Monday, July 30, 2018

சர்வதேச விண்வெளி நிலையம்


 

 

ஹாம் வானொலி பயன்பாட்டாளர் ஒவ்வொருவருக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்தோடு தொடர்பு கொள்ள என்றுமே ஒரு ஆர்வம் இருக்கும். அப்படி ஆர்வம் உள்ளவராக நீங்கள் இருந்தால், இந்த வாரம் Slow-Scan டிவி ஒலிபரப்பினை வானலைகள் ஊடாக செய்ய உள்ளனர். 2018 ஜூலை 30 தேதி இந்திய நேரம் இரவு 9.30 முதல் நள்ளிரவு 1.00 மணி வரையும், 31-ஆம் தேதி மாலை 6.55 முதல் நள்ளிரவு 12.45 வரையும்  145.800 மெ.ஹெ-ல் ஒலிபரப்ப உள்ளது. இந்த ஒலிபரப்பினை கென்வுட் டிஎம்-டி710 எனும் மாடல் கொண்ட ஹாம் வானொலிப் பெட்டியின் துணைகொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஒலிபரப்ப உள்ளதாக ‘ஆம்சாட் யூகே’ இணையதளம்  தெரிவிக்கிறது. அவர்களின் இணைய தள முகவரி http://amsat-uk.org

 

சர்வதேச விண்வெளி நிலைய ஒலிபரப்பினை எப்படி நாம் கேட்பது? நம்மிடம் உள்ள சாதாரண வானொலிப் பெட்டியில் இதனை கேட்கலாமா? போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு ஜான் பிரையர் தனது வலைப்பூவில் விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அந்த வலைப்பூ முகவரி https://spacecomms.wordpress.com/iss-sstv-reception-hints. சர்வதேச விண்வெளி நிலையத்தினை (ஐஎஸ்எஸ்) தொடர்ந்து கேட்பவர்கள் ஒன்றிணைந்து “ஐஎஸ்எஸ் ரசிகர் மன்றத்தினை” தொடங்கியுள்ளனர். அவர்கள் மன்றத்தில் நீங்களும் உறுப்பினர் ஆக விரும்பினால், https://www.issfanclub.com எனும் இணைய முகவரியை பார்க்கலாம்.

 

 

No comments: