Showing posts with label ஹாம் வானொலி. Show all posts
Showing posts with label ஹாம் வானொலி. Show all posts

Friday, December 27, 2024

இப்பெல்லாம் இவுங்கெல்லாம் ரேடியோ கேட்குறாங்க!



 சமீபத்தில் Pen SpeakZ யூடியூப் சேனலில் அதிரி புதிரியாக Dxing மற்றும் ஹாம் வானொலித் தொடர்பாக ஒரு பேட்டியை கார்திகா கண்டார்கள். அந்தப் பேட்டிக்கானத் தொடுப்பு இங்கே. பார்த்துவிடுங்கள்...


#


Wednesday, September 14, 2022

உடுமலையில் நரி வேட்டை (FOX HUNT)

 


நரி வேட்டை என்ற வார்த்தையைக் கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? வரும் அக்டோபர் 2, 2022 அன்று இந்த நரி வேட்டை உடுமலைப் பேட்டையில் நடைபெற உள்ளது. உடுமலைப் பேட்டையில் எங்கே நரிகள் உள்ளது? என்று ஆச்சரியப்பட வேண்டாம். நரி வேட்டைக்கும் வானொலிக்கும் ஒரு தொடர்புள்ளது. இங்கு நரி என்பது வானொலி ஒலிபரப்பிகளைக் (டிரான்ஸ்மிட்டர்). குறிக்கும். ஹாம் வானொலியில் இது ஒரு வகையான விளையாட்டு ஆகும்.

டிரான்ஸ்மிட்டர் வேட்டை (டி-வேட்டை, என்றும் அறியப்படுகிறது), இதில் பங்கேற்பாளர்கள் ரேடியோ திசைக் கண்டறியும் ஆன்டனாக்களைப் பயன்படுத்தி ஒரு குறிப்பிட்டத் பகுதியில் மறைந்திருக்கும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ரேடியோ டிரான்ஸ்மிட்டர்களைக் கண்டறியும் ஒரு செயலாகும். இந்த செயல்பாடு ஹாம் (அமெச்சூர்) வானொலி ஆர்வலர்களிடையே மிகவும் பிரபலமானதாகக் உள்ளது. இது தான் வரும் அக்டோபர் 2, 2022 அன்று உடுமலை அமேச்சூர் கிளப்பால் நடத்தப்படுகிறது. மேலதிக விபரங்களுக்கு 99655 61041.

Monday, July 30, 2018

சர்வதேச விண்வெளி நிலையம்


 

 

ஹாம் வானொலி பயன்பாட்டாளர் ஒவ்வொருவருக்கும், சர்வதேச விண்வெளி நிலையத்தோடு தொடர்பு கொள்ள என்றுமே ஒரு ஆர்வம் இருக்கும். அப்படி ஆர்வம் உள்ளவராக நீங்கள் இருந்தால், இந்த வாரம் Slow-Scan டிவி ஒலிபரப்பினை வானலைகள் ஊடாக செய்ய உள்ளனர். 2018 ஜூலை 30 தேதி இந்திய நேரம் இரவு 9.30 முதல் நள்ளிரவு 1.00 மணி வரையும், 31-ஆம் தேதி மாலை 6.55 முதல் நள்ளிரவு 12.45 வரையும்  145.800 மெ.ஹெ-ல் ஒலிபரப்ப உள்ளது. இந்த ஒலிபரப்பினை கென்வுட் டிஎம்-டி710 எனும் மாடல் கொண்ட ஹாம் வானொலிப் பெட்டியின் துணைகொண்டு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து ஒலிபரப்ப உள்ளதாக ‘ஆம்சாட் யூகே’ இணையதளம்  தெரிவிக்கிறது. அவர்களின் இணைய தள முகவரி http://amsat-uk.org

 

சர்வதேச விண்வெளி நிலைய ஒலிபரப்பினை எப்படி நாம் கேட்பது? நம்மிடம் உள்ள சாதாரண வானொலிப் பெட்டியில் இதனை கேட்கலாமா? போன்ற பல்வேறு சந்தேகங்களுக்கு ஜான் பிரையர் தனது வலைப்பூவில் விரிவாக விளக்கம் கொடுத்துள்ளார். அந்த வலைப்பூ முகவரி https://spacecomms.wordpress.com/iss-sstv-reception-hints. சர்வதேச விண்வெளி நிலையத்தினை (ஐஎஸ்எஸ்) தொடர்ந்து கேட்பவர்கள் ஒன்றிணைந்து “ஐஎஸ்எஸ் ரசிகர் மன்றத்தினை” தொடங்கியுள்ளனர். அவர்கள் மன்றத்தில் நீங்களும் உறுப்பினர் ஆக விரும்பினால், https://www.issfanclub.com எனும் இணைய முகவரியை பார்க்கலாம்.

 

 

Saturday, April 28, 2018

ஹாம் வானொலியில் பயன்படுத்தப்படும் முக்கியமான க்யூ குறியீடுகள்


ஹாம் வானொலியில் பயன்படுத்தப்படும் முக்கியமான க்யூ குறியீடுகளையும், அதற்கான விளக்கத்தினையும் விரிவாக காணலாம்.

QRG – என்னுடைய சரியான அலைவரிசை என்ன?
QRL – அந்த அலைவரிசை பிசியாக உள்ளதா?
QRM – ஏதேனும் இடைஞ்சலுக்கு உள்ளாகிறீர்களா?
QRN – எனது ஒலிபரப்பினை நிலையாகக் கேட்க முடிகிறதா?
QRO – என்னுடைய ஒலிபரப்பின் சக்தியைக் கூட்டவா?
QRP – என்னுடைய ஒலிபரப்பின் சக்தியைக் குறைக்கட்டுமா?
QRQ – வேகமாக அனுப்பட்டுமா?
QRS – இன்னும் மெதுவாக அனுப்பட்டுமா?
QRT – அனுப்புவதை நிறுத்திக்கொள்ளட்டுமா?
QRU – வேறு ஏதேனும் எனக்கான தகவல் இருக்கிறதா?
QRV – தயாராக உள்ளீர்களா?
QRX – காத்திருக்கட்டுமா?
QRZ – யார் அழைக்கிறீர்கள்?
QSB – எனது சிக்னல் குறைந்து வருகிறதா?
QSL – எனது ஒலிபரப்பினை பெறுவதோடு, புரிந்துகொள்ள முடிகிறதா?
QSP – நான் ரிலே செய்யட்டுமா?
QSX – என்னை _________ எனும் அலைவரிசையில் கேட்கிறீர்களா?
QSY – வேறு ஒரு அலைவரிசைக்கு மாற்றிக் கொள்ளட்டுமா?
QTC – எனக்கு உங்களிடம் இருந்து வேறு ஏதேனும் தகவல் உள்ளதா?
QTH – நீங்கள் வசிக்கும் இடம் எது?

ஆகிய குறியீடுகள், இன்றும் ஹாம் வானொலிகளுக்கிடையே தவிர்க்க முடியாத குறியீடுகளாக இருந்து வருகிறது. ஆங்கிலத்தில் சொல்வதற்கும், அதனையே தமிழில் மொழி மாற்றம் செய்து சொல்வதற்கும், பெரிய வேறுபாடு உள்ளது. முடிந்த வரை அவற்றை அனைவருக்கும் புரியும் தமிழில் மொழிபெயர்த்துள்ளோம்.

Tuesday, February 06, 2018

மஹா மீட் 2018


ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் இரண்டாவது சனிக்கிழமை அன்று ஹாம் வானொலியினர் மாமல்லபுரத்தில் ஒன்று கூடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். அந்த வகையில் இந்த வருடத்திற்கான சந்திப்பு வரும் சனிக்கிழமை (10 பிப். 2018) மாமல்லபுரத்தில் உள்ள ஹோட்டல் மாமல்லா ஹெரிட்டேஜில்  நடைபெறவுள்ளது. ஹாம் வானொலி பற்றி அறிந்து கொள்ள விரும்புபவர்களுக்கும் ஹாம் வானொலித் தேரிவினை எழுத விரும்புபவர்களுக்கும் இது ஒரு விரும்புபவர்களுக்கும் நல்ல வாய்ப்பாக உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது. இந்த சந்திப்பு பற்றி மேலும் அறிந்து கொள்ள 94457 79232 என்ற கைப்பேசி எண்ணையோ அல்லது vandunetarc@gmail.com என்ற மின் அஞ்சல் முகவரியையோ தொடர்பு கொள்ளலாம்.

இதில் ஹாம் பொது அறிவுப் போட்டி மட்டுமல்லாது ஹாம் வானொலிப் பெட்டிகள், ஆண்டனாக்கள், ஹாம் வானொலிக்குத் தேவையான உதிரிப்பாகங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளது. அது மட்டுமல்லாது தின இதழில் தொடராக வெளிவரும் இந்த “இளைஞர்களுக்கான ஹாம் வானொலி” தொடர் தொகுக்கப்பட்டு மூன்றாவது பாகமாக வெளியிடப்பட உள்ளது. ஏற்கனவே இந்த தொடரின் முதல் பாகம் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற இந்திய சர்வதேச அறிவியல் திருவிழாவிலும், இரண்டாவது பாகம் சென்னை அகில இந்திய வானொலியிலும் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Thursday, November 09, 2017

பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி

ஹாம் வானொலித் தொடர்பான புத்தகங்களின் வரிசையில் இரண்டாவது புத்தகமான “பேரிடர் காலங்களில் உதவும் ஹாம் வானொலி” வரும் 13 நவம்பர் 2017 (மாலை 4.30) அன்று “பொதுசேவை ஒலிபரப்பு நாளை (Nov 12)” ஒட்டி அகில இந்திய வானொலி, சென்னை பல்தட பதிவு அரங்கில் வெளியிடப்பட உள்ளது.  (நிகழ்ச்சி ஏற்பாடு முனைவர். வெ. நல்லதம்பி, எஸ்.எஸ்.பாண்டியன், இந்திய ஒலி ஒளிபரப்பாளர் மன்றம், சென்னை)


Tuesday, June 20, 2017

தொடக்க நிலையினருக்கான ஹாம் வானொலி


ஹாம் வானொலித் தொடர்பாக உலகம் முழுவதும் ஏராளமாக புத்தகங்கள் வெளிவந்தாலும் ஆங்கிலத்தில் வெளியான இந்தப் புத்தகம் தான் ஹாம் வானொலி பற்றி அறிந்து கொள்பவர்களுக்கு பெரிதும் விரும்பி படிக்கப்பட்ட புத்தகமாகும். Ham Radio For Beginners எனும் இந்தப் புத்தகம் ஹாம் வானொலிப் பற்றி அடிப்படைத் தகவல்ளைக் கொண்டுள்ளது. மைக்கேல் வேல்ஸ் எழுதியுள்ள இந்தப் புத்தகத்தை பல அமெரிக்கர்கள் தங்களின் முதல் கட்டத் தேர்வுக்குப் பயன்படுத்துகின்றனர். அமேசான் இணைய தளத்தில் இந்தப் புத்தகத்தின் கிண்டில் பதிப்பு ரூ.199 க்கு கிடைக்கிறது.

Monday, June 12, 2017

அமெரிக்க ரேடியோ ரிலே லீக்



ஹாம் வானொலிக்காக ஏராளமான இணைய தளங்கள் இருந்தாலும் அவற்றில் ஒரு சில பக்கங்கள் தான் வானொலி நேயர்களுக்கு பயனுள்ள தளங்களாக இருந்துள்ளன.  அந்த வரிசையில் நாம் இந்த வாரம் பார்க்கவுள்ள இணையதளம் உலக அளவில் புகழ்பெற்ற ஹாம் வானொலிக்கான இணைய தளமாகும். அமெரிக்காவில் வடிவமைக்கப்பட்டு செயல்பட்டுவரும் இந்த இணைய தளமானது பல்வேறு பயனுள்ளத் தகவல்களைக் கொண்டுள்ளது. 1914 ல் ஹிரம் பெர்சி மேக்சிம் அவர்களால் தொடங்கப்பட்ட அமெரிக்க ரேடியோ ரிலே லீஃகின் இணைய தளம் தான் அது. இந்த www.arrl.org இணையதளமானது புதியவர்களுக்கும் பல பயனுள்ளத் தகவல்களைக் கொண்டுள்ளது.

Monday, June 05, 2017

ஸ்மார்ட் போன் உலகத்தில் ஹாம் வானொலி



இது ஸ்மார்ட் போன் உலகம். அனைத்து ஊடகங்களும் இன்று நம் கைபேசியிலேயே பார்க்கக்கூடிய வடிவில் வந்துவிட்டது. ஹாம் வானொலியும் அந்த வரிசையில் தற்பொழுது இணைந்து கொண்டது. ஹாம் வானொலித் தொடர்பாக சமீப காலமாக பலப்பல புதிய ஆப்கள் வந்த வண்ணமுள்ளது. இந்த வாரம் நாம் பார்க்கவுள்ள ஆப் இன்றுள்ள ஹாம் வானொலிப் பயன்பாட்டாளர்கள் கொண்டாடும் ஒரு ஆப் ஆகும். எக்கோ லிங்க் (EchoLink) எனப்படுகின்ற இந்த கூகுள் ஆண்ட்ராய்டு அப்ளிகேசன் மூலம் உலகெங்கும் உள்ள ஹாம் வானொலி நிலையங்களுடன் தொடர்பு கொள்ள முடியும். VHF வானொலிப் பெட்டி நம் கையில் இல்லையென்றாலும், அந்த வானொலிப் பெட்டியை இயக்குபவர்களுடன் தொடர்பு கொள்வதுதான் இதன் சிறப்பாகும். இலவசமாக கிடைக்கும் இந்த அப்ளிகேசனை அனைவரும் பதிவிறக்கம் செய்துகொள்ள முடியாது. ஹாம் வானொலி உரிமம் உள்ளவர்கள் மட்டுமே இதனைப் பயன்படுத்த முடியும். இந்த அப்ளிகேசனை இதுவரை இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்டோர் 151 நாடுகளில் இருந்து உபயோகப்படுத்தி வருகின்றனர். இவர்களது இணையதள முகவரி www.echolink.org என்பதாகும். தமிழகத்தில் உள்ளவர்கள் ஹாம் வானொலி உரிமத்தினைப் பெற என்ன செய்ய வேண்டும் என்பதை அடுத்த வாரம் காணலாம்.

Thursday, December 15, 2016

அமெச்சூர் வானொலிகளுக்குக் குறைந்த அளவு மின்சாரம்!


உலகை எச்சரிக்க இதோ புது ரேடியோ சேவை


இந்த உலகில் மாற்ற முடியாத ஒன்றே ஒன்று இயற்கை சீற்றங்கள் தான், இதை எந்த சக்தியாலும் நிச்சயம் தடுத்து நிறுத்த முடியாது என்பது நம் அனைவருக்கும் தெரியும். ஒவ்வொரு முறையும் இயற்கைச் சீற்றம் நமக்கு ஒரு பாடத்தினை கற்றுக்கொடுக்கிறது. அவ்வப்போது கடலோர மாவட்டங்களில் ஏற்படும் புயல் மற்றும் கடல் சீற்றங்களின்போது மட்டுமே நாம் ஆபத்துகால மேலாண்மை குறித்துச் சிந்திக்கிறோம். அந்த வரிசையில் இப்பொழுது இணைந்திருப்பது "இமாலய சுனாமி'.

பருவமழை முன்கூட்டியே தொடங்கிவிட்டதுதான் காரணம் என சொல்லப்பட்டாலும் அந்தப் பகுதிகளில் நிகழ்ந்துள்ள சேதத்தைப் பார்க்கும்போது நமக்கே ஒருவித பயம் தொற்றிக்கொள்கிறது. மிகப்பெரிய காட்டாற்றின் அருகிலேயே பெரிய பெரிய கட்டடங்களைக் கட்டி வைத்துள்ளனர். கங்கையின் முழு வேகத்தினை ஹரித்வார் சென்றால் பார்க்கலாம். அப்படியான அசுர வேகத்தில் பெருவெள்ளம் வரும்பொழுது தடுப்பது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் முதலில் உணவுக்கும் குடிநீருக்கும் தட்டுப்பாடு ஏற்படும். அதன்பின் தொலைத்தொடர்பு சாதனங்கள் செயலற்றுப் போகும்.

இப்படியான சமயங்களில் மீட்புப் பணிகளே ஸ்தம்பித்துவிடும். இதனால் அந்தப் பகுதிகள் நாட்டின் வேறு பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படும். நாம் என்னதான் தொழில்நுட்பங்களில் முன்னேறி இருந்தாலும் அவை அனைத்தும் ஒன்றைச் சார்ந்தே இருக்கின்றன. உதாரணமாக கம்ப்யூட்டர் இணைய வசதி இல்லாமல் ஒன்றும் செய்ய இயலாது. கைப்பேசிக்கு "சிக்னல்' தேவை. வெள்ள பாதிப்பு ஏற்படும்போது "டவர்களும்' அடித்துசெல்லப்படுவது இயற்கையே. ஆக, கைப்பேசிகளும் இயங்காது. தொலைபேசி நிலையங்களுக்கும் இதே கதிதான். தொலைக்காட்சிகளையும் மின்சாரம் இன்றி பார்க்க முடியாது. வானொலியை "பேட்டரி' கொண்டு கேட்கலாம். ஆனால் அதுவும் நீண்ட நேரத்துக்கு உழைக்காது. ஆக அனைத்து தகவல் தொழில்நுட்ப சாதனங்களும் செயலற்றுப் போகும் போதெல்லாம் ஆபத்துக்கு கைகொடுப்பவனாக வந்து சேர்வது "அமெச்சூர் வானொலி' எனப்படுகின்ற "ஹாம்' வானொலிதான்.

அமெச்சூர் வானொலி மட்டும் எப்படி இந்தச் சமயத்தில் செயல்படும் என்ற சந்தேகம் அனைவருக்கும் எழுவதுதான். இதற்கும் மின்சாரம் தேவைதானே? அமெச்சூர் வானொலிகளுக்குக் குறைந்த அளவு மின்சாரம் இருந்தால் போதுமானது. இதனைக் கொண்டு நாட்டின் மற்ற பகுதிகளை எளிதாகத் தொடர்பு கொள்ளலாம். குறிப்பாக மின்சாரமே கிடைக்காவிட்டாலும் இந்த "ஹாம்' வானொலியை சூரிய சக்தி கொண்டும் இயக்க முடியும்.

அந்தமான் தீவுகளில் சுனாமி வந்தபோது "ஹாம்' வானொலி உபயோகிப்பாளர்களின் பணி மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மின்சாரமே இல்லாதபோது அங்கு அவர்கள் சூரிய சக்தியினைப் பயன்படுத்தி பல்வேறு உயிர்களைக் காப்பாற்றினார்கள். "ஹாம்' வானொலியானது சிற்றலைவரிசை மற்றும் மிக உயர் அதிர்வெண்ணில் ஒலிபரப்பப்படுவதால் அதிக தொலைவிற்குச் செல்கிறது. இதனால் எளிதாக உலகம் முழுவதும் தொடர்பு கொள்ள முடிகிறது. ரிபீட்டர்களின் துணைகொண்டு மிக உயர் அதிர்வெண்ணில் இந்தியா முழுவதும் ஒலிபரப்ப முடியும். "ஹாம்' வானொலியாளர்கள் உத்தரகண்டிலும் அரிய சேவைகளைப் புரிந்துள்ளனர். "ஹாம்' வானொலியை அனைவரும் பயன்படுத்த முடியாது.

இதற்கு இந்தியாவில் தடை உள்ளது. மாறாக இதற்கென மத்திய அரசு வைக்கும் தேர்வினை எழுதுபவர்களுக்கு முறையான உரிமத்தினை வழங்குகிறார்கள். இந்தத் தேர்வினை எழுத விரும்புபவர்களுக்கு முக்கிய ஊர்களில் "ஹாம் கிளப்'புகள் உள்ளன. இந்தியாவில் புகழ்பெற்ற கிளப்பானது ஹைதராபாதில் உள்ளது. "நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் அமெச்சூர் ரேடியோ' என்ற அந்த நிறுவனமானது இந்தியா முழுவதும் "ஹாம்' தேர்வு எழுத ஆர்வம் உள்ளவர்களுக்கு பாடதிட்டத்தினை வழங்கி தேர்விற்கு தயார்செய்கிறது. இப்பொழுது உத்தரகண்ட் மாநிலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த அமைப்பே தேவையான உதவிகளைச் செய்து வருகிறது.

இந்தியாவில் இதுவரை 20,000 பேர் மட்டுமே "ஹாம்' வானொலி உரிமம் பெற்றுள்ளனர். முதல் "ஹாம்' வானொலி உரிமம் 1921-இல் வழங்கப்பட்டது. 1930 வரை இந்தியாவில் 30 "ஹாம்' உரிமங்களே வழங்கப்பட்டன. 1984 வரை "ஹாம்' வானொலிப் பெட்டிகளை வெளிநாடுகளில் இருந்து தருவிப்பதில் சிக்கல் இருந்தது. காரணம், அந்த வானொலிப் பெட்டியின் விலையை விட சுங்க வரி அதிகமாக கட்டவேண்டி இருந்தது. . மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ், இந்தியாவில் உள்ளவர்களுக்கு "ஹாம்' வானொலி உரிமம் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பே அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இந்திய வான் வெளியில் அலைவரிசைகளை நெறிப்படுத்தி பயன்படுத்துவதற்கும் உரிமத்தினை வழங்கிவருகிறார்கள். "ஹாம்' வானொலி உரிமம் பெற, 12 வயது நிரம்பிய அனைவரும் தேர்வினை எழுதலாம். "ஹாம்' தேர்வினை எழுதி தேர்வு செய்யப்படுபவர்களுக்கு தனித்துவமான அடையாளக் குறியீடு வழங்கப்படுகிறது.

இதனை ஆங்கிலத்தில் "கால்-சைன்' என்று கூறுகிறார்கள். ஹாம் வானொலிக்கான தகுதித் தேர்வில் அடிப்படை எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தொடர்பியல் கோட்பாடுகள் மட்டுமல்லாமல் "மோர்ஸ்' குறியீடுகள் பற்றியும் அறிந்திருத்தல் அவசியமாகிறது. இரண்டு வகையான தேர்வுகள் நடத்தப்படுகிறது. முதல் வகைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் அனைத்து அலைவரிசைகளையும் பயன்படுத்தலாம். இரண்டாவது வகைத் தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் குறிப்பிட்ட சக்தியில், குறிப்பிட்ட அலைவரிசைகளில் மட்டுமே ஒலிபரப்ப அனுமதிக்கப்படுவர். இந்தியாவின் சார்பாக சர்வதேச அளவில் நடக்கும் கூட்டங்களுக்கும், இந்தியாவில் "ஹாம்' வானொலியின் பங்கினை மக்கள் மத்தியில் எடுத்துச் செல்லும் ஓர் அமைப்பாக இந்திய அமெச்சூர் வானொலி சொசைட்டி உள்ளது. "ஹாம்' வானொலியில் இணைந்து நாமும் நாட்டிற்குச் சேவையாற்றலாமே!

மத்திய அரசின் தகவல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் வரும் வயர்லெஸ் திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைப்புப் பிரிவின் கீழ், இந்தியாவில் உள்ளவர்களுக்கு "ஹாம்' வானொலி உரிமம் வழங்கப்படுகிறது. இந்த அமைப்பே அதற்கான தேர்வுகளை நடத்தி வருகிறது. மேலும் இந்திய வான் வெளியில் அலைவரிசைகளை நெறிப்படுத்தி பயன்படுத்துவதற்கும் உரிமத்தினை வழங்கிவருகிறார்கள். எது எப்படியோ நாட்டிற்க்கு நன்மை நடந்தால் சரிதான் என்கிறீர்களா.

Written By: Keerthi for http://tamil.gizbot.com/

உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் ஹாம்!


அமெச்சூர் ரேடியோ - ஹாம்

இணையம், இணைய உரையாடல் , வலைப்பதிவு, செல் பேசி, குறுஞ்செய்தி என்று இன்று ஒருவர் மற்றவர்களுடன் தொடர்பு கொள்ளவும் , கதைக்கவும் பல ஊடக வசதிகள் இன்று வந்து விட்டது இதனால் பல பழைய தொலைதொடர்பு ஊடங்கள் , அதன் பொழுது போக்கு அம்சங்கள் பற்றி அதிகம் தெரியாமல் போய்விட்டது.

அப்படிப்பட்ட ஒரு பழைய ஆனால் இன்றும் உலக அளவில் பெரிதும் பயன்படும் மக்கள் தொடர்பு ஊடகம் தான் ஹாம் எனப்படும் தொழில்முறை அல்லாத வானொலி பயன்பாட்டாளர்கள்(ameture radiography) .100 ஆண்டு காலப்பாரம்பரியம் கொண்டது இந்த ஹாம் வானொலி. இந்தியாவிலும் வெகு சொற்ப அளவில் ஹாம்கள் இருக்கிறார்கள். ஹாம் என்பது ஜாம் என்பதில் இருந்துவந்ததாக சொல்கிறார்கள் காரணம் அக்காலத்தில் இவர்கள் வானொலீ அலைவரிசையை அதிகம் ஆக்ரமித்தார்களாம்!

ஹாம் (ham):

வழக்கமாக கம்பி இல்லா தந்தி /வானொலி இவற்றை ராணுவம், தீ அணைப்பு , காவல் துறை, மருத்துவ ஊர்திகள், ஆகியவை பயன்படுத்தும் மேலும் குறைந்த அலை நீளம், பண்பலை போன்றவற்றில் அகில இந்திய வானொலி, சூரியன் எப்.எம் போன்ற வணிக வானொலிகள் ஒலிப்பரப்பும். இவை போக இருக்கும் அலைவரிசையில்(1.8 mhz to 275 ghz)26 பேண்ட்கள் ஒதுக்கி அமெச்சூர் ரேடியோவிற்கு இடம் தந்துள்ளார்கள் அவர்கள் தான் ஹாம் எனப்படுவார்கள்.

இதனைப்பயன்படுத்த மத்திய அரசின் தகவல் ஒளிபரப்பு துறையிடம் இருந்து ஒரு தனியார் அமெச்சூர் வானொலி இயக்குனர் என்பதற்கான தேர்வுகள் எழுதி அனுமதி வாங்க வேண்டும். அப்போது தான் இயக்க முடியும். அந்த தேர்வுகள் எழுத ஒருவர் இந்தியராகவும், 18 வயது ஆனவராகவும் இருந்தால் போதும் கல்வி அறிவு இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. ஆனால் கல்விஅறிவு இல்லை எனில் தேர்வில் தேற முடியாது.

தேர்வில்,

*அடிப்படை மின்னனுவியல் ,
*மோர்ஸ் கோட் எனப்படும் தந்தி சுருக்க குறியீடுகள் அனுப்புதல் பெறுதல்

ஆகியவற்றில் தேர்வெழுத வேண்டும்.தேர்வுக்கு கட்டணம் உண்டு. சென்னையில் இதற்கான மத்திய அரசு அலுவலகம் பெருங்குடியில் உள்ளது, அமெச்சூர் ரேடியோ சங்கம் அடையாரில் உள்ளது.

தேர்ச்சி பெற்றுஅனுமதி சீட்டுக்கிடைத்ததும் நாமே சொந்தமாக உபகரணங்களை வாங்கி ஒரு கம்பி இல்லா வானொலி நிலையம் ஆரம்பித்து இயக்கலாம், அதன் மூலம் பக்கத்து ஊர், நாடு என நம் விருப்பம் போல பேசி மகிழலாம். பேசுவதற்கு போய் தேர்வு,அது இதுவென இத்தனை கஷ்டப்படனுமா என யாஹூ, கூகிள் சாட் லாம் வந்த பிறகு தோன்றும் ஆனாலும் இது ஒரு வித்தியாசமான பொழுது போக்கு.

ஹாம் ரேடியோவில் இரண்டு விதமாக பேசுவார்கள், சாதாரணமாக பேசுவது போல பேசுது (radiophony), மற்றது மோர்ஸ் கோட் கொண்டு பேசுவது. மோர்ஸ் கோடில் எளிதாக இருப்பதற்காக Q code என்ற ஒன்றையும் சேர்த்து பேசுவார்கள். இதன் மூலம் பல வார்த்தைகளை சுருக்கி சொல்லலாம். இது ஒரு வழி தொடர்பு முறை ஒருவர் பேசியதும் தான் அடுத்தவர் பேச முடியும் எனவே பேசியதும் "ஓவர்" என்று சொல்லி பேசுவதை முடிக்க வேண்டும். பல எதிர்பாராத இயற்கை இடர்ப்பாடுகளின் போது தகவல் தொடர்பு சாதனங்கள் சேதம் அடைந்து விடும் அப்போது ஹாம் ரேடியோக்களை தகவல் தொடர்புக்கு அரசு பயன்படுத்திக்கொள்ளும்.

இது அல்லாமல் சிட்டிசன் பேண்ட் என்ற வானொலியும் உண்டு அதற்கு என ஒரு குறிப்பிட்ட எல்லையில் பயன்படுத்த வேண்டும் , அதற்கு தேர்வெல்லாம் எழுத வேண்டாம் ஆனால் வருடத்திற்கு ஒரு கட்டணம் செலுத்த வேண்டும். அவற்றை தான் கால் டாக்சி போன்ற சேவைகள் பயன்படுத்துகின்றன.

மோர்ஸ் கோட்:

இதனைக்கண்டு பிடித்து நடைமுறைக்கு கொண்டு வந்தவர் சாமுவேல் மோர்ஸ் என்பவர். அவர் பெயராலேயே அழைக்கப்படுக்கிறது.மோர்ஸ் கோட் என்பது புள்ளிகளும் , சிறு கோடுகளும் அடுத்து அடுத்து போட்டு எழுதுவது. ஒரு புள்ளியை "டிட் "(DIT)என்றும் கோட்டை "டாஹ்"(DASH) உச்சரிக்கும் போது சொல்ல வேண்டும். கீழே மோர்ஸ் கோட் கொடுக்கப்பட்டுள்ளது நீங்கள் கூட பழகலாம்! பழகி பாருங்க புடிச்சா ஹாம் தேர்வு எழுதுங்க இல்லைனா சும்மா தெரிஞ்சு வைத்துக்கொள்ளுங்கள்!

Letter Morse
A di-dah
B dah-di-di-dit
C dah-di-dah-dit
D dah-di-dit
E dit
F di-di-dah-dit
G dah-dah-dit
H di-di-di-dit
I di-dit
J di-dah-dah-dah
K dah-di-dah
L di-dah-di-dit
M dah-dah


N dah-dit
O dah-dah-dah
P di-dah-dah-dit
Q dah-dah-di-dah
R di-dah-dit
S di-di-dit
T dah
U di-di-dah
V di-di-di-dah
W di-dah-dah
X dah-di-di-dah
Y dah-di-dah-dah
Z dah-dah-di-dit


சில Q code கள்:

QRA What is the name of your station? The name of my station is ___.
QRB How far are you from my station? I am ____ km from you station
QRD Where are you bound and where are you coming from? I am bound ___ from ___.


சொல்வதற்கு இதில் நிறைய இருக்கிறது , அனைத்தையும் இங்கு சொல்வது சாத்தியம் இல்லை.இதற்கு என சில புத்தகங்கள் கிடைக்கின்றன , ராஜேஷ் வர்மா என்பவர் எழுதிய "a hand book of ameture radio" என் ற புத்தகம் எளிமையாகவும் தெளிவாகவும் இருக்கும். ஹிக்கின் பாதம்ஸ்,  ஸ்டார்  மார்க் போன்ற கடைகளில் கிடைக்கலாம்! வாங்கி படித்து பாருங்கள்.

சில இணையதள முகவரிகள்:

1)http://www.ac6v.com/

2)http://www.hello-radio.org/whatis.html#five

நன்றி - http://vovalpaarvai.blogspot.in/

Saturday, April 11, 2009

ஹாம் வானொலிக்காக...

மார்ச் மாதம் முதல் சர்வதேச தொலைத் தொடர்பு குழுமமானது 7100 கி.ஹெ. முதல் 7200 கி.ஹெ. வரையிலான அலை எண்களை ஹாம் வானொலிக்காக ஒதுக்க உள்ளது. இதன் காரணமாக அகில இந்திய வானொலியானது 7105 கி.ஹெ. முதல் 7195 கி.ஹெ. வரையில் அதாவது 41 மீட்டரில் ஒலிபரப்பி வருவதை வேறு அலைவரிசைகளுக்கு மாற்ற உள்ளது. (ஜோஸ் ஜேக்கப்)

Friday, January 16, 2009

அமெச்சூர் வானொலி சந்திப்பு


ஒவ்வொரு ஆண்டும் மாமல்லபுரத்தில் நடைபெரும் அமெச்சூர் வானொலி சந்திப்பு இந்த ஆண்டும் வரும் 14 பிப்ரவரி சனிக்கிழமையில் நடைபெற உள்ளது. இந்த சந்திப்பில் கலந்துகொள்வதற்காக தமிழகம் மட்டுமல்லாது கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகாவில் இருந்தெல்லாம் ஹாம் வானொலி உபயோகப்படுத்துவோர் கலந்து கொள்ள உள்ளனர். மாமல்லபுரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள ஹோட்டல் வீராஸில் நடைபெற உள்ள இந்தக் கூட்டத்தில் ஹாம் வானொலிப்பெட்டிகள், உதிரிப்பாகங்கள், ஆண்டெனாக்கள் என இன்னும் பல பொருட்கள் விற்பனையும் செய்யப்பட உள்ளது. நுழைவுக்கட்டணம் ஏதும் இல்லாத இந்த நிகழ்வில் நீங்களும் உங்களது நண்பர்களுடன் கலந்து கொள்ளலாம். சிற்றலை வானொலிகளைக் கேட்கும் நேயர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொள்வதன் மூலம் ஹாம் வானொலிப் பற்றி ஏறாளமானத் தகவல்களைத் தெரிந்து கொள்ளலாம். மேலதிக விபரங்களுக்கு திரு. விட்டல் – 094453 30505, 044-22312420

Saturday, September 06, 2008

தமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு; சாருஹாசன் பேட்டி - பாகம் 4

ஆந்திர அரசு தங்களுக்குக் கொடுத்த விருது பற்றி?
ஒரு சமயம் இரவு 12 மணிக்கு ஆந்திர கலெக்டர் அலுவலகத்தில் இருந்து ஹாமில் தமிழகத்தைச் சேர்ந்த ஹாம்களுக்கு அழைப்பு வந்தது. அந்த சமயத்தில் நான் மட்டுமே அந்த அலைவரிசையில் இருந்தேன். ஆந்திராவில் புயலின் காரணமாக உணவுப்பொருட்களை ஏற்றிக் கொண்டு பெங்களூரில் இருந்து வரும் ஹெலிகாப்டருக்கு சென்னையில் பெட்ரோல் போட வேண்டும் என்று கூறினார்.நானும் உடனே அவர்களை அலைவரிசையிலேயே இருக்கச் சொல்லி, எங்களது வீட்டின் கீழ்த் தளத்தில் அதிர்ஷ்டவசமாக அந்த சமயத்தில் இந்தியன் ஆயில் உதவி பொது மேலாளர் தங்கியிருந்தார். அவரை அழைத்து அலைவரிசையில் பேசச் சொல்லி, நானே ஆந்திர கலெக்டரின் சார்பில் கடிதம் எழுதி, ஹெலிகாப்டருக்கான எரி பொருளை வாங்கிக் கொடுத்தோம். இந்த சேவைக்காக எனக்கு ஆந்திர அரசு விருதினைக் கொடுத்தது. இதுவும் ஹாம் வானொலியில்மட்டுமே அன்று சாத்தியமாக இருந்தது.

மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்தியபோது ஏதேனும் மறக்க முடியாத அனுபவம்?
1960களில் பெரும்பாலான ஹாம் உபயோகிப்பாளர்கள் மோர்ஸ் குறியீட்டினைப் பயன்படுத்தியே வெளிநாட்டில் உள்ள ஹாம் வானொலி ஒலிபரப்பாளர்களைத் தொடர்பு கொண்டு வந்தனர். ஒருசமயம் நான் கீயில் ஒலிபரப்பி வரும்போது ஸ்காட் என்ற பெயரில் ஒருவர் மறுமுனையில் இருந்து எனக்கு பதில் அனுப்பினார். உடனே அவரிடம், நீங்கள் விண்வெளிவீரர் ஸ்காட்தானே?Óஎன்று கேட்டேன். உடனே, அவர் Òநீங்கள்தான் முதல் தடவையாக என்னைக் கண்டு பிடித்துள்ளீர்கள். நான் எத்தனையோ முறை இந்த மோர்ஸ் ஒலிபரப்பில் வந்துள்ளேன். ஆனால் முதன்முறையாக நீங்கள்கண்டு பிடித்ததில் எனக்கு மிக்க மகிழ்ச்சிÓ என்றார். அந்த கால கட்டங்களில் ஸ்காட் மிகப் பிரபலம்.

ஹாம் வானொலியின் வருங்காலம் எப்படி இருக்கும்?
பலர் நினைக்கிறார்கள், தொழில் நுட்பம் வளர்ந்து வருவதால் ஹாம் வானொலியும் மறைந்துவிடும் என்று. ஆனால் அது மறைந்து விடாது. காரணம் புதிய தொழில்நுட்பங்களோடு இணைந்துசெல்லவல்லது இந்த ஹாம் ரேடியோ. உதாரணமாக இணையத்தோடு இணைந்து இன்று ஹாம் வானொலியைக் கேட்கலாம், என்ற அளவிற்கு இதன் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளது.

தொலைதூர நேயர்களோடு பேசிய அனுபவம் ஏதேனும் உண்டா?
நிறைய உண்டு. சுவாரஸ்யமான சம்பவம் கூட ஒன்று உண்டு. நான் எனது ஹாம் ரேடியோவில் எப்.எம் அலைவரிசையைக் கேட்டுக் கொண்டிருந்தபோது, சீனாவில் இருந்து ஒருவர் அதே அலைவரிசை யில் வந்தார். எனக்கு ஆச்சரியம் என்னவெனில் எப்.எம் அலைவரிசை 80 கிலோமீட்டருக்கு மேல் போகாது. அப்படியிருக்க இது எப்படி சாத்தியம்? அதன்பிறகு எனது நண்பர் மூலம் இதற்குத்தீர்வு கிடைத்தது. அயனி மண்டலத்தில் இரண்டு லேயர் நெருங்கும்போது அதனுள் இந்த எப்.எம் அலைவரிசை புகுந்து, எங்கு ஓட்டை உள்ளதோ, அங்கு அது இறங்கிவிடும். அது போன்றே இன்று ஏராளமானோர் ஒரு சில சமயங்களில் தொலைதூரப் பண்பலையைக் கேட்க முடிகிறது.
சந்திப்பு: தங்க. ஜெய்சக்திவேல், வண்ணை கே. ராஜா (முற்றும்)