் இருப்பது மிக முக்கியம். அடுத்து குழுப் பணி, ஒரு போட்டி நிகழ்ச்சிக்கு பக்க பலமாக இருப்பது தொழில்நுட்பக் குழு. எந்த இடத்திலும், ஒரு சிறு தவறு நேர்ந்தாலும், நிகழ்ச்சியின் தன்மை முற்றிலும் மாறிவிடும். அதனை கட்டுக்கோப்பாக கொண்டு செல்லும் பொறுப்பு அந்த களத்தின் ஒருங்கிணைப்பாளருக்கு உண்டு. நண்பர், பிரகாஷ் Prakazz Durai மிக கவனமாக அனைத்து பணிகளையும் மேற்கொண்டார்.

அடுத்து, நிகழ்ச்சி தயாரிப்பாளர். திருமதி.சந்தியா அவர்கள், அந்த 'ழகரம்' அரங்கின் காலத்தினையும், வெளியையும் ஒரு சேரக் கட்டுப்படுத்தியது சிறப்பாக இருந்தது. எந்த ஒரு நிகழ்ச்சிக்கும், நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒரு தூண். ஒரு பொதுத்துறை தொலைக்காட்சியில் இது போன்ற நிகழ்ச்சி தொடர்ந்து 46 வாரங்கள் நடைபெற்றுக் கொண்டு இருப்பதே ஒரு பெரிய சாதனை. அதற்கு மிக முக்கிய காரணம், அதன் உள்ளடக்கம். அதனை செவ்வனே ஒவ்வொரு வாரமும் ஆய்வுப் பணிகளுக்கு இடையிலும் எடுத்துச் செய்து வரும் நண்பர் முனைவர். ஜெய்கணேஷ் அவர்களுக்கு ஒரு சபாஷ்.

21 ஜூலை 2018 அன்றைய 46-வது வார 'ழகரம்' நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக ஸ்ரீ கிருஸ்ணசாமி மகளிர் கல்லூரி மற்றும் கன்னிகா பரமேஸ்வரி கல்லூரி மாணவிகளுடன் கலந்து கொண்டது 'வெளியைக் காலத்திற்குள்' அடக்கிய ஒரு நிகழ்வாக இருந்தது.

அந்த நிகழ்ச்சியை காண
https://www.youtube.com/watch?v=q6dc5b6vsF0&feature=youtu.be


#zhagaram #dd #podhigai #

Inline image

Inline image


Ham Radio for Youth / இளைஞர்களுக்கான ஹாம் வானொலி -65

At last we reached 65th week. This week (23-7-2018) "Ham Radio for Youth" article dedicated to Guglielmo Marconi. He died on 20 July 1937. It is a 81st death anniversary. 

தின இதழில் திங்கள் தோறும் தொடராக வெளியாகி வரும் "இளைஞர்களுக்கான ஹாம் வானொலி" 65-வது வாரத்தினை எட்டியுள்ளது. மார்க்கோனியின் 81-வது நினைவு நாளில் இது வெளியாகிறது. 20 ஜூலை 1937-ல் மறைந்த அவருக்கு இந்த வார கட்டுரை சமர்ப்பனம்.


Inline image



DD Podhigai broadcast Zhakaram

DD Podhigai broadcast Zhakaram (23-7-2018) at 8.30-10.00 pm. I was a chief guest of that 'Zhagaram' program. We discussed about future of broadcasting, dxing, DRM, Ham radio, foreign languages, St.Helena and books on medi

23-7-2018 திங்கள் இரவு 8.30-10.00 வரை டிடி பொதிகை தொலைக்காட்சியில் "ழகரம்" நிகழ்ச்சி ஒளிபரப்பாகியது. வாய்ப்பு இருப்பின் பாருங்கள்! பார்த்தவர்கள் கருத்தினை பகிருங்கள்.

#ழகரம் #zhakaram #podhigai #dd

பார்க்கத் தவறிய அன்புள்ளங்களுக்காக...


Saturday, July 07, 2018

XHDATA D-808 / அருமையான டிஜிட்டல் வானொலி பெட்டி

ரூ.5063-க்கு மற்றும் ஒரு அருமையான டிஜிட்டல் வானொலி பெட்டி விற்பனைக்கு வந்துள்ளது. XHDATA D-808 என்ற இந்த Portable Digital Radio-வில் FM stereo/ SW / MW / LW SSB AIR RDS ஆகியவற்றைக் கேட்கலாம். Multi Band Radio Speaker இதில் உள்ளதால் ஒலி துள்ளியமாக இருக்கிறதாம். LCD Display அளவும் பெரிது. Alarm Clock-க்கும் இதில் உண்டு. கீழ்கண்ட அலி எக்ஸ்ப்ரஸ் இணைய தளத்தில் ஆர்டர் செய்தால், 15 நாட்களுக்குள் பதிவுத் தபாலில் உங்களுக்கு வந்து சேர்கிறது.

Item Description
Type FM,MW,LW,AM / FM,SW
WIFI No
Power Supply Rechargeable Battery Pack
Style Portable
Brand Name XHDATA
Function Built-In Speaker,Clock
Model Number D-808
Bluetooth No
Dimensions (WxHxD) 157*32*92mm
Package Yes
Body Material Plastic
Screen Yes
Type SSB/AIR
Launch Date 2017
Function AM / FM / SW / AIR BAND
Weight 265g (battery not included)
Earphone Jack 3.5mm
AM Selectivity >80dB

https://www.aliexpress.com/item/Tecsun-PL-398MP-2-2-Full-Band-Digital-Tuning-Stereo-Radio-Receiver-w-Stand-and-MP3/1504908567.html

நன்றி: சேக் ஜவஹர்Inline image

Inline image

Station Breaks World Record / உலக சாதனை நிகழ்த்தியுள்ளது கே.ஓ.பி.என்

24 மணி நேரத்தில் 400-க்கும் அதிகமான பேட்டிகள் எடுத்து உலக சாதனை நிகழ்த்தியுள்ளது கே.ஓ.பி.என் எனும் வானொலி.

Congratulations for member station KOPN, which broke the world record for most interviews in 24 hours. When KOPN came to the end of its June pledge drive, General Manager Sean Spence had a wild idea: to see if the station could break the world record for the number of on-air interviews it could conduct in

The post Station Breaks World Record appeared first on NFCB

https://nfcb.org/station-breaks-world-record/?utm_source=Weekly+List&utm_campaign=e8a8a9893b-RSS_EMAIL_CAMPAIGN&utm_medium=email&utm_term=0_7fc6b0453e-e8a8a9893b-527962889


Sent from Yahoo Mail for iPhone

Wednesday, July 04, 2018

Shortwave radio dies / சிற்றலை வானொலிகள் மூடப்படுவதை பற்றி

தி இந்து ஆங்கில நாளிதழ் சிற்றலை வானொலிகள் மூடப்படுவதை பற்றியும், ஆர்டிக் டிஎக்ஸ் கிளப் பற்றியும் செய்தி வெளியிட்டுள்ளது.

As Shortwave radio dies a slow death, enthusiasts long for a revival. 
- The Hindu, 4 May 2018, p2

Inline image