ANNOUNCEMENT FOR AUDITION OF CASUAL ASSIGNEES FOR TRANSMISSION DUTIES AND PROGRAMME PRESENTATIONS
வயதுவரம்பு: சென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசைகளான சென்னை1, சென்னை 2 ஆகியஅலைவரிசைகளில் நிகழ்ச்சிகளை அறிவிக்கவும், தொகுத்து வழங்கவும், 2019 ஆம் ஆண்டு ஜீன்மாதம்முதல்தேதி அன்று 20 வயது முதல் 50 வயதுவரைக்குள்ளாகவும், FM RAINBOW,
FM GOLD அலைவரிசைகளில் நிகழ்ச்சிகளைஅறிவிக்கவும், தொகுத்து வழங்கவும், 20 வயது முதல்40 வயது வரைக்குள்ளாகவும் இருத்தல் வேண்டும்.
கல்வித்தகுதி அங்கீகரிக்கப்பட்ட பல்கலைகழகத்திலிருந்து ஏதேனும் ஓர் இளநிலைபட்டம் பெற்றவராகவும், பள்ளிப்படிப்பில் தமிழை ஒருபாடமாக படித்தவராகவும் இருத்தல் வேண்டும்.
விண்ணப்பதாரர்கள், சென்னை மற்றும் சென்னையைசுற்றியுள்ளபகுதிகளில் வசிப்பவராகஇருத்தல்வேண்டும்.
விண்ணப்பதாரர்கள்,நல்லகுரல்வளமும், தெளிவானஉச்சரிப்பும், ஒலிபரப்பில் ஆர்வமும், பொதுஅறிவுத்திறன் பெற்றவராகவும்nஇருத்தல்அவசியம்.
எழுத்துத்தேர்வு, குரல்தேர்வு, நேர்முகத்தேர்வு ஆகியமூன்று அடுக்கு தேர்வுமுறையின் மூலம்விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், நிகழ்ச்சிகளின்தேவைக்கு ஏற்ப ,பகுதிநேரப்பணிக்கு அவ்வப்போது,அதிகபட்சமாக மாதத்திற்கு 6 நாட்கள் மட்டுமேஅழைக்கப்படுவார்கள்.
விண்ணப்பிக்கத் தகுதியுடையோர் இதற்க்கானவிண்ணப்பத்தை www.airchennai.org என்ற இணையதள முகவரியில் தரவிரக்கம் செய்து கொள்ளலாம். விண்ணப்பக்கட்டணம் : பொதுப்பிரிவினருக்கு 300 ரூபாய், SC/ST பிரிவினருக்கு 225/- ரூபாய்.
விண்ணப்பக் கட்டணத்தை www.airchennai.orgஎன்ற இணையதளத்தில், online payment link ல் click செய்து State Bank Collect என்ற பக்கத்தில் இருக்கும் Audition Fees / Programme Casual Assignee Audition என்பதை தேர்வு செய்து, அதன் மூலம் மட்டுமே பணம் செலுத்தி, அதற்கான சான்றை விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.
"State Bank Collect" Link ல் பணப்பரிவர்த்தனைசெய்ய தேவையான வங்கி விவரங்களை இப்போதுஅறிவிக்கிறோம்.
வங்கியின்பெயர் : STATE BANK OF INDIA
வங்கிக்கிளை : MYLAPORE
வங்கிக்கணக்குஎண் : 10476542131
வங்கியின்IFSC CODE எண் : SBIN 0000965
விண்ணப்பதாரர்கள் சென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல்அல்லதுFM RAINBOW, FM GOLD நிகழ்ச்சிகளைதொகுத்துவழங்குதல் ஆகிய இருபிரிவுகளில் ஏதேனும் ஒருபிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
மீண்டும் அறிவிக்கிறோம்
விண்ணப்பதாரர்கள் சென்னை வானொலியின் முதன்மைஅலைவரிசை நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குதல்,அல்லது FM RAINBOW, FM GOLD நிகழ்ச்சிகளைதொகுத்து வழங்குதல் ஆகிய இருபிரிவுகளில் ஏதேனும் ஒருபிரிவுக்கு மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து தேவையான சான்றுகளின் நகல்களையும் விண்ணப்பத்தோடு இணைக்க வேண்டும். மேலும் உறையின் மீது தாங்கள் விண்ணப்பிக்கும்அலைவரிசையின் பெயருடன், "பகுதிநேரஅறிவிப்பாளர்களுக்கான விண்ணப்பம்" என்றும்குறிப்பிட வேண்டும்.
விண்ணப்பங்களைஅனுப்பவேண்டியமுகவரி :
THE STATION DIRECTOR /நிலையஇயக்குநர்
PROGRAMME CO-ORDINATION SECTION / நிகழ்ச்சிஒருங்கிணைப்புப் பிரிவு
ALL INDIA RADIO,
KAMARAJAR SAALAI,
MYLAPORE,
CHENNAI - 600004
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பம் அனுப்பகடைசிநாள் : இம்மாதம் 29ஆம் தேதிமாலை 5 மணி.
மேலும் விவரங்களுக்கு www.airchennai.org என்ற இணையதளத்தையும், facebook.com/airchennaiஎன்ற முகநூல் முகவரியையும் பார்த்து அறியலாம்.
இது பகுதி நேரப்பணிக்கான அறிவிப்பு மட்டுமே. வானொலியில் நிரந்தர வேலைக்கான அறிவிப்பு அல்ல.
வானொலி ஒலிபரப்பில் ஆர்வம் உள்ளவர்களைவரவேற்கிறது சென்னை வானொலி.
ஆர்வமுள்ளவர்கள் இன்றே விண்ணப்பிக்கத்தொடங்குங்கள்.
No comments:
Post a Comment